ஜெய்சால்மர்: ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் சென்றுள்ள பிரதமர் மோடி, ராணுவ டாங்கில் பயணம் செய்தார்.
ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி பண்டிகையை, ராணுவ வீரர்களுடன் இணைந்து கொண்டாடும் பிரதமர் மோடி, இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள ராணுவ முகாமிற்கு சென்று கொண்டாடினார். அப்போது வீரர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி பேசும்போது,
நமது நாட்டின் மீது தீய நோக்கத்துடன் கண் வைப்பவர்களுக்கு நமது ராணுவம் உரிய பதிலடி கொடுக்கும். இதன் மூலம், நமது ராணுவத்தின் பெருமை அதிகரித்துள்ளது.
மற்ற பெரிய நாடுகளுடன் இணைந்து நமது ராணுவமும் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக போராட இந்தியா உறுதிபூண்டுள்ளது. பயங்கரவாதிகளை எந்த நேரமும் எந்த இடத்திலும் தாக்க தயாராக உள்ளோம் என்பதை இந்திய ராணுவம் வெளிப்படுத்தியுள்ளது.
எதிரிகளை எதிர்க்கும் நேரத்திலும், பேரிடரில் சிக்கும் நமது மக்களை காக்கும் பணியிலும் நமது வீரர்கள் முன்னின்று பணியாற்றுகின்றனர். கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் சிக்கி தவித்த நமது மக்களை மீட்ட விமானப்படை மற்றும் கடற்படை வீரர்களின் செயல் பாராட்டுதலுக்குரியது.
கொரோனா காலத்தில், துரிதமாக செயல்பட்டு, மாஸ்க், பிபிஇ கிடகள், மருத்துவ சாதனங்கள் கிடைப்பதை இந்திய ஆயுதப்படைகள் உறுதி செய்தன எனக்கூறினார்.
தொடர்ந்து, ராணுவ சீருடையில் இருந்த பிரதமர் மோடி., எல்லை பகுதியில் உள்ள சாலையில் ராணுவ டாங்கில் பயணம் செய்தார். பிரதமர் சென்ற ஜெய்சால்மர் டுவிட்டரில் டிரண்டிங் ஆனது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் மூலம் ஜோ பைடன் வென்றார் - டிரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் மூலம் ஜோ பைடன் வென்றதாகவும், விரைவில் தான் மீண்டும் வெற்றி பெறப் போவதாக டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தீவிர இடது சாரிகளுக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தால் வாக்குகள் எண்ணப்பட்டதால் ஜோ பைடன் வென்றதாகக் குற்றம் சாட்டிய அவர், வாக்கு எண்ணிக்கையின் போது பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகள் அனைத்தும் தனது வாக்குகளை திருடும் போது ஏற்பட்டதாகத் தெரிவித்த டிரம்ப், பைடன் தரப்பினர் சிக்கிக் கொள்ளாமல் சாமர்த்தியமாக தப்பித்து விட்டதாக தெரிவித்தார்.
கந்த சஷ்டி சிறப்பு பதிவு 🙏🙏முருகனை இப்படி வழிபடுவதற்கு பின்னால் உள்ள வாழ்க்கை தத்துவம்.
ஒவ்வொரு தெய்வத்தையும் ஒவ்வொரு விதமாக வழிபடுகிறோம். அந்த வகையில் முருகனை வழிபட பாதயாத்திரை செல்கின்றனர். அதுமட்டுமின்றி காவடியும் எடுத்து செல்கின்றனர். 🙏🇮🇳1
முருகனை வழிபடும் முறைகளில் காவடி எடுத்தலும் ஒன்றாகும். நாம் ஏன் முருகனுக்கு காவடி எடுத்து செல்கிறோம் என்று தெரியுமா?
இதன் பின்னனியில் உள்ள காரணத்தை விரிவாக காணலாம்.
🙏🇮🇳2
🙏 இடும்பன்.
இடும்பன் அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவர். அகஸ்தியர் ஒருமுறை தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு மலைகளையும் கொண்டு வரும்படி கூறினார்.
ஒரு முறை மகாபெரியவரிடம் ஒரு பெண்மணி, ‘நான் நிறைய ஸ்லோகம் சொல்றேன். ஆனா பிரச்னைகள் தீரலை. பகவான் கண்திறந்து பார்க்கலை’ என்று வருத்தப் பட்டார்.
ஸ்லோகம் சொல்லும் போது சுவாமி முன் உட்கார்ந்து, சுவாமியை மனசிலே நிறுத்திதானே பாராயணம் பண்றேள்?" கேட்டார் மகா பெரியவர்
.வேற வேலை பார்த்துக் கொண்டே தான் சொல்றேன். மனப்பாடம் பண்ணினது" என்றார் அவர்.
அதற்கு மகா பெரியவர் சொன்னார்:
காய்கறி நறுக்கணும்னா அரிவாமணை, கத்தியை கிட்டே வெச்சுக்கறோம். சமைக்கணும்னா அடுப்புகிட்டே போகணும். குளிக்கணும், துவைக்கணும்னா தண்ணீர் பக்கத்திலே போறோம்.
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடுங்குளிரையும் சீனப்படையினரையும் ஒருசேர எதிர்கொள்ளும் இந்திய வீரர்கள்
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் துருவப் பகுதிகளில் நிலவுவது போன்ற கடுங்குளிரையும், சீனப் படையினரையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் வகையில் இந்தியப் படையினர் நிலைகொண்டுள்ளனர்.
கிழக்கு லடாக்கில் எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் துருவப் பகுதிகளைப் போன்று உறைநிலைக்குக் கீழே கடுங்குளிர் நிலவுகிறது. சீனப் படையினர் கோக்ரா ஹாட் ஸ்பிரிங்ஸ், வடக்கு பாங்காங் சோ, தெற்கு பாங்காங் சோ ஆகிய நிலைகளில் உள்ளனர்.