சென்னை : தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அளித்த அம்சங்கள் மத்திய அரசு வேளாண் சட்ட மசோதாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. ஆனால் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு எனக்கூறி தி.மு.க. விவசாயிகளை ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தலை ஒட்டி தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 23ம்பக்கத்தில் கூறியிருப்பதாவது: வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும்.
இதன் அடிப்படையில் தமிழக வேளாண் உற்பத்திப் பொருட்களை இந்திய மற்றும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி சந்தை விலைக்கு ஏற்ப விற்பனை செய்து பயன்பெற வேண்டும்.
இதற்கு உதவும் வகையில் உற்பத்தியாளரையும் வாங்குவபரையும் இணைக்க அரசும் உற்பத்தியாளர்களும் இணைந்து நிர்வகிக்கும் வேளாண் விளைபொருள் பரிவர்த்தனை அமைப்பு உருவாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய வேளாண் சட்டங்களிலும் இந்த கருத்துக்கள்தான் முக்கியமாக இடம் பெற்றுள்ளன. அப்படி என்றால் தி.மு.க.வின் விருப்பத்தை கோரிக்கையை தான் மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.
ஆனால் மத்திய அரசுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தி.மு.க. கறுப்புக் கொடி போராட்டம் நடத்தியதும் தேசிய அளவில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிப்பதும் முரண்பாடாக உள்ளது.
தி.மு.க.வின் இந்த முரண்பாடு குறித்த விபரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை அறிந்த விவசாயிகள் தங்களை தி.மு.க. ஏமாற்றி மத்திய அரசுக்கு எதிராக திரும்ப வைக்கிறதா என சந்தேகத்தை எழுப்பி உள்ளனர்.
சரத்பவாருக்கும் சிக்கல்
மத்திய வேளாண்துறை அமைச்சராக இருந்த தேசியவாத காங். தலைவர் சரத்பவார் 2010 ஆகஸ்டில் டில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த புதிய கொள்கை ஏற்படுத்த வேண்டும்;
இடைத்தரகர்கள் இன்றி விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்ய வழி வகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
தற்போது அதே கோரிக்கையை வேளாண் சட்டங்கள் வாயிலாக நிறைவேற்றியுள்ள மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இது பா.ஜ. அரசு எதைச் செய்தாலும் குறை கூற வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் நிலைப்பாட்டை காட்டுவதாக விவசாயிகள் சங்கத்தினர் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1)இவர் மிக இளம் வயதிலேயே சந்நியாசம் மேற்கோண்ட காஞ்சி சங்கர மடாதிபதியாவார்.
2)10 வயதிலேயே அப்பொறுப்பிற்கு வந்தவர்.
3)நான்கு வேதம் ஆறு சாஸ்த்திரம் புராணங்களை சுயமாக கற்றுத்தேர்ந்தவர்.
4)சுமார் 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர்.
5)தமிழ் மொழி குறிப்பாக கல்வெட்டு மொழிகளில் இலக்கணத்தோடு விவாதிக்கும் ஆற்றல் பெற்றவர்
6)இந்து மத வேதங்கள் உபநிடதங்கள் தழைக்க அருளியவர்.
7)எண்ணற்ற வசதிகள் அருட்கொடையாளர்கள் வழங்கிய போதும் கால்நடையாகவே இந்தியா முழுவதும் மும்முறை வலம்வந்து ஒவ்வொரு 15 Km அருகிலுள்ள கிராமத்தில் தங்கி பக்தி நெறி பரப்பியவர்
எவ்வளவு வசதிகளிருப்பினும் மாட்டுத்தொழுவத்தில் கொசுக்கடியில் படுத்துறங்கியவர்.
உய்குர் இன முஸ்லீம்களை நவீன நுட்ப முறையில் சீன கம்யூனிச அரசு சிறைபடுத்துவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அதிர்ச்சித் தகவல்
சீன கம்யூனிச அரசு, உய்குர் இன முஸ்லீம்களை, சிறைவைப்பதிலும், அவர்கள் மீது பயங்கரவாத முத்திரையை குத்தவும், மிகப்பெரிய அளவில், நவீன திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதாக, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் ஒன்றான சிஞ்ஜியாங்கில் (Xinjiang), சில ஆண்டுகளாக, ராணுவ துருப்புகளை குவித்திருக்கும் சீன அரசு, அங்குவாழும் முஸ்லீம்களை, தடுப்பு முகாம்களில் அடைத்திருப்பதோடு, பிரிவினைவாதிகள் என அடையாளப்படுத்தி,
ஏழைகள், விவசாயிகள் மோடியை நம்புகிறார்கள்: நட்டா பெருமிதம்
புதுடில்லி: ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களில் வென்றுள்ளது. தேர்தல் முடிவுகள் ஏழைகள், விவசாயிகள் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுவதாக பா.ஜ., தலைவர் நட்டா கூறினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு 21 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று (டிச., 09) காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மொத்தமுள்ள 4,371 பஞ்சாயத்துகளில் இதுவரை காங்., 1,718 இடங்களில் வென்றுள்ளது. பா.ஜ.க., 1,836 இடங்களில் வென்றுள்ளது. மாவட்ட கவுன்சில் பதவிகளில் 326 இடங்களை பா.ஜ.க.,வும், 250 இடங்களையும் காங்.,ம் பெற்றுள்ளன.
எதிர்மறை செய்திகளை மட்டுமே தொடர்ந்து வழங்கும் சூழலில் பல அற்புதமான சாதனைகள் காணாமலே போய்விடுகின்றன.
முதன்முறையாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மொபைல்போன்களின் எண்ணிக்கை இறக்குமதி செய்யப்பட்ட மொபைல்களை விட அதிகரித்துள்ளது. (காண்க படம்)
ஆம், நாம் மொபைல்களை உலகிற்கு ஏற்றுமதி செய்யும் தேசமாக மாறத் தொடங்கியுள்ளோம். மேக் இன் இந்தியா என்ற பெருங்கனவு மெயப்படத் தொடங்கியுள்ளது. 2020ம் நிதியாண்டில் இதுவரை 4.4 கோடி மொபைல்களை ஏற்றுமதி செய்துள்ளோம், 60 லட்சம் மொபைல்கள் மட்டுமே இறக்குமதி ஆகியுள்ளன.
வேளாண் சட்டத்தால் என்ன பாதிப்பு: முதல்வர் பழனிசாமி கேள்வி
திருவாரூர்: வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் முதல்வர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் வேளாண் சட்டங்களால், விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள். விவசாயிகளுக்கு பயனுள்ளது என்பதால் தான், மசோதாவை தமிழகம் வரவேற்கிறது.
விளைபொருட்களை நல்ல விலைக்கு விவசாயிகள் விற்க வேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம். விருப்பப்பட்டால் மட்டுமே, தமிழக விவசாயிகள் இந்த சட்டத்தை பயன்படுத்தலாம்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நெருக்கமான சிலரின் பெயர்களை விசாரணையில் தெரிவித்ததால், தமக்கு சிறைக்குள் சில அடையாளம் தெரியாத நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து, சிபிஐ அதிகாரிகள் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.