ஸ்ரீவித்யா - தென்னிந்திய திரையுலகம் கொண்டாடத் தவறிய பெரும் பேரழகி. பல இரவுகள் யோசித்திருக்கிறேன் இப்படி ஒரு ஹீரோயின் மெட்டீரியல் எப்படி குணச்சித்திர வேடங்களில் மட்டும் பிக்ஸ் ஆனார் என்று. ஒரு நடிகையின் கண்களுக்கு அடிமையென்றால் நம் மனது நேரடியாக சில்கை நினைக்கும்.ஆனால் அதைவிட
பவர்ஃபுல் கண்கள் வித்யாவினுடையது. சிறந்த கர்நாடக பாடகி சிறந்த நடிகை இதெல்லாம் சொல்லும் போது நிச்சயம் அவரின் அழகை சொல்லியே ஆக வேண்டும். ஏன் இப்ப ஸ்ரீவித்யா எனும் கேள்விக்கு நேரடியான பதில் முரசு டிவியில் கடந்தவாரம் ஒளிபரப்பான நூற்றுக்கு நூறு திரைப்படம். ஆசிரியர் மேல் காதல் கொண்ட
ஒரு பெண்ணாக நடித்திருப்பார். திரைப்படம் முழுக்க அவரை விட அவர் கண்களே அதிகம் பேசியிருந்தது. அவரின் கண்கள், இதழ்களின் அமைப்பு போல் சிறப்பாக அமைந்த நடிகைகள் விரல்விட்டு கூட எண்ணிவிடலாம். இப்படி ஒரு நடிப்பு அரக்கியை ஏன் கதாநாயகியாக கொண்டாடவில்லை நாம். அதற்கடுத்து இன்னும்
அதிகமா அவரை காதலித்த படம் புன்னகை மன்னன். சாப்ளின் செல்லப்பா ஒரு சிறுவனிடம் மாட்டி தலைகீழாக தொங்கும் போது அங்கு வந்து ஒரே அரைதான் விடுவார். அந்த படம் முழுவது ஒரு முப்பத்தைந்து வயதுடைய பெண்ணுக்கே உரிய முதிர்ச்சியும், முக அழகும் உடல் வாகும் நயன்தாராக்கள் பிச்சை வாங்கலாம்.
அபூர்வ ராகங்கள் படத்தில் கிளைமாக்ஸில் கேள்வியின் நாயகனே பாடல் வரும். கருப்பு வெள்ளை படத்திலும் ஸ்பெஷல் கலராக தெரிவார். அதில் அவரின் நடிப்பும் கமல்மேல் காட்டும் காதலும் எத்தனை இலக்கியத்திற்குள்ளும் அடக்கவே முடியாது. நிஜ வாழ்வில் கமலை ஒருதலையாக காதலித்து அதில் தோல்வியும் அடைந்தார்
இப்படி வர்ணிக்க வேண்டிய ஸ்ரீவித்யாவை மலையாள தேசம் மொத்தமாக சூறையாடி விட்டது. முதல் காதல் தோல்விக்குபின் ஒரு மதமாற்ற திருமணம் அதுவும் தோல்வி, பரதனிடம் இருந்த காதலும் தோல்வி இப்படி காதல் முழுக்க முழுக்க அவரை ஏமாற்றியது. பர்சனல் பக்கங்களில் ரொம்பவே அடிபட்டவர் ஸ்ரீவித்யா.
பாவம் அறியாத வயதில் தகப்பன் நோய்வாய்பட தாயாரோ பம்பரமாக உழைக்க தாய்ப்பாலின் சுவைகூட அறியவில்லை நான் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். என்ன கொடுமை. அதன் பிறகு தாயார் மரணம் நிகழ்ந்து 10 ம்நாள் காமிரா முன் நின்ற போதும் நடிப்பில் துளி சமரசம் செய்யாத பேதை இவர்.
இவரின் நடிப்பிற்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். அதில் தவிர்க்கவே முடியாதது தளபதி . தன் கணவனாக நடித்தவருக்கு தன்னை விட மூன்று வயது அதிகமான ரஜினி அவர்களுக்கு தாயார் வேடம். கோவிலில் அந்த இரயில் சப்தம் கேட்கும் போது அந்த கண்களை மட்டும் பாருங்கள் நடிப்பின் உச்சம் தெரியும்.
அதற்கு பிறகான 90கிட்ஸின் கண்ணெதிரே தோன்றினாள் சிம்ரனின் அம்மாவாக ஒரு தாயின் பரிதவிப்பை வேறு யாரும் நமக்குள் கடத்தியிருக்க முடியாது. இதெல்லாம் விட காதலுக்கு மரியாதை கிளைமாக்ஸ் தான் இப்பவும் வந்து போகுது...
ஷாலினி அம்மாவிடம் மினிய அவனுக்கு கொடுத்துடுங்கனு கெஞ்சும் போதும், அடுத்த சீனில் சிவகுமாரிடம் இதை விட ஒரு பொண்ணை தேட முடியாது என்றும் சொல்வார் அதே கண்களில். அந்த கண்களில் தான் எத்தனை நடிப்பு. இவரின் இன்னொரு ப்ளஸ் அவரின் கூந்தல். கொஞ்சம் கரடுமுரடான திக்கான சுருள் முடி
இந்த படங்கள் எல்லாவற்றிலும் அவரின் கூந்தல் கூட இரசிக்க வைக்கும். பற்பல படங்கள். கமலின் நம்மவர் படத்தில் அவரின் அக்காவாக வரும்போதும் கிளைமாக்ஸிலும் எக்ஸ்ட்ரா அழகாக தெரிந்தார். புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மரணப்படுக்கையில் அவர் பார்க்க விரும்பிய ஒரே நபர் திரு கமல்ஹாசன் மட்டுமே
இதற்கு எப்படி காரணம் எடுத்தாலும் அவரின் மேல் இருந்த அதீத அன்பு மட்டுமே. அந்த கண்களில் சோகம் இருந்தது,காதல் இருந்தது, ஏக்கம் இருந்தது, வறுமை இருந்தது ஆனால் தேவையானதை மட்டும் தரும் கலை அவரிடம் இருந்தது. தூசு தட்டுங்கள் அவரின் திரைப் படங்களை. ரசித்துப்பாருங்கள் அந்த கண்களை.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பொண்டாட்டி கொடுமை

பொண்டாட்டி கொடுமை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @bharath_kiddo

11 Dec 20
Premarital sex இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து. பின்னூட்டத்தில் யாரும் கண்ணு அவிஞ்சுடும் , உங்க வீட்ல அப்படித்தானே என்றெல்லாம் பேசுனா அது எள்ளளவும் பாதிக்காது... திருமணத்தை உடலுறவுக்கு மட்டும் பார்ப்பவர் எதிர்க்கும் ஒரு விஷயமே ப்ரி மேரிட்டல் செக்ஸ்.
எப்பவும் ஒரே ஒரு விஷயம் மட்டும் தெரிஞ்சுக்கோங்க முழுசா படுத்து எழும்புறது மட்டும்தான் உடலுறவுனு இல்லை. அதே போல காதலர்கள் மட்டும்தான் ஃப்ரீ மேரிட்டல் செக்ஸ் வைச்சுப்பாங்கனு நினைச்சா அதுவும் ஹைட் ஆஃப் ஸ்டுபிடிட்டி. அப்படி என்ன அது சரின்னு கேட்டீங்கனா பக்கம் பக்கமா
என்னால சொல்ல முடியும். இதுக்கு முன்னாடி ஒரே ஒரு சர்வே நம்ம ஊர்ல 16-18 வயசுக்குள்ளயே செக்ஸ் அனுபவிச்சுடுறாங்க. நல்லா படிங்க அனுபவிச்சுடுறாங்க. பட் அவங்க முழுசா செக்ஸ ரசிச்சு ருசிப்பது 22 வயசுக்கப்பறம் தான். இந்த ஃப்ரீ மேரிட்டல் செக்ஸ் என்பது உடலுறவு மட்டும் இல்லைனு
Read 15 tweets
24 Nov 20
மலருக்கும் அலருக்கும் உள்ள வேறுபாடு மட்டுமே .... மலர் பிடிக்காதவர் உண்டு அலர் பிடிக்காதவர் இல்லை. சங்க இலக்கியத்தில் பெண்களை அவர்களின் வயது கொண்டு ஏழாக பிரித்துள்ளனர். பேதை முதல் பேரிளம்பெண் வரை. வயது பிரிப்பு இரு வகை அதுக்குள்ள போக வேணாம். அழகு என்பது பொதுவானது.
தோற்றப் பொலிவு தனித்துவமானது. இன்னைக்கு ரம்யா கிருஷ்ணன இரசிக்குற எவனும் அவங்க ஆரம்ப காலகட்டத்துல திரும்பி கூட பாத்துருக்க மாட்டாங்க. காரணம் அழகு இல்லை பொலிவு. 18-24 வயசுல அவங்க மலர் அதுக்கப்பறம் அலர். அலர்னா முழுதாக பூத்த மலர். பூவுக்கு வர்ர வாசத்த விட முழுசா பூத்த பிறகு
வர்ர வாசம் வேற லெவல். இங்க பசங்க ஆண்டி ஆண்டினு சுத்துறது ஈஸியா மடிக்க முடியும்னா???? கண்டிப்பா இல்லை வயசு பொண்ணைவிட ஆண்டியை மடிக்குறது தான் கஷ்டம். காரணம் பொலிவு. குழந்தை பிறப்பதற்கு முன் 2 மாதம் பிறந்து 2 வருடம் இந்த காலத்தில் இருக்கும் பெண்கள் மட்டுமே அழகின் உச்சம்.
Read 4 tweets
19 Nov 20
பைஜூ இது ஒரு பெரிய ட்ராப் என்பது மட்டும்தான் நிஜம். எங்கயோ ஒரு மூலைல பசங்கள நேருக்கு நேர் உக்கார்ந்து தலைல தட்டி சொல்லி தர்ர வாத்தியாருங்க எல்லாரையும் பங்கமா ஒன்னும் தெரியாது னு ஒரு மாயை உருவாக்கிட்டாங்க. இதுல 10% கூட பெருசா உழைப்பு இல்லை. உழைப்பும் சுரண்டல் மட்டுமே
எங்கயோ ஒரு பக்கம் ஹோம் டியூஷன் எடுத்த என்னை 2017 வாக்குல இதுல இழுக்கப்பாத்து நானும் விழப்பாத்தேன். இதுல இந்த பைஜூ ஓனர் ரவீந்திரன் பேசுறத கேட்டா ஐஐடிலாம் ஈஸியா உள்ள நுழைய முடியும் போல நீட்லாம் மிட்டாய் சாப்பிடுறமாதிரி. கான்செப்ட் அப்ளிகேஷன் மட்டும்தான் எல்லாம்னு பேசுவார்.
இவங்க மார்கெட்டிங் ஸ்டாடர்ஜி எல்லாமே மிடில் ஆர் அப்பர் மிடில் கிளாஸ் மக்களுக்குத்தான். சுமாராக ஒரு மாட்யூல் வாங்கனுமா குறைஞ்சது 70000. இது வாங்கிட்டா டியூஷனே வேணாம். அடுத்த டாப்பர் உங்க பிள்ளைதான் னு வாய்லையும் காதுலையும் மாறி மாறி வீட்டுக்கே வந்து OTMP அடிப்பாங்க.
Read 12 tweets
13 Nov 20
16+ பதிவு... உடலளவில் 16 வயதை கடந்தவர்களை விட மனதளவில் 16 ஐ கடந்தவர்களுக்கான பதிவு. "ஆணுறை" இதனைப்பற்றி எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் விருப்பம். நன்கு படித்து முனைவர் பட்டம் வாங்கிய என் நண்பனுக்கு இன்று வரை ஆணுறை என்பது ஒரு தவறான பொருளாக தோன்றுகிறது.
காரணம் அவனிடம் கேட்டால் விலை மகளிரிடம் செல்லும் போது உபயோகிக்க வேண்டிய பொருள். ரியல் லைப்புக்கு ஒத்து வராது என்றான். ஏன் என்று கேட்டால் நல்லா இருக்காது பீல் கிடைக்காது இப்படி பல ரீசன். ஒன்று மட்டும் நிஜம் காண்டம் என்பதன் தேவையை பாலியல் நோயோடு தொடர்புபடுத்துவதைவிட
கருத்தடை சாதனம் என்று கூறுவதை விட சேஃப்டி மெட்டீரியல் என்றுதான் சொல்ல வேண்டும். ஆணுறை யின் வரலாறு மிகப்பெரியது. முதல் ஆணுறை செய்யப்பட்டது சைக்கிள் ட்யூபில். ஆனால் அதில் பெரிய அவுட்புட் கிடைக்காமல் ஐடியா தான் கிடைத்தது. சரிதான் கழுதைய மெல்லீசா செஞ்சு பார்ப்போம்னு
Read 12 tweets
13 Nov 20
ஏற்கனவே ஒரு இடுப்பு சர்ச்சையில் சிக்கியவன் என்ற கருத்தை ஓரமாக வைத்து இப்போது சொல்வதையாவது கருத்தாழத்துடன் படிக்கவும். சுந்தரி அபர்ணாவுக்காகவே இந்த பெயர் தேர்வு செய்திருப்பார்கள் போல.... கோணல் நெற்றி வகிடு பெரும்பாலும் எல்லோருக்கும் செட் ஆகாது பட் இவங்க முகம்
அதுக்காக அளவெடுத்து செஞ்ச மாதிரி இருக்கு. இதெல்லாம் விட மிக முக்கியமான ஒரு விஷயம் அவங்க முதுகு... முதுகு வேர்ப்பதை பார்த்தாலே முக்கால்வாசி ஆண்கள் காலி இவங்க முதுகு இன்னும் ஸ்பெஷல். முழுதாய் இறகு விறித்த கழுகைப்போன்ற அழகு
வர்ணிக்க எவ்வளவோ இருந்தும் எனக்கு தோன்றியது இது மட்டுமே. இப்படி ஒரு மனைவி அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் வீண். இப்படி ஒரு காதலி அமைய வேண்டும். சூர்யாவுக்கும் இவருக்கும் நடைபெறும் உரையாடல்களை விட அவர்களின் அணைப்பில் தனி அழகு. கைகளை ஆட்டி அவர் நடனம் ஆடும் போது
Read 7 tweets
17 Oct 20
2019 நீட் ரிசல்ட் வந்தப்ப பெருசா பொங்காத சங்கிங்க இந்த வருஷம் இவ்வளவு புளங்காகிதம் அடைறாங்க என்றால் அவர்களின் நோக்கம் நிறைவேறிவிட்டது. நம்பர் ஜாஸ்தி, பாஸ் % ஜாஸ்தி இதெல்லாம் விட தமிழ்நாடு நேஷனல் ஆவரேஜ் விட ஜாஸ்தி இதெல்லாம் சொல்றவங்க , சங்கிங்க கீழ்காணும் இழையை படிக்க வேண்டாம்‌
இந்த டேட்டா முழுவதும் அப்ளிகேஷன்ஸ் வெர்சஸ் கிளியர்டு முறையில் தயாரிக்கப்பட்டது. 2019ல் பாஸ் % 52.4, 2020ல் 48.2%. அப்பியர்டு ஸ்டூடன்ட் வைத்து பார்த்தால் இதில் மாற்றம் இருக்கும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 2019- 24.7%, 2020- 22.5%‌ இவங்க தான் மெயினா பிஜேபி
நீட் நல்லதுன்னு நொட்னாங்க உங்களுக்குதான் பர்ஸ்ட் கிரீன் பனானா வாய்ல. அதுக்கடுத்து பொதுப் பிரிவு 2019ல 19% கிளியர் இப்ப 14% கிளியர். உங்க ரெண்டு பேரையும் ஓட விட்டு , EWS 2019-0 2020- 3.5%(குறியீடு) நோவாமா தூக்கிட்டான் . அவன் 3.5% ஆல் ஓவர் ரிசல்ட். பட் கிளியரிங்
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!