பிறப்பே எடுக்காத (ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி?
🇮🇳🙏1
தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்தி நாளில் எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். 🇮🇳🙏2
பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே? பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்சிவ பெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராணச் செய்திகள் உள்ளன. 🇮🇳🙏3
சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகிறது.
🇮🇳🙏4
இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது. ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில் தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்.
🇮🇳🙏5
ஆனால், திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான். திரேதாயுகா அலறித் துடித்து பார்வதி தேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள். 🇮🇳🙏6
அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி, திரேதாயுகாவின் அலறலைக் கேட்டுஅவள் கணவனுக்குஉயிர்ப் பிச்சையளிக்கசபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒருபார்வை பார்த்தார்.
🇮🇳🙏7
இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகா வுக்கும் அவள் கணவனுக்கும் தரிசன காட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. 🇮🇳🙏8
இந்த தரிசனத்துக்குஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டதுசேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது. 🇮🇳🙏9
ஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம் சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.🇮🇳🙏10
சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும் திருச்சிற்றம்பலம்.
வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பிச்சைக்காரர்கள் இல்லாத சமூகம் போதைக்கு அடிமையானவர்கள் நிறைந்த சமூகமாக மாறிவிட்டது.
இந்த தேசத்தை காக்க சீக்கிய மதத்தினை தோற்றுவித்து, அதனால் முகலாய கொடுங்கோலர்களின் சித்திரவதைக்கு உள்ளான சீக்கிய குருமார்கள் செய்த தியாகங்கள் எல்லாம் வீண் ஆகிவிடும் போலிருக்கிறது.
இராணுவத்தில் பணி புரியும்போது தங்கள் உயிரை தியாகம் செய்து இந்த நாட்டை காத்த ஆயிரக்கணக்கான சீக்கிய வீரர்களின் தியாகங்கள் வீணாகி விடும் போலிருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் திருமலை மலைகொழுந்தீஸ்வரர் கோயில்.
இத்தலம் சிவகங்கையிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது. மதுரையிலிருந்து சுமார் 50 கி.மி. தூரத்தில் உள்ளது. 🇮🇳🙏1
மதுரையிலிருந்து மதகுப்பட்டி செல்லும் வழியில் அலமாநகரி என்ற இடத்திலிருந்து ஒரு கி.மீ. நடந்து சென்றால் தலத்தை அடையலாம். கீழப்பெருங்குடி மேலூர் நெடுஞ்சாலையில் சென்றாலும் அடையலாம். 🇮🇳🙏2
போக்குவரத்து அதிக வசதியில்லை. தனியார் வாகனம் அமர்த்திச் செல்வது உத்தமம்.
இறைவன் திருநாமம் மலைக்கொழுந்தீஸ்வரர் இறைவி திருநாமம் பாகம்பிரியாள்
*சிதம்பர ரகசியம்... பார்க்க முக்தி தரும் தில்லை என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?*
சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த நடனம் ஆடிய இடத்தை சிற்றம்பலம் என்பார்கள். இதை சிற்சபை, சித்சபை என்றும் அழைப்பதுண்டு.
இத்தலத்து பெருமானுக்கு சபாநாயகர், கூத்த பெருமான், நடராஜர், விடங்கர், மேருவிடங்கர், தெட்சிணமேருவிடங்கர், பொன்னம்பலம், திருச் சிற்றம்பலம் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் உண்டு.
சிதம்பர ரகசியம் என்று கூறப்படும் பகுதியில் தங்கத்தால் ஆன வில்வத்தள மாலை தொங்கும் காட்சியைப் தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும். இதைத்தான் பார்க்க முக்தி தரும் தில்லை என்கிறார்கள்.
சிவனின் சொந்த ஊர், உலகிலயே முதல் நடராஜர் தோன்றிய ஊர்,
உலகின் உள்ள அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில்.
நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம். 🙏🇮🇳1
ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம்.
3000 ஆண்டுகளாய் பூத்து குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயம்.
*தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்ற வாக்கியம் உருவான இடம்.
🇮🇳🙏2
மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம். இப்படி பல அதிசயங்களையும், ஆச்சயர்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் அதுதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்.