இன்ட்டலக்சுவல் என்று பேஸ்புக் போராளிகள் நினைக்கும் ஒருவரின் பதிவை பார்க்க நேர்ந்தது. தான் எப்படி அரவிந்த் கெஜ்ரிவாலை நம்பி மோசம் போனேன் என்று எழுதியிருந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலை ஒழிப்பார் என அவருக்கு ஓட்டுப்போட்டதாகவும், இப்போது பார்த்தால்,
அவர் பார்ப்பன அடிவருடி என தெரிவதாகவும் எழுதி இருக்கிறார். அந்த பதிவை படிக்கும் போதும் சரி, இதை எழுதும் போதும் சரி, எனக்கு சிரிப்பு வருவதை அடக்க முடியவில்லை. இவ்ளோ தான் இந்த இன்ட்டலக்சுவல் உலகம்.
ஒரு சாதாரண திமுகவின் கடைநிலைத் தொண்டன் இந்த இன்ட்டலக்சுவல்களை விட ஸ்மார்ட்டாக இருப்பான். அவன் கிட்ட போய், இந்த இன்ட்டலக்சுவல்களின் பதிவை காட்டினால், இதைத்தான் இத்தன வருசமா ஒட்டினு இருந்தியான்னு தான் கேப்பான்.
ஆனால்,இந்த இன்ட்டலக்சுவல்கள் உலகம்,திமுக காரனை இழிவாக பார்க்கும்.அவர்கள் என்னவோ,
புனிதர்கள் மாதிரியும்,நாம என்னவோ fan boy மனநிலையில் இருப்பது போலவும் அருவருப்பை காட்டுவார்கள்.நெருக்கிப்பார்த்தால், சாதிவெறி பல்லிளிப்பதும் அப்பட்டமாக தெரியும்!இன்ட்டலக்சுவல்களிடம் கவனமாக இருப்போம்!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
2014 தேர்தலின் போது லண்டனில் இருந்தேன். டீம் முழுவதும் வட இந்தியர்கள்.மோடி மோடி என விரைப்பாக நிற்பார்கள். நான் சம்பந்தமே இல்லாமல், போங்கடா ரஜினி பேன்ஸ்களா என நின்னுட்டு இருப்பேன். எனக்கு துணை ஒரு மலையாளி.நாங்க இருவரும் சேர்ந்து, அவ்வப்போது அவன்களை கிண்டல் செய்துக்கொண்டிருப்போம்.
அந்த வட நாட்டுகாரன்களில் ஒரு சர்மா இருந்தான். அவன் என்னிடம் வந்து, ராஜன், உனக்கு மோடியை பிடிக்காதுல்ல என்று கேட்டான். உங்களுக்கு எல்லாம் ஜெயா, கருணா தான் பிடிக்கும் இல்ல என்று கேட்டான். நான் ஆமாம் என்றேன். அவன் சொன்னான், எனக்கு கூட அரவிந்த் கெஜ்ரிவாலை பிடிக்கும்.
அவர் பேசுறது எல்லாம் நல்லா தான் இருக்கு. நான் அரவிந்த் கெஜ்ரிவாலையும் ஆதரிக்கிறேன் என்றான் அந்த டெல்லிக்காரன். நான் “டேய் சங்கி” என “பொதுவாக” மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். 2014 ல் ஒரு சாதாரண தமிழனான எனக்கு புரிந்தது நம்ம இன்டலக்சுவல்சுக்கு புரியாது என நினைக்கிறீர்களா?
இந்தப்பார்வையை கொள்கைத்தூய்மைவாதிகள் இன்னமும் தூக்கிப்பிடித்துக்கொண்டிருப்பதன் காரணம் தெரியவில்லை.
யாருமே சரியில்லை. நோட்டாவுக்கு தான் என் ஓட்டு என்று அரசியல் புரிதலற்றவர்கள் சொல்வதை ஏளனம் செய்யும் நாம்,
எங்களுக்கு தான் உலக அரசியலே அத்துப்படி என்று சொல்லிக்கொள்ளும் கொள்கைவாதிகளிடம் தென்படும் இந்த “தூய்மைவாத” போக்கு சந்தேகத்தை தான் வரவழைக்கிறது.
சிலநாட்களுக்கு முன்பு ஊடகவியலாளார் ஜீவசகாப்தன் அவர்களின் வலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
அவர் பெரியார் எடுத்த தேர்தல் நிலைப்பாடுகளை சொல்லி, இவ்வளவு தெளிவாக பெரியார் நிலைப்பாடுகளை எடுத்து இருக்கிறாரே என்ற கேள்விக்கு, நாங்கள் பெரியார் இல்லை என்று பதில் தருகிறார் உத்தமர் திருமுருகன் காந்தியடிகள்.
சில நாட்களுக்கு முன் என் பிறந்தநாள் கடந்தது. அன்று நான் இப்படி எழுதினேன்.. திராவிட இயக்கத்தால் நான் பெற்றது, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார தன்னிறைவு என நிறைய சொல்லலாம். ஆனால், திராவிட இயக்கத்திடம் இருந்து நான் கற்றது உழைப்பு, உழைப்பு, உழைப்பு மட்டுமே, என்று குறிப்பிட்டிருந்தேன்.
நம் தலைவர்களின் வாழ்வை பாருங்கள். 95 வயது வரை உழைத்துக்கொண்டே இருந்தார் பெரியார். உடல் ஒத்துழைக்காவிட்டாலும், ஓய்வை விரும்பாமல், இம்மக்களுக்காக சாவின் விளிம்பிலும் உழைத்தவர் பெரியார்.
அண்ணாவுக்கான ஆயுட்காலம் குறைவாக இருந்தாலும், 60 வயதுக்குள் இரு ஆயுளுக்கான உழைப்பை கொடுத்தவர்
அண்ணா. அவர் ஆட்சியில் இருந்தது இரண்டு ஆண்டிற்குள் குறைவானது என்றாலும்.. அண்ணா, இட்ட திராவிட அடித்தளம் தான் இன்றும் எதிரிகளை அலறவிட்டுக்கொண்டிருக்கிறது.
கலைஞரை குறித்து சொல்லவே வேண்டாம். எத்தனை பெரிய உழைப்பு அவருடையது. காலத்தை வென்றவர் கலைஞர். கலைஞரிடம் ஒரு சிறப்பு இருக்கிறது.
இணையத்தில் உதயநிதி மீதும், உதயநிதியை வைத்து இணைய உபிக்களை கேவலப்படுத்துவதும் ஒரு ஆழமான வெறுப்பின் வெளிப்பாடு தான். திமுக ஆதரவில் இருப்பவனை குற்றவுணர்ச்சியில் ஆழ்த்த முயலும் சூழ்ச்சி இது. கலைஞர் உயிருடன் இருந்தவரை, வாரிசு அரசியல், வாரிசு அரசியல் என புலம்பினார்கள்.
கலைஞர் மகன் என்ற தகுதி தான் ஸ்டாலினுக்கு இருக்கிறது. வேறெதுவும் இல்லை என்று அவரை மட்டம் தட்டினார்கள். இன்று, மு.க.ஸ்டாலின் தனிப்பெரும் தலைவராக உயர்ந்து நிற்கின்றார். திமுக என்ற மிகப்பெரிய கட்சி அவரை ஒருமனதாக தலைவராக ஏற்றுக்கொண்டது.
மக்களும் திமுகவையும், ஸ்டாலின் அவர்களையும் நம்பி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்கள்.
நிற்க!
உதயநிதி கட்சியில் வளர்கிறார். நீங்கள் கொத்தடிமைகளாகவே இருக்க வேண்டியது தான் என்று இணைய உபிக்களை கலாய்ப்பவர்கள் எல்லாம் மு.க. ஸ்டாலின் இப்படி மக்கள் தலைவராக வளர்ந்து வருகிறாரே என்ற
காதலை சொல்லி ஒரு உயர்சாதி இளைஞன் ஒரு பெண்ணை ஏமாற்றிவிட்டு, இன்னொரு பெண்ணை மணந்துக்கொள்வான். ஏமாற்றப்பட்ட பெண்ணோ, கையிலே குழந்தையுடன் வீதியில் நிற்பாள். திருமணத்திற்கு முன்னரே குழந்தையா என “விபச்சாரப்பட்டத்தை” அந்த பெண்ணுக்கு சமூகம் கொடுக்கும்.அவள் செய்தது விபச்சாரம் என்றால் அவன்
செய்தது என்ன?
அவனின் விபச்சாரத்தனம் அவனது ஆண்மையாலும், சாதியாலும் மறைக்கப்பட்டுவிட்டது. இது கலைஞரின் “பெற்ற பிள்ளையை விற்ற தாய்” கதையில் வருவது.
எப்படி இங்கே சாதியும், பணமும்,ஆண்மையும் பிணைந்திருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளலாம்.
கலைஞரின் மொழியிலேயே தருகிறேன்:
கண்ணபிரான் செய்த விபச்சாரம் வெளிவரவில்லை. ஆண்மையால் அது மறைக்கப்பட்டுவிட்டது. அதற்கு ஜாதித்திரையும் விடப்பட்டது. எதிர்த்த வீட்டுக் கமலா சாந்தாராமை ஏமாற்றி வேறொருவனை மணந்தது விபச்சாரம் என்று கூறப்படவில்லை. காரணம் கமலா வீட்டுத் தயவு பலருக்கு வேண்டியிருந்தது
அப்பாவி தம்பி: என்னன்னே, கொளத்தூர் தொகுதியில திமுக தலைவரை எதிர்த்து போட்டின்னு அறிவிச்சு இருக்கீங்க. பத்து வருசமா ஆட்சியில அதிமுக தானே இருக்கு. நாம, எடப்பாடி தொகுதியில போட்டியிட்டா தானே மக்கள் நம்மள ஆதரிப்பாங்க.
ச்சீமான்: அதில்லடா தம்பி, திமுக தான்
அடுத்து ஆட்சிக்கு வரப்போற மாதிரி இருக்கு. இப்ப, ஸ்டாலினுக்கு நாம நெருக்கடி கொடுத்தா, திமுகவுக்கு நெருக்கடி கொடுக்குற மாதிரி தானே. எப்டி நம்ம ஐடியா?
அ.த: அண்ணே, இந்த நெருக்கடியால, ஸ்டாலினோட வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா? நீங்க ஜெயிக்க வாய்ப்பிருக்கா?
ச்சீ: புஹாஹாஹா, நாம எப்படி தம்பி ஜெயிக்க முடியும். சின்னப்புள்ளத்தனமா கேட்டுட்டு இருக்க.
அ.த: அப்போ, அடுத்து அதிமுகவே ஜெயிச்சா பரவாயில்லயா!
ச்சீ: அதுதானே நமக்கு கொடுத்த அசைன்மென்டே.. (சுதாரித்துக்கொண்டு) தம்பி, நாம காண்றது ஒரு மாற்று அரசியல் புரட்சி, தமிழ் தேசிய ஓர்மை.