செப்டம்பர் 29 தந்தை என்.சிவராஜ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்.
பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களால் அன்புடனும் மரியாதையுடனும் “தலைவர்” என அழைக்கப்பட்ட தந்தை என்.சிவராஜ் அவர்கள், சென்னையில் 1892 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 இல் பிறந்தார்.
அவருடைய தந்தையின் பெயர நமச்சிவாயம். சென்னை மாநிலக்கல்லூரியிலும், சட்டக்கல்லூரியிலும் கல்விக்கற்று தேர்ந்த சிவராஜ் அவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞராகவும், சட்டக்கல்லூரியில் பேராசிரியராகவும் கடமையாற்றினார்.
இளம் வயதிலேயே தான் பிறந்த சேரி சமூகத்தின் முன்னேற்றம் குறித்து சிந்தித்து செயல்பட்டார். சேரிக்கு உழைத்த தலைவர்களோடு இணைந்து பணியாற்றினார். அவரது கருத்துமிக்க உரையினாலும் ஆக்கமான செயல்களாலும் மக்களின் நன்மதிப்பை சீக்கிரமே பெற்றார். கல்வி, சட்ட அறிவு, விவசாய நிலம்,
அரசியல் அதிகாரம் ஆகியவையே நம் சமூகத்தை முன்னேற்றும் என்பதை வலியுறுத்தினார்.
1922 இல் சென்னை மகாண சட்டமன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தந்தை சிவாரஜ் அவர்கள்தான் பட்டியலின மாணவர்களுக்கான விடுதிகள் உருவாக காரணமாக இருந்தார்.
சட்டமன்றத்தில் அமைக்கப்பட்ட பல குழுக்களில் பங்கேற்று சிறப்பான பணிகளை மேற்கொண்டார். #அண்ணல் மீது பற்றுகொண்ட தந்தை சிவராஜ் அவரோடு இணைந்து பணியாற்றினார். தந்தை சிவராஜ் அவர்களின் மனைவியும் சேரியின் போராளித்தாயுமான அன்னை மீனாம்பாள் அவர்களும் அண்ணலின் சகோதிரியாக இணைந்து செயல்பட்டார்.
தந்தை சிவராஜும் அன்னை மீனாம்பாளும் அண்ணலின் வழியில் பௌத்தம் தழுவி அதை மக்களிடம் பரவலாக்கினார்கள்.
தந்தை சிவராஜ் அவர்களின் ஆளுமையையும் அறிவையும் கண்டு மகிழ்ந்த அண்ணல் அவரை 1942 இல் “செட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷன்” அமைப்பின் அகில இந்திய தலைவராக ஆக்கினார்.
1945 ஆம் ஆண்டு சென்னையின் மேயரான தந்தை சிவராஜ் அவர்கள் சிறப்பான மேயராக விளங்கினார். சான்பிரான்ஸிஸ்கோ மநாட்டில் கலந்துகொண்ட தந்தை சிவராஜ் அவர்கள் இந்தியாவில் உள்ள ஜாதி இழிவுகளைக்குறித்தும் கொடிய வறுமைக்குறித்தும் உரையாற்றினார்.
ஆங்கிலேயர்கள் செய்த சில சீர்திருதங்களை ஏற்றுக்கொண்டாலும் தந்தை சிவராஜ் அவர்கள் முழுமையாக அவர்களை ஆதரிக்கவில்லை. சேரி மக்களுக்கு பெரிதாக எதுவும் ஆங்கிலேய அரசு செய்திடவில்லை என்ற காரணத்தை வலியுறுத்தி அவர்களால் கொடுக்கப்பட்ட #திவான்பகதூர் பட்டத்தை 1946 ஆம் அண்டில் தூக்கியெறி்ந்தார்.
1946 இல் #ஜெய்பீம் என்கிற ஆங்கில பத்திரிக்கையை துவக்கினார். இதழ் வழியாக ஜாதி வெறியையும் ஆங்கிலேய ஆட்சியின் குறைகளையும் கண்டித்து கருத்துரைத்தார்.
1944 மற்றும் 1960 ஆகிய ஆண்டுகளில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அங்கு அமைக்கப்பட்ட பலக் குழுக்களில் பங்கேற்று சிறப்பான திட்டங்கள் உருவாக காரணமாக இருந்தார்.
சேரி மக்களின் விடுதலைக்காவும் பாதுகாப்புக்காகவும் அல்லும் பகலும் கடும் உழைப்பைக் கொடுத்து போராளியாக, அகில இந்திய தலைவராக,
சிறந்த பாராளுமன்ற ஜனநாயகவாதியாக திகழ்ந்த உத்தமர் தந்தை என். சிவராஜ் அவர்கள் அவர் பிறந்த தேதியான செப்டம்பர் 29 ஆம் தேயிலேயே 1964 ஆம் ஆண்டில் புது தில்லியில் இயற்கையெய்தினார்.
உத்திரப் பிரதேசத்தில் இளம்வயது பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தப் பெண் முசாகர் என்ற பட்டியல் சாதி பெண்ணாம்.
கொன்றவர்கள் உபி.முதல்வர் யோகியின் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
யாதவர்களின் வீடு தாக்கூர்களின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், தலித்துகளின் வீடுகள் யாதவர்களின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், முசாகர்களின் வீடுகள் தலித்துகளின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும்.
தாலியற்ற திருமணங்களை அங்கீகரிப்பதன் மூலம் தாலியின் மீதான புனித பிம்பத்தை நொறுக்க சுயமரியாதை திருமணங்களை அங்கிகரீக்கும் சட்டம் கொண்டு வந்த #பேரறிஞர்_அண்ணா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..
நல்லா பாத்துக்கோங்க மக்களே.. 10th ல 80% மார்க் கீழ எடுத்தாலே பெரும்பாலும் எந்த ஸ்கூல்லயும் Science Group கிடைக்காது, 430 மார்க் Minimum எடுத்தா தான் Science group எடுக்க முடியும்.
மெடிக்கல் கவுன்சிலிங் ஒரு தடவை அட்டண்ட் பண்ணவங்களுக்கு கூட தெரியும்...
12th ல 194க்கு கீழ கட் ஆஃப் இருந்தா சீட்டே கிடைக்காதுன்னு கவுன்சிலிங் அட்டண்ட் கூட பண்ண மாட்டாங்க, எந்த Category யா இருந்தாலும் கஷ்டப்பட்டு படிச்சி Minimum 194.75 கட் ஆஃப் வாங்கி டாக்டரானவங்களை Just pass போற போக்குல சொல்லிட்டு போறான் இந்த தினமலம்.
ஏழை எளிய மலைவாழ் மாணவர்களின் கல்வியின் வெளிச்சமாக விளங்கும் நிஜ ராட்ச்சசி அக்கா மகாலட்சுமி அவர்களின் முகநூல் பதிவு.!
எம்புள்ள அரசுப்பள்ளியில தான் படிக்குது. எம்புள்ளையோட கல்வி உரிமையைப் பறிக்க ஒரு கும்பல் சதித்திட்டம் தீட்டிடிச்சி. சென்ற ஆண்டு எத்தனையோ முறை கதறி அழுதிருக்கேன்.
ஆனால் என் கண்ணீரெல்லாம் வீணாவே போயிடிச்சி. எம்புள்ளையோட எதிர்காலத்தை நெனைக்கும்போ'து 'பக்' ங்கிது.
ஏக்கர் கணக்குல நெலமும் இல்ல!
ஏய்ச்சிப் பொழைக்க மனசும் இல்ல.! என் கல்விக்காகப் பாடுபட்ட பெரியவங்க மாதிரி
எம்புள்ளையோட கல்விக்காகப் பாடுபட யாராவது வருவாங்களானு..
நேற்று ஒரு பேக்கரியில் இருந்து வெளியே வந்தேன். கையில் ஒரு பிரெட் பாக்கெட். பைக் எடுக்கப் போகும்போது அருகில் நின்றிருந்த ஒரு பெண், ‘’புள்ளைங்க பசியோட கிடக்குது. நாலு பிரெட் குடுங்களேன்’’ என்றார். மனம் நடுங்கிப்போனது. பாக்கெட்டை கொடுத்தேன். பதறி மறுத்தார்
. ‘’நாலு போதும். உங்க பிள்ளைங்களுக்கு குடுங்க..’’ என்றார். கையில் கொடுத்துவிட்டு, இருந்த கொஞ்ச காசை கொடுத்தேன். வேண்டவே வேண்டாம் என்று மறுத்தார்.
முகக் கவசம் தாண்டி அவரது விழிகளில் தெரிந்த கையறு நிலை உலுக்கியது. பேக்கரி மூடும் நேரம் என்பதால்,
பேக்கரி மூடும் நேரம் என்பதால், இன்னொரு பிரெட் பாக்கெட் வாங்கிக்கொண்டு மீண்டும் பைக் அருகே வந்தபோது தடுமாற்றத்துடன் அருகே வந்தார்.
‘’மன்னிச்சிக்கனும். மூணு புள்ளைங்க. வீட்டுக்காரர் இறந்திட்டார். மொத்தம் மூணு வீட்டுல வீட்டு வேலைக்கு போய்க்கிட்டிருந்தேன்.