மார்க்கெட்டிங் விசயமா திருப்பூர் போய்ட்டு நாலு வாரம் முன்னாடி,சனிக்கிழமை சாயங்காலம் பைக்ல வந்தேன். வரும்போதே லைட்டா மழைல நனஞ்சிட்டேன். வீட்டுக்கு வந்தா, ஒடம்பு லைட்டா கன கன ன்னு இருக்கு , பீவரிஷா..மூக்கு நமநமன்னு இருக்கு.1/1
சரி, மழைல நனஞ்சதாலதான்னு கேசுவலா விட்டுட்டேன். வீட்ல, தெர்மா மீட்டர் இருக்கு , செக் பன்னா...98+ காமிக்குது. விட்டுட்டேன். பட், மறுநாள் காலை காய்ச்சல் பீலிங் குறையல. 8-9 மணிக்கு டெம்ப்ரேச்சர் செக் பன்னா, 99+ போய்ருச்சு.
சரி, வெளாட்டா இருக்க வேண்டாம்னு டெஸ்ட்க்கு போனேன்.1/2
வீட்ல 2 மாச பாப்பா, வயசான மாமனார் மாமியார் வேற..சோ..கிளம்பிட்டேன். ப்ரைவேட்ல எடுத்தேன்.3800 ரூவா. அன்னைக்கு புல்லா ஒடம்பு நல்ல டயர்டு. வீட்ல, ரசம் , மஞ்சள் மிளகு பால், கபசுரகுடிநீர்னு சாப்ட்டேன். நல்ல தூக்கம். மறுநாள் காலை ஒடம்பு ப்ரீ ஆய்ருச்சு. காய்ச்சல் இல்ல. 1/3
அதுக்குள்ள, ரிப்போர்ட் சொந்த ஊர் கலக்டரேட்க்கு போயி, ஊர் ஹெல்த் இன்ஸ்பெக்டர்க்கு போயி போன் மேல போன். நான் வீட்லயே தனிமைப்படுத்திக்கிட்டேனு சொன்னாலும், வீட்ல எல்லார்க்கும் டெஸ்ட் எடுக்கனும், சென்டர் போய்ட்டு அவங்க சொன்னா மட்டும் வீட்ல தனிமைல இருக்கனும்னு சொல்லிட்டாங்க1/5
சரின்னு, பக்கத்துல ஒரு இன்ஜி . காலேஜ்ல சென்டர். போய் பார்த்தா நீட்டாத்தான் இருந்துச்சு. நானே ட்ரெஸ் எடுத்துட்டு போய் சேர்ந்துட்டேன். வீட்ல எல்லாரையும் ஜி.ஹெச் க்கு டெஸ்ட்க்கு போக சொல்லிட்டேன்.
1/5
சென்டர்ல, பெரிய கிளாஸ் ரூம்ல 6 பெட் மூனு வரிசை 18 பெட். இருக்குறதிலயே ப்ரீயா இருக்க ரூம்ல படுத்துட்டேன்.
காலை 7 மணிக்கு கபசுரகுடிநீர் கேன்ல வச்சிருவாங்க. டீ கப்பும்.
அப்றம் 8.30 கு 2 டிபன், இட்லி- பொங்கல், கிச்சடி,பூரி , பொங்கல், உப்புமா, ஊத்தப்பம்னு சட்னி சாம்பார்.
1/6
4 மணிக்கு அதே மாதிரி, ஏதாச்சும் ஒரு அவிச்ச பயறு, காபி, நைட்டுக்கு காலையில மாதிரி 2 ஐட்டம் டிபன்.
மாடில வாட்டர் ப்யூரிபையர்ல சுடு தண்ணி, பச்ச தண்ணி, காலேஜ்ல இருக்க வெஸ்டர்ன் டாய்லட்..1/7
அதே மாதிரி, காலையில 11 மணிக்கு துப்புரவு தொழிலார்கள் வந்து சாப்பாடு கப், கவர்,கழிவுகளை அள்ளீறாங்க. ப்ளோர்ல சானிட்டைசைர் ஸ்ப்ரே அடிக்கிறாங்க. யாராச்சிம் டிஷசார்ஜ் ஆகிருந்தா அந்த பெட்லயும் ஸ்ப்ரே அடிக்கிறாங்க. பாத்ரூமையும் நல்லா கழுவிறாங்க1/8
அப்புறம், அங்க எப்பவுமே ஒரு நர்ஸ் இருக்காங்க. அட்மிட் ஆகுற அப்பவே 3செட் மாத்திரை 5நாளைக்கு குடுக்குறாங்க. இதெல்லாம் பாசிட்டிவ், பட் அறிகுறி பெரிசா இல்லாதவங்களுக்கு மட்டும் தான். சீரியஸ்னா அவங்களே ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பிறாங்க. இடைல,எதாச்சும் காய்ச்சல் இருமல்னா மாத்திரை தராங்க 1/9
அட்மிசன் ஆகி, 5 நாள் ஆனவங்களுக்கு மூக்குல விட்டு எடுக்குற ஸவாப் டெஸ்ட் எடுக்குறாங்க. அது 2 நாள் கழிச்சு ரிப்போர்ட் வருது. நெகட்டிவ்னா உடனே டிஸ்சார்ஜ் சம்மரி கொடுத்து வீட்ல 2 வாரம் இருந்துகோங்கனு அனுப்பீறாங்க. பாசிட்டிவ்னா, 8 ரிப்போர்ட் வந்த 3-4 நாள் கழிச்சு1/10
அதே கன்டிசனோட அனுப்பிறாங்க.
இதுக்கு நடுவுல, வீட்ல எடுத்த டெஸ்ட்ல, மாமியார்க்கும் ஒய்ப்புக்கும் பாசிட்டிவ். மாமனார்க்கும், பாப்பாக்கும் நெகட்டிவ். பட், அவருக்கு பீவர் இருமல் சளின்னு அத்தனை சீரியஸ் அறிகுறியும் இருக்கு 1/11
மாமியாரை ,நா இருந்த சென்டர்க்கு வரச் சொல்லிட்டேன். பாப்பா இருக்கதால, ஒய்ப்பும் பாப்பாவும் வீட்லயே குவாரைன்டைன். மாமனார்க்கு சீரியஸ். சரி ப்ரைவேட்ல பார்க்கலாம்னா, டெஸ்ட் நெகட்டிவ் ரிப்போர்ட் கேட்குறாங்க 1/12
Govt la, டெஸ்ட் ரிப்போர்ட் போன்லதான் சொல்றாங்க. கோட் மெஜேஜ் வருது. ரிப்போர்ட் வேணும்னா நேர வரச்சொல்றாங்க. ICMR ஒரு லிங்க் மெஜேஜ் வருது. பட் அதுல ரிப்போர்ட் அப்டேட் ஆகுறதில்ல 1/13
மாமனார்க்கு இவ்ளோ ப்ராபளம் இருக்கு பட் நெகட்டிவ் னு வருதேனு , ப்ரைவேட்ல இன்னொரு டெஸ்ட் எடுத்தோம். லோக்கல் ஹாஸ்பிடல்ல CT scan எடுக்க சொல்லிட்டாங்க. கொரானா டெஸ்ட் again நெகட்டிவ். பட் ,சிடி ஸ்கேன்ல நுரையீரல் புல்லா சளி, இன்பெக்சன், 50%above இருக்கு. கொரானாக்கான அறிகுறி 70% னு 1/14
ரிப்போர்ட்.
மாமியாரும் நானும் கேம்ப்ல, ஒய்ப்ம் பாப்பாவும் வெளிய வரமுடியாது. இவருக்கு இவ்வளவு பிரச்சினை. ஆளு, அவ்வளவு வெவரமும் இல்லை. கைல ஒரு போன் கூட வச்சுக்காத டைப். சரின்னு ,விசாரிச்சா...1/15
கோயம்புத்தூர்ல ப்ரைவேட் ஹாஸ்பிடல் புல்லா இடம் இல்ல. கவர்ன்மென்ட் ஜி.ஹெச், ESI மட்டும் தான். அங்கயும் இதே நிலமைதான். சரி, கூட ஆள் இல்லாம ,அட்மிசன் ,டெஸ்ட்னு கூட போக கூட முடியாத நிலை. அப்புறம், பழைய ஹாஸ்பிடல் டாக்டர் ரெபர் பன்னி ஒரு மீடியம் ஹாஸ்பிடல்ல போயி அவரையே சேர சொல்லி..1/16
அனுப்புச்சாச்சு. அதுக்கே கால்டாக்சிகாரங்க கூடவர்ல. அப்டி இப்டினு போய்ட்டாரு. அங்க, ரிப்போர்ட் பார்த்துட்டு , ஆள் சீரியஸ்மா, ஹெவி இன்ஜக்சன் போடனும்.புள் சளி லங்ஸ் புல்லா இருக்கு. ஒரு ஊசி 5000 வரும். 6 -7நாள் போடனும்.நிறைய டெஸ்ட் எடுக்கனும். ஊசி அமவுன்ட் இல்லாம 15000/day ஆகும் 1/17
அவர் சொந்தகாரங்களே இருக்காங்க. போன்ல ஒய்ப் பேசுனதுக்கு எல்லாரும் ஒவ்வொரு காரணம் சொல்லி சைன் கூட பன்ன போகல. அப்றம் , என் கம்பெனி ப்ரன்ட போகச்சொல்லி அட்மிசன் போட்டேன். கடன் வாங்கி என் அக்கவுன்ட்ல இருந்த அமவுன்ட் னு ட்ரான்ஸ்பர் பன்னி பில்ல கட்டினேன்.1/19
இடைல, எனக்கு நெகட்டிவ் ரிப்போர்ட் வந்து டிஷ்ஜார்ஜ் ஆகிட்டேன். 3 நாள் கழிச்சு மாமியாரும் வந்துட்டாங்க. 7 நாள் இருந்து 135000 செலவழிச்சு மாமனாரும் வந்துட்டாரு. 1/20
இதுல கத்துகிட்டது, சமூகத்துக்கு சொல்ல விரும்புறது என்னான்னா, சளி இருமல் காய்ச்சல் உடம்பு வலி 2-3 நாள் இருந்தா யோசிக்காம அரசாங்கத்திலயோ ப்ரைவேட்லயோ டெஸ்ட் எடுத்திருங்க.
இதுலயுமே 30% பால்ஸ் பாசிட்டிவ், பால்ஸ் நெகட்டிவ் வர வாய்ப்பிருக்காம். சோ..நெகட்டிவ் தானே அசால்ட் வேண்டாம் 1/21
நெகட்டிவ் வந்து ,இந்த அறிகுறிகள் இருந்தா சாதா காய்ச்சல் சாதா சளின்னு விடாம CT Scan எடுங்க. காசு கூடத்தான். பட், எடுத்திருங்க.
கன்பார்ம் ஆய்ருச்சுனா, சென்டர் போகவோ ஆஸ்பிட்டல் போகவோ சங்கடபடாம போங்க.
முன்ன விட இப்ப நல்லாவே பார்க்குறாங்க.
1/22
இந்த த்ரெட்ல நாங்க சேப் ஆ தப்பிச்ச மாதிரி தான் இருக்கும். பட் , அந்த 135000 ன்றது என் மாமனாரோட ஒரு வருச உழைப்பு. அன்ட், இந்தளவு சீரியஸ் கன்டிசனோட போயி ,எல்லாரும் பொழைக்கிறது ரேர்.
அப்புறம் அதே சென்டர்ல, என் மாமியார் ரூம்ல மறுநாள் 2 லேடீஸ் அட்மிட் ஆனாங்க. வயசு 45+. 1/24
என்ன சோகம்னா, ரெண்டு பேரோட கணவர்களும் அண்ணன் தம்பிங்க. கணவர்கள் ரெண்டு பேரும் மூனுநாள் கேப்ல அடுத்தடுத்து கொரானாவுல இறந்துட்டாங்களாம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஏதோ, கெடைக்கிறத வச்சு குடும்பத்த ஓட்டுவார். வீட்டுல வாரிசுக்கு ஆம்பள பிள்ள வேணும்னு எனக்கு முன்னாடி 5 அக்காவையும் , துணைக்கு ஒரு பய இருந்தா நல்லாருக்கும்னு ஒரு தங்கச்சியும் ஆய்ருச்சு.
1/2
60-70கள்ல விவசாயமும் இல்லாம, சோத்துக்கும் இல்லாம பஞ்சத்துல அடிபட்டு, திருச்சி, தஞ்சாவூர் சைடு விவசாய கூலி வேலைக்கு குடும்பத்தோட மாட்டு வண்டி கட்டிகிட்டு பஞ்சம் பொழச்சிட்டு , அடுத்த ஆடி வர்றப்ப சொந்த ஊரில் வந்து வெவசாயம் பார்ப்பாங்களாம்
1/3