கடமையைச் செய்யக் கலங்காதீர் ( திராவிட நாடு 13-08-1950)
நமது மாகாண சர்க்காரில் 20 வருடகால அமுலில் இருந்து வந்த கம்யூனல் ஜீ.ஓ. ஜொலிக்கும் மணிகளை நமக்கு அளித்தது. 1/n
திராவிட மக்கள், சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கிடைத்தால் எவரையும் மிஞ்சிவிடுவோம் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார்கள். இதைப் பார்த்தே, “சதிகார வர்க்கத்தினர்” வெகுகாலமாக திட்டமிட்டு, ஹைகோர்ட் வரை சென்று வழக்காடி வெற்றியும் பெற்றுவிட்டனர்.
உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன்; சேலத்தில் பிராமண மாநாடு கூடிய காலத்திலேயே, கம்யூனல் ஜி.ஓ.வை ஒழிக்க அவர்கள் திட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
அதன்படியே இன்று இரு பார்ப்பன மாணவர்களைத் தூண்டிவிட்டு அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரும் சீனிவாசய்யங்காரும் வழக்கில் வாதாடியிருக்கிறார்கள்.
1950 ஆம் ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.
சமூக நீதிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை எதிர்த்து தந்தை பெரியார் 14.09.1950-ல் நாடெங்கும் ‘வகுப்புரிமை நாள் கொண்டாடுங்கள்!’ என வேண்டுகோள் விடுத்தார்.
தந்தை பெரியாரின் வேண்டுகோளை ஏற்றுத் தமிழகமே திரண்டெனர்.
டெல்லி உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பும் வகுப்புவாரி உரிமைக்கு எதிராக அமைந்தது. அந்தத் தீர்ப்பைத் துணையாகக் கொண்டு ,‘வகுப்புவாரி உத்தரவை அமல்படுத்துவது இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானது;
ஆதலால், அதனை அமல்படுத்தக்கூடாது’ – என மத்திய அரசு 1950 செப்டம்பர் மாதம் மாகாண அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.
அனைத்துக் கட்சியிலும் உள்ள வகுப்புவாரி உரிமை ஆதரவாளர்களைத் திரட்டினார் பெரியார்; திருச்சியில் 03.12.1950-ல் ‘வகுப்புவாரி உரிமை மாநாடு’ ஒன்றைப் பெரிய அளவில் நடத்திப் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார்.
சென்னை மாகாணத்தில் அண்ணாவும் பெரியாரும் திராவிட மக்களை ஒன்று திரட்டி போராடினார் . டெல்லி சுல்தானிஸம் போராட்டத்திற்கு அஞ்சி அண்ணா சொன்னது போல சட்ட சீர்திருத்ததிற்கு ஒப்புக் கொண்டனர்.
இந்திய அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்ட ஓராண்டு காலத்திற்குள் 1951, பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட இந்த திருத்தமே – அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட ‘முதல்’ – திருத்தம் ஆகும்.
ஆக திமு கழகத் தலைவர் @mkstalin திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இருக்காது என்று சொன்னால் நீட் தேர்வு இருக்காது. ஏனென்றால் அவர் பெரியார் - அண்ணா - கலைஞர் சிந்தனை மரபு வழி வந்தவர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#திராவிடப்பெருஞ்சுவர் திராவிடன் என்றால் யார்? தமிழன் என்று கூறாமல் திராவிடன் என்று கூறுவது ஏன் என்று கேட்கிறார்கள். நான் கூட்டங்களிலும், ஏடுகளிலும் எழுதும் போதும், பேசும்போதும் மொழியால் நாம் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், நாட்டால் இந்தியர்கள், உலகத்தால் மனிதர்கள் என்று 1/n
குறிப்பிடுவேன். தமிழனை, தமிழ் மொழியை நாங்கள் மறந்து விடவில்லை. நாம் பட்ட பாட்டால், நாம் நடத்திய போராட்டங்களால், நாம் உருவாக்கிய கிளர்ச்சிகளால், நாம் அடிபட்டு, உதைபட்டு சிறைச்சாலைகளுக்குச் சென்று பெரியாரும், அண்ணாவும், சமூகநீதிக் காவலர்களும் தங்களை இந்த இயக்கத்திலே மாத்திரமல்ல,
இந்த இனத்திற்காக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களினுடைய உயர்வுக்காக பாடுபட்டு பணியாற்றியதன் காரணமாகத்தான் இன்றைய தினம் ஓரளவு நாம் நிமிர்ந்திருக்க முடிகிறது.
திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்ற கழகமும் இரு திக்குகளிலிருந்தும் வட நாட்டு ஏகாதிபத்தியத்தை ஒழித்து, வைதீகக் காட்டை அழித்துச் சமதர்மப் பூங்காவை திராவிடத்தைச் செழிக்கச் செய்தல் வேண்டும். #திராவிடப்பெருஞ்சுவர் 1/n
அதிலே எந்தக் கழகம் பூங்காவை அமைத்தாலும் அதில் பூக்கும் பூக்கள், காய்கள், கனிகள் திராவிடத்தின் எழுச்சியை, மலர்ச்சியைத்தான் குறிக்கும்.
பழமையும், பாசிசமும் முறியடிக்கப்படும்வரை ஓயமாட்டோம். உழைப்போம். உருவான பலனைக் காண்போம்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தவர் மட்டுமல்ல கலைஞர் . இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்ய நினைத்த போது அதை போராடி மீட்டவர் கலைஞர் .
சட்டமன்ற விவாதம் : 06-05-1998 அன்று கலைஞர் பேசியது. 1/n
டெல்லியில் மாநாட்டு நிரலில் உள்ள பல பிரச்சினைகளில் எங்களுக்கு உடன்பாடு உள்ளது. உதாரணத்திற்கு மின் திட்டங்களைச் சீர்படுத்துதல், நவீனப்படுத்துதல், கணிசமான அளவுக்கு மின் இழப்புகளைத் தவிர்த்தல், மின் உற்பத்திக்கு ஊக்கம் அளித்தல் போன்றவைகளில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை.
ஆனால் சில பிரச்சினைகளில் எங்களுக்கு மாறுபாடு உண்டு. ஒன்று, தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் விவசாயி களுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதை இரத்து செய்ய முடியாது. விவசாயப் பம்பு செட்டுக்குக் கட்டணம் விதிப்பதை எங்கள் மக்கள் எதிர்க்கிறார்கள்.
ரயில், அஞ்சல் நிலையங்கள் பெயர்ப்பலகைகளில் மூன்றாவது வரிசையில் இருந்த இந்திய - முன்னுரிமை கொடுத்து மேலே முதல் வரிசையில் எழுத வேண்டும், என்பது அரசின் உத்தரவு
அதன் காரணமாக மேலே இருந்த தமிழ் மூன்றாவதாக கீழே எழுதப்பட்டது. 1/n
தடியைத் தட்டிய பெரியார், முன்னுரிமை கொடுத்து எழுதப்படும் இந்தி - தார் கொண்டு அழிக்கப்படும்.
மக்களின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு, நடுவண் அரசு அதை மாற்றும் வரை, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் நாள் தார் கொண்டு இந்தியை அழிக்கும் போராட்டம் தொடரும் என அறிவித்தார்.
இந்தப் போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் கலந்து கொண்டால் வரவேற்போம் என்றார் பெரியார்.
பெரியாருக்கு 66 வயது, பற்கள் சில விழுந்து விட்டன. செயற்கைப் பல் கட்டி இருந்தார். மருத்துவம் முன்னேறாத காலம் அது. சரியான அளவில் பொருந்தாத செயற்கைப் பற்கள் நாவில் உரசிப் புண்ணாகி விட்டது. 1/n
16.3.1945 அன்று சென்னை மருத்துவமனையில் சேர்ந்து நாட்கள் சிகிச்சை பெற்றார். அவரது நாக்கில் புற்றுநோய் ஏற்பட்டு இருப்பது தெரிந்தது
புற்றுநோய்,
அந்த நோயின் தாக்கத்தில் ஏற்படும் விளைவுகள் எதைப் பற்றியும் அவர் கலங்கவில்லை ஆனால், நாத்திகம் பேசியவர் நாக்கில் புற்று, என்று அதற்கு மதச்சாயம் பூச - இன எதிரிகளுக்கு இடம் ஏற்பட்டு விட்டதே என்று கலங்கினார்.
His services to society are indeed great. The people of the country have not attained intellectual fertility to such an extent as to accept his ideas and ideals. 1/n
The growth of a crop depends upon the fertility of the soil. Likewise people of good intellectual capacity only can grasp and foster his ideas and ideals.
We cannot say that his service does not do any good..
After his forty years' social service, intellectual revolution has achieved success in Tamil Nadu. None can deny it. We know well how powerful and potent his rationalist propaganda is.