ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் உத்தவ் தாக்கரே மீது. ஆனால் இந்தியாவில் அவர் ஒருவர் மட்டும்தான் பாசிச வாதிகளுக்கு அவர்களது மொழியிலேயே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இன்று புதிதாக கிளம்பியிருக்கும் கருத்து சுதந்திர போராட்ட வீரர்கள் கொஞ்சம் அவர்களுடைய வரலாறை லேசாகத் திரும்பிப்
பார்த்தால் தெரியும், அவர்களது போர் கொடியின் சாயம் எப்படி வெளுத்துக் கொண்டிருக்கிறது என்று.
இந்தியாவில் எத்தனை பத்திரிகையாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? கௌரி லங்கேஷின் கொலை வழக்கு என்ன ஆனது? எத்தனை பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள்? எத்தனை பத்திரிகையாளர்கள் மீது
தாக்குதல்கள்?
இன்று தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டு இருப்பதை கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவால் என்று சொல்வதற்கு உங்களுக்கு கூச்சமாக இல்லை?
கோஸ்வாமியின் மீதான வழக்கு அப்போதிருந்த பாஜக அரசால் மூடப்பட்டது. இன்றைய அரசு அதை கையில்
எடுத்திருக்கிறது.
உத்தவ் தாக்கரேயின் கைகளில் இருப்பதும் அவர் இன்று பயன்படுத்தி இருப்பதும் பாஜக தேயத் தேய பயன்படுத்தி துருப்பிடித்த ஒரு ஆயுதம் தான்.
நேற்று தமிழ்நாடு தினம் பற்றி முகநூலிலும் டிவிட்டரிலும் பல பதிவுகள். தலைவர்கள் வாழ்த்துகள். பல நிகழ்வுகள்.
கவனிக்க வேண்டிய விசயம்,இது போல கடந்த வருடமோ அதற்கு முந்தைய வருடங்களோ தமிழ்நாடு தினம் இப்படி கடைபிடிக்கப்பட்டிருக்கிறதா என்பதுதான்.
கடந்த ஒன்றிரண்டு வருடங்களாகவே இது போன்ற
தினங்கள் கூடுதல் உற்சாகத்தோடு சமூக ஊடகத்தில் கொண்டாடப்படுகிறது.சமூக ஊடகத்தின் பரவலாக்கம் ஒரு காரணம்,ஆனால் அது மட்டுமே காரணம் என்று சொல்லமுடியாது.
நேற்று தமிழ்நாடு தினம் போலவே கேரள தினமும், ஆந்திர தினமும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பொட்டி ஸ்ரீராமலுவுக்கு மரியாதை செலுத்திய ஜகன் மோகன்
ரெட்டி ஆந்திர பிரதேசத்துக்கு கடந்த 64 ஆண்டுகளாகவே அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்.
தமுஎசவின் மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கில் காங்கிரஸை சேர்ந்த முதல்வர் கலந்து கொள்கிறார்.
இதெல்லாம் எதிர்வினை. வினை, பா.ஜ.கவின் ஒரே தேசம் முயற்சி.
ஒரே தேசம் என்ற பெயரில் மாநிலங்களின்
மழைக்காலம் பெரிதும் மாறுவது தெரிந்த விஷயம் தான். பருவநிலை மாற்றம் இந்த மாற்றத்தை மேலும் அதிகரித்துவிடுகிறது,இதனால் விவசாயிகளால் பயிர்களின் சுழற்சி முறையையும், விரும்பிய பயிர் வகைகளையும் பயிரிட முடிவதில்லை,” என்கிறார் பாம்பே இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் காலநிலை ஆய்வுகள் இடைநிலை
திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா.பார்த்தசாரதி.மகாராஷ்டிராவின் நாஷிக் மற்றும் கொங்கன் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் மழை அதிகரித்துள்ளது,அதுவேதானே மாவட்டத்தில்1976-77ஆம் ஆண்டு பெய்த கனமழைக்கு பிறகு மழை பொழியும் நாட்களில் மாற்றம் கண்டுள்ளதையும் அவரது ஆய்வில் கண்டறிந்துள்ளார்
“பருவநிலை மாற்றம் மழைப்பொழிவின் மீது தாக்கம் செய்துள்ளது.மழைக் காலத்தின் தொடக்கம், மழையின் முடிவு, மழை பெய்த நாட்கள்,பெய்யாத நாட்கள், ஒட்டுமொத்த மழைப்பொழிவு என அனைத்தும் மாறியுள்ளன. இவை விதைக்கும் தேதி, முளைக்கும் விகிதம், மொத்த விளைச்சலில் மோசமான தாக்கத்தை செலுத்துவதால் பெருமளவு
2008ஆம் ஆண்டு, அன்று டில்லியை ஆண்ட அரசு INTACH அமைப்புடன் கூட்டு சேர்ந்து டில்லி பற்றிய தகவல்களை ஆவணப்படுத்த ஆரம்பித்தது. அதன் நோக்கம் டில்லிக்கு யுனெஸ்கோ “பாரம்பரிய தலைநகரம்” என்கிற அந்தஸ்த்தை பெறவேண்டும் என்பது. ஆவணப்படுத்தல் முடிவுற்று 2012ஆம் ஆண்டில் மத்திய அரசால்
யுனெஸ்கோ
அமைப்பிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் திடீரென்று 2015ஆம் ஆண்டில் அந்த விண்ணப்பம் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கான காரணம் சமீபத்தில் தெரிய வந்தது.
அப்படி அந்த அந்தஸ்த்தை டில்லி பெற்றிருந்தால் அந்த பகுதியில் எந்த மாற்றத்தையும் அரசால் செய்யமுடியாது. அதாவது இப்போது
20,000 கோடியில் அறிவிக்கப்பட்டுள்ள “ராஜவீதி”(central vista) திட்டத்தை செயல்படுத்த முடியாது. இந்த திட்டம் தேவையற்ற திட்டமட்டுமல்ல, இதில் மொத்த விஷயங்களும் மூடி மறைக்கப்படுகின்றன.
அதே நேரம், பாரிஸில் உள்ள நாட்ரே-டாமே தேவாலயம் தீயினால் பாதிக்கப்பட்டது. அதை சீரமைக்க அந்த நாட்டு அரசு
அசாம் மாநிலத்தில் உள்ள குவகாத்தி உயிரியல் பூங்காவில் உள்ள புலிகளுக்கு உணவாக மாட்டுக்கறியை தரக்கூடாது என்று மறியல் போராட்டம் நடத்தியுள்ளார் அம்மாநில பாஜகவின் முக்கிய தலைவர் சத்ய ரன்ஜன் போரா. மாடுகள் புனிதமானவை, அவற்றை உணவாக தரக்கூடாது என்று உணவை கொண்டுவந்த லாரிகளை மறித்துள்ளார்.
அதைவிட அவர் மாற்று யோசனை இன்னும் அதிர்ச்சி; அந்த பூங்காவில் உள்ள கடமான்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அவற்றை புலிகளுக்கு உணவாக கொடுக்கவேண்டும் என்ற கோரியுள்ளார். இந்திய வனபாதுகாப்பு சட்டப்படி, வன உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை மற்ற விலங்குகளுக்கு உணவாக தரக்கூடாது. மேலும்,
சர்வதேச பல்லுயிரிய பாதுகாப்பு பட்டியலின் படி “கடமான்” அருகிவரும் இனம், அவற்றை கொல்லக்கூடாது. ஆனால் இந்த “அறிவாளி” இப்படி ஒரு யோசனை சொல்கிறார்.
இவர்களிடம் இந்த மாதிரியான விசயங்களைதான் எதிர்பார்க்கமுடியும்.!!!😠😠
இது தான் அவர்கள் கட்டமைக்க விரும்பும் இந்தியா:
அவர்களைப் பொறுத்தவரை தலித் மக்கள் இந்துக்கள் இல்லை, இந்துக்கள் இல்லாதவர்கள் இந்தியர்கள் இல்லை. அதனால் ஒரு தலித் உடல் அத்துமீற படும் போது, ஒரு தலித் உயிர் ஆதிக்கத்தால், அதிகாரத்தால் காவு வாங்கப்படும் போது, இறந்த பிறகும் அந்த உயிருக்கு
அநீதியும் அவமானமும் இழைக்கப்படும் போது அதை எதிர்த்து யாரும் கேள்வி எழுப்ப கூடாது.
இதுதான் அவர்கள் கட்டமைக்க விரும்பும் இந்தியா.
இங்கு ஒரே தேசம், ஒரே மொழி போல ஒற்றை அதிகாரம் தான் கோலோச்சி நிற்கும். அரசின் எந்த அத்துமீறலையும் எதிர் நின்று கேள்வி கேட்பது எதிர்கட்சி தலைவர் என்றாலும்
சரி, மக்களின் ஆதரவு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் என்றாலும் சரி அவர்கள் அவமானப்படுத்த படுவார்கள்.
இங்கு எதிர் கேள்விகளுக்கு பதில் அவமானங்கள். விமர்சனங்களுக்கு பதில் வழக்குகள். எதிர்ப்புணர்வுக்கு பதில் சிறைக்கம்பிகள்.
இது தான் அவர்கள் கட்டமைக்க விரும்பிய இந்தியா. இதுதான் உத்திரப்