தரிசு நிலத்தில் சிட்கோ, சிப்காட் அமைக்கலாம். வேலை வாய்ப்புகள் உருவாக்கலாம். அதற்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார். ஆனால் சிப்காட், சிட்கோ பெயரால் பலநூறுகோடி மதிப்புள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதையும், விவசாயத்தை அழிப்பதையும் ஏற்க முடியாது.
(1/n)
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஊராட்சி R.கோம்பை பகுதியில் இயற்கை வளங்களை அழித்து சிட்கோ அமைப்பதாகவும்,தங்கள் வாழ்வாதாரமான விவசாயத்தைக் காப்பாற்ற போராடும் தங்களை அதிமுக ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் காவல்துறையை வைத்து மிரட்டுவதாகவும் ...
(2/n)
...பொதுமக்கள், விவசாயிகள் தெரிவித்த புகாரின் பெயரில் இன்று பொதுமக்களுடன் சிட்கோ அமைக்கும் இடத்திற்கு சென்றேன்.
அங்கே அதிமுக ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் அந்தப்பகுதிக்கு தொடர்பு இல்லாதவர்களுடன் வந்து தகராறில் ஈடுபட்டார். மிகவும் மோசமாக நடந்துகொண்டனர்.
(3/n)
இதனால் ஊர் மக்கள் ஆத்திரமடைந்து அவர்களை விரட்டினர். மரங்களை பிடுங்கும் ஜே சி பிக்கு முன் ஊர்மக்களுடன் அமர்ந்தேன். எங்களைத் தாண்டித் தான் ஜே சி பி போகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதன்பிறகு காவல்துறை தலையிட்டு ஜே சி பி இயந்திரங்களை வெளியே அனுப்பினர்.
(4/n)
காட்டை, விவசாயத்தை அழிக்கும் பணி தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வேடசந்தூர் தொகுதியில் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள மண்,மர,மலை வளங்களை கொள்ளையடிக்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ,ஒன்றிய செயலாளர்கள் முயன்றுவருகிறார்கள்.
(5/n)
மக்களின் எதிர்ப்பும், ஒரு நாடாளுமன்ற உறுப்பனராக மக்கள் சார்பாக நிற்கும் எனது கடமை உணர்ச்சியும் தடையாக இருக்கிறது.
தனது வாழ்வாதாரத்திற்காக போராடுகிற மக்களை, ஆளும் அதிமுகவினர் காவல்துறையின் உதவி கொண்டு அடக்குவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
(6/n)
இதற்கு முன் இரு மாதங்களுக்கு முன்பு வடமதுரையில் 300 ஏக்கர் வள்ளிமலை எங்கள் போராட்டத்தால் அதிமுக சட்டமன்ற உறுப்பினரிடம் இருந்து காப்பாற்றப்பட்டது.
ஆளும் அதிமுக ஆட்சி முடியும் நேரத்தில் தீவிர கொள்ளையில் இறங்கியிருக்கிறார்கள். இதை தடுப்பது நமது கடமை.
(n/n)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பிஜேபி ஏன் விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் குதிக்கிறது?
கொரொனா தொற்று காரணமாக பல்லாயிரக்கணக்கான
குலதெய்வக் கோவில்கள் பக்தர்களுக்கு மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதும்,மீனாட்சி திருக்கல்யாணமும் நடைபெறவில்லை. (1/n)
பக்தர்கள் காவடியோடு சாரை சாரையாக நடந்தே மலையேறும் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடைபெறவில்லை. மாரியம்மன் பண்டிகைகள் உட்பட மற்ற திருவிழாக்களுக்கும் இதே நிலைதான். மக்கள் இதைப் புரிந்திருக்கிறார்கள். பக்தி பறிபோய் விட்டதாக குதிக்கவில்லை. ஏனெனில் அது உண்மையான பக்தி. (2/n)
ஆனால் விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் பிஜேபி ஏன் கிடந்து குதிக்கிறது? அவர்களைப் பொறுத்தவரை விநாயகர் சதுர்த்தி அரசியல் செய்யவும்,காசு பார்க்கவும்,கலவரத்தை உருவாக்கவும் வாய்ப்பான ஒரு செயல்பாடு. பக்திக்கு அங்கே இடமில்லை. முன்பு தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியே நடந்ததில்லையா? (3/n)
மோடி அரசின் துரோகம் (Read the thread)
மருத்துவ நீட் (NEET)
இளங்கலை,முதுகலைத் தேர்வில் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட 27% நீக்கிவிட்டு,உயர்சாதியினருக்கான 10% இமாணவர்களுஇடஒதுக்கீட்டைக்கானடஒதுக்கீட்டை சேர்த்து துரோகம் இழைத்துள்ளது மத்திய மோடி அரசு.
இதனால் நாடார் தேவர்,கவுண்டர்,வன்னியர்,யாதவர், முதலியார்,செட்டியார் ,முத்தரையர் உட்பட அனைத்து பிற்படுத்தப்பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த நமது பிள்ளைகளுக்கு மருத்துவ படிப்பு என்பது வெறும் கனவாகவே முடியும்.
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 172 மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 7981 இடங்கள் உள்ளன. இதில் 6226 இடங்கள் பொதுப் பிரிவிற்கு சென்றுவிட்டன. ஒபீசி இடஒதுக்கீடு பூஜ்யமாகிவிட்டது. அகில இந்திய தொகுப்பிற்கு தமிழ்நாடு அளித்துள்ள இடம் 941. பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்த இடங்கள் பூஜ்யம்!
இன்று நியூஸ் 7 விவாதத்தில் இருந்து பாஜகவின் கரு. நாகராஜன் என்கிற மூன்றாந்தரமான மனிதரின் தரம்கெட்ட பேச்சால் வெளியேறினேன்.பிஜேபியின் ஆபாச அரசியலை உங்கள் துணையோடு களத்தில் நேர்நின்று எதிர்கொள்வேன். உங்கள் அன்பிற்கும் ,ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்! #I_Stand_with_Jothimani
நேர்மையும்,அன்பும்,கண்ணியமுமே எனது அரசியல். "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறிகள்" எனது வம்சம். மலிவான தனிநபர் தாக்குதல் மூலம் என்போன்ற பெண்களை பொதுவாழ்வில் இருந்து வெளியேற்றிவிட முடியுமென கனவிலும் நினைக்காதீர்.
ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் 25 ஆண்டுகளாக கரடுமுரடான பாதையினைக் கடந்து நாடாளுமன்றத்தில் கால் பதித்தவள். எனது நேர்மையை இந்த உலகறியும்.