*நடராஜரால் சிறப்பு பெற்ற ஐம்பெரும் சபைகள் உள்ள திருத்தலங்கள்.*
நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள், 'பஞ்ச சபைகள்' என்றும், 'ஐம்பெரும் சபைகள்' என்றும் அழைக்கப்படுகின்றன. மேற்கண்ட ஐந்து சபைகள் உள்ள திருத்தலங்களை சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
🙏🇮🇳1
நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள், 'பஞ்ச சபைகள்' என்றும், 'ஐம்பெரும் சபைகள்' என்றும் அழைக்கப்படுகின்றன. 🙏🇮🇳2
சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய இந்த ஐந்து திருத்தலங்களும், முறையே பொற்சபை, வெள்ளிசபை, ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட ஐந்து சபைகள் உள்ள திருத்தலங்களை சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
🙏🇮🇳3
வெள்ளி சபை : சிவபெருமானின் திருவிளையாடல்கள் பெரும்பாலும் நடைபெற்ற இடமாக மதுரை திருத்தலம் திகழ்கிறது. மீனாட்சி அம்மனின் அரசாட்சியும், அருளாட்சியும் நிறைந்திருக்கும் மதுரையில்தான் மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. 🙏🇮🇳4
இந்த ஆலயம்தான் நடராஜரின் திருநடனம் கண்ட 'வெள்ளி சபை'யாக திகழ்கிறது. இதனை 'வெள்ளியம்பலம்', 'வெள்ளி மன்றம்' என்றும் அழைப்பார்கள். 🙏🇮🇳5
இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் நடராஜப் பெருமான், தன் பக்தனான பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, வலது காலை ஊன்றி, இடது காலை தூக்கி நடனம் புரியும் நிலையில் காட்சி தருகிறார். 🙏🇮🇳6
இங்கு இறைவனின் நடனம் 'சந்தியா தாண்டவம்' என்று அழைக்கப்படுகிறது. பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களுக்கு, தில்லையில் காட்டியதுபோலவே இங்கும் இறைவன் தனது திருநடனத்தை காட்டி அருள் செய்தார்.
🙏🇮🇳7
சித்திர சபை : தென்காசி மாவட்டம் திருக்குற்றாலத்தில் அமைந்திருக்கிறது, குற்றாலநாதர் திருக்கோவில். இது அகத்திய முனிவர் வழிபாடு செய்த திருத்தலம் ஆகும். இங்கு சிவபெருமான் நடனம் புரிந்த இடம், 'சித்திர சபை' என்று வணங்கப்படுகிறது. 🙏🇮🇳8
இங்கு எமனை காலால் எட்டி உதைத்த ஈசன் தன் மனைவி பார்வதியுடன், மார்கண்டேயருக்கு அருளியபடி சித்திர வடிவில் காட்சியளிக்கிறார். இங்கு இறைவன் ஆடிய நடனத்திற்குப் பெயர் 'திரிபுர தாண்டவம்' என்பதாகும். 🙏🇮🇳9
இந்த தாண்டவத்தை கண்டுகளித்த பிரம்மதேவன், தானே இறைவனின் திருநடனத்தை ஓவிய வடிவில் வடித்ததாக கருதப்படுகிறது. அந்த இடமே சித்திர சபை. இதனை 'சித்திர அம்பலம்', 'சித்திர மன்றம்' என்றும் அழைப்பார்கள்.
🙏🇮🇳10
பொற்சபை : கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ளது, திருமூலட்டநாதர் ஆலயம். இப்படிச் சொன்னால் பலருக்கும் தெரியாதுதான். சிதம்பரம் நடராஜர் கோவில் என்று சொன்னால்தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். 🙏🇮🇳11
இங்கு அருள்பாலிக்கும் ஆடல் அரசனான நடராஜர் வீற்றிருக்கும் இடமே, 'பொற்சபை' என்று அழைக்கப்படுகிறது. இதனை 'பொன்னம்பலம்', 'கனக சபை', 'பொன் மன்றம்' என்ற பெயர்களாலும் அழைப்பார்கள். 🙏🇮🇳12
இறைவன் தனது திருநடனத்தை, பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களுக்கு காட்டி அருளிய தலம் இதுவாகும். இந்த தலத்தில் நடராஜர், தனது இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி நடனம் ஆடுகிறார். இத்தல இறைவன் ஆடும் நடனம் 'ஆனந்தத் தாண்டவம்' ஆகும்.
🙏🇮🇳13
தாமிர சபை : திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் முக்கியமான திருத்தலங்களில் ஒன்று, காந்திமதி உடனாய நெல்லையப்பர் திருக்கோவில். இங்கு நடராஜர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கும் இடத்திற்கு 'தாமிர சபை' என்று பெயர். 🙏🇮🇳14
இதற்கு 'தாமிர அம்பலம்', 'தாமிர மன்றம்' என்ற பெயர்களும் உண்டு. இந்த சபையில், இறைவன் தன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி திருநடனம் புரிகின்றார். இந்த நடனத்திற்கு 'திருத் தாண்டவம்' என்று பெயர்.
🙏🇮🇳15
ரத்தின சபை : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ளது, வடாரண்யேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் காளியுடன் போட்டி நடனம் ஆடிய சிவபெருமான், முடிவில் தன்னுடைய ஒரு காலை தலைக்குமேல் தூக்கி ஆடி, காளிதேவியை வெற்றிகொண்டார் என்று தல புராணம் சொல்கிறது. 🙏🇮🇳16
இந்த ஆலயத்தின் இறைவன் - வடாரண்யேஸ்வரர், இறைவி - வண்டார்குழலி அம்மை. இங்கு இறைவன் நடனம் ஆடிய இடம் 'ரத்தின சபை' எனப்படுகிறது. 'ரத்தின அம்பலம்', 'மணி மன்றம்' என்ற பெயர்களும் இதற்கு உண்டு. 🙏🇮🇳17
இங்குள்ள இறைவன் எட்டு கரங்களுடன், வலது காலை தரையின் ஊன்றி இடது காலால் காதணியை மாட்டும் தோரணையில் காட்சியளிக்கின்றார். 🙏🇮🇳18
காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து சென்று, இங்குள்ள நடராஜரின் திருவடியில் அமர்ந்து, அனுதினமும் அவரது திருநடனத்தைக் காணும் பேறு பெற்றார். இங்கு இறைவன் ஆடும் நடனம் 'ஊர்த்துவ தாண்டவம்' என்று போற்றப்படுகிறது.
வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பிரதமர் மோடி நாளை கொல்கத்தாவுக்கு பயணம்... நேதாஜியின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பு
பிரதமர் நரேந்திர மோடி நாளை கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் நடைபெறும் ‘பராக்ரம் திவாஸ்’ கொண்டாட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ படையில் பங்களிப்பு செய்த முக்கிய நபர்களை கவுரவிக்கும் பிரதமர் மோடி, கண்காட்சி ஒன்றையும் துவங்கி வைக்கிறார். இந்திய தேசிய ராணுவ படையை சேர்ந்த சுமார் 26 ஆயிரம் தியாகிகளின் நினைவாக நினைவிடம் எழுப்பவும் ஆலோசனை நடந்து வருகிறது.
மதவியாபாரம் மூலமாக என்ன நடக்கும்,நடந்துள்ளது,நடக்கபோவது!
சாதாரனமாக குடும்ப சூழ்நிலை,வியாதிகள் குனபடுத்துறோம் என்று வருவார்கள்.பின்னர் அப்படியே ஏசப்பா மத பிரசங்கத்தை ஆரம்பித்து நம்மை அடிமையாக மாற்றுவார்கள்.
பின்பு,அவர்கள் எதற்க்காக நம்மிடம் வந்தார்களோ அதற்க்கு தீர்வு இருக்காது.அதற்க்குள் மூளைச்சலவை செய்து நம்மையும் மதவியாபார பிரதிநிதியாக காண்பித்து,பலரிடம் இதே விற்பனை தொடரும்.
கடைசிவரை தீர்வு இருக்காது.அடிமையாக மாறிய பின் அந்த கும்பலிடம் இருந்து வெளிவரமுடியாது.காரணம்! சுய கௌரவம்.
இதில் மாறிய குடும்பங்களை கணக்கு கொடுத்து பல வெளிநாட்டு நிதி,சமூகவிரோத செயல்களை ஆதரிப்பது,அரசுக்கு எதிராக,தேசத்துக்கு எதிராக மாறுவது.
மீண்டும் சில வழிமுறைகளில் திரும்பி வருவேன் - டிரம்ப்
மீண்டும் சில வழிமுறைகளில் திரும்பி வர உள்ளதாக அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விடைபெற்ற டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை புறக்கணித்து வெள்ளை மாளிகையில் இருந்து டொனால்ட் டிரம்ப் வெளியேறினார்.
தனது மனைவி மெலானியாவுடன் ஹெலிகாப்டரில் ஆண்ட்ருஸ் விமானப் படை தளத்தில் வந்திறங்கிய டிரம்ப், அங்கு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமானவற்றை தனது அரசு சாதித்துள்ளதாக தெரிவித்தார். புதிய அரசு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த போதிலும், இந்த நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்காது என்று டிரம்ப் கூறினார்.
அரசியல் சாசனத்தின்படி ஆதார் அட்டை செல்லத்தக்கது -உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
அரசியல் சாசனத்தின்படி ஆதார் அட்டை செல்லத்தக்கது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மறுஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது.
2018ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி வழங்கிய தீர்ப்பில் அரசு திட்டங்களின் சலுகைகளுக்கு கண்டிப்பாக ஆதார் கட்டாயம் எனவும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இந்த உத்தரவிற்கு எதிராகவும், தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட 27 வழக்குகளை அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.