திமுகவில் ஏன் அனைவரும் நாத்திகர்களாக இல்லை?
திமுகவில் ஏன் அனைவரும் சாதி,மத மறுப்பாளர்களாக இல்லை?

கொள்கையை திணிக்க முடியாது. உண்மையை சொல்லப்போனால் பலதரப்பட்ட மக்களுக்குமான கட்சியாக தான் திமுக இருக்கிறது. அதில் சாதி வெறியனும் இருக்கிறான், சாதி மறுப்பாளனும் இருக்கிறான்.
மத வெறியனும் இருக்கிறான். மத மறுப்பாளனும் இருக்கிறான். கடவுள் நம்பிக்கையாளனும் இருக்கிறான். கடவுள் மறுப்பாளனும் இருக்கிறான். இந்த பன்மைத்துவம் தான் கட்சியின் பலம், பலவீனம் இரண்டுமே!

திமுகவை நாத்திக கட்சி என்று சொல்வோர் உண்டு. ஆனால், எல்லா திமுக காரணும் நாத்திகன் இல்லை.
கலைஞர் நாத்திகராக இருந்ததால் அப்படி பெயர் வந்து இருக்கலாம்.

திமுகவை பள்ளர் பறையர் கட்சி என்பார்கள். இன்றோ, அதையும் உடைக்க தலித் இயக்கங்கள் பாடுப்பட்டு கொண்டு இருக்கிறது!

திமுகவின் பாதை.. நீண்ட பாதை.. மக்களாட்சி பாதை... அனைத்து மக்களையும் ஒருங்கிணைந்து...
அவர்களின் வளர்ச்சி கண்டு... அவர்களின் பங்கு கொண்டு அரசியல் நடத்தும் கட்சி. ஒரு சாராருக்கு மட்டும் சாதகமான கட்சியில்லை. பார்பனர் அல்லாதாரின் (தலித்துகள் உட்பட) முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி. அதன் பாதையில் இன்று வரை விலகாமல் இருக்கிறது.
இந்த அரசியல் தான் அனைத்து மக்களுக்குமானது. இதிலிருந்து தங்களை தனித்து காட்டிக்கொள்ள வேண்டிய அடையாள அரசியல் ஏன் தேவைப்பட்டது என்பதை ஆராய வேண்டும். பாதையில் தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ள வேண்டும்.திமுக திருத்திக்கொள்ளும்!

- ராஜராஜன் ஆர்ஜெ (2018ல் எழுதிய பதிவு)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Rajarajan RJ

Rajarajan RJ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @RajarajanRj

10 Dec
2021 தேர்தலின் ஜெயசூர்யாவாக அண்ணன் ஆ.ராசா களமிறங்கிவிட்டார். சும்மா இருந்த அவரை முதலமைச்சர் பழனிச்சாமி தொட்டு விட்டார். தப்பு பண்ணிட்ட சிங்காரம்,தப்பு பண்ணிட்ட என வேட்டையாட கிளம்பிட்டார் அண்ணன் ஆ.ராசா.இதுவரை திமுக தலைவர் கூட ஜெயலலிதா மரணத்திற்கான நீதியை திமுக ஆட்சி பெற்றுத்தரும்
என்று தான் சொல்லியிருந்தார். அவரது டார்கெட் ஜெயலலிதா பெயரை சொல்லி தமிழ்நாட்டை நாசம் செய்யும் இந்த அடிமை கூட்டத்தை ஒழிப்பதாகவே இருந்தது. இன்னொன்று, திமுக தலைவர், தொடர்ச்சியாக இந்த அடிமை அதிமுக அரசின் ஊழல்களை வெளிக்கொணர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருந்தார்.
இதற்கு வெகுநாளாக பதில் சொல்லமுடியாமல் இருந்த பழனிசாமிக்கு யாரோ, வாட்சாப் பார்வெர்டில் சர்காரியா, 2ஜி என அனுப்ப, அதையே அவர் பேச... ஆ.ராசா வாடா வா, இதுக்கு தான் காத்திருக்கிறேன் என தனது ஜெயசூரியா மட்டையை சுழற்ற ஆரம்பித்து இருக்கிறார்.

ஒபி ஷைனியின் தீர்ப்பை சுட்டிக்காட்டி,
Read 22 tweets
8 Dec
ஏன் கமல், ரஜினி, சீமானை பி டீம் என்று சொல்லுகிறோம்?

தமிழ்நாட்டில் அதிகமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் இரு கட்சிகள் அதிமுகவும் திமுகவும் தான். 2016 சட்டசபை தேர்தலில், அதிமுக 40 சதவிகிதமும், திமுக 31 சதவிகிதமும் வாக்குகளாக பெற்றது. அதிமுக அதிக இடங்களில் போட்டியிட்டதும்,
திமுக கூட்டணிகளுக்கு இடங்களை பகிர்ந்தளித்து போட்டியிட்டதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்த தேர்தலில் மாற்று அரசியல் என்று சொல்லி போட்டியிட்டவர்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் நாம் தமிழர் கட்சி (1.09), தேசிய முற்போக்கு திராவிட கழகம் (2.41), பாமக (5). இதில் பாமகவின் வாக்கு வங்கி
எது என்று தெரியும். இவர்கள் மாற்று என்று சொல்லிக்கொண்டாலும், அவற்றில் பெரும்பான்மை வன்னியர் சாதி ஓட்டுகள் மட்டும் தான். அதுவும் 2019 தேர்தலில், பாமகவுக்கு கிடைக்கவில்லை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. மாற்று அரசியல் பேசிய மற்ற கட்சிகள் இன்று திமுக கூட்டணியில் இருப்பதால்
Read 18 tweets
6 Dec
Why one should read Babasaheb Ambedkar?
1. To know the real history of india
2. To know what is a religion
3. To know how the Caste system originates and how it works
4. To know what is democracy
5. To know Buddha, Buddhism and Indian Politics
6. To know how to annihilate Caste
7. To know the meaning of Freedom, Fraternity & equality
8. To know the myths we have in our heads in the name of culture, practices & beliefs
9. To know what is rationalism
10. To know how & why to stand and fight for the Oppressed classes.
பாபாசாகேப் அம்பேத்கரை ஏன் படிக்க வேண்டும்?
1. உண்மையான இந்திய வரலாறை அறிந்துக்கொள்ள
2. மதம் என்றால் என்ன என்பதை புரிந்துக்கொள்ள
3. சாதி எப்படி உருவாகியது, சாதி எப்படி இயங்குகிறது என்பதை அறிந்துக்கொள்ள
4. மக்களாட்சி என்றால் என்னவென்று புரிந்துக்கொள்ள
Read 5 tweets
6 Dec
தோழர் மதிமாறன் தொடர்ந்து ஒரு விசயத்தை சொல்லி வருகிறார். ஒடுக்கப்படுவதாக நினைக்கும் அனைவரும், குறிப்பாக மாணவர்கள் தலைவர் அம்பேத்கரின் “வாழ்க்கை வரலாறை” கட்டாயம் படிக்க வேண்டும். அவரது வாழ்க்கையை படித்தால், இன்று நாம் படும் அல்லல்களும், அவமானங்களும் ஒன்றுமே இல்லை எனத்தோன்றும்.
அந்த அவமானங்களை எல்லாம் கடந்து அவர் எப்படி மிகப்பெரிய மக்கள் தலைவர் ஆனார் என்றுப்படிக்கும் போது, நமக்கு, தற்கொலை எண்ணங்கள் வராது என்று மதிமாறன் குறிப்பிடுவார்.

இங்கே ஒடுக்கப்படுவோர் என்பதில் தலித்துகள் மட்டுமல்ல. சூத்திரர்களும் இஸ்லாமியர்களும் கூட வருவார்கள்.
“வெமுலாவின் கனவு” என்ற என் கதையில், கடைசியில் அம்பேத்கரின் கண்களைப்பார்த்து ரோகித் வெமுலா நம்பிக்கை கொள்வதாக எழுதி இருப்பேன். அது மேற்சொன்ன கருத்தின் தாக்கம் தான்!

அண்ணல் அம்பேத்கரை வெமுலாக்கள் மட்டுமல்ல, பாத்திமாக்களும், திருப்பூர் சரவணன்களும் வாசிக்க வேண்டும்.
Read 10 tweets
5 Dec
ஜெயலலிதா சாகும் வரை தீர்ப்பு வரவில்லை.

செத்த பிறகு, சசிகலா முதல்வர் ஆகவேண்டும் என்று நினைத்த உடனே தீர்ப்பு வருகிறது. சசிகலா ஜெயிலுக்கு செல்கிறார். ஜெயலலிதா செத்துவிட்டதால் ஜெயிலுக்கு போகவில்லை!
ஜெயலலிதா புனிதர் ஆக்கப்படுகிறார். அவரை வைத்து திரைப்படம் எடுக்கிறார்கள். எடுப்பது சங்கி முருகதாஸ்!

இன்னொரு சங்கி ஷங்கர், உச்சநீதி மன்றமே குற்றமில்லை என்று விடுதலை செய்து தீர்ப்பு வந்த 2ஜி கேசை பட டைட்டிலில் சேர்க்கிறார்!

இது தான் பார்ப் பனிய அரசியல்!
தேர்தல் நெருங்குகையில் இப்படித்தான் “அவர்கள்” வேலை செய்வார்கள்!

உச்சநீதி மன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் ஜெயலலிதா சாவர்கரை போல புனிதர் ஆக்கப்படுவார்.

உச்சநீதி மன்றமே இது குற்றமில்லை என்று சொன்னாலும் சூத்திரன் மீண்டும் மீண்டும் கழுவேற்றப்படுவான்!
Read 4 tweets
23 Nov
2014 தேர்தலின் போது லண்டனில் இருந்தேன். டீம் முழுவதும் வட இந்தியர்கள்.மோடி மோடி என விரைப்பாக நிற்பார்கள். நான் சம்பந்தமே இல்லாமல், போங்கடா ரஜினி பேன்ஸ்களா என நின்னுட்டு இருப்பேன். எனக்கு துணை ஒரு மலையாளி.நாங்க இருவரும் சேர்ந்து, அவ்வப்போது அவன்களை கிண்டல் செய்துக்கொண்டிருப்போம்.
அந்த வட நாட்டுகாரன்களில் ஒரு சர்மா இருந்தான். அவன் என்னிடம் வந்து, ராஜன், உனக்கு மோடியை பிடிக்காதுல்ல என்று கேட்டான். உங்களுக்கு எல்லாம் ஜெயா, கருணா தான் பிடிக்கும் இல்ல என்று கேட்டான். நான் ஆமாம் என்றேன். அவன் சொன்னான், எனக்கு கூட அரவிந்த் கெஜ்ரிவாலை பிடிக்கும்.
அவர் பேசுறது எல்லாம் நல்லா தான் இருக்கு. நான் அரவிந்த் கெஜ்ரிவாலையும் ஆதரிக்கிறேன் என்றான் அந்த டெல்லிக்காரன். நான் “டேய் சங்கி” என “பொதுவாக” மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். 2014 ல் ஒரு சாதாரண தமிழனான எனக்கு புரிந்தது நம்ம இன்டலக்சுவல்சுக்கு புரியாது என நினைக்கிறீர்களா?
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!