மும்பையைச் சேர்ந்த 27 வயதுப் பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.
முதலிரவு நடந்த மறுநாளே கணவன் மீது விவாகரத்து வழக்குப் போட்டு விட்டார்.
காரணம்....
மணமகன் தன் வழுக்கைத் தலையை "விக்" வைத்து மறைத்து மோசடி செய்து விட்டதுதான்!
இந்தச் செய்தியைப் படித்த பலரும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
* 'முட்டாள் பெண்! புற அழகு எத்தனை நாளைக்கு வரும்?'
* 'படித்த திமிர்'
* 'இது ஒரு அற்ப காரணம். நிலைக்கு அந்தப் பெண்ணுக்கும் முடி கொட்டிப் போகலாம்தானே?'
இப்படி வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சி.ஏ. படித்து பெரிய வேலையில் உள்ள அந்தப் பெண், இந்த விவரமெல்லாம் தெரியாதவளா என்ன?
அவளுக்கு வழுக்கைத் தலை பிரச்சினை அல்ல.
அதை மறைத்த துரோகத்தால்தான் காயம் பட்டுவிட்டாள்.
* 'அப்படியாங்க.... சின்ன வயசுலேயே முடி கொட்டிடுச்சா... பரவாயில்லிங்க....'விக்'குன்னே தெரியலை' னு சொல்லி அந்தப் பெண் லைட்டாக எடுத்துக் கொள்ளணும்னு நினைக்கிறது எவ்வளவு அயோக்கியத்தனம்?!
'கண்டுபிடிச்சு என்னத்த செய்வா அவ?' என்ற ஆண் திமிர்தானே இது?
ஆரம்பமே 'தில்லு முல்லு' என்றால் வாழ்க்கை இனிக்குமா?
'என் கழுத்துல மஞ்சக் கயிறு ஏறிடுச்சு.... என்ன ஆனாலும் இனி அவர்தான் என் கணவர்'னு சொல்ல 1950ஸ் கதாநாயகியா அவள்?
புற அழகை விட அக அழகுக்கும் வெளிப்படை பகிர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்கும் தன்மானம் மிக்கப் புதுமைப் பெண்ணல்லவோ?
* இதுவே ஒரு பெண், பொய் பல் செட்டோ, மார்பகமோ, விக்கோ... வைத்து ஏமாற்றி இருந்தால்.... அதை எத்தனை ஆண்கள் சகஜமாக ஏற்பார்கள்?
* இந்த வழக்கின் பின்னால் இருப்பது 'முடி' அல்ல, ஏமாற்றப்பட்ட 'வலி'.
இது திமிர்அல்ல... ஒரு பெண்ணின் தன்மானம்....
சிந்தியுங்கள் சகோதரர்களே!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வாயில் எண்ணெய் கொப்பளிப்பதால் என்ன நன்மைகள் ஏற்படும்?
எண்ணெய் கொப்பளிப்பதால் உடலில் பல தொந்தரவுகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
குறிப்பாக, சளி, வாய்ப்புண், வாய் துர்நாற்றம், ஆஸ்துமா, அலர்ஜி, தூக்கமின்மை, வயிற்று வலி, குடல் தொந்தரவு, வாயு தொந்தரவு, மூட்டு வலி, தலைவலி, பல்வலி, ரத்த அழுத்தம், ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, பல் கறை, சோம்பேறித்தனம், கருப்பைத் தொந்தரவு போன்றவை நீங்கும்.
பொலிவான சருமம் கிடைக்கும். எண்ணெயால் வாயைக் கொப்பளிப்பதால் ரத்தத்திலுள்ள நச்சுகளை வாயில் உள்ள உமிழ்நீரின் துணையுடன் கணிசமான அளவில் வெளியேற்றலாம்.
#BeautyR #TipsR
வெள்ளரிக்காயைத் தோல் சீவி, வில்லைகளாக்கி, அதனால் மசாஜ் செய்தால் கறுப்புத் தழும்பு மறையும்
நல்ல குளர்ச்சித் தன்மை கொண்ட வெள்ளரிப் பிஞ்சுத் துண்டை கொண்டு முகம் மற்றும் தழும்புகள் மீது நன்றாகத் தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கறுப்புத் தழும்புகள் மறைந்து விடும்.
உருளைக்கழங்கை மெல்லிய துண்டுகளாக நறுக்கி நிழலில் நன்கு காய வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்துப் பொடியாக்கி, அதில் ஆலிவ் எண்ணெயைக் கலந்து பேஸ்ட் போல் செய்து தடவி வர கண்ணாடி அணிவதால் ஏற்படும் கறுப்புத் தழும்புகள் மறையும்.
கைபொறுக்கும் சூட்டில் உள்ள பாலில் வழக்கத்தைப் போல் இரண்டு மடங்கு உறை மோரை ஊற்றி உறைகுத்தினால் மழை, குளிர்காலங்களிலும் வழக்கம்போல் தயிர் கிடைக்கும்.
மழை நாட்களில் பொரித்த அப்பளம் சீக்கிரம் நமத்து விடும். அப்பளம் பொரித்து சூடு ஆறியவுடன், ஒரு ஸ்டீல் டப்பாவில் போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் இரண்டு நாட்கள் கழித்து எடுத்தாலும் கரகரப்பாக இருக்கும்.
மழைக்காலத்தில் தண்ணீரில் சீரகம் அல்லது சித்தரத்தையை நசுக்கிப் போட்டுக் கொதிக்க வைத்துக் குடியுங்கள். இருமல், சளி தொந்தரவு வராது. சீரகம் போட்டால் அஜீரணம் போகும்.