அஞ்சல் பணிக்கான தேர்வில் மீண்டும் தமிழ் புறக்கணிப்பு! இந்தியா ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! - மே பதினேழு இயக்கம்
அஞ்சல் துறையின் கணக்கர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பபணிக்கான தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று...
1/8
...அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இனி அஞ்சல் துறை தேர்வு தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த முறை உறுதியளித்ததற்கு மாறாக, தற்போது தேர்வில் மீண்டும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின்...
2/8
...இந்த உறுதி மீறலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
கடந்த 2019 ஆண்டு அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வானது வழக்கத்தை மீறி தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, கடும் எதிர்ப்புகளையும் சந்தித்து, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது. பின்னர் எதிர்ப்புகள் அதிகரிக்க...
3/8
...நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு குரல் எழும்ப, தேர்வை ரத்து செய்யப்பட்டது மீண்டும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட்டது. அப்போது மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என்று உறுதியளித்தார். அதனை மீறும் விதமாக தற்போது...
4/8
...மீண்டும் தமிழ் புறக்கணிக்கப்பட்டு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடி அரசு பதவியேற்றது முதலே ஒரே நாடு ஒரே மொழி என்று இந்தி மொழியை மட்டும் வளர்ப்பதும் தமிழ் மொழியை புறக்கணிப்பதும் தொடர்கதையாக உள்ளது. அதேபோல் இந்திய ஒன்றிய அரசின்...
5/8
...வேலைவாய்ப்பில் தமிழர்களை புறக்கணிக்கும் விதமாக பணியிடங்களை முறைகேடாக வட இந்தியர்களை கொண்டு மோடி அரசு நிரப்பி வருகிறது. இதன் மூலம் தமிழ் மொழியை, தமிழர்களை புறக்கணிக்கும் வேலையை தமிழர் விரோத மோடி அரசு செய்து வருகிறது. இது தமிழர்கள் மீதான ஆரியர்களின் வன்மத்தையே காட்டுகிறது.
6/8
அஞ்சலகங்கள் ஆங்கிலம், இந்தி தெரியாத ஏழை எளிய மக்களின் அன்றாட பயன்பாட்டில் ஏதோ ஒருவகையில் உள்ளன. அப்படியான இடத்தில், மக்கள் மொழியை அறிந்தவர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும். அதற்கு அஞ்சல் தேர்வுகள் உள்ளூர் மொழியில் நடத்த வேண்டும். எனவே, அஞ்சல் துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின்...
7/8
...அனைத்து துறைகளின் தேர்வுகளும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும். தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை திரும்ப பெற்று, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் அஞ்சல் தேர்வு நடத்துவதற்கான புதிய அறிவிப்பை மீண்டும் வெளியிட வேண்டுமென மே17இயக்கம் வலியுறுத்துகிறது.
8/8
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம் தகர்ப்பு! சர்வதேசத்தின் தோல்வியால் தமிழீழத்தில் தொடரும் தமிழினப்படுகொலை!! - மே பதினேழு இயக்கம்
தமிழீழ இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை...
1/12
...மாணவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இரவோடு இரவாக தகர்த்தெறிந்துள்ளது சிங்களப் பேரினவாத இலங்கை அரசு! 1.5 லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி சர்வதேச சமூகத்திடம் தமிழினம் போராடி வரும் வேளையில், மீண்டும் ஆட்சிக்கு வந்த தமிழீழ இனப்படுகொலையாளர்கள்...
2/12
...சர்வதேசத்தின் முன்னியிலையே தமிழர் மீதான அடக்குமுறையை தொடர்கின்றனர். தமிழீழ கோரிக்கையை வேரோடு அழிக்க வேண்டும் என்று சிங்களப் பேரினவாத இலங்கை அரசு முனைப்போடு இருப்பதையே யாழ் பல்கலைக்கழக நினைவிடம் தகர்ப்பு உறுதிபடுத்துகிறது!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வேலைவாய்ப்பில் OBC, SC/ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு மறுப்பு! இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே17 இயக்கம்
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (Indian Council of Medical Research - ICMR)...
1/11
அதன் கீழ் செயல்படும் பல்வேறு நிறுவங்களுக்கான D மற்றும் E நிலை அறிவியலாளர்களின் 65 பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதிர்ச்சி என்னவெனில், அரசு பணிகளான இவற்றிற்கு இடஒதுக்கீடு இல்லை என்பதே! மருத்துவ படிப்பை தொடர்ந்து, மருத்துவ பணியிடங்களுக்கும்...
2/11
இட ஒதுக்கீட்டை தொடர்ந்து மறுக்கும் பாஜக-மோடி அரசை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மருத்துவ படிப்பில் BC, MBC பிரிவினருக்கான 50% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் வரை சென்று மறுத்த பாஜக அரசு, தற்போது மருத்துவ ஆராய்ச்சி சார்ந்த பணிகளுக்கு SC, ST, BC, MBC பிரிவினருக்கு...
இந்துத்துவ மோடி அரசே! தொழிலாளர்களை வஞ்சிக்கும் புதிய தொழிலாளர்கள் சட்டத்தை உடனடியாக கைவிடு! மே17 இயக்கம்
கொரோணா பெருந்தொற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பது, விவசாயிகள் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை வாழ்வாதார...
1/9
...உரிமைகளை பறித்து அதை முதலாளிகளுக்கு ஏகபோகமாக பகிர்ந்தளிக்கும் வேலையை இந்த மோடி அரசு திட்டமிட்டு செய்து வருகிறது. அதன்படிதான் நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் பாதிக்கும் விதமாக தொழிலாளர் விரோத சட்டங்களை மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது.
2/9
நாட்டில் தொழிலாளர்கள் நலனைக் காப்பதற்காக இதுவரை இருந்த 44 சட்டங்களையும் சுருக்கி நான்கு சட்டங்களாக மாற்றி அதனை உறுப்பினர்கள் யாரும் இல்லாத நேரத்தில் நிறைவேற்றியிருக்கிறது மோடி அரசு.
1) இந்த சட்டத்தின்படி ஏற்கனவே 100க்கும் அதிகமான தொழிலாளர்களை பணியில் அமர்த்தி உள்ள...
3/9
தமிழக அரசே! எட்டு ஆண்டுகளாக தமிழ்நாடு எஸ்சி/எஸ்டி ஆணையம் கூடாமல் இருக்கும் அவலத்தை உடனடியாக சரிசெய்க - மே17 இயக்கம்
தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் வேரூன்ற சாதிவெறியை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டு வருகிற சூழ்நிலையில், அதை தடுத்து நிறுத்தி பட்டியலின மக்களை பாதுகாக்கும்...
1/5
...பொறுப்பு எஸ்சி/எஸ்டி ஆணையத்திற்கு உண்டு. இதற்காகத்தான் இந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகள் பாதுகாப்புச் சட்டம் 1989 கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்தின்படி எஸ்சி/எஸ்டி ஆணையம் வருடத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக கூடி விவாதிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இந்த ஆணையம்...
2/5
...கடைசியாக 2013 ஜூன் 25ஆம் தேதி கூடியதே தவிர அதை தவிர்த்து கடந்த 8 ஆண்டுகளில் ஒருமுறைகூட சந்தித்து பேசவில்லை என்ற அதிர்ச்சிகரமான செய்தி தற்போது வெளியே வந்திருக்கின்றது.
இப்படித்தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட 'பிற்படுத்தப்பட்ட வாரியத்திற்கான'...
3/5
சாதி ஒழிப்பு போராளி ஐயா தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளில் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக போராட உறுதியேற்போம்!
இம்மானுவேல் சேகரனார் அவர்கள், பட்டியலின மக்களை சமமாக நடத்த கோரியும், இரட்டை குவளை முறையை ஒழிக்க தனது 19ஆம் வயதில் மாநாட்டை நடத்தியவர். 1953இல்...
1/7
ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கத்தை துவக்கி, இராமநாதபுரம் பகுதிகளில் சமூக விடுதலைப் போராட்டங்களில், சாதி ஒழிப்பு பணிகளில் தீவிரமாக செயல்பட்டார். இவரின் வளர்ச்சி அப்பகுதி பட்டியலின மக்களுக்கு மிகப்பெரும் எழுச்சியாக அமைந்தது. இதனால் ஆதிக்க சமூகத்தின் எதிர்ப்புகளைச் சந்தித்தார்.
2/7
1957ல் முதுகுளத்தூர் தொகுதியில் நடைபெறவிருந்த தேர்தலை ஒட்டி, பள்ளி விழா ஒன்றில் பங்கேற்று இரவு 9 மணியளவில் வீடு திரும்பிய போது, ஆதிக்க சாதியை சேர்ந்த கூட்டத்தினரால் சரமாரியாக வெட்டி வீழ்த்தப்படுகிறார். இம்மானுவேல் சேகரனாரின் சமூகப்போராட்டம் முடிவுற, ராமநாதபுர மாவட்டத்தின்...
3/7
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் (30-08-20) - மே 17 இயக்கம் வேண்டுகோள்
தமிழீழ விடுதலைப்போராட்டம் துவங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை, போராடுபவர்கள் கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்படுவது விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் ஒரு செயல்திட்டமாக இலங்கை அரசினால் செயல்படுத்தப்படுகிறது.
இராணுவத்தினர் விசாரிப்பதற்கு அழைத்து சென்றும், அரசியல் காரணங்களால் கைது செய்யப்பட்டும், வெள்ளை வேன் கடத்தல் என சட்டத்திற்கு புறம்பாக தமிழர்களை கடத்தி சென்று இலங்கை அரசினால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, 60,000 முதல் 1 லட்சம் வரையிலான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வழக்குகள்...
நிலுவையில் உள்ளன. அப்படியாக கடத்தி செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நிலை இன்று வரை என்ன என்று தெரியவில்லை.
ஐ.நா. மனித உரிமை ஆணையம் மூலமாக அழுத்தம் ஏற்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த புகார்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதியளித்த பிறகும், இலங்கை அரசு...