பிரதமர் மோடி நாளை கொல்கத்தாவுக்கு பயணம்... நேதாஜியின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பு
பிரதமர் நரேந்திர மோடி நாளை கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் நடைபெறும் ‘பராக்ரம் திவாஸ்’ கொண்டாட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ படையில் பங்களிப்பு செய்த முக்கிய நபர்களை கவுரவிக்கும் பிரதமர் மோடி, கண்காட்சி ஒன்றையும் துவங்கி வைக்கிறார். இந்திய தேசிய ராணுவ படையை சேர்ந்த சுமார் 26 ஆயிரம் தியாகிகளின் நினைவாக நினைவிடம் எழுப்பவும் ஆலோசனை நடந்து வருகிறது.
*நடராஜரால் சிறப்பு பெற்ற ஐம்பெரும் சபைகள் உள்ள திருத்தலங்கள்.*
நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள், 'பஞ்ச சபைகள்' என்றும், 'ஐம்பெரும் சபைகள்' என்றும் அழைக்கப்படுகின்றன. மேற்கண்ட ஐந்து சபைகள் உள்ள திருத்தலங்களை சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
🙏🇮🇳1
நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள், 'பஞ்ச சபைகள்' என்றும், 'ஐம்பெரும் சபைகள்' என்றும் அழைக்கப்படுகின்றன. 🙏🇮🇳2
சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய இந்த ஐந்து திருத்தலங்களும், முறையே பொற்சபை, வெள்ளிசபை, ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட ஐந்து சபைகள் உள்ள திருத்தலங்களை சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
மதவியாபாரம் மூலமாக என்ன நடக்கும்,நடந்துள்ளது,நடக்கபோவது!
சாதாரனமாக குடும்ப சூழ்நிலை,வியாதிகள் குனபடுத்துறோம் என்று வருவார்கள்.பின்னர் அப்படியே ஏசப்பா மத பிரசங்கத்தை ஆரம்பித்து நம்மை அடிமையாக மாற்றுவார்கள்.
பின்பு,அவர்கள் எதற்க்காக நம்மிடம் வந்தார்களோ அதற்க்கு தீர்வு இருக்காது.அதற்க்குள் மூளைச்சலவை செய்து நம்மையும் மதவியாபார பிரதிநிதியாக காண்பித்து,பலரிடம் இதே விற்பனை தொடரும்.
கடைசிவரை தீர்வு இருக்காது.அடிமையாக மாறிய பின் அந்த கும்பலிடம் இருந்து வெளிவரமுடியாது.காரணம்! சுய கௌரவம்.
இதில் மாறிய குடும்பங்களை கணக்கு கொடுத்து பல வெளிநாட்டு நிதி,சமூகவிரோத செயல்களை ஆதரிப்பது,அரசுக்கு எதிராக,தேசத்துக்கு எதிராக மாறுவது.
மீண்டும் சில வழிமுறைகளில் திரும்பி வருவேன் - டிரம்ப்
மீண்டும் சில வழிமுறைகளில் திரும்பி வர உள்ளதாக அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விடைபெற்ற டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை புறக்கணித்து வெள்ளை மாளிகையில் இருந்து டொனால்ட் டிரம்ப் வெளியேறினார்.
தனது மனைவி மெலானியாவுடன் ஹெலிகாப்டரில் ஆண்ட்ருஸ் விமானப் படை தளத்தில் வந்திறங்கிய டிரம்ப், அங்கு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமானவற்றை தனது அரசு சாதித்துள்ளதாக தெரிவித்தார். புதிய அரசு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த போதிலும், இந்த நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்காது என்று டிரம்ப் கூறினார்.
அரசியல் சாசனத்தின்படி ஆதார் அட்டை செல்லத்தக்கது -உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
அரசியல் சாசனத்தின்படி ஆதார் அட்டை செல்லத்தக்கது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மறுஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது.
2018ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி வழங்கிய தீர்ப்பில் அரசு திட்டங்களின் சலுகைகளுக்கு கண்டிப்பாக ஆதார் கட்டாயம் எனவும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இந்த உத்தரவிற்கு எதிராகவும், தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட 27 வழக்குகளை அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.