உங்களிடன் குறிப்பிட்ட அளவு சேமிப்பு இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை வங்கியின் சேமிப்பு கணக்கில் வைத்தால் வட்டி குறைவாகவே கிட்டும். டெபாசிட் போட்டால் அவசரத்திற்கு உடைக்க முடியாது. முதிர்வுக்கு முன்பு எடுத்தால் சில சமயம் penalty வரும்.
என்ன செய்யலாம்?
Flexi-deposit கணக்கை துவங்கி அதில் வையுங்கள். குறிப்பிட்ட இருப்பிற்கு மேல் (எ.கா. ௹10,000) டெபாசிட்டாக மாறி விடும். வட்டியும் சேமிப்புகணக்கு விட அதிகம் கிடைக்கும். 24×7 உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
புதிய தலைமுறை தனியார் வங்கிகள் (Axis, Hdfc, Icici) இந்த வசதியை வழங்குகிறது.
இந்த வசதி ஒரு சில பொதுத்துறை வங்கிகளிலும் உள்ளது. உங்கள் கணக்கு இருக்கும் கிளையை அணுகுங்கள் 🙂
நான் தனியார் வங்கியை ஆதரிப்பது போல் சில பின்னூட்டங்களை பார்க்கிறேன். இந்த அவப்பெயருக்கு அஞ்சியே எந்த வங்கியையும் பரிந்துரை செய்வதில்லை
விளக்கம் இதோ:
பரோடா வங்கி: ரூ50,000 மேல் உள்ள இருப்பு ஓராண்டு வைப்புத் தொகையாக மாறும். குறைந்தது ரூ10,000 மட்டுமே டெபாசிட்டாக மாறும்
ஆக்ஸிஸ் வங்கி: 10,000 ரூபாய்க்கு மேல் உள்ள இருப்பு ஓராண்டு வைப்புத் தொகையாக மாறும். குறைந்தது 500 ரூபாய் கூட டெபாசிட்டாக மாறும்
ஒரு சில அரசு வங்கிகளில் உள்ள இந்த வசதியை threadல் சேர்க்க மறந்து விட்டேன். அதற்கு என் வருத்தங்கள்.
தவறு திருத்தப்பட்டது.
நண்பர்களே, இனி யாரும் எந்த வங்கியின் பெயரையும் குறிப்பிட்டு என்னிடம் பேச வேண்டாம். அந்த வங்கியில் பணம் போடலாமா? கடன் வாங்கலாமா என கேட்ட வேண்டாம்.
உங்கள் சந்தேகத்தை மட்டுமே கேளுங்கள்.
நேரம் இருந்தால் பதில் தருகிறேன்.
I should stop losing too much of my personal space 🙏🙏🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வங்கி சம்பந்தப்பட்ட பதிவுகள் என்னுடைய சொந்த அனுபவம் மட்டுமே. இது நான் பணிபுரியும் வங்கி / வேறா எந்த ஒரு நிறுவனத்தின் கருத்தோ அல்ல. இதை எந்தவித சட்ட நடவடிக்கைக்கு பயன்படுத்த அனுமதி இல்லை.
முன் அனுமதியின்றி காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்
👍🏼👍🏼👍🏼
புதிய தொழிலுக்கு வங்கிக் கடன் - Project Finance
பலருக்கு தொழில் துவங்கி சொந்த காலில் நிற்க ஆசை, வேட்கை, கனவு.. ஆனால் எல்லோரும் அது நடப்பதில்லை. அவர்கள் சொல்லும் முதல் குறை 'எந்த பேங்க் கடன் தரான்'
உங்கள் project உங்களுக்கு தான் கனவு. மற்றவருக்கு அது just ஒரு project தான்
உங்கள் project viability / visibility இல்லாமல் எந்த வங்கியும் கடன் தராது. ஏன், உங்கள் பெற்றோர் தருவது சந்தேகமே.
Related industry இல் அனுபவம் இல்லையா? கடன் இல்லை. MBA படித்துவிட்டு 5 வருடம் இன்சூரன்ஸ் துறையில் பணியாற்றி விட்டு garment unit போட project ready செய்தால் எந்த
நம்ம ஊர் ஆதார்அட்டைக்கு expirydate கிடையாது. வளைகுடா நாடுகளில் குடிமக்கள் அட்டையை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை renewal செய்ய வேண்டும்
உங்களின் வங்கிகணக்கு, சொத்து, பாஸ்போர்ட் முதல் கார் நம்பர்பிளேட் வரை எல்லாம் அத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். சாலை விதிமீறல் செய்தால்
தானாகவே உங்கள் அட்டையில் அபராதம் சேர்க்கப்படும். உங்களுக்கு notice ஏதும் வராது. நீங்கள் அவ்வப்போது onlineல் பார்த்து, அபராதத்தை கட்டிக் கொள்ள வேண்டும்.
உங்களின் குடிமக்கள் அட்டை expiry ஆகிவிட்டால் வங்கி கணக்கு முதல் பாஸ்போர்ட் வரை முடங்கி விடும்.
அபராதம் நிலுவையில்
இருந்தால் renewal ஆகாது. அதை கட்டினால் மட்டுமே renewal ஆகும். Renewal ஆகாவிட்டால் ATMல் 100 ரியால் கூட எடுக்க முடியாது.
இதுபோன்ற கடுமையான system மூலமே சாலையில் ஒழுக்கத்தை கொண்டு வரும்.
வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து நடந்தது. முதலில் காவல்துறை மூலம் பேரிக்கேட் வேத்தோம். அது போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்தது. பின்னர் கிராம சபையில் தீர்மானம் போட்டு, ஆட்சியரிடம் அளித்து, குறை தீர்க்கும் நாளில் விடுமுறை எடுத்து,
கேள்விகள் கேட்டு, விடாமல் பின்தொடர்ந்து ஓராண்டு கழித்து போடப்பட்டது. இப்போது மக்கள் பாதுகாப்பாக சாலையை கடக்கிறார்கள்.
மக்களின் அதிகாரத்தை உணர்ந்த தருணம்.
இத்தகைய கிராம சபையை முடக்குவது அரசின் பொறுப்பற்ற செயல்.