ஏழைகள், விவசாயிகள் மோடியை நம்புகிறார்கள்: நட்டா பெருமிதம்
புதுடில்லி: ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களில் வென்றுள்ளது. தேர்தல் முடிவுகள் ஏழைகள், விவசாயிகள் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுவதாக பா.ஜ., தலைவர் நட்டா கூறினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு 21 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று (டிச., 09) காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மொத்தமுள்ள 4,371 பஞ்சாயத்துகளில் இதுவரை காங்., 1,718 இடங்களில் வென்றுள்ளது. பா.ஜ.க., 1,836 இடங்களில் வென்றுள்ளது. மாவட்ட கவுன்சில் பதவிகளில் 326 இடங்களை பா.ஜ.க.,வும், 250 இடங்களையும் காங்.,ம் பெற்றுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன் காங்.,ன் சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட் இடையே மோதல் ஏற்பட்டது. கணிசமான எம்.எல்.ஏ.,க்களுடன் அவர் பிரிந்து சென்றார். நீண்ட நாள் இழுபறிக்கு பின்னர் சமாதானமடைந்தார்.
இந்த காட்சிகளை ராஜஸ்தான் மக்கள் ரசிக்கவில்லை என்பது தேர்தல் முடிவுகளிலிருந்து தெரிகிறது. ஆளும் கட்சியாக காங்., உள்ள மாநிலத்தில், மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய பின் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ., வென்றிருப்பது கட்சியினருக்கு உற்சாகத்தை தந்துள்ளது.
இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த வேட்பாளர்களுக்கும் கட்சியினருக்கும் முன்னாள் முதல்வரும், பா.ஜ., தலைவருமான வசுந்தரா ராஜே வாழ்த்து தெரிவித்துள்ளார். பா.ஜ.,வின் மீது நம்பிக்கை வைத்து, காங்.,ன் பொய் பிரசாரங்களை மக்கள் தவிர்த்துள்ளார் எனவும் கூறினார்.
பா.ஜ.க., தேசிய தலைவர் நட்டா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்த வெற்றி விவசாயிகள், தொழிலாளிகள் மற்றும் ஏழைகள் மோடியின் ஆட்சியின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது” என கூறியுள்ளார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*திருவண்ணாமலையை பற்றி நமக்கு தெரியாத ஒரு அபூர்வம்*
சிவன் கோவில்களில் அனைத்து நந்திளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும் . ஆனால் நம் அண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருப்பதற்கான விவரம்
முகலாயர்கள் காலத்தில் நம் அண்ணாமலையார் கோவிலுக்கு பேராபத்து வந்தது. அதனை அண்ணாமலையாரே தன் பக்தனான விரேகிய முனிவர் முனிவரின் வாயிலாக எதிர்கொண்டார்.
இக்கதை சமீபத்தில் தான் நண்பர் மூலமாக அறிந்துகொண்டேன். திருவண்ணாமலை வாசிகள் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.
நந்தி கால் மாற்றிய வரலாறு:
முகலாயர் காலத்தில் திருவண்ணாமலை வந்த முகலாய அரசன் ஒருவன் கோவிலை சிதைக்க எண்ணினான். அப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்று வழிபட்டனர்.
பாரதியாரின் எழுச்சியை இந்தியாவில் பார்க்கிறேன்: பிரதமர் மோடி
சென்னை: பாரதியாரின் எழுச்சியை இன்றைய இந்தியாவில் பார்க்கிறேன் என பிரதமர் மோடி கூறினார்.
மகாகவி பாரதியின் தேசிய உணர்வுகளை முன்னிறுத்தும் வகையில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பாரதியார் புகழை உலகம் போற்றும் வகையில் பன்னாட்டு பாரதி திருவிழாவாக கொண்டாட திட்டமிட்டப்பட்டிருப்பதாக வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவி தெரிவித்திருந்தார்.
ரூ.2 கோடி துருக்கி கரன்சி பறிமுதல்: தூத்துக்குடியில் 5 இளைஞர்கள் கைது
தூத்துக்குடியில் ரூ.2 கோடி மதிப்புள்ள துருக்கி நாட்டு கரன்சிகளுடன் நின்ற 5 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் தெர்மல் நகர் காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா தலைமையிலான போலீஸார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்ற கோவை பேரூர் சரோஜினி நகரைச் சேர்ந்த நாகராஜ் மகன் ஜீவா (23), நெல்லை மாவட்டம் சுரண்டை பாரதியார் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் விஜயமாணிக்கம் (22), கடையநல்லூர் நத்தகர் பள்ளிவாசல் பேட்டையைச் சேர்ந்த செய்யது மகதூம் மகன் முகமது புகாரி (22),
ராணுவ வீரர்களுக்காக முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கி சோதனை வெற்றி
இந்திய பாதுகாப்பு படையினரின் உபயோகத்துக்காக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
5.56 X 30 எம்எம் அளவுள்ள குண்டுகளைப் பயன்படுத்தும் வகையில் அந்த துப்பாக்கியை டிஆர்டிஓ வடிவமைத்துள்ளது. துப்பாக்கி கான்பூர் ஆயுத தொழிற்சாலையிலும், குண்டுகள் புனே வெடிமருந்து தொழிற்சாலையிலும் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதன் இறுதி கட்டப் பரிசோதனை கடந்த 7ம் தேதி நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து டிஆர்டிஓ குழுவினருக்கு அதன் தலைவர் சதீஷ் ரெட்டி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
3 கிலோ எடைகொண்ட துப்பாக்கி, 100 மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்கை சுடும் திறன் கொண்டதாகும்.
கட்டுக்கட்டாகக் கிடைத்த கணக்கில் வராத பணம்.. சிக்கிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி..!
நாகை, திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரின் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கட்டுக்கட்டாக 62 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூரைச் சேர்ந்த நிவேதா அரிசி ஆலை உரிமையாளர் தனது ஆலைக்கான சுற்றுச்சூழல் உரிமத்தை புதுப்பிப்பதற்காக நாகை, திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.
உரிமத்தை புதுப்பித்துத் தர மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரான தன்ராஜ் என்பவர் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆலை உரிமையாளர், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் புகாரளித்தார்.
மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் மே.வங்க கவர்னர்: தலைமை செயலர், டிஜிபி.,க்கு சம்மன்
புதுடில்லி: மே.வங்கத்தில் பா.ஜ., தலைவர் நட்டா கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மே.வங்க தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
மே.வங்க மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனையடுத்து, அங்கு பா.ஜ., தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இம்மாநிலத்தில் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்பதற்காக பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கோல்கட்டா சென்றார்.
தெற்கு 24 பராகனாஸ் மாவட்டத்தில் உள்ள, ‛டைமண்ட் ஹார்பர்' என்ற இடத்தில் நடந்த கூட்டத்திற்கு நட்டா காரில் சென்றார்.அவரது காருக்கு முன்னும் பின்னும் பா.ஜ.,தலைவர்கள், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கார்கள் அணிவகுத்து சென்றன.