யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம் தகர்ப்பு! சர்வதேசத்தின் தோல்வியால் தமிழீழத்தில் தொடரும் தமிழினப்படுகொலை!! - மே பதினேழு இயக்கம்

தமிழீழ இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை...

1/12
...மாணவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இரவோடு இரவாக தகர்த்தெறிந்துள்ளது சிங்களப் பேரினவாத இலங்கை அரசு! 1.5 லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி சர்வதேச சமூகத்திடம் தமிழினம் போராடி வரும் வேளையில், மீண்டும் ஆட்சிக்கு வந்த தமிழீழ இனப்படுகொலையாளர்கள்...

2/12
...சர்வதேசத்தின் முன்னியிலையே தமிழர் மீதான அடக்குமுறையை தொடர்கின்றனர். தமிழீழ கோரிக்கையை வேரோடு அழிக்க வேண்டும் என்று சிங்களப் பேரினவாத இலங்கை அரசு முனைப்போடு இருப்பதையே யாழ் பல்கலைக்கழக நினைவிடம் தகர்ப்பு உறுதிபடுத்துகிறது!

தமிழீழ இனப்படுகொலையை நினைவுகூரும் விதமாக...

3/12
...யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, கடந்த 2018 இனப்படுகொலை மாதத்திற்கு முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவிடம் ஒன்றை மாணவர்கள் கட்டியெழுப்பினர். கடந்த இரண்டு வருடங்களாக இனப்படுகொலை நாளில் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூறும் விதமாக...

4/12
...ராணுவத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி பல்கலைக்கழக மாணவர்கள் நினைவேந்தல் நிகழ்வை நடத்தினர். இது தொடரக்கூடாது என்ற எண்ணம் கொண்டே, தற்போது அந்த நினைவிடம் தகர்க்கப்பட்டுள்ளது.

தமிழீழ இனப்படுகொலைக்கு பின்னர் தமிழர்களுக்கான நீதியை பெற்றுத்தருவதாக அமெரிக்கா, இந்தியா போன்ற...

5/12
...நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பொய்யாக நடித்துக்கொண்டிருந்த போது, தமிழினப்படுகொலையை நடத்தியதே அந்த நாடுகள் தான் என்று அம்பலப்படுத்தியதோடு, அந்நாடுகள் தமிழர்களுக்கு நீதியை பெற்றுத்தராமல் கைவிட்டுவிடும் என்று மே பதினேழு இயக்கம் எச்சரிக்கவும் செய்தது. தமிழர்களுக்கு...

6/12
...நீதி பெற்றுத்தருவதாக கூறிய வழிமுறைகள் அனைத்தும் தற்போது தோல்வியடைந்த நிலையில், சர்வதேச சமூகம் தமிழர்களை கைவிட்டதையே, இன்று யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம் தகர்க்கப்பட்டதன் மூலம் அறிய முடிகிறது. குறிப்பாக, இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்...

7/12
...இலங்கை சென்று, தமிழர்களுக்கான தீர்வு இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக இருக்கும் என்று கூறிய இரண்டாம் நாளில் இது அரங்கேறியுள்ளது.

தமிழீழ இனப்படுகொலை குற்றவாளிகளான ராஜபக்சே சகோதரர்கள் மீண்டும் ஆட்சி அமைக்க முடிந்ததே, சர்வதேச சமூகத்தின் தோல்வியாக பார்க்க முடிகிறது.

8/12
இனப்படுகொலையாளிகள் தப்புவிக்கப்பட்டதன் விளைவாக, தமிழீழம் நாள்தோறும் இலங்கை அரசின் அடக்குமுறைக்குள்ளாக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு 12 ஆண்டுகளான பின்பும், இலங்கை ராணுவம் தமிழீழ பகுதியிலிருந்து விலக்கிக்கொள்ளப்படாமல் இருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோரை...

9/12
...கண்டுபிடிக்க கோரி நடைபெறும் ஜனநாயக போராட்டங்கள் கூட நசுக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில், யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம் தகர்க்கப்பட்டது, தமிழர்கள் மீதான இனப்படுகொலை முற்றுபெறவில்லை என்பதையே உணர்த்துகிறது.

இனப்படுகொலைக்கான நீதியை பெற்று தருவதற்கு இந்தியா...

10/12
...மற்றும் மேற்குலகம் மீது தமிழர்கள் வைத்த நம்பிக்கையே இனப்படுகொலை இன்றும் தொடர்வதற்கு காரணமாயிற்று. சிங்களப் பேரினவாதம் தமிழர்களை முற்றிலும் அழிக்கப்படும் வரை இது நிறுத்தப்பட போவதில்லை. தமிழர்கள் ஒருங்கிணைந்து தமிழர்களுக்கான அரசியல் அமைப்பை மீண்டும் கட்டமைப்பதன் மூலம்...

11/12
...தமிழீழ கோரிக்கையை பாதுகாக்க முடியும். புலம்பெயர் தமிழர்கள் ஒருங்கிணைந்து போராட முன்வருவதன் மூலம் சர்வதேசத்தின் தோல்வியை உலகிற்கு உணர்த்துவதோடு, தமிழர்களுக்கான நீதியை பெறுவதற்கு சர்வதேச சமூகத்தை நிர்பந்திக்க முடியும்!

மே பதினேழு இயக்கம்
9884072010

facebook.com/54806091187803…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மே பதினேழு இயக்கம்

மே பதினேழு இயக்கம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @May17Movement

8 Jan
அஞ்சல் பணிக்கான தேர்வில் மீண்டும் தமிழ் புறக்கணிப்பு! இந்தியா ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! - மே பதினேழு இயக்கம்

அஞ்சல் துறையின் கணக்கர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பபணிக்கான தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று...

1/8
...அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இனி அஞ்சல் துறை தேர்வு தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த முறை உறுதியளித்ததற்கு மாறாக, தற்போது தேர்வில் மீண்டும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின்...

2/8
...இந்த உறுதி மீறலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

கடந்த 2019 ஆண்டு அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வானது வழக்கத்தை மீறி தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, கடும் எதிர்ப்புகளையும் சந்தித்து, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது. பின்னர் எதிர்ப்புகள் அதிகரிக்க...

3/8
Read 8 tweets
1 Jan
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வேலைவாய்ப்பில் OBC, SC/ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு மறுப்பு! இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே17 இயக்கம்

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (Indian Council of Medical Research - ICMR)...

1/11
அதன் கீழ் செயல்படும் பல்வேறு நிறுவங்களுக்கான D மற்றும் E நிலை அறிவியலாளர்களின் 65 பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதிர்ச்சி என்னவெனில், அரசு பணிகளான இவற்றிற்கு இடஒதுக்கீடு இல்லை என்பதே! மருத்துவ படிப்பை தொடர்ந்து, மருத்துவ பணியிடங்களுக்கும்...

2/11
இட ஒதுக்கீட்டை தொடர்ந்து மறுக்கும் பாஜக-மோடி அரசை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மருத்துவ படிப்பில் BC, MBC பிரிவினருக்கான 50% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் வரை சென்று மறுத்த பாஜக அரசு, தற்போது மருத்துவ ஆராய்ச்சி சார்ந்த பணிகளுக்கு SC, ST, BC, MBC பிரிவினருக்கு...

3/11
Read 11 tweets
29 Sep 20
இந்துத்துவ மோடி அரசே! தொழிலாளர்களை வஞ்சிக்கும் புதிய தொழிலாளர்கள் சட்டத்தை உடனடியாக கைவிடு! மே17 இயக்கம்

கொரோணா பெருந்தொற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பது, விவசாயிகள் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை வாழ்வாதார...

1/9
...உரிமைகளை பறித்து அதை முதலாளிகளுக்கு ஏகபோகமாக பகிர்ந்தளிக்கும் வேலையை இந்த மோடி அரசு திட்டமிட்டு செய்து வருகிறது. அதன்படிதான் நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் பாதிக்கும் விதமாக தொழிலாளர் விரோத சட்டங்களை மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது.

2/9
நாட்டில் தொழிலாளர்கள் நலனைக் காப்பதற்காக இதுவரை இருந்த 44 சட்டங்களையும் சுருக்கி நான்கு சட்டங்களாக மாற்றி அதனை உறுப்பினர்கள் யாரும் இல்லாத நேரத்தில் நிறைவேற்றியிருக்கிறது மோடி அரசு.

1) இந்த சட்டத்தின்படி ஏற்கனவே 100க்கும் அதிகமான தொழிலாளர்களை பணியில் அமர்த்தி உள்ள...

3/9
Read 9 tweets
29 Sep 20
தமிழக அரசே! எட்டு ஆண்டுகளாக தமிழ்நாடு எஸ்சி/எஸ்டி ஆணையம் கூடாமல் இருக்கும் அவலத்தை உடனடியாக சரிசெய்க - மே17 இயக்கம்

தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் வேரூன்ற சாதிவெறியை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டு வருகிற சூழ்நிலையில், அதை தடுத்து நிறுத்தி பட்டியலின மக்களை பாதுகாக்கும்...

1/5
...பொறுப்பு எஸ்சி/எஸ்டி ஆணையத்திற்கு உண்டு. இதற்காகத்தான் இந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகள் பாதுகாப்புச் சட்டம் 1989 கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்தின்படி எஸ்சி/எஸ்டி ஆணையம் வருடத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக கூடி விவாதிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இந்த ஆணையம்...

2/5
...கடைசியாக 2013 ஜூன் 25ஆம் தேதி கூடியதே தவிர அதை தவிர்த்து கடந்த 8 ஆண்டுகளில் ஒருமுறைகூட சந்தித்து பேசவில்லை என்ற அதிர்ச்சிகரமான செய்தி தற்போது வெளியே வந்திருக்கின்றது.

இப்படித்தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட 'பிற்படுத்தப்பட்ட வாரியத்திற்கான'...
3/5
Read 5 tweets
11 Sep 20
சாதி ஒழிப்பு போராளி ஐயா தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளில் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக போராட உறுதியேற்போம்!

இம்மானுவேல் சேகரனார் அவர்கள், பட்டியலின மக்களை சமமாக நடத்த கோரியும், இரட்டை குவளை முறையை ஒழிக்க தனது 19ஆம் வயதில் மாநாட்டை நடத்தியவர். 1953இல்...

1/7 Image
ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கத்தை துவக்கி, இராமநாதபுரம் பகுதிகளில் சமூக விடுதலைப் போராட்டங்களில், சாதி ஒழிப்பு பணிகளில் தீவிரமாக செயல்பட்டார். இவரின் வளர்ச்சி அப்பகுதி பட்டியலின மக்களுக்கு மிகப்பெரும் எழுச்சியாக அமைந்தது. இதனால் ஆதிக்க சமூகத்தின் எதிர்ப்புகளைச் சந்தித்தார்.

2/7
1957ல் முதுகுளத்தூர் தொகுதியில் நடைபெறவிருந்த தேர்தலை ஒட்டி, பள்ளி விழா ஒன்றில் பங்கேற்று இரவு 9 மணியளவில் வீடு திரும்பிய போது, ஆதிக்க சாதியை சேர்ந்த கூட்டத்தினரால் சரமாரியாக வெட்டி வீழ்த்தப்படுகிறார். இம்மானுவேல் சேகரனாரின் சமூகப்போராட்டம் முடிவுற, ராமநாதபுர மாவட்டத்தின்...

3/7
Read 7 tweets
29 Aug 20
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் (30-08-20) - மே 17 இயக்கம் வேண்டுகோள்

தமிழீழ விடுதலைப்போராட்டம் துவங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை, போராடுபவர்கள் கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்படுவது விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் ஒரு செயல்திட்டமாக இலங்கை அரசினால் செயல்படுத்தப்படுகிறது. Image
இராணுவத்தினர் விசாரிப்பதற்கு அழைத்து சென்றும், அரசியல் காரணங்களால் கைது செய்யப்பட்டும், வெள்ளை வேன் கடத்தல் என சட்டத்திற்கு புறம்பாக தமிழர்களை கடத்தி சென்று இலங்கை அரசினால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, 60,000 முதல் 1 லட்சம் வரையிலான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வழக்குகள்...
நிலுவையில் உள்ளன. அப்படியாக கடத்தி செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நிலை இன்று வரை என்ன என்று தெரியவில்லை.

ஐ.நா. மனித உரிமை ஆணையம் மூலமாக அழுத்தம் ஏற்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த புகார்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதியளித்த பிறகும், இலங்கை அரசு...
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!