சீடன் ஒருவன் குருவிடம், சுவாமி நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம். கடவுளுக்குத் தூக்கம் வருமா? வராதா? எனக் கேட்டான்.
குரு புன்னகைத்தவாறே, அறையில் இருந்த கண்ணாடியை எடுத்து வரச் சொன்னார். இந்தக் கண்ணாடியை நான் சொல்லும் வரை கையில் பிடித்தபடி நின்று கொண்டிரு. கண்ணாடிக்கு எந்தப் பாதிப்பும் வரக் கூடாது என்றார் குரு. சீடனும் கண்ணாடியைப் பிடித்தபடியே நின்றிருந்தான்.
சற்று நேரத்தில் உறக்கம் அவனை ஆட்கொள்ளத் தொடங்கியது. தூக்கத்தை விரட்ட அவன் பல முயற்சிகளை மேற்கொண்டும், அது பலன் அளிக்கவில்லை, தன்னையும் மறந்து ஒரு விநாடி அவன் கண்ணயர்ந்து விட்டான். கண்ணாடி கீழே விழுந்து துண்டு துண்டாய்ச் சிதறியது. பதறிப்போன சீடன், கலவரத்துடன் குருவை நோக்கினான்.
பயப்படாதே சீடனே! நீ ஒரு விநாடி கண் அயர்ந்தாய். உன் பொறுப்பில் இருந்த கண்ணாடி சின்னா பின்னமாகியது. இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் தன் கைப்பிடியில் வைத்திருக்கும் இறைவன், கண்ணயர்ந்தால் இந்த உலகம் என்ன ஆகும்? என்று யோசித்துப் பார் என்று கூறினார் குரு. சீடனின் சந்தேகம் தெளிந்தது.🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1)இவர் மிக இளம் வயதிலேயே சந்நியாசம் மேற்கோண்ட காஞ்சி சங்கர மடாதிபதியாவார்.
2)10 வயதிலேயே அப்பொறுப்பிற்கு வந்தவர்.
3)நான்கு வேதம் ஆறு சாஸ்த்திரம் புராணங்களை சுயமாக கற்றுத்தேர்ந்தவர்.
4)சுமார் 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர்.
5)தமிழ் மொழி குறிப்பாக கல்வெட்டு மொழிகளில் இலக்கணத்தோடு விவாதிக்கும் ஆற்றல் பெற்றவர்
6)இந்து மத வேதங்கள் உபநிடதங்கள் தழைக்க அருளியவர்.
7)எண்ணற்ற வசதிகள் அருட்கொடையாளர்கள் வழங்கிய போதும் கால்நடையாகவே இந்தியா முழுவதும் மும்முறை வலம்வந்து ஒவ்வொரு 15 Km அருகிலுள்ள கிராமத்தில் தங்கி பக்தி நெறி பரப்பியவர்
எவ்வளவு வசதிகளிருப்பினும் மாட்டுத்தொழுவத்தில் கொசுக்கடியில் படுத்துறங்கியவர்.
உய்குர் இன முஸ்லீம்களை நவீன நுட்ப முறையில் சீன கம்யூனிச அரசு சிறைபடுத்துவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அதிர்ச்சித் தகவல்
சீன கம்யூனிச அரசு, உய்குர் இன முஸ்லீம்களை, சிறைவைப்பதிலும், அவர்கள் மீது பயங்கரவாத முத்திரையை குத்தவும், மிகப்பெரிய அளவில், நவீன திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதாக, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் ஒன்றான சிஞ்ஜியாங்கில் (Xinjiang), சில ஆண்டுகளாக, ராணுவ துருப்புகளை குவித்திருக்கும் சீன அரசு, அங்குவாழும் முஸ்லீம்களை, தடுப்பு முகாம்களில் அடைத்திருப்பதோடு, பிரிவினைவாதிகள் என அடையாளப்படுத்தி,
ஏழைகள், விவசாயிகள் மோடியை நம்புகிறார்கள்: நட்டா பெருமிதம்
புதுடில்லி: ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களில் வென்றுள்ளது. தேர்தல் முடிவுகள் ஏழைகள், விவசாயிகள் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுவதாக பா.ஜ., தலைவர் நட்டா கூறினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு 21 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று (டிச., 09) காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மொத்தமுள்ள 4,371 பஞ்சாயத்துகளில் இதுவரை காங்., 1,718 இடங்களில் வென்றுள்ளது. பா.ஜ.க., 1,836 இடங்களில் வென்றுள்ளது. மாவட்ட கவுன்சில் பதவிகளில் 326 இடங்களை பா.ஜ.க.,வும், 250 இடங்களையும் காங்.,ம் பெற்றுள்ளன.
எதிர்மறை செய்திகளை மட்டுமே தொடர்ந்து வழங்கும் சூழலில் பல அற்புதமான சாதனைகள் காணாமலே போய்விடுகின்றன.
முதன்முறையாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மொபைல்போன்களின் எண்ணிக்கை இறக்குமதி செய்யப்பட்ட மொபைல்களை விட அதிகரித்துள்ளது. (காண்க படம்)
ஆம், நாம் மொபைல்களை உலகிற்கு ஏற்றுமதி செய்யும் தேசமாக மாறத் தொடங்கியுள்ளோம். மேக் இன் இந்தியா என்ற பெருங்கனவு மெயப்படத் தொடங்கியுள்ளது. 2020ம் நிதியாண்டில் இதுவரை 4.4 கோடி மொபைல்களை ஏற்றுமதி செய்துள்ளோம், 60 லட்சம் மொபைல்கள் மட்டுமே இறக்குமதி ஆகியுள்ளன.
வேளாண் சட்டத்தால் என்ன பாதிப்பு: முதல்வர் பழனிசாமி கேள்வி
திருவாரூர்: வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் முதல்வர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் வேளாண் சட்டங்களால், விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள். விவசாயிகளுக்கு பயனுள்ளது என்பதால் தான், மசோதாவை தமிழகம் வரவேற்கிறது.
விளைபொருட்களை நல்ல விலைக்கு விவசாயிகள் விற்க வேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம். விருப்பப்பட்டால் மட்டுமே, தமிழக விவசாயிகள் இந்த சட்டத்தை பயன்படுத்தலாம்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நெருக்கமான சிலரின் பெயர்களை விசாரணையில் தெரிவித்ததால், தமக்கு சிறைக்குள் சில அடையாளம் தெரியாத நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து, சிபிஐ அதிகாரிகள் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.