நேற்றிலிருந்து உடன்பிறப்புகள் எல்லாரும் அக்கா Rekha Priyadharshini அவர்கள் 24 வயது இருக்கும் போதே மேயர் ஆனார் என்று பதிவுகளை பகிர்ந்திருந்தனர். அவர் ஒரு பட்டியலின சமூகம் என்று தனியாக குறிப்பிட வேண்டியதில்லை.
அதில் பலர் குறிப்பிட மறந்த பெயர் அய்யா வீரபாண்டியார் உடையது. ஆம் அக்காவின் திறமைகளை இனம் கண்டு தலைவர் கலைஞரிடம் மேயர் பதவிக்கு பரிந்துரை செய்தவர் அவர்தான்.
இன்றும் அக்கா அய்யாவின் மாணவராக தான் தன்னை அடையாளப் படுத்திக்கொள்கிறார்.
இன்று ஆண்ட பரம்பரை பெருமை பேசும் சிலரை காரணம் காட்டி ஒட்டுமொத்த சமூகத்தையும் கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்று மாங்கா பாய்ஸ் அக்னி சட்டி என்றும் முற்போக்கு மொண்ணைகளால் கூறப்படும் சமூகத்தை சேர்ந்தவர் தான் அய்யா வீரபாண்டியார்.
திமுக வின் தூண்களில் ஒருவர். தனிப்பெரும் ஆளுமை. இப்படிப்பட்டவர்களை கொண்ட இயக்கம் தான் திமுக. திமுக வில் இருக்கும் யாரும் சாதி அடையாளத்தை கடந்தவர்கள். சாதிய வன்மத்தை தங்கள் சுயலாபத்திற்காக வளர்க்காதவர்கள்.
திமுக சாதி பார்க்கிறது என்று சாதியவாத சக்திகளோடு இணைத்து அவதூறு பேசும் முற்போக்கு முகமூடிகள், கள யதார்த்தம் என்ன என்று ஒரு எழவும் தெரியாத லூசுகள் இனியாவது திருந்த வேண்டும்.
தமிழருவி மணியன், மதுவந்தி, லதா ரஜினிகாந்த் போன்றவர்களை தற்கொலைக்கு தூண்டிய வழக்கின் கீழ் கைது செய்ய சட்டத்தில் ஏதும் இடமுண்டா??
உங்கள் வீட்டில் வயது முதிர்ந்தவர் இருந்தால் அவரை சுரண்டி பிழைக்க நினைப்பீர்களா இல்லை ஓய்வெடுக்க சொல்வீர்களா??
அதுவும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்த ஒருவரை தங்கள் சுயலாபத்திற்காக படத்தில் நடிக்க வைப்பது, அது கூட பரவாயில்லை. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் மக்களை அனுதினமும் சந்திக்க வேண்டிய அரசியலில் ஈடுபட வைப்பீர்களா??
தங்கள் சுய லாபத்திற்காக ஒரு மனிதனை கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை உறிந்து தள்ளுவது.சக்கையாக பிழிந்து வீசுவதை உண்மையாக ரஜினி மீது அன்பு வைத்தவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
இதை திமுக vs ரஜினியாக மாற்றத் துடிக்கும் பார்ப்பனருக்கும் பார்ப்பன அடிவருடிகளிடம் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன்
மநு தர்மத்தை எதிர்ப்பேன் என்பார்கள் ஆனால் மநு தர்மத்தை ஆதரிக்கும் கமல்ஹாசனை கண்டிக்க மறுப்பாளர்கள்.
அனு உலையை எதிர்ப்பார்கள் ஆனால் கூடங்குள அனு உலையை ஆதரிக்கும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களோடு உறவாடுவார்கள். ஏன் சில திமுக தலைவர்களிடம் கூட இவர்கள் குழைவார்கள்.
குறைந்தபட்சம் தங்களின் கொள்கையின்பால் நிற்க கூட முடியாமல் எல்லா பக்கமும் கம்பு சுற்றும் இவர்கள் திமுக வெறுப்பு என்ற ஒற்றைப்புள்ளியில் இணைவது ஒன்றும் தற்செயலானது அல்ல.
தமிழருவி மணியன் தொடங்கி பழ. கருப்பையா வரை இது நீள்கிறது. இன்னும் இது நீண்டு கொண்டே இருக்கும்.
திமுக வை ஏற்க மனமில்லாமல் எடப்பாடிக்கு கூட முட்டு கொடுக்க இவர்கள் தயங்கமாட்டார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒட்டுண்ணிகளை போல் திமுகவுடன் இணைந்துவிடுவார்கள். இதை தான் கடந்த சில நாட்களாக நாம் பார்த்து வருகிறோம். இவர்களை திமுக வினர் இனம் கண்டு ஒதுக்கிட வேண்டும்.
- பிடி வாரன்ட் கொடுக்கப்பட்டது
- எந்த வழக்கில் அவர் கைது. செய்யப்படுகிறார் என்று தெளிவாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
-மருத்துவ உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது.
- காலை 6.45 மணிக்கு கதவை தட்டியிருக்கிறார்கள் போலீஸார்.. கதவை திறக்காமல் காவல்துறையினரின் பணிக்கு இடையூறு செய்ததோடு போலீஸார் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார் அர்னாப். அதன் பின்னே அவரை இழுத்து சென்றுள்ளது போலீஸ்.
- அர்னாபிற்கு வயது 47.
- அர்னாபால் நாட்டிற்கு விளைந்த நன்மை ஒன்று கூட இல்லை.
- மத்தியில் பாஜக அரசு.
அப்படியே 2001க்கு செல்வோம்.
அம்மையார் ஜெயலலிதா ஆட்சி.
கவுன்டர் இன மக்களுக்கு திமுக கொண்டுவந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வைத்து தான் @annamalai_k PSGஇல் பொறியியல் படித்து பட்டதாரி ஆனார்.
விபி சிங் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக கொடுத்த அழுத்தத்தால் நிறைவேறிய மண்டல் குழு பரிந்துரை வைத்து தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் தான் IIMஇல் பட்டம் பெற்றார். IPS ஆனார். இத்தனையும் செய்தது திமுக.
ஆனால் ஜெய்சங்கர் போன்றவர்களை மட்டும் தங்கள் பதவிக்காலம் முடியும் வரை அரசு பதவியில் பணியாற்ற விட்டுவிட்டு பணி ஓய்வுக்கு பிறகு மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆக்கி மத்திய மந்திரியும் ஆக்கியுள்ளது பாஜக. இப்ப சொல்ல @SuryahSG பாஜக யாருக்கான கட்சி??
அதற்கு முதலில் GER என்றால் என்ன என்று பார்க்க வேண்டும்.
பள்ளி முடித்த எத்தனை பேர் கல்லூரிகளில் சேருகிறார்கள் என்பது தான் GER அல்லது Gross enrollment ratio.
இப்போது கொண்டுவந்துள்ள NEP 2020ஆல் GERஐ எப்படி உயர்த்த போகிறார்கள் என்றால் 5,8 வது மாணவர்களுக்கு பொது தேர்வு அதில் இந்தி கட்டாய பாடம்.
அதில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அடுத்த வகுப்பிற்கு முன்னேற முடியாது.
அப்படி முன்னேற முடியாதவர்களை பள்ளியிலேயே முடக்குவது அல்லது குழந்தை தொழிலாளிகளாக ஆக்குவது. (தற்போது குழந்தை தொழிலாளி சட்டத்தை கொரொனாவை காரணம் காட்டி திருத்தியிருக்கிறது இந்த கேடுகெட்ட அரசு.)
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மத்திய அரசு வைத்த வாதங்கள் 👇🏽
• மத்திய தொகுப்புக்கு கொடுத்த பிறகு அதற்கான அதிகாரங்கள் மாநில அரசிடம் இல்லை
• தற்போதுள்ள சூழ்நிலையில் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது. ஆகவே திமுக மற்றும் இதர கட்சிகள் இட ஒதுக்கீடு கொடுக்க தொடரப்பட்ட *வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்*.
• மாநில அரசுகள் கல்லூரியை கட்டுவது, பராமரிப்பது மட்டுமே மாநில அரசுகளின் கடமை. மத்திய தொகுப்புக்கு கொடுத்த இடங்களுக்கு எந்த வித உரிமையுமு கோர முடியாது. அந்த இடங்கள் "தரத்தின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுமே தவிர இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கொடுக்கப்பட மாட்டாது"