ஏன் கமல், ரஜினி, சீமானை பி டீம் என்று சொல்லுகிறோம்?

தமிழ்நாட்டில் அதிகமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் இரு கட்சிகள் அதிமுகவும் திமுகவும் தான். 2016 சட்டசபை தேர்தலில், அதிமுக 40 சதவிகிதமும், திமுக 31 சதவிகிதமும் வாக்குகளாக பெற்றது. அதிமுக அதிக இடங்களில் போட்டியிட்டதும்,
திமுக கூட்டணிகளுக்கு இடங்களை பகிர்ந்தளித்து போட்டியிட்டதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்த தேர்தலில் மாற்று அரசியல் என்று சொல்லி போட்டியிட்டவர்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் நாம் தமிழர் கட்சி (1.09), தேசிய முற்போக்கு திராவிட கழகம் (2.41), பாமக (5). இதில் பாமகவின் வாக்கு வங்கி
எது என்று தெரியும். இவர்கள் மாற்று என்று சொல்லிக்கொண்டாலும், அவற்றில் பெரும்பான்மை வன்னியர் சாதி ஓட்டுகள் மட்டும் தான். அதுவும் 2019 தேர்தலில், பாமகவுக்கு கிடைக்கவில்லை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. மாற்று அரசியல் பேசிய மற்ற கட்சிகள் இன்று திமுக கூட்டணியில் இருப்பதால்
அவர்களின் வாக்கு சதவிகதத்தை குறிப்பிடவில்லை.

2019 தேர்தலை எடுத்துக்கொண்டால், திமுகவின் வாக்குவங்கி 34 சதவிகிதமாக உயர்ந்து இருந்தது. அதிமுகவின் வாக்குவங்கி 19 சதவிகிதமாக குறைந்து இருந்தது.

ஒரு விசயத்தை நாம் இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
வரும் 2021 தேர்தலிலும் முதல் இரண்டு இடங்களை பெறப்போகும் கட்சிகள் திமுகவும் அதிமுகவும் தான். இந்த தேர்தலில் பாஜக, அதிமுக நேரிடையாக திமுகவை எதிர்ப்பதே தங்கள் அரசியல் என்று சொல்லி களத்தில் நிற்கிறது. இந்த கூட்டணியில் பாமக, கிருஷ்ணசாமி போன்ற சாதி வலதுசாரிகள் இணைவது இயற்கையானது.
பாஜக - அதிமுகவை நேரிடையாக எதிர்த்து திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் களத்தில் நிற்கிறது.

இந்த மேற்சொன்ன கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல், தனியாக மாற்று அரசியல் என்று சொல்லிக்கொண்டு களம் காண அதிக வாய்ப்பு இருப்பவர்கள்
கமலின் மய்யமும், ரஜினியின் பெயர் அறிவிக்கப்படாத கட்சியும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தான். இதில் நாம் தமிழர் 2016ல் போட்டியிட்டு அவர்களின் வாக்கு சதவிகிதத்தை அறிந்த கட்சி. கமலுக்கும் ரஜினிக்கும் அவர்களின் வாக்குவங்கி தெரியாது.
ஆனால், அவர்களுக்கு கிடைக்கபோவது அதிகபட்சமாக 5 சதவிகிதம் தான். இதை புரிந்துக்கொள்ள பெரிய அரசியல் ஞானம் எல்லாம் தேவையில்லை. தமிழ் நாட்டு தேர்தல்களை கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தாலே புரியும்.

சரி, மாற்று அரசியல் என்று சொல்லி இவர்கள் போட்டியிடுவதை தடுக்க முடியுமா?
முடியாது. அது ஜனநாயகமும் இல்லை.

34 சதவிகித ஓட்டு வங்கியை வைத்திருக்கும் திமுக கமல், ரஜினியை பார்த்து பி டீம் என்று சொல்வது ஏன்? பயமா?

அரசியல் என்பது என்னைப்பொறுத்தவரை எப்போதும் "Opposing the Greatest Evil" என்பது தான்.அதாவது யார் ஜெயிக்கக்கூடாது? என்பது தான் தேர்தல் அரசியல்.
திமுக கூட்டணியை பொறுத்தவரை, தமிழ்நாட்டின் பலமான எதிரி அதாவது "Greatest Evil" அதிமுக - பாஜக கூட்டணி தான்.

அதிமுக-பாஜக கூட்டணியை பொறுத்தவரை, தமிழ்நாட்டின் பலமான எதிரி அதாவது "Greatest Evil" திமுக கூட்டணி தான்.

இந்த தெளிவில்லாமல், அல்லது தெளிவாக இருக்கக்கூடாது என்று
குழப்புவதற்காகவே களம் காண்பவர்கள் தான் மய்யம்,மாற்று அரசியல், சிஸ்டம் சரியில்லை அரசியல், தமிழ் தேசிய அரசியல் என்பதெல்லாம்.

இவர்கள் யாரை எதிர்க்கிறார்கள் என்று நீங்கள் கேட்டால்,பொதுவாக நாங்கள் அனைத்தையும் எதிர்க்கிறோம் என்று சொல்வார்கள். அதாவது,நாங்கள் அவர்களையும் எதிர்க்குறோம்,
இவர்களையும் எதிர்க்கிறோம் என்று சொல்வார்கள். அரசியலில் இது தெளிவின்மையை தான் காட்டுகிறது. திமுக அதிமுகவிற்கு மாற்று என்ற கட்டம் தமிழ்நாட்டிற்கு இன்றும் வரவில்லை. ஏனெனில், அப்படி அவர்களை மாற்றக்கூடிய கொள்கை தெளிவுள்ள கட்சி இவர்கள் இல்லை என்பதால் தான் மக்கள் மாற்று அரசியல் என்று
வருபவர்களை புறக்கணிக்கிறார்கள். சரி, திமுக ஏன் இவர்களை பி டீம் என்று சொல்கிறது?

மேலே சொன்னதை வைத்து நீங்களே புரிந்துக்கொள்ளலாம். முதல் இரண்டு இடம் 2021 தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவிற்கு தான் கிடைக்கப்போகிறது.திமுகவிற்கு முதல் இடம் கிடைத்தால், தமிழ்நாட்டு மக்கள் மிகத்தெளிவாக,
யார் தங்களது "Greatest Evil" என்று முடிவெடுத்து இருக்கிறார்கள் என்றுப் பொருள். திமுக மீண்டும் ஒருவேளை 2016 போல இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டால், அதற்கு மக்கள், இந்த மாற்று அரசியல் புரட்டுகளுக்கு வீழ்ந்து வாக்குகளை சிதறடித்தது ஒரு காரணமாக இருக்கலாம்.
ஒன்றை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். திமுக காரர்கள் அதிகம் கவலைப்படுவது தங்கள் கூட்டணி ஜெயிக்கவேண்டும் என்பதை விட, மீண்டும் இந்த மோசமான அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி அரசு தொடரக்கூடாது என்பது தான்.

இந்த மாற்று அரசியல் பேசும் கட்சிகளை ஆதரிப்பவர்கள் இவ்வளவு எல்லாம் சிந்திப்பதில்லை.
அவர்களை பொறுத்தவரை, தாங்கள் தான் தூய்மை அரசியலின் முகவர்கள் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டு, எதிரிகளுக்கு துணைபோகிறார்கள்.

மேலே சொன்னது போல, அவர்கள் போட்டியிடுவதை நாம் தடுக்கமுடியாது. அவர்கள் போட்டியிடட்டும். ஆனால், அவர்களின் அரசியல் யாருக்கு சாதகமாக இருக்கப்போகிறது
என்பதை நாம் பேசித்தான் ஆகவேண்டும். அவர்கள் பி டீம் என்று நாம் குற்றம் சொல்லித்தான் ஆகவேண்டும். தாங்கள் பி டீம் இல்லை என்பதை அவர்கள் தான் நிரூபிக்க வேண்டும்..
அதற்கு முதல் படி, தமிழ்நாட்டின் "Greatest Evil" யார் என்ற கேள்வி தான். இந்த கேள்விக்கு பதிலே, அவர்களை அம்பலப்படுத்தி விடும். வேண்டுமானால், முயற்சித்து பாருங்கள்.

- ராஜராஜன் ஆர்.ஜெ

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Rajarajan RJ

Rajarajan RJ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @RajarajanRj

6 Dec
Why one should read Babasaheb Ambedkar?
1. To know the real history of india
2. To know what is a religion
3. To know how the Caste system originates and how it works
4. To know what is democracy
5. To know Buddha, Buddhism and Indian Politics
6. To know how to annihilate Caste
7. To know the meaning of Freedom, Fraternity & equality
8. To know the myths we have in our heads in the name of culture, practices & beliefs
9. To know what is rationalism
10. To know how & why to stand and fight for the Oppressed classes.
பாபாசாகேப் அம்பேத்கரை ஏன் படிக்க வேண்டும்?
1. உண்மையான இந்திய வரலாறை அறிந்துக்கொள்ள
2. மதம் என்றால் என்ன என்பதை புரிந்துக்கொள்ள
3. சாதி எப்படி உருவாகியது, சாதி எப்படி இயங்குகிறது என்பதை அறிந்துக்கொள்ள
4. மக்களாட்சி என்றால் என்னவென்று புரிந்துக்கொள்ள
Read 5 tweets
6 Dec
தோழர் மதிமாறன் தொடர்ந்து ஒரு விசயத்தை சொல்லி வருகிறார். ஒடுக்கப்படுவதாக நினைக்கும் அனைவரும், குறிப்பாக மாணவர்கள் தலைவர் அம்பேத்கரின் “வாழ்க்கை வரலாறை” கட்டாயம் படிக்க வேண்டும். அவரது வாழ்க்கையை படித்தால், இன்று நாம் படும் அல்லல்களும், அவமானங்களும் ஒன்றுமே இல்லை எனத்தோன்றும்.
அந்த அவமானங்களை எல்லாம் கடந்து அவர் எப்படி மிகப்பெரிய மக்கள் தலைவர் ஆனார் என்றுப்படிக்கும் போது, நமக்கு, தற்கொலை எண்ணங்கள் வராது என்று மதிமாறன் குறிப்பிடுவார்.

இங்கே ஒடுக்கப்படுவோர் என்பதில் தலித்துகள் மட்டுமல்ல. சூத்திரர்களும் இஸ்லாமியர்களும் கூட வருவார்கள்.
“வெமுலாவின் கனவு” என்ற என் கதையில், கடைசியில் அம்பேத்கரின் கண்களைப்பார்த்து ரோகித் வெமுலா நம்பிக்கை கொள்வதாக எழுதி இருப்பேன். அது மேற்சொன்ன கருத்தின் தாக்கம் தான்!

அண்ணல் அம்பேத்கரை வெமுலாக்கள் மட்டுமல்ல, பாத்திமாக்களும், திருப்பூர் சரவணன்களும் வாசிக்க வேண்டும்.
Read 10 tweets
5 Dec
ஜெயலலிதா சாகும் வரை தீர்ப்பு வரவில்லை.

செத்த பிறகு, சசிகலா முதல்வர் ஆகவேண்டும் என்று நினைத்த உடனே தீர்ப்பு வருகிறது. சசிகலா ஜெயிலுக்கு செல்கிறார். ஜெயலலிதா செத்துவிட்டதால் ஜெயிலுக்கு போகவில்லை!
ஜெயலலிதா புனிதர் ஆக்கப்படுகிறார். அவரை வைத்து திரைப்படம் எடுக்கிறார்கள். எடுப்பது சங்கி முருகதாஸ்!

இன்னொரு சங்கி ஷங்கர், உச்சநீதி மன்றமே குற்றமில்லை என்று விடுதலை செய்து தீர்ப்பு வந்த 2ஜி கேசை பட டைட்டிலில் சேர்க்கிறார்!

இது தான் பார்ப் பனிய அரசியல்!
தேர்தல் நெருங்குகையில் இப்படித்தான் “அவர்கள்” வேலை செய்வார்கள்!

உச்சநீதி மன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் ஜெயலலிதா சாவர்கரை போல புனிதர் ஆக்கப்படுவார்.

உச்சநீதி மன்றமே இது குற்றமில்லை என்று சொன்னாலும் சூத்திரன் மீண்டும் மீண்டும் கழுவேற்றப்படுவான்!
Read 4 tweets
23 Nov
2014 தேர்தலின் போது லண்டனில் இருந்தேன். டீம் முழுவதும் வட இந்தியர்கள்.மோடி மோடி என விரைப்பாக நிற்பார்கள். நான் சம்பந்தமே இல்லாமல், போங்கடா ரஜினி பேன்ஸ்களா என நின்னுட்டு இருப்பேன். எனக்கு துணை ஒரு மலையாளி.நாங்க இருவரும் சேர்ந்து, அவ்வப்போது அவன்களை கிண்டல் செய்துக்கொண்டிருப்போம்.
அந்த வட நாட்டுகாரன்களில் ஒரு சர்மா இருந்தான். அவன் என்னிடம் வந்து, ராஜன், உனக்கு மோடியை பிடிக்காதுல்ல என்று கேட்டான். உங்களுக்கு எல்லாம் ஜெயா, கருணா தான் பிடிக்கும் இல்ல என்று கேட்டான். நான் ஆமாம் என்றேன். அவன் சொன்னான், எனக்கு கூட அரவிந்த் கெஜ்ரிவாலை பிடிக்கும்.
அவர் பேசுறது எல்லாம் நல்லா தான் இருக்கு. நான் அரவிந்த் கெஜ்ரிவாலையும் ஆதரிக்கிறேன் என்றான் அந்த டெல்லிக்காரன். நான் “டேய் சங்கி” என “பொதுவாக” மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். 2014 ல் ஒரு சாதாரண தமிழனான எனக்கு புரிந்தது நம்ம இன்டலக்சுவல்சுக்கு புரியாது என நினைக்கிறீர்களா?
Read 4 tweets
23 Nov
இன்ட்டலக்சுவல் என்று பேஸ்புக் போராளிகள் நினைக்கும் ஒருவரின் பதிவை பார்க்க நேர்ந்தது. தான் எப்படி அரவிந்த் கெஜ்ரிவாலை நம்பி மோசம் போனேன் என்று எழுதியிருந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலை ஒழிப்பார் என அவருக்கு ஓட்டுப்போட்டதாகவும், இப்போது பார்த்தால்,
அவர் பார்ப்பன அடிவருடி என தெரிவதாகவும் எழுதி இருக்கிறார். அந்த பதிவை படிக்கும் போதும் சரி, இதை எழுதும் போதும் சரி, எனக்கு சிரிப்பு வருவதை அடக்க முடியவில்லை. இவ்ளோ தான் இந்த இன்ட்டலக்சுவல் உலகம்.
ஒரு சாதாரண திமுகவின் கடைநிலைத் தொண்டன் இந்த இன்ட்டலக்சுவல்களை விட ஸ்மார்ட்டாக இருப்பான். அவன் கிட்ட போய், இந்த இன்ட்டலக்சுவல்களின் பதிவை காட்டினால், இதைத்தான் இத்தன வருசமா ஒட்டினு இருந்தியான்னு தான் கேப்பான்.
Read 4 tweets
23 Nov
அதிமுகவும், திமுகவும் ஒண்ணு.
பாஜகவும், காங்கிரசும் ஒண்ணு.

இந்தப்பார்வையை கொள்கைத்தூய்மைவாதிகள் இன்னமும் தூக்கிப்பிடித்துக்கொண்டிருப்பதன் காரணம் தெரியவில்லை.

யாருமே சரியில்லை. நோட்டாவுக்கு தான் என் ஓட்டு என்று அரசியல் புரிதலற்றவர்கள் சொல்வதை ஏளனம் செய்யும் நாம்,
எங்களுக்கு தான் உலக அரசியலே அத்துப்படி என்று சொல்லிக்கொள்ளும் கொள்கைவாதிகளிடம் தென்படும் இந்த “தூய்மைவாத” போக்கு சந்தேகத்தை தான் வரவழைக்கிறது.

சிலநாட்களுக்கு முன்பு ஊடகவியலாளார் ஜீவசகாப்தன் அவர்களின் வலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
அவர் பெரியார் எடுத்த தேர்தல் நிலைப்பாடுகளை சொல்லி, இவ்வளவு தெளிவாக பெரியார் நிலைப்பாடுகளை எடுத்து இருக்கிறாரே என்ற கேள்விக்கு, நாங்கள் பெரியார் இல்லை என்று பதில் தருகிறார் உத்தமர் திருமுருகன் காந்தியடிகள்.

மொத்தத்தில், இவர்களின் தூய்மைவாத கொள்கை,
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!