திராவிடநாடு’ கோரிக்கை சாத்தியமற்றது என்று தெரிந்தே தான் அந்த முழக்கத்தை தமிழர்களிடம் 16 ஆண்டுகளாக தி.க,வும், 22 ஆண்டுகளாக தி.மு.க.வும் எழுப்பி வந்துள்ளன. அண்ணாவே மக்களை ஏமாற்றிய மோசடித்தனத்தை ஒப்புக்கொண்டு 1/n
தனது கட்சிக்குள் ‘காலம் கனியும் போது கைவிடப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈ.வெ.கி.சம்பத்திடம் அண்ணா நடத்திய உரையாடல் “ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்” நூலில் வெளிவந்துள்ளது. அது பின்வருமாறு: 2/n
திராவிடநாடு சாத்தியமில்லை என்பதற்கு சம்பத் தனது வாதங்களை எடுத்து வைத்தார். அதைகேட்டு கொண்டிருந்த அண்ணா, “என்ன சம்பத்து, நீ டில்லி பார்லிமெண்டுக்குப் போய், ரஷ்யாவெல்லாம் சுற்றிப் பார்த்த பிறகு இதைச் சொல்ற; உங்க அப்பா திராவிட நாடுன்னு சொன்னப்பவே, கிடைக்காதுன்னு எனக்கு தெரியும் 3/n
என்று சொன்னார். உடனே, சம்பத் “கிடைக்காதுன்னு தெரிஞ்ச பிறகு, அதைச் சொல்லாதது மோசடியல்லவா?” என்று கேட்டார்.
அதற்கு அண்ணா “அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு”ன்னு வெறியேற்றி விட்டோம். இப்போது போய் இல்லைன்னு சொன்னா, தொண்டன் படுத்து விடுவான். 4/n
அதனாலே படிப்படியாக உணர்த்திப் பின்னர் விட்டுவிடலாம்” என்றார். மோசடிக்கு வாய்தா கேட்பது இன்னொரு மோசடியல்லவா? என்றார் சம்பத்
சம்பத் சொன்னார். “இல்லை. உடனடியாக அதை அறிவித்து விட்டு மேடையிலே நாம் விளக்கம் சொன்னால் நமது தோழர்கள் ஒப்புக் கொள்வார்கள். இதில் சஞ்சலப்பட ஏதுமில்லை! 5/n
சாத்தியமானதைச் சொல்லலாம். தமிழ்நாடு கேட்கலாம். அல்லது பிரிந்து போகிற உரிமையோடு கூட்டாட்சித் தத்துவத்தைச் சொல்லலாம். அதை நாம் இப்போதே விவாதித்து முடிவு செய்யலாம்” என்றார் சம்பத்.
அண்ணா அந்த அதிர்ச்சி வைத்தியத்தை ஒப்புக் கொள்ளவில்லை. ‘கைவிட முடியாது’ என்று சொல்ல வில்லை. 6/n
அண்ணா சொன்னது. காலம் வரும், காலத்தை எதிர் பார்த்துக் காரியம் செய்ய வேண்டும். ஒரு கட்டம் வரும் போது நானே அதை மாநாட்டில் அறிவித்து விடுகிறேன். அதுவரையில் இதைப்பற்றி பேச வேண்டாம். விரிவாக விவாதிக்க வேண்டாம்” என்றார். 7/n
எப்படியோ அண்ணா சம்பத்தை தாஜா செய்து அனுப்பி விட்டு, மற்றவர்களைப் பார்த்து, “அவன் கூப்பிட்டானென்று நீங்கள் வந்து விடுவதா? விவஸ்தை இல்லையா?” என்று அதட்டி அனுப்பினார். உயிரோடிருக்கும் கருணாநிதி வரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 8/n
உரையாடல் மற்றுமொரு உண்மையையும் வெளிப்படுத்துகிறது. காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை போல பிரிவினைச் தடைச்சட்டம் வந்தது. காலம் வரும் என்று காத்திருந்த அண்ணா அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பிரிவினையைக் கைவிட்டார் என்று தான் ஆணித்தரமாக சொல்லத் தோன்றுகிறது. 9/n
ஒருவேளை பிரிவினை தடைச்சட்டம் வராமல் இருந்திருந்தாலும் அண்ணா திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டிருப்பார் என்பதே அன்றைய வரலாறாக இருந்திருக்கும். ஈ.வெ.கி. சம்பத் கூறியது போல, அண்ணா கேட்ட திராவிடநாடு மட்டும் மோசடி அல்ல; ‘திராவிடம்’ என்ற சொல்லே மோசடி தான். 10/n
இந்த மோசடிக்கு வாய்தா கேட்பதற்கு கூட இன்றைக்கு எந்த திராவிட இயக்கமும் தயாராக இல்லை. எனவே எல்லா திராவிட இயக்கங்களையும் தமிழர்கள் புறக்கணிக்கும் நிலை வர வேண்டும். அப்பொழுது தான் #தமிழர்களுக்கு விடிவு பிறக்கும். 11/11
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆமைக்கறி ஈழத்தில் இயல்பானது என்றும், வன்னியில் அது தாராளமாக கிடைக்கும் என்றும், சீமான் அண்ணன் வன்னிக்கு போனது உண்மை என்றும் இயக்குனர் நந்து மூலமாக வெளிப்படுத்திய ஒரே ஊடகவியலாளன் #மதன்ரவிச்சந்திரன் மட்டுமே! 1/10
மனநோய் சாலினி நாம்தமிழர் அக்காமார் சீமான் அண்ணனின் இனிப்பான பேச்சுக்கு மயங்கிவிட்டனர் என்றதும் உடனே அவரை பேட்டிக்கண்டு அவரின் போலிமுகத்திரையை கிழித்த ஒரே ஊடகவியலாளன் #மதன்ரவிச்சந்திரன் மட்டுமே! 2/10
அக்கா காளியம்மாளை பேட்டிக்கண்டு சக வேட்பாளரோடு விவாதிக்கவிட்டு அவரின் வாத்திறமையை வெளியில் ஊடகத்திற்கு காட்டியது #மதன்ரவிச்சந்திரன் என்னும் ஊடகவியலாளன் மட்டுமே !! 3/10
ஈழத்தமிழர்களுக்கோ, இயக்கத்திற்கோ எதிரான காட்சி இருக்காதுன்னு சொல்லிட்டா எல்லாம் சரியாகிடுமா! @Saattaidurai அண்ணா?
மு.முரளிதரன் என்பவர் விடுதலைபுலிகள் இயக்கத்திற்கும், தலைவர் பிரபாகரனுக்கும் நேர் எதிரானவர் தானே! இனப்படுகொலை நடந்து முடிந்தபோது, புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள் 1/5
என பேசி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நபரின் வாழ்க்கை வரலாறு தமிழில் அவசியமா!?
பணத்தை விட நேசிக்கிற மக்கள் தான் முக்கியம் என்று விஜய்சேதுபதி உளமார எண்ணினால், படத்தை கைவிட்டு அவரை நேசிப்பவர்களின் எதிர்ப்பை தனது வலிமையான குரலின் மூலமாக தானும் எதிர்ப்பை பதிவு செய்யலாமே! 2/5
படத்தில் சிங்கள வீரராக சிங்கள கொடியை அணிந்து வருபவனின் வாழ்க்கை வரலாறை சிங்களத்தில் எடுத்தால் இங்கு எவரும் எதிர்க்க போவதில்லை. அதுவும் இலங்கை கொடி கொண்டாடபடுவதை, பட விளம்பரம் என்று தமிழ் வீதி எங்கும் சிங்கள கொடி ஒட்டபட இருப்பதையும் நாம் கண்டிக்காமல் கடந்து சென்று விடுவோமா!? 3/5
உங்களை வாழ வைத்து கொண்டாடிய, தமிழ் மக்களின் இரத்த உறவுகளை இனப்படுகொலை செய்த போர்க் குற்றவாளிகளின் சிங்கள கொடியை தமிழ்நாட்டு திரையரங்குகளில் பறக்க விடுவதற்கு துணை போவது, வாழ வைத்த இனத்தின் முதுகில் குத்துவதற்கு சமம் இல்லையா!? @VijaySethuOffl 😡 1/4 #Boycott_vijaysethupathi
முத்தையா முரளிதரன் விளையாட்டு வீரரின் விளையாட்டு திறமை குறித்த படத்தில் ஏன் அரசியல் செய்கிறீர்கள் என்று கேட்கும் நீங்கள் மு.முரளிதரனை இந்திய வீரராக காட்டி படத்தை எடுக்க செய்ய முடியுமா!?
அவன் அடையாளத்தை என் நிலத்தில் திணிக்காதே என்று சொல்லும் உரிமை மண்ணின் மக்கள் தமிழர்களுக்கு இல்லையா?
இதை கைவிடாவிட்டால், தமிழ் உறவுகள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள #விஜய்சேதுபதி அவர்களின் ரசிகர் மன்றங்களை கலைத்திட முன் வர வேண்டியது அவசியம் 3/4 #Boycott_vijaysethupathi
ஆம் எதிரானது தான். ஆனால் தமிழ்க்குடிகள் என்று அழைக்கப்படும் தமிழர் குடிப்பெயரும் சாதியவாதமும் ஒன்றா என்றால், அது நிச்சயமாக இல்லை.
பிறகு இது இரண்டும் ஒன்று எனக் கற்பித்து பொறுப்பில் இருப்பவர்களே பேசுவது புரிதலின்மையாலா, 1/n
அல்லது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டதா!?
விவாதம் செய்ய திறனற்ற அதிமுக'காரனையும், ரஜினி ஆதரவாளனையும் வாதம் செய்து ஓடவிட்டதாலேயே, திறமையானவர் என கொண்டாடித் தொலைத்தது தவறோ என்று தமிழ்தேசிய பிள்ளைகளை சிந்திக்கும் நிலைக்கு, சிலரது சாதிய விளக்க பதிவு தள்ளிவிட்டது. 2/n
ஆதித்தமிழர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் வைத்திருந்த குடிப்பெயர்கள் என்பது தன்னை தமிழன் என அடையாளப்படுத்த உதவியதா அல்லது சாதிய பெருமை பேச பயன்படுத்த பட்டதா!?
தமிழ் இனமே போற்றி கொண்டாடும், ஏன் உலகமே வியந்து மதிக்கும், "அரசனுக்கு அரசன், தமிழ்ப்பாட்டன் இராசராசன்", 3/n
"சீமான் அண்ணன் ஏற்ற #தமிழ்த்தேசியதத்துவம் எனும் நம் மண்ணில் கலந்திருக்கும் ஆயிரமாண்டு கால பழமையான பெருமைமிகு தத்துவமே, பலரை நாதக'வில் பயணிக்க வைத்தது என்பதே யதார்த்த உண்மை".
குறிப்பாக அண்ணனின் 2009க்கு முந்தைய பேச்சுக்களை தொடர்ந்து கேட்டவர்களுக்கு இது நன்கு விளங்கும். 1/n
2009க்கு முன்பு அவர் திராவிட மேடைகளில் பேசிய தமிழ், தமிழர் சார்ந்த கருத்தை அவர் ஒரு போதும் மாற்றிக் கொண்டதில்லை. அவர் அன்று பேசிய தேசிய இன விடுதலை, சமத்துவ சமூகம் கருத்தை தான், இன்றும் பேசுகிறார். அன்றிருந்த அதே கருத்து, அதில் இருந்து எந்த பின் வாங்கலும் இல்லை. 2/n
அப்படியிருக்க, அன்று அவர் திராவிட இயக்க மேடைகளில் முழங்கிய போது சேராத பெருங்கூட்டம், பின்பு தமிழ் தேசிய அரசியல் பேசும் போது அவரை நோக்கி ஏன் வந்தது, இப்போதும் வருகிறது!?
உண்மையிலேயே அவர் பேச்சை, முன்வைத்த கருத்தை மட்டுமே கேட்டு உள்வாங்கிக் கொண்டு வருவதாக இருந்தால், 3/n