விராலிமலை, திருச்சி - மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் அமைந்துள்ள, முருகப்பெருமானின் ஒரு பாடல் பெற்ற தலம்.
தற்போது கோயில் இருக்குமிடத்தில் குரா மரம் ஒன்றிருந்ததாகவும், வேடன் ஒருவன் துரத்தி வந்த வேங்கை அக்குரா மரத்தினுள் மறைந்து விட்டதாகவும், அவ்விடமே ஆறுமுகனாரின் உறைவிடமாகக் கொண்டு வழிபடத்துவங்கியதாகவும் கூறுவர். 🙏🇮🇳3
முனிவர்களும், சித்தர்களுமே அக்குரா மரவடிவில் தவமியற்றி வந்தனர் என்றும் கூறுவதுண்டு. அருணகிரிநாதரைத் தடுத்தாட்கொண்ட முருகப்பெம்மான், அவருக்கு விராலிமலை இருக்குமிடத்தைக் காட்டவே இவ்வாறு வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்தி வந்ததாகவும் கூறுவர்.
வசிஷ்டரும் அவர்தம் இல்லாள் அருந்ததியும் தமது சாபம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தனர்.
இம்மலையில்தான் பரகாயப்பிரவேசம் என்னும் சித்தியை அருணகிரிநாதருக்கும் பெம்மான் வழங்கியதாகப் புராணம் உண்டு. இத்தலம் குறித்துத் திருப்புகழில் சுமார் 16 பாடல்கள் உள்ளன.
🙏🇮🇳5
நோய் மற்றும் துன்பங்கள் நீங்க, கல்வி, செல்வம், மற்றும் ஆயுள் நீடிக்கவும் இங்குள்ள முருகனாரை வேண்டிச் செல்வர்.
இத்தலத்தின் மீது, விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இயற்றினார்.
பங்குனி உத்திரம், கந்த சஷ்டி ஆகியவை இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள்.
பிள்ளைச் செல்வம் வேண்டுவோருக்கு நேர்த்திக் கடன் கழிக்கும் பழக்கம் இங்கு உள்ளது. பிள்ளை பிறந்ததும், 🙏🇮🇳7
அதை ஆறுமுகனாரிடமே அவரது பிள்ளையாகக் கொடுத்து விட்டுப் பிறகு பிள்ளையின் மாமன் அல்லது சிற்றப்பன்மார்கள் ஆறுமுகனாருக்குத் தவிட்டைக் கொடுத்துப் பிள்ளையை பெற்றுச் செல்லும் சடங்கு இங்கு பிரபலமானது.
எந்த ஒரு முருகன் கோயிலிலும் அல்லாத ஒரு விசித்திர வழக்கம், சுருட்டை நிவேதனமாகப் படைக்கும் வழக்கம் ஒன்று இக்கோயிலில் உண்டு. இதற்குப் பின்னால் ஒரு கதையும் உண்டு. 🙏🇮🇳9
சூறாவளிக் காற்றிலும், வெள்ளத்திலும் துன்புற்று வீடு செல்ல இயலாது கருப்பமுத்து என்னும் அடியவர் நிற்கையில், அருகையில் மற்றொருவர் குளிரில் நடுங்கி நிற்பதைக் கண்டு, குளிருக்கு இதமாக இருக்கட்டும் என்று சுருட்டு ஒன்றைக் கொடுத்தாராம்.
🙏🇮🇳10
பின்னர் இருவருமாக ஆற்றைக் கடந்து செல்கையில் அவர் காணாமற் போய்விட்டது கண்டு வியப்புற்ற கருப்பமுத்து, கோயிலை அடைந்ததும் அங்கு முருகனாருக்கு முன்னர் சுருட்டு இருப்பதைக் கண்டு, தம்மிடம் சுருட்டு பெற்றவர் எம்பிரானே என உணர்ந்தார் எனவும், 🙏🇮🇳11
அன்று முதல் சுருட்டு படைக்கும் பழக்கம் உருவானதாகவும் கூறுவர். ஒரு முறை, இதற்கு புதுக்கோட்டையை மன்னர் தடையிடவும், பெம்மான் அவர் கனவில் தோன்றி சுருட்டு நிவேதனம் பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்கும் குறியீடுதான் எனவும், 🙏🇮🇳12
புகைப் பழக்கத்தை ஊக்குவிப்பது அல்ல எனவும் கூறியதாகவும், மன்னர் தமது தடையை நீக்கிக் கொண்டதாகவும் கூறுவர்.
திருப்புகழ் தொகுப்பினில், 58ஆம் எண் கொண்ட பாடலும், 69 முதல் 83ஆம் எண்வரை கொண்ட பாடல்களும், விராலிமலையில் வீற்றிருக்கும் பெம்மானைக் குறித்து அருணகிரியார் பாடிய பாடல்கள். அவற்றில் ஒரு பாடலின் ஒரு பகுதி கீழே:
1)இவர் மிக இளம் வயதிலேயே சந்நியாசம் மேற்கோண்ட காஞ்சி சங்கர மடாதிபதியாவார்.
2)10 வயதிலேயே அப்பொறுப்பிற்கு வந்தவர்.
3)நான்கு வேதம் ஆறு சாஸ்த்திரம் புராணங்களை சுயமாக கற்றுத்தேர்ந்தவர்.
4)சுமார் 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர்.
5)தமிழ் மொழி குறிப்பாக கல்வெட்டு மொழிகளில் இலக்கணத்தோடு விவாதிக்கும் ஆற்றல் பெற்றவர்
6)இந்து மத வேதங்கள் உபநிடதங்கள் தழைக்க அருளியவர்.
7)எண்ணற்ற வசதிகள் அருட்கொடையாளர்கள் வழங்கிய போதும் கால்நடையாகவே இந்தியா முழுவதும் மும்முறை வலம்வந்து ஒவ்வொரு 15 Km அருகிலுள்ள கிராமத்தில் தங்கி பக்தி நெறி பரப்பியவர்
எவ்வளவு வசதிகளிருப்பினும் மாட்டுத்தொழுவத்தில் கொசுக்கடியில் படுத்துறங்கியவர்.
உய்குர் இன முஸ்லீம்களை நவீன நுட்ப முறையில் சீன கம்யூனிச அரசு சிறைபடுத்துவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அதிர்ச்சித் தகவல்
சீன கம்யூனிச அரசு, உய்குர் இன முஸ்லீம்களை, சிறைவைப்பதிலும், அவர்கள் மீது பயங்கரவாத முத்திரையை குத்தவும், மிகப்பெரிய அளவில், நவீன திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதாக, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் ஒன்றான சிஞ்ஜியாங்கில் (Xinjiang), சில ஆண்டுகளாக, ராணுவ துருப்புகளை குவித்திருக்கும் சீன அரசு, அங்குவாழும் முஸ்லீம்களை, தடுப்பு முகாம்களில் அடைத்திருப்பதோடு, பிரிவினைவாதிகள் என அடையாளப்படுத்தி,
ஏழைகள், விவசாயிகள் மோடியை நம்புகிறார்கள்: நட்டா பெருமிதம்
புதுடில்லி: ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களில் வென்றுள்ளது. தேர்தல் முடிவுகள் ஏழைகள், விவசாயிகள் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுவதாக பா.ஜ., தலைவர் நட்டா கூறினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு 21 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று (டிச., 09) காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மொத்தமுள்ள 4,371 பஞ்சாயத்துகளில் இதுவரை காங்., 1,718 இடங்களில் வென்றுள்ளது. பா.ஜ.க., 1,836 இடங்களில் வென்றுள்ளது. மாவட்ட கவுன்சில் பதவிகளில் 326 இடங்களை பா.ஜ.க.,வும், 250 இடங்களையும் காங்.,ம் பெற்றுள்ளன.
எதிர்மறை செய்திகளை மட்டுமே தொடர்ந்து வழங்கும் சூழலில் பல அற்புதமான சாதனைகள் காணாமலே போய்விடுகின்றன.
முதன்முறையாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மொபைல்போன்களின் எண்ணிக்கை இறக்குமதி செய்யப்பட்ட மொபைல்களை விட அதிகரித்துள்ளது. (காண்க படம்)
ஆம், நாம் மொபைல்களை உலகிற்கு ஏற்றுமதி செய்யும் தேசமாக மாறத் தொடங்கியுள்ளோம். மேக் இன் இந்தியா என்ற பெருங்கனவு மெயப்படத் தொடங்கியுள்ளது. 2020ம் நிதியாண்டில் இதுவரை 4.4 கோடி மொபைல்களை ஏற்றுமதி செய்துள்ளோம், 60 லட்சம் மொபைல்கள் மட்டுமே இறக்குமதி ஆகியுள்ளன.
வேளாண் சட்டத்தால் என்ன பாதிப்பு: முதல்வர் பழனிசாமி கேள்வி
திருவாரூர்: வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் முதல்வர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் வேளாண் சட்டங்களால், விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள். விவசாயிகளுக்கு பயனுள்ளது என்பதால் தான், மசோதாவை தமிழகம் வரவேற்கிறது.
விளைபொருட்களை நல்ல விலைக்கு விவசாயிகள் விற்க வேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம். விருப்பப்பட்டால் மட்டுமே, தமிழக விவசாயிகள் இந்த சட்டத்தை பயன்படுத்தலாம்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நெருக்கமான சிலரின் பெயர்களை விசாரணையில் தெரிவித்ததால், தமக்கு சிறைக்குள் சில அடையாளம் தெரியாத நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து, சிபிஐ அதிகாரிகள் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.