"சார்.. என்னவேணா சொல்லுங்க, மத்திய மோடி அரசாங்கம் கார்ப்பொரேட்டுகளுக்கான அரசாங்கம் சார்... விவசாயிகள் நிலைமை இந்த ஆட்சியில ரொம்ப கஷ்டம்
சார்..." - என்றார்
நான் : "அப்படியா? இதை பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் விவாதிச்சிருப்பீங்களே... பேஸ்புக், வாட்ஸ்ஸப், ட்விட்டர் அப்படி, இப்படின்னு..".
"ஆமா சார்... சமூக வலைத்தளங்களில், கடுமையா விவாதிக்கிறாங்க தெரியுமா?" - அவர்
நான் : "சரி, எந்த மாதிரி கார்ப்பொரேட்டுகளுக்கான அரசாங்கம்"
"அதானி, அம்பானி..." - அவர்
நான் : "ஹா..ஹா... அதானே... இப்பதான் நீ சப்ஜெக்ட்டுக்கே வந்துருக்க... சரி, இந்த சமூக வலைத்தளங்களெல்லாம், குடிசை தொழிலா? கார்ப்பொரேட்டா?"
அவர் : "ம்ம்.. சார் அதுவந்து..."
நான் : "போன், ஸம்ஸங்கா?... ஜியோ சிம்முதானே?"
அவர் : "ஆமாம், சார்... ஆனா நீங்க சப்ஜெக்ட்டை மாத்துறீங்க.."
நான் : "இல்ல தம்பி... கரெட்டா போயிட்டிருக்கு...என் சந்தேகங்களை உங்ககிட்ட தீர்த்துக்கிறேன்.. அவ்வளவு தான்... நீங்க படிச்சப்புள்ள, கேள்விக்கு பதில் சொல்லுங்க..."
நான் : "ஜியோ, அம்பானியோடது தெரியுமில்ல..."
அவர் : "தெரியும்.. சார்.."
நான் : "ஸம்ஸங் ஃபோனு, ஜியோ சிம்மு, அம்பானி... கார்ப்பொரேட்டு... கரெக்ட்டா?"
நான் : "தம்பி, கையில வாட்ச்சு... என்ன கம்பெனி? டைட்டானா? அப்ப, கார்ப்பொரேட்டு..."
நான் : "ஜீன்சு Wranglar மாதிரி தெரியுது..."
அவர் : "ஆமா, சார்"
நான் : "அப்ப, இதுவும் கார்ப்பொரேட்டு..."
நான் : "சட்டை van heusen-னோ, இதுவும் கார்ப்பொரேட்டு..."
நான் : "என்ன பைக் வெச்சுருக்கீங்க?"
அவர் : "பஜாஜ் KTM"
நான் : "பைக் குடிசை தொழிலில்ல செய்யமுடியாது... இதுவும் கார்ப்பொரேட்டு..."
நான் : "பைக்குக்கு பெட்ரோல் போடுவீங்களே??? இந்தியன் ஆயில் கார்பொரேஷன், கார்ப்பொரேட்டு..."
நான் : "ரே பான் கூலிங் கிளாஸோ... இதுவும் கார்ப்பொரேட்டு..."
அவர் : "டிபார்ட்மென்ட் ஸ்டோர் வெச்சிருக்கார் சார்..."
நான் : "குடிசை தொழிலில் செய்த பொருட்களா விற்கிறாரோ?"
அவர் : "ம்ம்.. இல்ல சார்.."
நான் : "அப்ப, கார்ப்பொரேட்டுகாரனுங்க தயாரிப்புகள் தான்..."
நான் : "காலையில் காபி சாப்பிடுவீங்களா?"
அவர் : "ஆமா சார்..."
நான் : "ப்ரு காபி... பில்டர் காபியை போன்றே சுவையானது... கரெக்டா?"
அவர் : "ஆமா சார்..."
நான் : "சாப்பிட்டுட்டு கக்கா போவீங்களா?"
அவர் : "சார், என்ன சார் நீங்க?"
நான் : "சொல்லுப்பா... போவியா? மாட்டியா?"
அவர் : "போவேன்.."
நான் : "எங்கே வயல்காட்டுலயா?"
அவர் : "ச்சீ.. என்ன சார்... வீட்டு டாய்லெட்டில.."
நான் : "Hindware... கரெக்டா?"
அவர் : "ஆமா சார்.."
நான் : "ஏன்டா, காபி குடிக்கிறதில இருந்து கக்கா போறவரைக்கும்... தலையிலிருந்து கால் வரைக்கும்... எல்லாம் கார்பொரேட் தயாரிப்புகளா பயன்படுத்திகிட்டு...
நீ
கார்ப்பொரேட்டுகளை சப்போர்ட் பண்ணிட்டு... அதுலயும், எல்லாம் வெளிநாட்டு கம்பெனிகள்... நீ வந்து, மோடி கார்ப்பொரேட்டுகளை சப்போர்ட் பண்றார்ங்கிற..."
நான் : "அடி... செருப்பால..."
நான் : "நீயெல்லாம்... என்னமோ தினமும் இந்த நாட்டு விவசாயிகள் கோவணத்தை கசக்கி காயப்போட்டுட்டு, அதையெடுத்து அவனுக்கு அவனுக்கு கட்டிவிட்டிட்டு, விவசாயத்தை காப்பாத்துற மாதிரி பேசுற... வெட்கமாயில்ல..."
நான் : "உன் கக்காவைக் கூட, எங்க வயல்ல போயிட்டா அது உரமாயிருமோன்னு... உன் வீட்டு கக்கூஸுல போற பயலுவ... இதுல விவசாயிக்கு கவலைப்படுற மாதிரி சீனு வேற...""
நான் : "விவசாயி வயலில் போடுற உரமும்-பூச்சி மருந்துமே , கார்போர்ட்டுதான்.. அது தெரியுமா?"
அவர் : "இல்ல சார், பொதுவா சமூக ஊடகங்களில் இப்படித்தான் பேசுறாங்க சார்..."
நான் : "அவனெல்லாம் யார் தெரியுமா?"
நான் : "லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்தவன், பில்லு போடாம வியாபாரம் பண்ணி கறுப்புப்பணம் சேர்த்தவன், அரசியலில் இருந்துகிட்டு ஊருக்காசை அடிச்சு உலையில்
போடுறவன்,
பினாமி சொத்து வெச்சுருக்கிறவன், வெளிநாட்டு காச வாங்கிட்டு நம் நாட்டுக்கெதிரா வேலை பார்க்கிறவன், மதம் மாத்துறவன், ஹவாலா தொழில்
பண்றவன், இதுவரைக்கும் வருமானவரியோ, விற்பனைவரியோ கட்டாதவன்,
லெட்டர் பேடு கட்சி வச்சிக்கிட்டு கட்டப்பஞ்சாயத்து பண்ணி காசு பார்க்குறவன்... இது மாதிரி ஆளுங்கதான்...."
அவர் : "சார்.."
நான் : "மத்திய அரசு எடுத்துவரும் பல நடவடிக்கைகள்... இவிங்களுக்கு, பின்னால ஆப்பு வச்ச மாதிரியிருக்கு... இன்னும், வருகிற பல நடவடிக்கைகளில் எத்தனை பய மாட்டப்போறானோ..."
நான் : "அவனுங்க தான், வயித்தெரிச்சல்ல... வாயில வந்ததெல்லாம் சமூக வலைத்தளங்களில் கிளப்பிவிடுறாய்ங்கன்னா... உன்ன மாதிரி படிச்சவன் புத்தி எங்க
போச்சு...கேப்பையில நெய் வடியுதுன்னா, கேட்பார் மதி எங்க போச்சுன்ன மாதிரி..."
அவர் : "சார், அப்படின்னா, நீங்க மேல சொன்னவங்க மேல, நடவடிக்கை எடுத்த மாதிரி தெரியலையே... ஒரு சில அரசியல்வாதிகள் மேலயும், சில VIP-கள் மேலயும்
மட்டும் தான் வருமானவரி சோதனைகள் நடத்துட்டிருக்கு..."
நான் : "தம்பி, நீங்க லூசா.. இல்ல லூசு மாதிரி நடிக்கிறீங்களா?..."
நான் : "அதைவிட்டுட்டு, உன்கிட்ட வந்து... "தம்பி, தம்பி... என் இரண்டு கோடி ரூபா பினாமி சொத்தை வருமான வரித்துறை புடிங்கிட்டாய்ங்க" - அப்படின்னு
சொல்லுவாய்ங்களா.."
நான் : "சட்டத்திற்கு புறம்பா சம்பாரிச்சதை புடுங்குகிறார்கள், அப்படியிப்படி பதுக்கி வச்சிருக்குறதும் எப்ப சிக்குமோ தெரியல... அவிங்க நிலைமைய கொஞ்சம்
நினைச்சுப்பாரு..."
அவர் : "அப்புறம் ஏன் சார், இவ்வளவு போராட்டங்கள் பண்ணுறாங்க???"
நான் : "வயித்தெரிச்சல் தான்... விதவிதமா போராட்டங்களை, மத்திய அரசிற்கெதிரா திருப்பிவிட்டுட்டு இருக்கானுங்க... சமூக வலைத்தளங்களில் வந்து மோடியையும், மத்திய அரசையும் எதிர்த்தது, கம்பு சுத்திட்டு இருக்கானுங்க... "
நான் : "இந்த மேட்டர புரிஞ்சுக்காம... உன்னை மாதிரி... கேசுங்க, லூசுங்க மாதிரி... நடந்துக்கிறீங்க..."
நான் : "கொஞ்சமாவது, யோசிக்கிறதில்லையா... போராடுறவிங்க பின்புலங்களை பாருங்க... எல்லாம் யோக்கிய சிகாமணிகள்... மீத்தேனுக்கு கையெழுத்து போட்டுட்டு,
அவிங்களே போயி போராட்டத்துல உட்கார்திருக்காய்ங்க... கதிராமங்கலம் ONGC ப்ராஜெக்ட், நேற்றைக்கு தான் மத்திய அரசு கொண்டுவந்த மாதிரி... தமிழகத்தை, இவ்வளவு வருடமா காப்பாத்த மறந்துட்டு, இப்ப எல்லா பயலுவலும் கிளம்பிருக்காய்ங்க... "
நான் : "சரி... இந்த கார்பொரேட் வியாபாரிகள் 2014-ம் வருடத்திற்கு முன்னால இந்தியாவில் இல்லையா... விவசாயிகள் வாழ்க்கையில் பாலாறும், தேனாறுமா ஓடிச்சு???"
நான் : "உண்மையா சொல்லப் போனா... இந்த அரசாங்கம் வந்ததுக்கு அப்புறம் தான், விவசாயிகள் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை நோக்கி பல விஷயங்கள்
நகருது..."
அவர் : "சார், மன்னிச்சுக்கங்க... உங்ககிட்ட பேசினதுக்கப்புறம் தான், கொஞ்சம் தெளிவா சில விஷயங்கள் புரியுது..."
நான் : "பரவாயில்ல தம்பி... Don't get carried away with false allegations against this Government... எதையும் கொஞ்சம் யோசிங்க..."
அவர் : "சார், இப்ப நான் என்ன செய்யட்டும்..."
நான் : "ம்ம்... உங்க ஜீன்ஸ் இடுப்ப விட்டு எறங்குது, அதை தூக்கிப் போடுங்க..."
சிவனின் சொந்த ஊர், உலகிலயே முதல் நடராஜர் தோன்றிய ஊர்,
உலகின் உள்ள அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில்.
நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம். 🙏🇮🇳1
ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம்.
3000 ஆண்டுகளாய் பூத்து குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயம்.
*தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்ற வாக்கியம் உருவான இடம்.
🇮🇳🙏2
மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம். இப்படி பல அதிசயங்களையும், ஆச்சயர்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் அதுதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்.
பிறப்பே எடுக்காத (ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி?
🇮🇳🙏1
தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்தி நாளில் எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். 🇮🇳🙏2
பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே? பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்சிவ பெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராணச் செய்திகள் உள்ளன. 🇮🇳🙏3
ஒரு காலத்தில், அரசு பேருந்து வசதி கொண்டு வந்த போது, ‘பஸ் ஓடினால் குதிரை வண்டிக்காரர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’ என்று போராடிய புத்திசாலிகள் இந்த கம்யூனிஸ்ட்கள் !
அரசு அலுவலகங்களில் கணினி புகுத்துவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தான் இந்த கம்யூனிஸ்ட்கள் !
‘ஏடிஎம் வந்தால் வங்கி பணியாளர்களுக்கு வேலை போய்விடும்’ என்று போராடிய கட்சி தான் கம்யூனிஸ்ட் கட்சி !
1991 ல் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வரும் போது நாடாளுமன்றத்தில் நிர்மல் சட்டர்ஜி என்கிற மார்க்சிய கம்யூனிஸ்ட் MP, 'வாஷிங் மெஷின் குறைந்த விலையில் கிடைக்க ஆரம்பித்தால் வீட்டில் துணி துவைக்கும் வேலைக்காரர்கள் வேலை இழப்பார்கள்'
யாருயா அது மகாபாரத வருடம் பற்றி கேட்டது.....மொத்தமா போடுறேன் பாத்து தெளிவாயிக்குங்க....
இந்துக்களின் காலக்கணக்கு,
உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்....
கி.பி.1947 - பாரத சுதந்திரம்
கி.பி 1847 - பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்
கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம்
கி.பி. 788 - ஆதி சங்கரர் தோற்றம்
கி.பி 58 - சாலி வாகன சக வருசம்
கி.மு.57 - விக்ரமாதித்ய சகம் வருடம்
கி.மு 509 - புத்தர் தோற்றம்
கி.மு 3102 - கலியுகம் ஆரம்பம்
கி.மு 3138 - மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு, யுதிஷ்டிர சகம்
கி.மு 8,69,100 - இராமபிரானின் காலம்
கி.மு 21,05,102 - சூரிய சித்தாந்தம்
கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம்
கி.மு12,05,31,100 - பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம்
கி.மு42,72,51,100 - 6 ஆம் மன்வந்ரம்
பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா என்றும்
மைவிரியும் மணிவரைபோல் மாயவனே என்றென்றும்,
வண்டார் நீலம் செய்விரியும் தண்சேறை
யெம் பெருமான் திருவடியைச் சிந்தித் தேற்கு,
என் ஐயறிவும் கொண்டானுக் காளாணார்க் காளாமென் அன்பு தானே.
*-திருமங்கையாழ்வார்*
🙏🇮🇳2
*திருவிழா*
தைப்பூச விழா பத்து நாள் கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் தேர்விழா. காவிரித்தாய்க்கு காட்சியளித்த தைமாதம், பூச நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரித்த காலமாகும்.