My Authors
Read all threads
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏
எங்களின் கொரோனா வைரஸ் அனுபவம் மற்றும் மருத்துவமனையில் எவ்வாறு மருத்துவம் அளிக்கப்பட்டது என்பதை முழுவதுமாக தெரிவிக்க இந்த Thread -ஐ எழுதுகிறேன் அனைவரும் படித்துவிட்டு உங்களது ஆதரவையும்& கருத்தையும் தெரிவியுங்கள்
(1/n)
#Annaatthe #Master #Valimai
என் தந்தைக்கு என்னென்ன அறிகுறிகள் தென்பட்டது என்றால் ... உடல்வலி, சுவையிழப்பு, வறட்டு இருமல், சளி, மூச்சு விடுவதில் சிரமம் காய்ச்சலை தவிர அனைத்தும் இருந்தது நாங்களும் சரியாகிவிடும் என்று அசால்ட்டாக விட்டுவிட்டோம் லோக்கல் மருத்துமனைக்கு சென்றோம் ஆனால் பலனில்லை ... (2/n)
ஒரு கட்டத்தில் இரவு முழுவதும் தூங்கவில்லை ...அவ்வளவு இருமல் மூச்சு திணறல் மறுநாள் காலையில் கார் எடுத்துவிட்டு பாண்டிச்சேரி, மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு சென்றோம் அங்கே Admit செய்யவில்லை உன் அப்பாவிற்கு Oxygen அளவு குறைவாக உள்ளது நீங்கள் ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்லுங்கள் (3/n)
என்று அனுப்பி வைத்தனர் .. அங்கே சென்றால் எங்களுக்கு முன்னால் ஒரு 1000 பேருக்கு மேல் சிகிச்சைக்கு காத்திருந்தனர் அது பெரிய மருத்துவக்கல்லூரி .. அங்கே கொரோனா பரிசோதனை செய்தோம். அங்கே Admission செய்வது சாதாரண விஷயமல்ல நான் மிகவும் போராடி Chief Doctor அவரிடம் பேசி என் அப்பாவை ..(4/n)
Admit செய்ய வைத்தேன் அவருக்கு Oxygen அளவு 90/100 இருந்தது.ஒரு சாதாரண உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவு 96/100 இருக்க வேண்டும். ஆகையால் என் தந்தைக்கு ஆக்ஸிஜன் வைத்து பரிசோதனை செய்தனர் நார்மல் அளவிற்கு வந்தது.உடனடியாக 3 வது மாடிக்கு Shift செய்தனர் அது வரை கொரனா இல்லை என்று நினைத்தோம் (5/n)
12.08.20 அன்று Admit செய்து மறுநாள் காலை 13.08.20 காலை கொரோனா Positive என்று வந்தது. என்னையும் என் அப்பாவுடன் Patient Attender ஆக கூடவே அனுப்பி வைத்தனர். மறுபடியும் கொரோனா இருக்கும் நோயாளிகள் இருக்கும் Ward க்கு அனுப்பி வைத்தனர் ...மருத்துவர்கள் என்னிடம் நீங்கள் சோதனை செய் (6/n)
கொரோனா சோதனை செய்தீர்களா என்று கேட்டனர் நான் இல்லை என்று கூற நீங்கள் தயவுசெய்து வெளியில் செல்லுங்கள் இது கொரனா நோயாளிகள் இருக்குமிடம் உங்களுக்கும் வந்துவிடும் 99.99% வாய்ப்பு இருக்கிறது என்று கூறினர் ..நான் எனக்கு வந்தாலும் பரவாயில்ல என் அப்பா கூடவே இருக்கேன் என்று கூறினேன்.(7/n)
அவர்கள் என்னிடம் உங்கள் விருப்பம் ஆனால் நாங்கள் உங்களை வெளியில் அனுப்ப மாட்டோம் என்று கூறினர். 15.8.20 அன்று எனக்கும் கொரனா பரிசோதனை செய்தனர் அந்த ரிசல்ட் வரவில்லை. அன்றே என் தந்தையை ICU -விற்கு அழைத்து சென்றனர் நான் என் அப்பாவிற்கு முன்னால் ஆறுதல் கூறிவிட்டு அவர் சென்றதும் (8/n)
கதறி அழுதேன் ...கடவுளிடம் அழுது வேண்டினேன். நிறைய நண்பர்கள் எனக்கு ஆறுதல் கூறினார்கள் ICU-ல் நன்கு கவனித்துக்கொள்வார்கள் பயம் வேண்டாம் என்று கூறினர் என்னை ICU பக்கம் விடவில்லை. அப்பா இருந்த ரூம் வார்டிலேயே தங்க வைத்தனர். எனக்கு ஒரே பயம் அப்பா எப்படி இருக்காங்கனு தெரியலையேனு (9/n)
மறு நாள் காலையில் ICU-ல் இருந்து என் வாட்சப் நம்பருக்கு வீடியோ கால் செய்து என் தந்தையிடம் பேச வைத்தனர். அப்பா முன் தைரியமாக பேசிவிட்டு போனை கட் செய்ததும் அழுவேன்.அந்த நாட்கள் நரக வேதனை அப்பாவிற்கு அதிக பாதிப்பு அதனால் தான் ICU-க்கு கொண்டு சென்றனர். ..(10/n)
நான் அந்த டாக்டர் வாட்சபிற்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பினேன் என் தந்தையை காப்பாற்றுங்கள் என் அப்பா தான் எங்கள் குடும்பத்திற்கு எல்லாம் என்று ... ஒரு வழியாக 19.08.20 அன்று மதியம் 2nd floorக்கு Shift செய்தனர் .(11/n)
அப்பா ஒரு அளவிற்கு நலமாக இருந்தார். எனக்கு நிம்மதி வந்தது கொஞ்சம் நலமானதும் தலைவர் படங்களை என்னிடம் Download செய்து கொடு நான் பார்க்க வேண்டும் என்று கூறினார் நானும் தலைவர் ரஜினி படங்களை பார்த்தால் ஒரு எனர்ஜி பிறக்கும் என்று நினைத்து (பேட்ட, பில்லா, மனிதன்) போன்ற படங்களை ..(12/n)
பதிவிறக்கம் செய்து கொடுத்தேன் கொஞ்சம் கொஞ்சமாக நலம் பெற்று வந்தார்.ஒரு நாளைக்கு 5+ ஊசி மற்றும் மாத்திரைகளை கொடுத்தனர். நான் அருகில் இருக்கும் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு உதவிகள் செய்தேன். எனக்கு கொரோனா பயமில்லை நாலு பேரு நல்லாருக்னும்னு நினைத்து உதவி செய்தேன் (13/n)
எங்கள் வார்டு அருகில் ஒரு மரணம் அடுத்தடுத்து 10 மரணங்களை நான் பார்த்தேன். அவர்களுக்கு இணைநோயால் இறந்தார்கள் என்று ஒரு காரணம் இருந்தாலும் அருகில் இருப்பவர்கள் குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை என்பதே உண்மை பசியால் பாதி மரணம் நிகழ்ந்தது இதை நான் கண்டு வேதனை அடைந்தேன் ... (14/n)
அன்று முடிவெடுத்தேன் நான் செத்தாலும் பரவாயில்லை நாலு பேருக்கு உதவ வேண்டும் என்று உறுதியெடுத்து ..அடுத்தடுத்து முதியவர்கள் (ம) கர்ப்பிணி பெண்கள் (ம) தொழு நோயாளிகள் என 60க்கும் மேற்ப்பட்ட நோயாளிகளுக்கு உதவினேன் அவர்களை தூக்கிவிடுவது, உணவு கொடுப்பது, அவசர உதவிக்கு மருத்துவரை .(15/n)
மருத்துவரை அணுகுவது என்று உதவிகள் செய்தேன் இந்த ஊழியங்களை கடவுள் எனக்கு கொடுத்த வரம் என்று எண்ணினேன். நான் உதவி செய்த அனைவரும் என்னை கையெடுத்து கும்பிட்டனர். கொரோனா காலத்தில் எங்கள் பிள்ளைகளே எங்கள் அருகில் வருவதில்லை நீ எங்களுக்கு உதவி செய்கிறாய் என்று என்னை வாழ்த்தினர் ..(16/n)
ஆனால் மருத்துவர்கள் தம்பி நீ கவனமாக இரு கொரனா வார்டில் வந்த அனைவருக்குமே கொரோனா பாசிட்டிவாகிவிடும். நீ வேற எல்லாருக்கிட்டையும் போற வர, கவனமாக இரு என்று சொன்னாங்க நான் நல்ல மனம் இருந்தால் போதும் அவங்களுடைய வாழ்த்துக்களே நமக்கு நோய்களை வரவிடாது என்று மேலும் உதவிகள் புரிந்தேன்(17/n)
24 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் என் தந்தையும் நானும் வீடு திரும்பினோம். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் எனக்கு கொரோனா Positive ஆகவில்லை ..அனைவரும் ஆச்சர்யமாக ஏன் டாக்டர்களே கேட்டனர் உனக்கு ஏதும் அறிகுறிகள் காட்டவில்லையா என்று எனக்கு இதுவரை எதுவுமில்லை இனிமேலும் எதுவும் ஆகாது .(18/n)
நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.மனசு தான் எல்லாத்துக்குமே காரணம் நீங்கள் மருத்துவமனைக்கோ அல்லது உங்கள் வீட்டில் யாருக்காவது கொரனா இருந்தால் அவர்களுக்கு உதவுங்கள் நல்ல மனம் இருந்தாலே போதும் எந்தநோயும் நம்மை அண்டாது.அவர்களை விரோதிகள் பார்ப்பது போன்ற பார்வையை தவிருங்கள் (19)
என் அருகில் நான் வணங்கும் ஆரோக்கிய மாதாவும் மற்றும் அனைத்து கடவுள்களும் துணை இருக்கின்றனர். கொரனோ ஒன்றும் பெரிய வியாதி கிடையாது ஏன் இந்த பயம் தைரியமாக இருங்கள்.கடவுள் நம்மை படைத்தது நாலு பேருக்கு உதவ வேண்டும் என்பதற்கு தான். மாற்றம் நம்மில் தான் உள்ளது நன்றி #COVID19India (20/20)
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Praveen Shagul Kumar -Psk 💙

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!