Aasif Profile picture
Sep 15, 2020 15 tweets 3 min read Read on X
1957-ஆம் ஆண்டு அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை அறிவிக்கிறார் தந்தை பெரியார். அரண்டு போன அரசு அவசர அவசரமாக தேசிய அவமதிப்பு தடைச் சட்ட மசோதாவைக் கொண்டு வருகிறது. சட்ட மன்றத்தில் மசோதாவைக் கொண்டுவந்து முன்மொழிந்தவர் பக்தவசலம். முதல்வர் = காமராஜர்.

1.
1957-ஆம் ஆண்டு தேர்தலின் போது காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார் தந்தை பெரியார். முதன் முறையாக சட்டமன்ற தேர்தலில் பங்கேற்ற திமுக கடும் போட்டியைச் சந்தித்து 15 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

2.
எந்தக் கட்சியின் வெற்றிக்காக பெரியார் பாடுபட்டாரோ அந்தக் கட்சிதான் சட்ட எரிப்புப் போராட்டத்தைத் தடுக்க இந்த அவசரச் சட்டம் கொண்டு வந்தது. சட்டமன்றத்தில் இருந்த அனைத்து கட்சிகளும் அதை ஆதரித்தனர். பெரியார் எதிர்த்த திமுக மட்டுமே சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

3.
தந்தை பெரியார் மீது அறிஞர் அண்ணாவிற்கு இருந்த பற்றும் பாசமும் அந்த சட்ட முன்வரைவு விவாதத்தின் போது நன்கு புலப்பட்டது. சட்ட முன்வரைவை பின்வாங்கிக் கொள்ள வேண்டுமென ஒரு நீண்ட உரையை அறிஞர் அண்ணா ஆற்றினார்.

4.
சட்டமன்றத்தில் 4 இடங்களுடன் இருந்த CPI கட்சி கண்ணை மூடிக் கொண்டு இந்த அவசரச் சட்டத்தை ஆதரித்தது. அவையில் பேசிய CPI உறுப்பினர் மு.கல்யாணசுந்தரம் நம்முடைய ராஜ்ஜியத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களை ஒடுக்க தகுந்தநடவடிக்கை எடுக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும் என்றார்.

5.
இந்த மசோதா தீதானது, தேவையற்றது, கொடுங்கோன்மைக்கு வழி கோலுவது என்று கூறி தன் உரையை ஆரம்பித்த அண்ணா, காந்தியாரின் உயிரையே வாங்கி விட்ட சாதி வெறியை, மத வெறியை அடக்க ஒரு சட்டம் கொண்டு வந்தால் அதை வரவேற்கலாம், இதை ஆதரிக்க முடியாது என்றார்.

6.
அரசியல் சட்டத்தை கொளுத்துவேன் என்று பெரியார் சொன்னாரென்றால் அவருக்கு அதன் பேரில் இருக்கும் வெறுப்பினால் அல்ல. அதை எந்தக் காரணத்திற்காக கொளுத்தச் சொல்கிறேன் அந்தஎன அவர் எடுத்துச் சொல்கிறாரோ அந்தக் குறைபாடுகளை எல்லாம் நீக்க அரசு முன்வர வேண்டும் என்கிறார்.

7.
பெரியாரின் ஆதரவைப் பெறாத நான் அவருக்காக வாதாடுகிற நேரத்திலே நீங்களெல்லாம் அவரை எந்தக் கூண்டில் தள்ளுவது என்று பேசுவதும், தள்ளுகிற கூண்டு இரும்புக் கூடாக இருக்க வேண்டும் என கல்யாணசுந்தரம் சொல்வதும், அதற்கு பெரிய பூட்டு பூட்டு வேண்டுமென சங்கரன் சொல்வதும் விசித்திரமானது.

8.
காமராஜர் சென்னையில் பெரியார் நடத்திய சாதி ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் 'நான் அதிகாரத்துக்கு வந்தால் நான் செய்யக் கூடிய முதல் காரியம் சாதி ஒழிப்பாகத்தான் இருக்கும்' என்றார்.
9.
பெரியார் அவர்கள் தன்னுடைய செல்லப்பிள்ளை ஆட்சிக்கு வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் இரவு பகல் பாராமல் உழைத்து உங்களை இங்கே உட்கார வைத்திருப்பது நீங்கள் சாதி ஒழிப்பிற்கு ஆதரவாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான்.
அதை மீறி அவரை நட்டாற்றில் விடுகிறீர்கள் நீங்கள்.

10.
இப்போது தேவை சந்திப்புத்தானே தவிர சட்டமல்ல. இப்போது தேவை ஒருவரை ஒருவர் கலந்து பேசுவதே தவிர ஒருவரை ஒருவர் மிரட்டுவதல்ல. ஜனநாயகத்தை மனதில் கொண்டு, விஷயம் என்னவென்று ஆராய்ந்து, பெரியாரைச் சந்தித்து அவர் மூலம் இந்த நாட்டிலே நம்மை ஏற்பட நீங்கள் வழி செய்ய வேண்டும்.

10.
பதிலளித்துப் பேசிய சி.சுப்பிரமணியம், பெரியாரும் அண்ணாவும் தந்தையும் மகனும் போல இருக்கிறார்கள். இப்போது எதோ மனக்குறைகள் ஏற்பட்டு அதன் காரணமாக பிரிந்து இருக்கலாம். அவர்களுடைய அடிப்படையான தத்துவங்களில் பிரிவில்லை எனபது புரிகிறது என்கிறார்.

12.
பக்தவச்சலம்: பெரியாருக்கும் முதல்வருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; சங்க காலத்து ஒருதலைக் காதல் போல பெரியாருக்கு காமராஜர் மீது காதல் ஆனால் காமராஜருக்கு அது இல்லை.வேண்டுமெனில் தந்தை-மகன் உறவு கொண்டாடும் அண்ணாதுரை பெரியாரைச் சந்தித்து போராட்டத்தை நிறுத்தச் சொல்லட்டும் என்றார்.
13.
இதற்கு பதிலளித்த அண்ணா, மகன் தந்தை செய்ததை மறந்து திரும்பவும் அவரிடத்தில் ஒட்டிக்கொள்வது குற்றமல்ல, குணங்களில் ஒன்று. நான் சென்று பெரியாரை சந்திக்கிறேன். அது வரை சட்டத்தை நிறுத்தி வையுங்கள் என்கிறார். ஆனால், திமுகவின் எதிர்ப்பை மீறி சட்டம் நிறைவேறியது.
14.
இதன் மூலம், தந்தையின் மீது இருந்த பாசத்தை ஆட்சிக்கு வருவதற்கு 10 ஆண்டு முன்பே வெளிப்படுத்திய அண்ணா-வின் அன்பும் புரிந்தது. The Rest is history !!

#Anna112
#Periyar142
#DMK

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Aasif

Aasif Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Aasifniyaz

Sep 30, 2024
ஒரு கனேடியனாக பெருமை கொள்ளும் நாள்.
Sep 30 - National Day of Truth & Reconciliation !!

இன்று Canada உலக அரங்கில் ஒரு பெரிய இடத்தில் இருந்தாலும் வரலாற்றில் மறக்கப்பட்ட கறுப்புப் பக்கங்களை, சமூக அநீதிகளைக் கொண்டிருக்கிறது.

1.
கனடா ஆதி குடிகளின் நாடு. கிட்டத்தட்ட 12 ஆயிரம் ஆண்டுகளாக இது கனடா என அழைக்கப்படுவதற்கு முன்பிருந்தே வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களே ஆதி குடிகள் (Indigenous people) என அழைக்கப்படுகின்றனர்.இன்று ஏறக்குறைய 1.4 million மக்கள் ஆதி குடிகளாக இனங்காணப்பட்டிருக்கின்றனர்.
2/
ஆதி குடிகள் எனப் பொதுவாக அழைப்பட்டாலும் இவர்களில் பல்வேறு குழுக்கள், வேறுபட்ட கலாச்சரம் மற்றும் தனித்தன்மையான மொழிகளுடன் உள்ளனர். ஒவ்வொரு ஆதிகுடிக் குழுவினரும் அவர்களின் தேசிய இனத்தின் பெயரால் அழைப்படுவர்.
எ .கா
AlgonQuin,
Cree,
Haida,
Mohawk

3/
Read 31 tweets
Jul 19, 2022
“திருவள்ளுவருக்குப் பிறகு தமிழினத்தை மீட்க வந்த தலைவர்களுள் பெரியாரே குறிப்பிடத்தக்கவர்” - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பெரும்பணியைச் சுமந்தஉடல்
பெரும் புகழைச் சுமந்த உயிர்
‘பெரியார்’ என்னும்
அரும்பெயரைச் சுமந்தநரை
அழற்கதிரைச் சுமந்த மதி
அறியாமை மேல்
இரும்புலக்கை மொத்துதல்போல்
எடுக்காமல் அடித்தஅடி!
எரிபோல் பேச்சு!
பெரும்புதுமை! அடடா - இப்
பெரியாரைத் தமிழ்நாடும்
பெற்ற தம்மா!’ - பாவலரேறு
அவர் பேசிய பேச்சுகளை ஏதென்சு நகரைச் சுற்றிவந்த சாக்ரடீசும் பேசியிருக்க முடியாது. உலகப் பெரும் பேச்சாளர் என்று பெயரெடுத்த மெகசுதனிசும் பேசியிருக்க முடியாது.அவர் சுற்றிய தொலைவைக் கிரேக்க மன்னன் அலெக்சாண்டரும் சுற்றியிருக்க முடியாது.அவர் பிரெஞ்சு மாமறவர் நெப்போலியனைவிடப் போரிட்டவர +
Read 5 tweets
Jan 2, 2022
வெள்ளையனுக்கு ஆதரவாளர்களா நாங்கள்? - தோழர் பெரியார்

periyarpechumezhuthum.blogspot.com/2022/01/blog-p…

#பெரியார்பேச்சும்எழுத்தும்
சுயமரியாதைத் திருமணமும் வைதீகத் திருமணமும் புரோகிதத்தின் லக்ஷணம் என்ன?

periyarpechumezhuthum.blogspot.com/2022/01/blog-p…

#பெரியார்பேச்சும்எழுத்தும்
இராசிபுரம் தாலுகா ஆதி திராவிடர் மகாநாடு - தோழர் பெரியார் தலைமை உரை

periyarpechumezhuthum.blogspot.com/2022/01/blog-p…
Read 6 tweets
Jun 21, 2021
குணா எப்பேர்ப்பட்ட பொய்யர் என்றால், எதற்குமே தரவுகளைத் தர மாட்டார்.. நூல் பிடித்துப் போய் பார்த்தால் வெறுமனே கற்பனையாகவோ (அ) அவரின் வன்மமாக இருக்கும்.

சில எடுத்துக்காட்டுக்கள்:

1.
மோரியப்பேரரசை நிறுவிட உதவிய சூழ்ச்சியில் வல்ல சாணக்கியனே ஒரு காஞ்சிபுரத்துத் தமிழ்ப் பார்ப்பானான்(தமிழர் வரலாறு)

தமிழ் நிலவுடைமையில் சாதிக் கொடுமையைப் பொறுக்கமுடியாத போதெல்லாம் ஊரைவிட்டேபோய்விடுகிற மரபுரிமை பள்ளருக்கும் பறையருக்கும் இருந்தது(இந்திய தேசியமும் திராவிட தேசியமும்)
2
"தீண்டாமை, காணாமை என்றெல்லாம் பழந்தமிழர் மீது பொல்லாச் சாதி ஒழுகலாறுகளைத் திணித்துச் சாதி அடிமைமுறைக்கு எக்காளம் ஊதிய கொடிய சுரண்டலரின் ஆட்சியே கன்னடத் தெலுங்கு வந்தேறி நாயக்கர் ஆட்சி. பார்ப்பனீயத்தை உச்சி முகந்து போற்றியது அந்நாயக்கர் ஆட்சி" (திராவிடத்தால் வீழ்ந்தோம்)

3.
Read 13 tweets
Apr 12, 2021
வஹியின் மாதம் = ரமலான் ??

முகம்மதிற்கு வானவர் ஜிப்ரயீல் மூலமாக வஹி என்னும் இறைச்செய்தி வந்தது இந்த ரமலான் மாதத்தில் தான் என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். உண்மையில் முகம்மதிற்கு ஜிப்ரயில் என்பதே முதலில் தெரியவில்லை. வந்த உருவம் அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது.

1/ Image
அது ஜிப்ரயில்தான் என்று கூறியது வரகத் இப்னு நவ்பல் என்ற ஒரு கிறிஸ்தவ பாதிரியார் !!
எனவே ரமதான் பண்டிகை உருவாக காரணம் முகமதின் Hallucination மட்டுமே !

ஒரு மாதம் இருக்கிறது.. தொடர்ந்து பேசுவோம்.. இஸ்லாத்தின் furniture-களை போட்டு உடைப்போம்..

2/2
அப்புறம் முக்கியமான விசயம் ஒன்னு,முகம்மது நோன்பை யூதர்களிடத்தில் இருந்து தான் காப்பியடித்தார்.
நான் சொல்லலை குர் ஆன் சொல்லுது.. Image
Read 34 tweets
Jan 28, 2020
ஷைத்தான் தொடுவதாலேயே பிறந்த குழந்தை அழுகிறது என்ற அற்புத உண்மையை முகமது விளக்கியதைச் சொன்னேன்ல (முஸ்லீம் 4720) .. இந்த ஷைத்தான் உலகத்துல பிறக்கிற எல்லா குழந்தைகளையும் பிரசவ வார்டுக்கே போய் தொட்டு அழ வைக்கிறதைத் தவிர வேற என்னவெல்லாம் செய்யது? பார்க்கலாமா?
அல்லா சும்மா இல்லாம லவ்ஹுல் மஹ்ஃபூள்"அப்பிடிங்குற 36 பக்க நோட்டில் உலகில் பிறந்த , பிறக்க போற அத்தனையும் எழுதி வைச்சுட்டாரு.அதை தேவர்கள் டிஸ்க்ஸ் பண்ணும் போது ஓட்டுக் கேக்கும் ஷைத்தான் அங்க இருந்து நேரா ஜோஸ்யக்காரன்ட்ட வந்து அதை சொல்லிடுது.அவன் அதைத்தான் நம்மக்கிட்ட சொல்லுறான்.
அதாவது இன்றைய காஃபீர் ஜோதிடர்களுக்கு ஜோதிடம் கூறுவதே எங்க முஹம்மதின் கடவுளான அல்லாஹ்வின் மலக்குகள்தான் (சைத்தான் மூலமாக) அதில்தான் அல்லாஹ்வின் நாட்டத்துடன் இந்த காஃபீர் ஜோதிடர்கள் பொய்யையை கலந்துவிடுகிறார்கள்.. இங்கு சைத்தான் ஒரு கூரியர் சர்விஸ் டெலிவரி பாய்..
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(