அப்பாவி தம்பி: என்னன்னே, கொளத்தூர் தொகுதியில திமுக தலைவரை எதிர்த்து போட்டின்னு அறிவிச்சு இருக்கீங்க. பத்து வருசமா ஆட்சியில அதிமுக தானே இருக்கு. நாம, எடப்பாடி தொகுதியில போட்டியிட்டா தானே மக்கள் நம்மள ஆதரிப்பாங்க.
ச்சீமான்: அதில்லடா தம்பி, திமுக தான்
அடுத்து ஆட்சிக்கு வரப்போற மாதிரி இருக்கு. இப்ப, ஸ்டாலினுக்கு நாம நெருக்கடி கொடுத்தா, திமுகவுக்கு நெருக்கடி கொடுக்குற மாதிரி தானே. எப்டி நம்ம ஐடியா?
அ.த: அண்ணே, இந்த நெருக்கடியால, ஸ்டாலினோட வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா? நீங்க ஜெயிக்க வாய்ப்பிருக்கா?
ச்சீ: புஹாஹாஹா, நாம எப்படி தம்பி ஜெயிக்க முடியும். சின்னப்புள்ளத்தனமா கேட்டுட்டு இருக்க.
அ.த: அப்போ, அடுத்து அதிமுகவே ஜெயிச்சா பரவாயில்லயா!
ச்சீ: அதுதானே நமக்கு கொடுத்த அசைன்மென்டே.. (சுதாரித்துக்கொண்டு) தம்பி, நாம காண்றது ஒரு மாற்று அரசியல் புரட்சி, தமிழ் தேசிய ஓர்மை.
அதற்கு வேண்டியது தமிழர்களின் அறிவுக்கூர்மை.
அ.த: அண்ணே, நேரா சொல்லுங்க. நான் அதிமுகவுக்கு ஓட்டு போடணுமா? நாம் தமிழருக்கு ஓட்டு போடனுமா?
ச்சீ: டேய், யார்ரா நீ, குறுக்க குறுக்க கேள்விக்கேட்டுட்டு. போன வைடா ****
இணையத்தில் உதயநிதி மீதும், உதயநிதியை வைத்து இணைய உபிக்களை கேவலப்படுத்துவதும் ஒரு ஆழமான வெறுப்பின் வெளிப்பாடு தான். திமுக ஆதரவில் இருப்பவனை குற்றவுணர்ச்சியில் ஆழ்த்த முயலும் சூழ்ச்சி இது. கலைஞர் உயிருடன் இருந்தவரை, வாரிசு அரசியல், வாரிசு அரசியல் என புலம்பினார்கள்.
கலைஞர் மகன் என்ற தகுதி தான் ஸ்டாலினுக்கு இருக்கிறது. வேறெதுவும் இல்லை என்று அவரை மட்டம் தட்டினார்கள். இன்று, மு.க.ஸ்டாலின் தனிப்பெரும் தலைவராக உயர்ந்து நிற்கின்றார். திமுக என்ற மிகப்பெரிய கட்சி அவரை ஒருமனதாக தலைவராக ஏற்றுக்கொண்டது.
மக்களும் திமுகவையும், ஸ்டாலின் அவர்களையும் நம்பி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்கள்.
நிற்க!
உதயநிதி கட்சியில் வளர்கிறார். நீங்கள் கொத்தடிமைகளாகவே இருக்க வேண்டியது தான் என்று இணைய உபிக்களை கலாய்ப்பவர்கள் எல்லாம் மு.க. ஸ்டாலின் இப்படி மக்கள் தலைவராக வளர்ந்து வருகிறாரே என்ற
காதலை சொல்லி ஒரு உயர்சாதி இளைஞன் ஒரு பெண்ணை ஏமாற்றிவிட்டு, இன்னொரு பெண்ணை மணந்துக்கொள்வான். ஏமாற்றப்பட்ட பெண்ணோ, கையிலே குழந்தையுடன் வீதியில் நிற்பாள். திருமணத்திற்கு முன்னரே குழந்தையா என “விபச்சாரப்பட்டத்தை” அந்த பெண்ணுக்கு சமூகம் கொடுக்கும்.அவள் செய்தது விபச்சாரம் என்றால் அவன்
செய்தது என்ன?
அவனின் விபச்சாரத்தனம் அவனது ஆண்மையாலும், சாதியாலும் மறைக்கப்பட்டுவிட்டது. இது கலைஞரின் “பெற்ற பிள்ளையை விற்ற தாய்” கதையில் வருவது.
எப்படி இங்கே சாதியும், பணமும்,ஆண்மையும் பிணைந்திருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளலாம்.
கலைஞரின் மொழியிலேயே தருகிறேன்:
கண்ணபிரான் செய்த விபச்சாரம் வெளிவரவில்லை. ஆண்மையால் அது மறைக்கப்பட்டுவிட்டது. அதற்கு ஜாதித்திரையும் விடப்பட்டது. எதிர்த்த வீட்டுக் கமலா சாந்தாராமை ஏமாற்றி வேறொருவனை மணந்தது விபச்சாரம் என்று கூறப்படவில்லை. காரணம் கமலா வீட்டுத் தயவு பலருக்கு வேண்டியிருந்தது
இன்று காலை, ஜோ பைடன்-கமலா ஹாரிஸ் வெற்றிப்பேச்சை கேட்ட மாத்திரத்தில் தோன்றிய ஒரு உணர்வை பதிவு செய்ய வேண்டும். இந்த வெற்றியை அமெரிக்க கருப்பின மக்களின், சிறுபான்மை இன மக்களின் வெற்றியாக கொள்ள முடியுமாவென்றால், முடியாது என்பதே பதிலாக இருக்கிறது. (1/3)
இன்னமும்,பாதிக்கு பாதி அமெரிக்கர்கள் டிரம்பிற்கு வாக்களித்து இருப்பதே சான்று.இது ஒரு பாசிச கோமாளியின் ஆட்சி அகற்றம் என்றளவில் மகிழ்ச்சி கொள்ளலாமே தவிர,கறுப்பின மக்கள்,சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பு இன்னமும் அப்படியே இருப்பதையும் உணரலாம்.இந்தப் போர்,இருந்துக்கொண்டே தானிருக்கும்.
ஜனநாயக சதுரங்க வெற்றிகள் மாறி மாறி வரும். ஒருமுறை வெள்ளைக்கு, ஒருமுறை கருப்புக்கு என.
இங்கு தேவை, மனநிலை மாற்றமே. ஒரு கூட்டுசமூகமாக சிந்திக்க தொடங்குவதும், சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவத்தை அடிப்படையாக கொள்ளும் ஜனநாயக மனப்பான்மையே நீண்டகால பலனைத்தரும். அதைவிடுத்து,
Intellectual Terrorism: அறிவுலக தீவிரவாதம். அறிவிருக்கும் இடத்தில் எப்படி தீவிரவாதம் இருக்க முடியும் என்று நீங்கள் சிந்தித்தால், மேலே படியுங்கள். வரலாற்றில் எங்கெல்லாம் பாசிச தீவிரவாதம் தலைத்தோங்கி இருக்கிதோ, அங்கெல்லாம், அதற்கு முன்னர் ஒரு அறிவுலக தீவிரவாதம் நடந்திருக்கும்.
இதற்கு வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகளை சொல்ல முடியும். ஆரிய இன தூய்மைவாதத்தை நியாயப்படுத்தி மக்களை நம்ப வைத்தப்பின் தான், ஹிட்லர் பல்லாயிரக்கணக்கான யூதர்களை கொன்றான்.
காந்தி இறந்து 70 ஆண்டுகளுக்கு பிறகும், அவரது உருவ பொம்மையை சுட்டு இரத்தம் பார்க்கும் வெறி சங்கிகளுக்கு இருக்கிறது என்றால், அதற்கு பின்னால் நூறாண்டு அறிவுத்தீவிரவாதம் இருக்கிறது.
ஏன் பாஜகவின் தொடர்ச்சியான இரண்டு இமாலய தேர்தல் வெற்றிக்கு பின்னால் இருப்பதும் அறிவுத்தீவிரவாதம் தானே?
வாரயிறுதியில் வெகுநாள் கழித்து இலங்கை நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். சிறிது நேரம் பேசியபின், முரளிதரன் - விஜய் சேதுபதி குறித்து பேச்சு சென்றது. எனக்கு முரளிதரன் மிகவும் பிடிக்கும். விஜய் சேதுபதி இந்த படத்திலிருந்து விலகக்கூடாது என்று அவரது விருப்பத்தை தெரிவித்தார்.
நான் அது சந்தேகம் தான் என்றேன். அதன் பிறகு, பல்வேறு அரசியல் விசயங்களை விவாதித்தோம். பேச்சு வாக்கில், இங்கே முரண் என்னத்தெரியுமா? ஈழம் என்பது இலங்கையின் அரசியல். ஆனால், இங்கிருக்கும் யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகள் கூட இப்போது அதைக்குறித்து பேசுவதில்லை.
அனைவரும் இங்கிருக்கும் முரண்பாடுகளை களைவதிலும், கொள்கை மாறுதல்கள் குறித்தும் கவனம் செலுத்துகிறார்கள். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் இலங்கை எப்படி இயங்குகிறது என்பதைக்கூட புரிந்துக்கொள்வதில்லை. அவர்கள் தாங்கள் பாட்டுக்கு செய்வது, இங்கிருக்கும் மக்களைத்தான் பாதிக்கிறது என்றார்.