#BeautyR #TipsR
வெள்ளரிக்காயைத் தோல் சீவி, வில்லைகளாக்கி, அதனால் மசாஜ் செய்தால் கறுப்புத் தழும்பு மறையும்
நல்ல குளர்ச்சித் தன்மை கொண்ட வெள்ளரிப் பிஞ்சுத் துண்டை கொண்டு முகம் மற்றும் தழும்புகள் மீது நன்றாகத் தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கறுப்புத் தழும்புகள் மறைந்து விடும்.
உருளைக்கழங்கை மெல்லிய துண்டுகளாக நறுக்கி நிழலில் நன்கு காய வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்துப் பொடியாக்கி, அதில் ஆலிவ் எண்ணெயைக் கலந்து பேஸ்ட் போல் செய்து தடவி வர கண்ணாடி அணிவதால் ஏற்படும் கறுப்புத் தழும்புகள் மறையும்.
வெதுவெதுப்பான நீரில், ஒரு மேஜைக்கரண்டி வாஷிங்சோடா போட்டு, அதில் லிக்விட் சோப்பையும் கலந்து ஊற வைத்து, ஸ்டீல் ஸ்க்ரப்பரால் தேய்த்து விட்டால், பிசுபிசுப்பு போயே போச்!
அலமாரி பாத்திரங்களின் பிசுபிசுப்பு போக, அரிசி களைந்த முதல் நீரில் சிறிது உப்பு, எலுமிச்சைச் சாறு 2 ஸ்பூன், வினிகர் 1 ஸ்பூன் கலந்து பிசுபிசுப்பான பாத்திரங்களை அதில் 10 நிமிடம் ஊறவிட்டு சூடான நீரில் கழுவ பளிச்சென்று ஆகிவிடும்.
சமையலறையில் அலமாரி பாத்திரங்கள் மேல் படியும் எண்ணெய்ப் பிசுக்குகளில், எலுமிச்சைச் சாறு மற்றும் சோப்பு கலந்த தண்ணீர் தொட்டு, துணியால் அழுந்த துடைத்தால் பிசுக்கு நீங்கிப் பளிச்சிடும்.
கேஸில் எண்ணெய்க் கசிவு ஏற்படுவதால்தான் கேஸ் அடுப்பின் பக்கத்தில் உள்ள அலமாரி, பாத்திரங்கள் பிசுபிசுப்பாகின்றன.வாஷிங் சோடா பவுடரும், சோப்பும் கலந்து ஒரு முறை துடைத்துவிட்டு பின் cif என்ற எண்ணெய்ப்பிசுக்கை எடுக்கும் க்ரீமை அதன்மேல் விட்டு, ஈரத்துணியால் துடைத்தெடுக்க வேண்டும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வாயில் எண்ணெய் கொப்பளிப்பதால் என்ன நன்மைகள் ஏற்படும்?
எண்ணெய் கொப்பளிப்பதால் உடலில் பல தொந்தரவுகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
குறிப்பாக, சளி, வாய்ப்புண், வாய் துர்நாற்றம், ஆஸ்துமா, அலர்ஜி, தூக்கமின்மை, வயிற்று வலி, குடல் தொந்தரவு, வாயு தொந்தரவு, மூட்டு வலி, தலைவலி, பல்வலி, ரத்த அழுத்தம், ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, பல் கறை, சோம்பேறித்தனம், கருப்பைத் தொந்தரவு போன்றவை நீங்கும்.
பொலிவான சருமம் கிடைக்கும். எண்ணெயால் வாயைக் கொப்பளிப்பதால் ரத்தத்திலுள்ள நச்சுகளை வாயில் உள்ள உமிழ்நீரின் துணையுடன் கணிசமான அளவில் வெளியேற்றலாம்.
கைபொறுக்கும் சூட்டில் உள்ள பாலில் வழக்கத்தைப் போல் இரண்டு மடங்கு உறை மோரை ஊற்றி உறைகுத்தினால் மழை, குளிர்காலங்களிலும் வழக்கம்போல் தயிர் கிடைக்கும்.
மழை நாட்களில் பொரித்த அப்பளம் சீக்கிரம் நமத்து விடும். அப்பளம் பொரித்து சூடு ஆறியவுடன், ஒரு ஸ்டீல் டப்பாவில் போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் இரண்டு நாட்கள் கழித்து எடுத்தாலும் கரகரப்பாக இருக்கும்.
மழைக்காலத்தில் தண்ணீரில் சீரகம் அல்லது சித்தரத்தையை நசுக்கிப் போட்டுக் கொதிக்க வைத்துக் குடியுங்கள். இருமல், சளி தொந்தரவு வராது. சீரகம் போட்டால் அஜீரணம் போகும்.