Antibiotic Resistance- Thread - Part-1
கொரோனா வைரஸின் முதலாமாண்டு பிறந்தநாளை நாம் சிறப்பாய் கொண்டாடி முடித்திருக்கின்ற இந்த வேளையிலே, இதை விட மிகச்சவாலான நோய் தொற்றுக்களை வருங்காலங்களில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை கூறவே இந்த பதிவு (1/n)
எளிய நடையில் எழுத முயற்ச்சித்திருக்கிறேன். சில இடங்களில் தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலமும்/தமிழும் கலந்து எழுதியிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம். படித்தவர்கள் தங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம். (2/n)
நுண்ணுயிரிகளின் உலகம் வியப்பானது, விசித்திரமானது, ஆபத்து மிக நிறைந்தது. நுண்ணுயிரிகளை வகைப்படுத்தி ஆராய்வது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதால் எளிய முறையில் வகைப்படுத்தயிருக்கிறேன். (3/n)
1.வைரஸ்கள் (Viruses) - உயிரற்ற நிலை/ உயிருள்ள நிலை என்ற இருநிலைகளில் இருக்கும். (Unicellular Particles)
3.பூஞ்சைகள் ( Fungi)- ஒற்றைச்செல் மற்றும் பலசெல் உயிரிகள் ( Unicellular and multicellular Eukaryotes)
4.ஒட்டுன்னிகள் (Parasites)- ஒற்றைச்செல் மற்றும் பலசெல் உயிரிகள் (5/n)
இவைகளில் பூஞ்சைகள் மற்றும் ஒட்டுன்னிகள் நுண்ணுயிரிகள் என்ற வகைப்படுத்துதலின் கீழ் வந்தாலும் ஒரு சில பூஞ்சைகள் மற்றும் ஒட்டுனிகள் நம் கண்களால் எளிதாக காணக்கூடிய புறதோற்றத்தை கொண்டவை. ( Not all Fungi and Parasites are microscopic) (6/n)
இந்த நான்கில் வைரஸ்களும், ஒட்டுன்னிகளும் ஏதாவது ஒரு உயிரினத்தை அன்டியே வாழும். அடைக்கலம் தருகிற உயிரனங்கள் Host என்று அழைக்கபடும். பாக்டீரியாக்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் எல்லோருமே Host தான். ஆனால், பாக்டீரியாக்களும், பூஞ்சைகளும் தன்னிச்சையாக வளரக்கூடியவை (7/n)
பாக்டீரியா மற்றும் வைரஸ்களை பொறுத்தவரை வளர்ச்சி என்பது அதன் எண்ணிக்கையை குறிக்கும். பூஞ்சைகள் மற்றும் ஒட்டுன்னிகளை பொறுத்தவரை வளர்ச்சி என்பது எண்ணிக்கை மற்றும் தோற்றம் சாரந்த மாற்றங்களை குறிக்கும். (8/n)
முன்னமே குறிப்பிட்டபடி, நுண்ணுயுரிகளின் உலகம் பரந்துப்பட்டது. பல பில்லியன் ஆண்டுகளாக இந்த நிலப்பரப்பை தன் வசம் வைத்திருந்த நுண்ணுயிரிகளுக்கு குறிப்பாய் பாக்டீரீயாக்களுக்கு மற்ற உயிரினங்களின் தோற்றமும், பரினாம வளர்ச்சியும் நிறைய சங்கடங்ளை ஏற்படுத்தியது. (9/n)
டார்வின் கோட்பாட்டின் படி, எந்த உயிரினமும் தன்னுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள நிறைய போராட வேண்டும், (Struggle for existence) அப்படி போரடினால்தான் உயிர்வாழ முடியும் (survival of the fittest). பாக்டீரியாக்களின் வாழ்க்கையும் அப்படியானதுதான். (10/n)
பரினாம வளர்ச்சியின் ஒர் அங்கமாக, பாக்டீரியாக்கள் மற்ற உயிரினங்களோடு கலந்து வாழ தங்களை தயார் படுத்தி கொண்டன. Many Bacteria made symbiotic relationship with wide range of other living beings particularly animals including humans. (11/n)
இன்னும் ஆழமாக படித்தோமேயானால், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் செல்களில் உள்ளுருப்பாக கானப்படும் Chloroplast and Mitochondria - இவையிரெண்டுமே பாக்டீரீயாக்கள்தான். பாக்டீரியாக்கள் இந்த பூமியில் நீக்கமற நிறைந்திருக்கின்றன. நிலம், காற்று, நீர் எல்லாவற்றிலும் இவைகளை கானாலாம். (12/n)
பெரும்பாலான பாக்டீரியாக்கள் இந்த பூமிக்கு பயன் தரும் செயல்களை செய்தாலும், சில பாக்டீரியாக்கள் மற்ற உயிரினங்களை குறிப்பாய் மனிதர்களை தாக்கி, அழிக்கும் வல்லமை கொண்டவைகளாக இருக்கின்றன. பாக்டீரியாக்களுக்கும் மனிதர்களுக்குமான போரில் நாம் தான் அதிகம் இழந்திருக்கிறோம் (13/n)
பரினாம வளரச்சியின் ஒரு பகுதியாக பாக்டீரியாக்கள் மற்ற உயரினங்களின் உடலிலே தஞ்சம் புகுந்தன. அவ்வாறே நமது உடலிலும் அவைகள் நிலையாய் தங்கின (as an immigrant/ வந்தேறிகளாக*) (14/n)
*இந்த பதிவை எளிமையாய் புரிந்து கொள்வதற்க்காக, மட்டுமே இந்த சொல்லாடல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் கண்ணோட்டத்தோடு பார்த்தீர்களேயானால் அதற்க்கு கம்பேனி பொறுப்பல்ல..(15/n)
நமது உடலில் உள்ள செல்களை விட மூன்று மடங்கு அதிக எண்ணிக்கையில் பாக்டீரியாக்கள் நம் உடலில் இருக்கின்றது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். நமது தோலில் தொடங்கி, வாயின் உட்புறம், இரைப்பை, பெருங்குடல் என்று பல இடங்களில் பாக்டீரீயாக்களை கானலாம். கான்க 👇🏽நிழற்படம். (16/n)
வந்தேறிகளாக இருந்தாலும், நீண்ட காலமாக நம் உடலோடு ஒன்றியிருக்கிற காரணத்தால் அவைகள் நமக்கு நன்மைகள் அதிகம் செய்கிறவைகளாகவே இருக்கின்றன. குறிப்பாய் நமது நோய் எதிர்ப்பு சக்தியின் ஒரு அங்கமாய் அவைகள் இருக்கின்றன. அது எப்படி சாத்தியம் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். (17/n)
எளிமையாய் புரிந்து கொள்ள ஒரு சிறு உதாரனம்; நமக்கு தெரிந்த நண்பர்கள், ஏன் இந்த பதிவை படிக்கிறவர்களில் யாரேனும் ஒருவராவது வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாய் சென்று இருக்கலாம். அப்படி சென்றவர்களில் நிறைய பேருக்கு அந்த நாட்டிலே குடியுரிமை கூட கிடைத்திருக்கலாம். (17/n)
அப்படி குடியுரிமை கிடைத்த ஒரு நபரிடம் அவர் வசிக்கும் நாட்டை பற்றி நீங்கள் குறை சொல்வீர்களானால் எப்படி அவர் உங்களுகு பதில் அளிப்பார். தனக்கு உண்ண உணவும், வாழுமிடமும் கொடுத்த அந்த தேசத்தை அவர் ஒரு போதும் குறைத்து பேசமாட்டார் அல்லவா, அது போலதான் பாக்டீரியாக்களும். (18/n)
நம் உடலின் ஒர் அங்கமாய் இருக்கிற இந்த பாக்டீரியாக்கள் நமக்கு தீங்கே இழைக்காதா? என்றால் இல்லை. நிச்சயமாக இழைக்கும். தொண்டைவலி, வயிற்றுப்போக்கு, சுவாசக்கோளாறு இது போன்ற வியாதிகளுக்கு காரணம் நம் உடனுறை பாக்டீரீயாக்கள்தான். (19/n)
ஆனால் இதுநாள் வரை நம் உடலிலே இருக்கின்ற பாக்டீரீயாக்கள் உயிரிழப்பை உண்டாக்க கூடிய தீங்கை இழைத்ததில்லை. ஆனால் எதிர்காலத்தில் அவைகள் அப்படி செய்ய அதிக வாய்ப்புகளை நாம் உருவாக்கி கொடுத்துக்கொண்டிருக்கிறோம். (20/n)
பல காரணங்கள் அதற்க்கு சொல்லப்பட்டாலும், முதன்மையான காரணமாக இருப்பது, பாக்டீரியாக்களை அழிக்கும்/அதன் வளரச்சியை தடுக்கும் மருந்துகளை முறையற்ற முறையில் உபயோகிப்பதே. Antibiotic Abuse is a more serious issue. (21/n)
Antibioticக்குள் என்றால் என்ன? அவைகளின் பயன்பாடுகள் யாவை? எதனால் நாம் இந்த மருந்தை ஜாக்கிரதையாக கையாள வேண்டும் என்பதை அடுத்த இழையில் தெளிவாக எழுதுகிறேன் (22/22)
2017-11-04 அன்று என் சொந்த பணி நிமித்தமாக சீனாவிலிருந்து தமிழகத்திற்க்கு பயணித்தேன். மலின்டடோ ஏர்லைன்ஸ் விமானம் பயண வழி குவாங்சோ-கோலாலம்பூர்-திருச்சி. Check in முடித்து, காத்திருந்தேன். (1/n)
அப்போது தமிழகத்திலிருந்து சீனாவிற்க்கு Business Expo காண வந்த மூன்று நபர்கள் அறிமுகமானார்கள். அவர்களுக்கு அதுதான் முதல் சீன பயணம். சீனாவில் அவர்கள் செலவிட்ட நாட்களை பற்றி நிறைய பேசினார்கள். திருப்த்திகரமான பயணம் என்று சொன்னார்கள்.(2/n)
அதில் ஒருவர், மதிமுகவின் மாநில இளைஞர் அணி செயலாளர் திரு. வே. ஈஸ்வரன் அவர்கள். கோயம்புத்தூரை சேர்ந்தவர். விமானம் கிளம்பி அதன் Cruising Altitude ஐ அடைந்ததும், எனக்கு அடுத்த இருக்கையிலே வந்து அமர்ந்தார். நிறைய விஷயங்கள் பேசினோம். அவற்றில் ஒன்று...(3/n)
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்கள் எங்கள் பல்கலையில் 2014 ஆம் ஆண்டு முதல் மருத்துவம் பயில்கிறார்கள். அதில் 70% சதவிகிதம் பேர் குஜராத்திகள். சேர்ந்த புதிதில் எல்லா மாணவர்களையும் போல பயபக்தியுடன் (1/n)
நடந்துகொண்டனர். நாட்கள் செல்ல செல்ல அவர்களின் நடவடிக்கைகள் வேறு மாதிரி செல்ல ஆரம்பித்தது. பொதுவா எல்லா மாணவர்களிடமும் தெரிவதுதான் ஆனாலும் இவர்களின் ஆணவ போக்கை காண முடிந்தது. என்னை பொறுத்தளவில் வகுப்பு அறையில் யார் தொந்தரவு செய்தாலும் வெளியே அனுப்பிவிடுவேன்(2/n)
எந்த நாட்டவராக இருந்தாலும் சரி. எந்த பாலினத்தவராக இருந்தாலும் சரி. ஆதலால் பொதுவாக என்னுடைய வகுப்பில் எல்லோரும் சற்று கவனமாகவே இருப்பார்கள். ஆனால் சில குறிப்பிட்ட வகுப்புகளில் இந்த மாணவர்களின் சேட்டைகள் அளவுக்கதிகமாக இருந்த வந்தது. (3/n)