அன்பெழில் Profile picture
Sep 24, 2020 9 tweets 3 min read Read on X
#வேளாண்மசோதா #FarmBill2020 #மூங்கில்_துரோகம் 2006 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்கள் குவிவதை பார்த்திருப்பீர்கள். 2006ல் UPA அரசு மன்மோகன் சிங்க் பிரதமர். கமல்நாத் சைனா சென்று ஓர் ஒப்பந்தம் போட்டு குடிசை தொழில்களை அழித்தார். அதாவது சீன அரசு ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு ஒரு கோடி
ருபாய் நன்கொடையாக தந்த பத்து நாட்களில் கமல்நாத் சைனா சென்றார். (சந்தேகம்: வெறும் ஒரு கோடி ருபாய் தந்ததற்காக இவ்வளவு பெரிய உதவியை சைனாவுக்கு காங்கிரஸ் செய்திருக்குமா அல்லது அதை விட அதிகமாக வெளிநாட்டில் உள்ள கணக்குகள் எதற்கேனும் பணம் அனுப்பப்பட்டதா என்று விசாரிக்கவேண்டும்). பீகார்
உத்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மேகாலயாவில் எல்லாம் மூங்கில் என்பது புல் வகையாகவே கருதப்பட்டது. மூங்கிலை வளர்த்து அறுத்து நாற்காலிகள், ஊதுபத்திகள் இன்னும் பிற விஷயங்கள் செய்யும் ஆட்களுக்கு விற்பார்கள் அவர்கள். சைனாவும் மூங்கிலை சகட்டு மேனிக்கு வளர்த்தது. மூங்கில்
இறக்குமதிக்கு இருக்கும் தடையை நீக்கியது காங்கிரஸ் அரசு. உள்ளூர் மூங்கிலை மரம் வகையராக்குள் கொண்டு வந்து, வெளிநாட்டு மூங்கிலை இறக்குமதி செய்தார்கள் காங்கிரஸ். இனி மூங்கிலை வெட்டுவதாக இருந்தால் வனத்துறை மற்றும் சில துறைகளிடம் உத்தரவு பெறவேண்டும் என்ற நிலை வந்தது. தற்கொலை முடிவு
என்பார்கள். ஆனால் இது திட்டமிட்ட கொலை முடிவு. மூங்கில் விவசாயிகளை கொன்று, தொடர்புள்ள தொழில்களை கொன்று, பொம்மைகள், ஊதுபத்திகள் செய்யும் தொழிலாளர்களை கொன்று அவர்கள் வாழ்வாதாரத்தை அழித்தார்கள். அதன் பிறகு சீன மூங்கிலில்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்ற நிலை. 2014 பாஜக அரசு வந்த
பின்னர் இதை மாற்றி, மூங்கிலை மறுபடியும் புல் என்ற வகைக்குள் கொண்டு வந்தது அரசு. மூங்கிலை அறுக்க யார் அனுமதியும் வேண்டாம் என்று முழு சுதந்திரம் தந்தது மோடி அரசு. சைனா ஒப்பந்தத்தை உடனே முழுமையாக ரத்து செய்ய முடியாது என்பதால் கொண்டு வந்து கொட்டுவதற்கு தடை விதித்தார் மோடி.
பின்னர் இங்கு மூங்கில் விவசாயம் வளர்ந்தது. சைனாவை எப்படி கையாள வேண்டுமென்று இன்று #காங்கிரஸ் பாஜகவுக்கு பாடம் எடுக்கிறது. விவசாய மசோதாவால் பெரிதும் பாதிக்கப்பட்டது ஷரத் பவார் கூட்டமும், #அகாலி_தள் சுக்பிர் சிங் கூட்டங்களே. சுக்பிருக்கு ஆண்டுக்கு 5000 கோடி வருமானம். உணவு
கார்பரேஷனுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் அவர் தான் தரகர். ஆண்டுக்கு ஒரு வேலையும் செய்யாமல் 2.5% கமிஷன் சம்பாதிப்பார். எல்லா கோடவுன்களும் அவருக்கே சொந்தம். ஒரு டன் கோதுமை கூட இவர் உத்தரவின்றி விற்க முடியாது. அது போச்சு! ஷரத் பவாருக்கு 10000 கோடி காலி. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது
ஏன் என்று புரிகிறதா? கோபப்படாமல் என்ன செய்வார்கள் எதிர் கட்சிகள்? விவசாயிகளுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும் வேளாண் மசோதாவை வரவேற்போம், எதிர்க்கட்சிகளின் பொய்களை உதாசீனப்படுத்துவோம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Sep 20
#நற்சிந்தனை
எல்லாரும் சுகமாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார் பகவான் ஆனால், எல்லாருமே சுகமாக இருக்க முடிவதில்லை. காரணம், அவரவர் #கர்மவினைகளுக்குத் தகுந்தபடி தான் வாழ்க்கை அமைகிறது. பூர்வ புண்ணியம் இருந்தால், செல்வம், சுக போகங்களை இந்த ஜென்மாவில் அனுபவிக்கலாம். Image
புண்ணியம் இல்லாவிடில், சிரமப்பட வேண்டியது தான். ஆயிரம் பேருக்கு, இலவசமாக சாப்பாடு போடுவதை
#சகஸ்ர_போஜனம் என்பர். ஆயிரத்துக்கும் அதிகமானால் பரவாயில்லை குறையக் கூடாது. சாப்பாடு என்றால் ஏதோ போட்டதை சாப்பிட்டு விட்டு போ என்பது மாதிரியல்ல வயிறு நிறைய சாப்பாடு. பல வித பதார்த்தங்கள்,
லட்டு, ஜிலேபி, பாயசம், அக்காரவடிசல் இப்படி பல அயிட்டங்கள், சகஸ்ர போஜனத்தில் உண்டு. எல்லாரும் சந்தோஷமாக சாப்பிட வருகின்றனர். அதில், ஒருவனுக்கு வயிற்று வலி. ஒரு உருண்டை சாம்பார் சாதம் உள்ளே போனாலே, வயிற்று வலி வந்து விடும். இவனால் எப்படி நன்றாக சாப்பிட முடியும்? இன்னொருவனுக்கு
Read 9 tweets
Sep 18
#இறைவனின்_வாகனங்கள்
துர்கை அம்மன்
ஒருசமயம் அவர் கடும் தவத்தில் ஈடுபட்டிருந்தபோது சிங்கம் ஒன்று அவரின் பாதுகாப்பிற்காக தவக்காலம் முழுக்க அவரின் அருகிலேயே இருந்துள்ளது. சிங்கத்தின் பக்தியால் ஈர்க்கப்பட்டு அன்று முதல் அந்த சிங்கத்தைத் தம் கூடவே வைத்துக் கொண்டதோடு, தனது வாகனமாகவும்Image
ஏற்றுக்கொண்டார் அம்பாள்!
சரஸ்வதி தேவி
படிப்புக்கும் அறிவுக்கும் அதிபதி சரஸ்வதி. இவரது வாகனம் அன்னப்பறவை. அன்னப் பறவை பாலையும் தண்ணீரையும் பிரித்துப் பார்த்து பாலை மட்டும் அருந்தக்கூடிய திறன் கொண்டது. இதே போல நல்லவை கெட்டவைகளையும் பிரித்தறியும் ஆற்றல் நமக்கும் தேவை என்பதை
உணர்த்தவே அன்னப்பறவையை வாகனமாக வைத்துள்ளார்.
மகாலக்ஷ்மி
இவர் அமர்ந்திருப்பது தாமரை மலரில் இவரின் வாகனம் ஆந்தை. ஆந்தையின் இரவில் மிளிரும் அறிவு, புத்திக்கூர்மை மற்றும் அச்சமூட்டும் தோற்றம் ஆகியவற்றால் கவரப்பட்டு அதைத் தனது வாகனமாக வைத்துள்ளார் லக்ஷ்மி தேவி. பக்தியை வளர்ப்பதில்
Read 9 tweets
Sep 18
#பெருமாள்_மதமாம்_புரட்டாசி
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த மாதம் என்பது எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக புரட்டாசி மாதம் சனிக்கிழமை வந்தால் எல்லார் வீட்டிலும் கோவிந்தா கோவிந்தா என்ற நாமம் நிச்சயமாக உச்சரிக்கப்படும். இம்மாதம் மட்டும் பெருமாளுக்கு எந்த Image
வகையில் சிறப்பு என்பதற்கான பதிவு இது. முன்பொரு காலத்தில் தொண்டைமான் என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் பெரிய பெருமாள் பக்தன். தன் அரண்மனையில் தங்கத்தால் செய்த பெருமாளை வைத்து, தினமும் தங்க புஷ்பத்தால், வெள்ளி புஷ்பத்தால் பூஜித்து, பெருமாளை வழிபடுவது அவன் வழக்கம். வழக்கம்போல் ஒருImage
நாள் காலை எழுந்து மன்னன் குளித்துவிட்டு, பெருமாள் விக்கிரகத்துக்கு முன்னால் அமர்ந்து, தயாராக இருக்கும் பூக்களை எடுத்து பூஜை செய்ய தொடங்கினான். ஆனால், மன்னன் எடுத்துப் போடக் கூடிய தங்க புஷ்பங்களும், வெள்ளி புஷ்பங்களும் வாசனை மிகுந்த மலர்களும் திடீரென்று களிமண் பூக்களாக மாறின.
Read 13 tweets
Sep 17
#மஹாளாயபக்ஷம் (18.09.2024 to 02.10.2024)
நமக்கு ஏதாவது தீராத பிரச்சனைகள் இருந்து வந்தால், வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களை அனுபவித்து வந்தால், அதற்கான தீர்வு காண நம் ஜாதகத்தை கொண்டு போய் ஜோதிடரிடம் காட்டி என்ன பிரச்சினை என்று கேட்கும் போது முதலில் அவர் நம்மிடம் கேட்கும் கேள்வி Image
பித்ருக்களுக்கு செய்கின்ற திதிகளையும், தர்பணத்தையும் சரியாக முறையாக தவறாமல் செய்து வருகிறீர்களா என்பது தான். ஏனென்றால் நம்முடைய முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நாம் சரியாக செய்யவில்லை என்றால், அதன்மூலமாக பித்ரு தோஷம் ஏற்பட்டு, பித்ரு சாபம் ஏற்பட்டு, உண்டாகக் கூடிய Image
பிரச்சனைகள் ஏராளம். அந்த சாபம் நம்மோடு நின்று விடாது. நம் பரம்பரைக்கே வழிவழியாக தொடர்ந்து வரும். இப்படியாக உங்களுக்கு ஏதேனும் பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பாக்கி இருந்தால் இந்த மஹாளய பட்சத்தில் அதை சரி செய்து விட முடியும். மேலோகத்தில், அதாவது நம் மொழியில் சொல்லப் போனால்
Read 13 tweets
Sep 17
கற்சிற்பம் பிரதிஷ்டைக்குப் பின் கடவுளாவது எப்படி?
கருங்கல் சிற்பமாவது சாதாரண விஷயமல்ல. கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாகும் வரை சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். சிலைக்கே விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற்சிற்பம் வடித்தவுடன்Image
அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது. அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப் பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள். சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் Image
வைக்கப் படுகிறது.
1. ஜலவாசம்
புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப் பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும். ஜலவாசத்தில் இருக்கும் சிலை
Read 17 tweets
Sep 16
#ஸ்ரீவிஷ்ணுசஹஸ்ரநாம_மகிமை
நம் பாரத இதிகாசச் செல்வங்களுள் ஒன்றான மகாபாரதம், ஐந்தாவது வேதமாகப் போற்றப் படுகிறது. தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்னும் சதுர்வித புருஷார்த்த சாதனமாக இதை அளித்துள்ளார். பிரஸ்தான த்ரயத்தில் ஒன்றாகப் புகழ்பெற்ற பகவத் கீதை கூறும் பரமார்த்தத்தையே Image
ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் விளக்கமாகக் கூறுகிறது. இந்த ஆயிரம் நாமங்களின் படைப்பு இக, பர நலன்களை அளிக்கக்கூடிய ஒரு மஹா மந்திரப் பூங்கொத்து. மகாபாரதத்தின் அனுசாசனிக பர்வத்தின் உட்பகுதியான இந்த இரத்தின மஞ்சரி, பீஷ்மாச்சாரியார் மூலமாக யுதிஷ்டிரனுக்கு உபதேசிக்கப்பட்டது. யுத்த
முடிவில், யுதிஷ்டிரனுக்கு பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டது. ஸ்ரீகிருஷ்ணனை தரிசிக்க, யுதிஷ்டிரன் சென்றான். அச்சமயத்தில் பரமாத்மா தியானத்தில் ஆழ்ந்திருக்கக் கண்டு,யோகீஸ்வரனை வணங்கி நின்றான் யுதிஷ்டிரன். ஸ்ரீகிருஷ்ணன் தியானத்திலிருந்து வெளிவந்த பின், தர்மபுத்திரன், அவரைப் பார்த்து
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(