உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்
அந்த வெள்ளத்தில் மூழ்கிய உலகத்தை வெளிக்கொணர்ந்து திருமாலாகிய நீதான் நிலைநிறுத்தினாய்
இப்படி உலகை அழித்து மீண்டும் படைக்கின்ற விளையாட்டை தொடர்ந்து நடத்தினாய்
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின் முதுமைக்கு
ஊழியாவரும் உணரா
ஆழி முதல்வ நிற்பேணுதும் தொழுது
வராகக் கோலம் எடுத்து ஊழியை எல்லாம் கடந்து நிற்கும் திருமாலே
பிரளயங்கள் மீண்டும் மீண்டும் வருவதும் அதிலிருந்து திருமால் உலகைப் படைக்கிறார் என்பதும் சனாதன நம்பிக்கை. அது தமிழிலும் உண்டு சமஸ்கிருதத்திலும் உண்டு. தற்போது நடைபெறும் கற்பம் வராகத்திலிருந்து தோன்றியதால் சுவேத வராகக் கற்பம் என்று பெயர்