படிக்க புண்ணியம் வேண்டும்*

*நிச்சயம் உங்கள் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான்,* *இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருந்து இருக்கும்.* 

*மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை ..!*

🙏🇮🇳1
*இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும்.*

*அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்!*

🙏🇮🇳2
*இழந்த செல்வம் மீட்டு தரும் "தென் குரங்காடுதுறை "*

*சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடு துறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர்.*

🙏🇮🇳3
*வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத்தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான்.*

🙏🇮🇳4
*வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " தென்குரங்காடுதுறை   என்றானது.*

*கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.*

🙏🇮🇳5
*செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை"*

*கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க,

🙏🇮🇳6
சம்பந்தரும் இத்தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.*

🙏🇮🇳7
*செல்வவளம் பெருக சம்பந்தர் அருளிய பதிகம்*

*இடரினும் தளரினும் எனதுறுநோய்*

*தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்!*

*கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை*

*மிடறினில் அடக்கிய வேதியனே!*

*இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று* *எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே..!*

🙏🇮🇳8
*கடன், சங்கடங்கள் போக்கும் "திருபுவனம் சரபேஸ்வரர் "*

*தீராத கடன் தொல்லைகள் தீர, பில்லி, சூனியம், ஏவல் போன்ற வற்றிலிருந்து விடுபட, வழக்குகளில் வெற்றி பெற,

🙏🇮🇳9
கும்பகோணத்தி லிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை வழித் தடத்தில் அமைந்துள்ள "திருபுவனம் " சென்று அங்கு தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் "சரபேஸ்வரரை" வழிபடலாம்.* 

🙏🇮🇳10
*பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரபர் சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபம்.*

*வேண்டுவோரின் சங்கடங்கள் தீர்ப்பவர். துயர் துடைப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபரை 11 விளக்கு,*

*11 சுற்று,*

🙏🇮🇳11
*11 வாரம் என தரிசனம் செய்ய வழிபடுபவரது சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம்.*

*ஞாயிற்று கிழமைகளின் ராகு கால வேளை சரபர் வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நேரம்.*

🙏🇮🇳12
*வறுமை நீக்கும் கடன் நிவர்த்தி தலமாம் "திருச்சேறை"*

*ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன.*

🙏🇮🇳13
*முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ".*

🙏🇮🇳14
*கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.*

 *ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.*
🙏🇮🇳15
*இத் தலத்தில் துர்க்கை, சிவதுர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள்.*

*மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது தனி சிறப்பு..!*

🙏🇮🇳16
*பிரிந்துள்ள தம்பதியர் ஒன்று சேர" வாஞ்ஸ்ரீசியய்ம்"*

*மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும்,*

*கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்".  காசி தேசத்தில் புண்ணியமும் வளரும்.*

🙏🇮🇳17
*பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும்.*

*ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம்.*

*ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும்.*

🙏🇮🇳18
*இங்கு*

*ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும்.*

*ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும்.*

🙏🇮🇳19
*இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும்.*

*ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது.

🙏🇮🇳20
இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வார்கள்.*

🙏🇮🇳21
*பிதுர் தோஷம் நீக்கும்* " 

*ஆவூர் பஞ்ச பைரவர்கள் "கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது*

*ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர்.*

🙏🇮🇳22
*இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. ( ஆ-என்றால் பசு ).*

*இத் திருத் தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள்.*

 🙏🇮🇳23
*தேய்பிறை அஷ்டமி திதிகளில்*

*இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குகிறது.*

*இங்கு பஞ்ச பைரவர் வழிபாடு சிறந்த "பிதுர் தோஷ நிவர்த்தியாகும்".*

*சிலர் நல்ல சம்பாத்தியம் பெறுவர்.*

🙏🇮🇳24
*ஆனால் பஞ்சம் தீராது. நல்ல திறமைகளை கொண்டிருப்பார்கள். ஆனால் சரியான வேலையோ அல்லது சம்பாத்தியமோ இருக்காது. அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர்.*

*ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. இப்படி எத்தனையோ காரணம் கூற முடியாத தொல்லைகளுக்கு காரணம்*

 *"பிதுர் தோஷமே ".*

🙏🇮🇳25
*பிதுர் தோஷம் தீர்த்தால் அனைத்து வளங்களும் நமது வாழ்வில் தேடி வரும் என்பது நிச்சயம்.*

*மரண கண்டம் நீக்கும்* 

*" திருநீலக்குடி "*

*ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள் தமது எம பயம்,*

*மரண பயம் நீங்க வணங்க வேண்டிய திருக்கோயில்,* 

🙏🇮🇳26
*கும்பகோணம் - காரைக்கால் சாலயில் கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள, திருநீலகண்டராய் சிவ பெருமான் அருளும் "திருநீலக்குடியாகும்". மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.*

 🙏🇮🇳27
*எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும்.*

  *ராகு தோஷம் நீங்க உளுந்து, நீல வஸ்திரம், வெள்ளி நாகர், வெள்ளி பாத்திரம் போன்றவற்றை இத் தலத்தில் தானம் செய்ய வேண்டும்.

🙏🇮🇳28
எமமரண பயங்கள் நீங்க இத் தல இறைவனை வழிபட்டு, பின்னர் எருமை, நீல துணிகள், எள் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.*

🙏🇮🇳29
*மாங்கல்ய தோஷம் நீக்கும்* 

*" பஞ்சமங்கள ஷேத்திரம்* *திருமங்கலக்குடி" நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர்* *கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள "திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்". இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும்.*

 🙏🇮🇳30
*முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான்.*

*இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான். அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத் தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள்.*

🙏🇮🇳31
*மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான்.*

*மந்திரியின் உயிரற்ற உடலை இத் தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டு கோளுக்கிணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி.

🙏🇮🇳32
இதனால் இவள் " மங்களாம்பிகை" எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன்.*

*"பிராண வரதேஸ்வரர் " எனவும் வழிபடலாயினர்.*

*மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத் தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும்.

🙏🇮🇳33
வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம். எனவே, இத் தலம் " பஞ்ச மங்கள ஷேத்திரம் " எனப்படுகிறது.*

🙏🇮🇳34
*கிரக தோஷங்கள் விலக்கும்* " *சக்கரபாணி "*

*ஆயுதமேந்திய எட்டு திருக்கரங்களுடன், சக்கர வடிவ தாமரை பூவுடன் கூடிய அறுகோண யந்திரத்தில், நின்ற திருக் கோலத்தில் காட்சி தரும் " சக்ககரபாணி " வழிபாடு கிரக தோஷங்கள் நீக்கும்.

🙏🇮🇳35
நவக்கிரக நாயகனான சூரிய தேவனே வழிபட்டு தன் தோஷம் நீக்கியதால், இத் தலம் கிரக தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி திசை, ராகு திசை கேது புத்தி போன்ற நவக்கிரக தோஷங்களால் அவதிப்படுபவர்கள்

🙏🇮🇳36
இத் தல நாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த பலன் அளிக்கும். சக்கரபாணி, ருத்ராம்சம் கொண்டு விளங்குவதால், வன்னி மற்றும் வில்வ இலைகள் அர்ச்சனையும் சிறப்பே.*

🙏🇮🇳37
*பெண் பாவம் தீர்க்கும்* " *திருவிசநல்லூர் "*

*திருவியலூர் எனப்படும் " திருவிசநல்லூரில் "சிவயோகி நாதராய், அய்யன் குடிகொண்டுள்ளார். இவரை வணங்கினால், முற் பிறவியிலோ அல்லது இப் பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும்.

🙏🇮🇳38
பெண்களின் பாவதிற்க்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர்.நந்தி தேவர், எம தர்மனை விரட்டி அடித்த இத் தலம் " மரண பயம் " நீக்கும் திருத் தலமாகும்.*

தொடரும்..

வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

25 Nov
மத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம்

லக்னோ : திருமணத்துக்காக மதம் மாற்றம் செய்தால், 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு, உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநில அமைச்சரவை கூட்டம், நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங் கூறியதாவது:
திருமணம் செய்வதற்காக, மதம் மாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் காதலித்து, கட்டாயப்படுத்தி, மதமாற்றம் செய்யப்படுகிறது. இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது.
Read 8 tweets
25 Nov
"அதிசய பிராமணன்; பிராமண அதிசயம்"

உலகிலேயே பழைய சடங்கு ஒன்றைப் பினபற்றும் ஒரே இனம் பிராமணர்கள்; அவர்கள் உலகிலேயே பழைய சடங்கைச் செய்வதாக விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்கள் உரைக்கும்.
அது என்ன பழைய சடங்கு?

சந்தியாவதந்தனம்!

அதில் அவன் ஒரு நாளைக்கு மூன்று முறை சுமார் 100 கடவுளர், ரிஷிகள் பெயரைச் சொல்லுகிறான்.
தொல்காப்பியம் உரைக்கும் தமிழ் கடவுள்கள் இந்திரன், வருணன், விஷ்ணு பெயர்களையும் சங்கத் தமிழ் நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களையும் , வரலாற்றுப் புருஷர்களான ஜனமேஜயன் முதலியோர் பெயர்களையும் சொல்கிறான்.
Read 24 tweets
25 Nov
படிக்க புன்னியம் வேண்டும்.அறிவோம்:

*தேவாரம் பெற்ற தலங்கள்*

1. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் --- 44

2. சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தலங்கள் --- 52

3. சம்பந்தரும், சுந்தரரும் பாடிய தலங்கள் --- 13

🙏🇮🇳1
4. அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்கள் ---- 02

5. சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள் ---- 111

6. அப்பர் மட்டும் பாடிய தலங்கள் ---- 28

7. சுந்தரர் மட்டும் பாடிய தலங்கள் ----- 25

மொத்தம் 275

*இவற்றுள் மாணிக்கவாசகர் பாடிய தலங்கள் 25*

சிவஸ்தலத் தொகுதிகள்

🙏🇮🇳2
*வீரச் செயல்கள் புரிந்த தலங்கள்*

1. *அட்ட வீரட்டத் ஸ்தலங்கள்*

1. திருக்கண்டியூர் ---- பிரமன் சிரம் கொய்தது

2. திருக்கோவலூர் ---- அந்தகாசுரனைச் சங்கரித்தது

3. திருஅதிகை ---- திரிபுரத்தை எரித்தது

4. திருப்பறியலூர் --- தக்கன் சிரங்கொய்தது

🙏🇮🇳3
Read 22 tweets
24 Nov
*ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி*

ஒருவர் ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் என அனைத்தும் தீருவதற்கு ;
சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப் போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும்.
அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.

அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக் காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.

எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும்.
Read 6 tweets
24 Nov
இது உங்கள் இடம் : ஸ்டாலினுக்கு சில கேள்விகள்!

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
தி.நாராயணன், பா.ஜ., செய்தி தொடர்பாளர், சென்னையிலிருந்து எழுதுகிறார் : மொழி அரசியலை முன்னெடுக்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு சில கேள்விகள்...
மத்திய அரசு ஊழியரின் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது, கேந்திர வித்யாலயா பள்ளி. பணி மாற்றம் அடிப்படையில், அவர்களின் குழந்தைகள் எங்கு சென்றாலும், ஒரே சீரான பாடத் திட்டத்தில் பயில வேண்டும் என்பதே, அதன் நோக்கம். இது, உங்களுக்கு தெரியுமா?
ஒரு வகுப்பில், 20 மாணவர்கள் படித்தால் மட்டுமே, கே.வி., பள்ளியில், மூன்றாவது மொழி பயிற்றுவிக்கப்படும் என்ற விதி, தி.மு.க., மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருந்தபோது இருந்ததே... அப்போது ஏன், அதை எதிர்க்கவில்லை?
Read 7 tweets
24 Nov
வேறு நீதிபதிக்கு மாறுகிறது 2ஜி வழக்கு விசாரணை

புதுடில்லி: தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா உள்ளிட்டோர் மீதான, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கின் விசாரணை, டில்லி உயர் நீதிமன்றத்தின் வேறு நீதிபதிக்கு மாறுகிறது.
காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஏலம் விடுவதில் மோசடி நடந்ததாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. இது தொடர்பாக விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், 2017, டிச., 21ல் தீர்ப்பு அளித்தது.
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகள், கனிமொழி உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!