பெண்களுக்கென்று தனியான ஒரு ரகசிய எழுத்து மொழி : ' 'நுஷு'. nüshu, a script that is only used by women in China
சீனாவில் பெண்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பதை ஆண்கள் மறுத்தார்கள். இந்த இழிநிலையை சீனத்துப் பெண்கள் புதுவழியில் மீறினார்கள்.
ஆண்களுக்குத் தெரியாத ரகசிய எழுத்து வரிவடிவம் ஒன்றைக் கண்டு பிடித்தார்கள். பெண்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் என்று தனியாக ஒரு எழுத்தை உருவாக்கினார்கள்.அந்த மொழிக்கு 'நுஷு' என்று பெயர் வைத்தார்கள்.
நுஷு என்றால் சீன மொழியில் 'பெண்ணின் எழுத்து' என்று அர்த்தம்.
இதை 700 வருடங்களாக எந்த ஆணாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.. 'நுஷு' எழுத்துக்கள் பெண்களால் உருவாக்கப்பட்டதால், மெலிதாகவும் நிறைய அழகோடும் கிறுக்கியது போல் இருக்கும். விசிறிகளிலும் தலையணை எம்பிராய்டரி வேலைப் பாடுகளிலும் இந்த எழுத்துக்களை பார்க்கலாம்.
பார்டர் போல் எழுத்துக்களை பயன்படுத்தி தகவலை சொல்லிவிடுவார்கள். பெண்கள் ஆண்களின் கண்ணில் படும்படியே ஓவியங்களில் இந்த எழுத்துக்களை பயன்படுத்தினார்கள்.
திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு போன பெண்கள் அங்கு தங்களுக்கு நேரும் கொடுமைகளையும் அரவணைப்பையும் தன் தாய்க்கு இந்த எழுத்தின் மூலம் ரகசியமாக தெரிவித்தார்கள். ஒவ்வொரு பெண்ணும் இந்த மொழியை தனது மகளுக்கும் பேத்திக்கும் கற்று தந்து வழிவழியாக காப்பாற்றி வந்தார்கள்.
பெண்ணுக்கு மட்டுமே இருக்கும் பல தனிப்பட்ட விஷயங்களை கூசாமல் பேசிய மொழி இது.
தற்போது நுஷு மொழி தெரிந்த ஒரு பெண் கூட உலகில் இல்லை என்பது வேதனையான ஒன்று. யாங் ஹுஅன்ய் என்ற 98 வயது பெண் 2004-ம் ஆண்டு இறந்த போது நுஷு மொழியும் இறந்தது. இவர்தான் நுஷு மொழி தெரிந்த கடைசி பெண்.
பெண்களின் வலிகளையும் காதலையும் திகட்ட திகட்ட சொன்ன ஒரு மொழி இன்று உயிர்ப்போடு இல்லை. நூற்றாண்டுகள் கடந்து ரகசியமாக வளர்ந்த மொழியை இப்படி சாக விட்டுவிட முடியுமா..!
அதற்காகத்தான் சீன அரசு நுஷு மொழியை பாரம்பரிய மொழியாக அறிவித்து அதற்காக ஒரு அருங்காட்சியகம் அமைத்துள்ளது.
பதிவு: இந்திரன் ராஜேந்திரன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ரசவாதி - சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன் ஒருவனைப் பற்றியது. அவன் ஸ்பெயினில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி எகிப்தியப் பாலைவனத்திற்குச் செல்லுகிறான். வழியில் அவன் ஒரு குறவர்குலப் பெண்ணையும்,
தன்னை ஓர் அரசர் என்று கூறிக் கொள்ளுகின்ற ஓர் ஆணையும், ஒரு ரசவாதியையும் சந்திக்கிறான். அவர்கள் அனைவரும், அவன் தேடிக் கொண்டிருக்கின்றன பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய பாதையை அவனுக்குக் காட்டுகின்றனர். அது என்ன பொக்கிஷம் என்பதோ,
வழியில் எதிர்ப்படும் முட்டுக்கட்டைகளை சான்டியாகோவால் சமாளிக்க முடியுமா என்பதோ அவர்கள் யாருக்கும் தெரியாது. ஆனால், லௌகிகப் பொருட்களைத் தேடுவதில் தொடங்குகின்ற ஒரு பயணம், தனக்குள் இருக்கும் பொக்கிஷத்தைக் கண்டறிகின்ற ஒன்றாக மாறுகிறது. வசீகரமான, உணர்வுகளைத் தட்டியெழுப்புகின்ற,
ஆண், பெண் உறவை பொறுத்தமட்டில் இங்குள்ள சிக்கல் என்ன?
கொஞ்சம் மற்ற நாடுகளின் பாணியை பார்ப்போம். குறிப்பாக மேலை!
Prom Night: பள்ளி பருவம் முடிகையில் இந்த விழா கொண்டாடப்படும். கிட்டத்தட்ட நம்ம ஊர் ஆண்டுவிழா போல். ஆனால் ஹை ஸ்கூல் மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்படும்.
இந்த நாளுக்கு மாணவ, மாணவிகள் ஜோடியாக வர வேண்டும். தன் மகளை prom nightக்கு அழைக்க ஒரு மாணவன் வருகிறான் எனில், பெற்றோர் வரவேற்பார்கள். ஒருவேளை யாரும் வரவில்லை எனில், கவலைப்படுவார்கள். தன் மகள் எதிர்பாலினத்தில் ஒருவனை கூட ஈர்க்கும் அளவுக்கு வளரவில்லையோ என. இதேதான் மாணவனுக்கும்.
அந்த விழா வெறுமனே ஜோடி நடனமும் சிறந்த ஆண், சிறந்த பெண், சிறந்த ஜோடி முதலியவற்றுக்கான விருதளிப்பும் கொண்ட விழா மட்டுமே. ஆனாலும் அடிப்படையில் சமூகரீதியாக இணைதேடலை அங்கீகரிக்கும் நிகழ்வு அது.
விழாவின்போது வரும் ஜோடி முன்னமே காதலர்களாக இருக்கலாம். அல்லது பின்னர் காதலர்கள் ஆகலாம்.
மைட்டோகாண்ட்ரியா என்பது நமது செல் க்குள் இருக்கும் சிறிய உறுப்புகள் ஆகும், இது செல் வேலையைச் செய்வதற்கான ஆற்றலை உருவாக்குகிறது. மைட்டோகாண்ட்ரியாவிற்கு சொந்த மரபணு மற்றும் அதன் செல்லுலார் டி.என்.ஏ மூலக்கூறு உள்ளது.
அவை விந்தணுக்களில் இல்லை.
அவை தாயால் மட்டுமே பரவுகின்றன. நீங்கள் ஆணோ பெண்ணோ உங்களது மைட்டோகாண்ட்ரியல் DNA உங்கள் தாயிடம் இருந்தே வருகிறது. உங்கள் தாய்க்கு அவரது தாயிடம் இருந்து கிடைக்கிறது.
இப்படியே பின்னோக்கி சென்றால் அனைத்து மனித சமூகத்திற்கும் இருக்கும் மைட்டோகாண்ட்ரியல் DNA ஒரு பெண்ணிடம் இருந்தே வந்து இருக்கிறது. இதை தான் ஈவ் மரபணு என்று அழைக்கப்படுகிறது. நாம் அனைவருமே ஒரே தாயில் இருந்து வந்தவர்கள் தான்.