வாயில் எண்ணெய் கொப்பளிப்பதால் என்ன நன்மைகள் ஏற்படும்?
எண்ணெய் கொப்பளிப்பதால் உடலில் பல தொந்தரவுகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
குறிப்பாக, சளி, வாய்ப்புண், வாய் துர்நாற்றம், ஆஸ்துமா, அலர்ஜி, தூக்கமின்மை, வயிற்று வலி, குடல் தொந்தரவு, வாயு தொந்தரவு, மூட்டு வலி, தலைவலி, பல்வலி, ரத்த அழுத்தம், ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, பல் கறை, சோம்பேறித்தனம், கருப்பைத் தொந்தரவு போன்றவை நீங்கும்.
பொலிவான சருமம் கிடைக்கும். எண்ணெயால் வாயைக் கொப்பளிப்பதால் ரத்தத்திலுள்ள நச்சுகளை வாயில் உள்ள உமிழ்நீரின் துணையுடன் கணிசமான அளவில் வெளியேற்றலாம்.
உணவைச் சீராக ஜீரணிக்க உதவும் உமிழ்நீரையும், மற்ற செரிமான நீர்களையும் எண்ணெய் கொப்பளித்தல் மூலம் அதிகரிக்கச் செய்து, ரத்தத்திலும் உடலிலும் உள்ள உறுப்புகளின் மூலம் கழிவுகளை வெளியேற்றலாம்.
உடற்பயிற்சிக்கு முன் என்ன சாப்பிடலாம்?
உடற்பயிற்சி செய்யும் முன் நாம் உண்ண வேண்டிய உணவுமுறைகளைத் தெரிந்துகொள்வோம்.
⭐ உடற்பயிற்சியைத் துவங்குவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்னால், ஒரு துண்டு ஆப்பிள் 🍎 அல்லது வாழைப்பழம் 🍌 சாப்பிடுவது நல்லது.
⭐⭐
⭐ வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கரு உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட ஏற்ற உணவு. வெள்ளைக் கருவில் பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், ரிபோஃபிளேவின், செலினியம் ஆகியவை உள்ளன. உடற்பயிற்சியின்போது நமக்குத் தேவையான ஆற்றலை இவை வழங்குகின்றன.
⭐ உடற்பயிற்சியை எளிதாகச் செய்ய இளநீர் மற்றும் அதிலுள்ள எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம் பெரும் உதவிபுரிகின்றன. மேலும், இவை உடலுக்கு நீர்ச்சத்தை வழங்கும் தன்மையுடையவை.
#BeautyR #TipsR
வெள்ளரிக்காயைத் தோல் சீவி, வில்லைகளாக்கி, அதனால் மசாஜ் செய்தால் கறுப்புத் தழும்பு மறையும்
நல்ல குளர்ச்சித் தன்மை கொண்ட வெள்ளரிப் பிஞ்சுத் துண்டை கொண்டு முகம் மற்றும் தழும்புகள் மீது நன்றாகத் தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கறுப்புத் தழும்புகள் மறைந்து விடும்.
உருளைக்கழங்கை மெல்லிய துண்டுகளாக நறுக்கி நிழலில் நன்கு காய வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்துப் பொடியாக்கி, அதில் ஆலிவ் எண்ணெயைக் கலந்து பேஸ்ட் போல் செய்து தடவி வர கண்ணாடி அணிவதால் ஏற்படும் கறுப்புத் தழும்புகள் மறையும்.
கைபொறுக்கும் சூட்டில் உள்ள பாலில் வழக்கத்தைப் போல் இரண்டு மடங்கு உறை மோரை ஊற்றி உறைகுத்தினால் மழை, குளிர்காலங்களிலும் வழக்கம்போல் தயிர் கிடைக்கும்.
மழை நாட்களில் பொரித்த அப்பளம் சீக்கிரம் நமத்து விடும். அப்பளம் பொரித்து சூடு ஆறியவுடன், ஒரு ஸ்டீல் டப்பாவில் போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் இரண்டு நாட்கள் கழித்து எடுத்தாலும் கரகரப்பாக இருக்கும்.
மழைக்காலத்தில் தண்ணீரில் சீரகம் அல்லது சித்தரத்தையை நசுக்கிப் போட்டுக் கொதிக்க வைத்துக் குடியுங்கள். இருமல், சளி தொந்தரவு வராது. சீரகம் போட்டால் அஜீரணம் போகும்.