கழக தலைமையால் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட ஏழாம் ஆண்டின் தொடக்கம்!
2016-சட்டமன்ற பொது தேர்தலில் மாவட்டத்திற்குட்பட்ட 6 தொகுதிகளில் 5ல் வெற்றி, 2019-நாடாளுமன்ற தேர்தலில் மாவட்டத்திற்குட்பட்ட 3 தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகளில் வெற்றி !!
துறைமுகம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராய் செவ்வனே பணியாற்றிக்கொண்டு ஆண்டுகள் தவறாமல் மாவட்டம் முழுவதிலும் தலைவர் கலைஞர் பிறந்தநாள், தலைவர் அண்ணன் தளபதியார் பிறந்தநாள், இனமான பேராசிரியப் பெருந்தகை பிறந்தநாள், முப்பெரும் விழா, தமிழ்ப்புத்தாண்டு, கிறித்துமஸ், ரம்ஜான் என மக்களுக்கு
பற்பல நலத்திட்ட உதவிகள் !!
2015 வெள்ள பாதிப்பின்போதும், வர்தா புயல் சேதத்தின்போதும் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் மின்னல் வேக நிவாரண உதவிகள் !!
#கொரோனா பாதிப்பின் போதும் தன்னுயிரை பற்றி கவலைப்படாமல் தலைவரின் ஆணைப்படி மாவட்டம் முழுவதும் இன்று வரை சுற்றிச் சுழன்று மக்களை
காத்து நலத்திட்ட உதவிகளை அளித்த கிழக்கின் புதல்வன் !!
கழகத் தலைவரால் ‘செயல்பாபு’ என பாராட்டப் பெற்றவர் !! உழைப்பை மட்டுமே முதலாய் வைத்து தளபதியார் சொல்லிற்கிணங்க சுற்றிச் சுழலும் சூரியன் !!
சாவித்திரி ராவ் பூலே (மகாத்மா ஜோதிராவ் பூலே மனைவி)-3 January 1830-10 March 1897
ஆயிஷாவை உயர்த்திய படிகள்-பெண்ணுரிமை போராளிகள் தொடர். டிசம்பர் இறுதி, நல்ல பனி, இரவு பதினொரு மணி , கோவை பேருந்து புறப்பட இன்னும் கால் மணி நேரம் இருக்கிறது. மடிக்கணணியை இருக்கையில் வைத்து விட்டு
கீழிறங்கி நின்ற போதுதான் மசூது பாய் எதிரில் வந்தார். கூடவே அவர் மகள் ஆயிஷா.சலாம் சொல்லி விட்டு அவரே தொடங்கினார். "லீவு முடிஞ்சு காலேஜுக்கு போறா?! அதான் பஸ் ஏத்தி விட வந்தேன். நீங்களும் கோயம்புத்தூருக்கா , இறங்கும் போது பாத்துகிடுங்க ". எஞ்சினியரிங் இரண்டாம் ஆண்டு படிக்கிறாளாம்.
கொஞ்சநேரம் பேசிகொண்டிருக்கும் போதே பேருந்து நகர ஆரம்பித்தது. மசூது பாய், ஆயிஷாவிடம் இறங்கியதும் போன் பண்ணச் சொல்லிவிட்டு போய்விட்டார்.ஆயிஷா யார் துணையும் இன்றி ஒரு இரவுப் பயணத்தை தாண்டி தன் உயர்கல்விக்க்காக செல்கிறாள். தமிழகத்தில் இன்றைய நாளில் இது இயல்பானது.
**********
புனே நகருக்கு அருகே உள்ள 'பீமா' என்ற நதிக்கரையில் போர் நடந்து 200 ஆண்டுகள் ஆகும் இந்த வேளையில் அதன் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம் !
1800-களில் பார்ப்பன பேஷ்வாக்கள் மராட்டியத்தை ஆண்டு வந்தனர். அப்போது, இந்துமத வேதப்பண்பாடுகளும், மனுசாஸ்திரக் கொடுமைகளும் மிகக்கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன.
தலித்துகள் பகலில் தெருக்களில் நடமாடக்கூடாது;நடந்தாலும் தெருவில் எச்சில் துப்பிவிடக்கூடாது;
எச்சிலைத் துப்புவதற்கு தம் கழுத்தில் ஒரு மண் கலயத்தைக் கட்டித்தொங்க விட்டுக்கொண்டு வரவேண்டும்.
தலித்களின் கால் தடத்தைப் பார்ப்பனர்கள் மிதித்தால் பார்ப்பனர்களுக்குத் தீட்டாகிவிடும்.அதனால் அவர்கள் பின்பகுதியில் ஒரு பனை ஓலையைக் கட்டிக்கொண்டு நடக்க வேண்டும்.
**
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையோட NIRF நிறுவனம் தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களோட ரேங்கிங் பாட்டியல 2020க்கு அறிவிச்சு இருக்கு.
*மொத்தம் 660 கல்வி நிறுவனங்கள துறைவாரியா வெளியிட்ட பட்டியல்ல தமிழ்நாட்ட சேர்ந்த 116 கல்வி
நிறுவனங்கள் (அதாவது மொத்த பட்டியல்ல 18% ) இடம்பிடிச்சிருக்கு.
**இதுல பாத்தா பல்கலைக்கழகம், பொறியியல், மருத்துவம், கலைக்கல்லூரி, ஆர்க்கிடெக்சர் ஆகிய பிரிவுல எல்லாம் தமிழ்நாடு தான் முன்னணில இருக்கு.
*இவனுங்க கொண்ட வர்ற NEP (தேசிய கல்வி கொள்கை-2020) படி 'உயர்கல்வில சேர்ப்புக்கான சதவிகித' (GER) டார்கெட் 30%, ஆனா ஏற்கனவே செப்டம்பர்2019 கணக்கெடுப்பு படி தமிழ்நாடு 49% தொட்டு இருக்கு.
*அதே போல தமிழ்நாட்டுல மட்டும்தான் மாவட்டதுக்கு ஒரு மருத்துவ கல்லூரி இருக்கு,
"திராவிட இயக்க தீரர்கள்" #வரலாறு_அறிவோம் – கே.ஆர்.இராமசாமி :
(ராயபுரம் "அறிவகம்" உருவான கதை)
திமுக என்ற புதிய அரசியல் கட்சி எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருந்த ஆரம்ப காலகட்டம் அது. கட்சியின் அன்றாட அலுவல்களைக் கவனிப்பதற்கு ஏதுவாக, மாநிலம் தழுவிய அளவிலான கட்சிப் பணிகளை
ஒருங்கிணைக்க வசதியாக கட்சிக்கென்று ஒரு தலைமை அலுவலகம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற யோசனை அண்ணா உள்ளிட்ட திமுக தலைவர்களுக்கு உருவாகியிருந்தது.
சென்னை ராயபுரம் சூரியநாராயண செட்டித்தெருவில் உள்ள 24 ஆம் இலக்கக் கட்டடம் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னார் அண்ணாவின் அணுக்க நண்பர்
தேவராஜ முதலியார். விசாலமான தாழ்வாரம், அகலமான அறைகள் என்று இரண்டு அடுக்கு கட்டடம். நல்ல இடம்தான். ஆனால் அதை வாங்குவதற்குத் தேவையான பணத்தை எப்படித் திரட்டுவது?
நான் திரட்டுகிறேன் என்று சொல்லி முன்வந்தார் கே.ஆர். ராமசாமி. அன்றைய தமிழ்த் திரையுலகில் மிகப் பிரபலமாக இருந்த நட்சத்திரம்