ஆர் அறிவார்
எங்கள் அண்ணல் பெருமையை
ஆர் அறிவார் இவர் அகலமும் நீளமும்
பேர் அறியாத பெருஞ் சுடர் ஒன்று அதன்
வேர் அறியாமல் விளம்பு கின்றேனே…
இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது.
🙏🇮🇳3
ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.
🙏🇮🇳4
சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும்.
உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.
இங்கு மூன்று மூர்த்தங்கள்
மங்களேச்சுவரர், மங்களேசுவரி, ஆடல்வல்லான், மூர்த்தியும் இங்கே ( நடராசர்) மரகதப் பச்சை தீர்த்தமும் இங்கே பச்சை
விருட்சமும் இங்கே பச்சை. என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்.
கோவிலின் தொன்மை நம்மை வியக்க வைக்கிறது….
🙏🇮🇳6
மகா பாரதப் போர் 5100 ஆண்டுகளுக்கு
முன்பு நிகழ்ந்தது. (கிமு 3100) அப்போதுதான் பரீஷீத்து மகராசன் காலத்தில் கலிகாலம் பிறந்தது. அந்தக் காலத்தில் இந்தக் கோவில் இருந்திருக்கிறது.
🙏🇮🇳7
அதற்கும் முந்தியது இராமாயணக் காலம் இலங்கேசுவரன் இராவணன் இங்கே வந்து வணங்கிச் சென்றிருக்கிறான்.. இங்குள்ள மங்களேச்சுவரர் மண்டோதரிக்கு அருளியவர்.
🙏🇮🇳8
உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத் தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.
பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள்
🙏🇮🇳9
மேலும் ராவணன்– மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.
இங்குள்ள அர்ச்சகர் கூற்றுப் படி
இராவணனுக்கும், மண்டோதரிக்கும் நடந்த திருமணமே மங்களேச்சுவரர் சன்னதியில் தான் நடந்ததாம். மங்களேச்சுவரரே அதை முன்னின்று நடத்தியதாகவும் நம்பப் படுகிறது.
🙏🇮🇳10
இராவணனைப் போல சிவ பக்தனைப் பார்க்கவே முடியாது. இந்த ஊர் மங்களேசுவர ராகிய சிவ பெருமான் இராவணன் கையில் பால சிவனாகத் தவழ்ந்த கதையும் ஒன்று உண்டு. ஆக அவன் காலத்திலும் இந்தக் கோவில் இருந்திருக்கிறது.
🙏🇮🇳11
வலை வீசி விளையாண்ட படலம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா என்று கேட்பதை விட ஏ.பி.நாகராசனின் திருவிளையாடல் சினிமாப் படம் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் உங்களுக்கு நன்றாக விளங்கும். அதில் வரும் கடைசிக் கதைதான் இந்த வலைவீசி விளையாண்ட படலம்.
🙏🇮🇳12
அது நிகழ்ந்த இடம் வேறெங்கும் இல்லை…
இங்கே இங்கே இப்போது கோவில் வாசல் உள்ள இடத்தில்தான கடல் இருந்தது. இப்போது அதே கடல் பின் வாங்கிப் பின்வாங்கி ஏர்வாடிப் பக்கம் போய்விட்டது இங்குதான் சிவபெருமான் வலைவாணனாக உருவெடுத்து வந்து சுறாவை அடக்கினார்.
🙏🇮🇳13
அவர் மணந்த கொண்ட மீனவப் பெண்தான் மங்களேசுவரி… இப்போது நமக்கு அருள் பாலிக்கும் அம்மன். அவளுக்கு இறைவன் ஆனந்த தாண்டவத்தை அறையில் ஆடிக் காட்டினார். பிரணவ மந்திரத்தின் பெருளை உபதேசமும் செய்தார்.
🙏🇮🇳14
உத்திரம் என்பது உபதேசம். கோசம் என்பது இரகசியம் அதாவது பிரணவ மந்திரம். மங்கைக்கு உபதேசித்ததால் இந்த இடம் உத்தர கோசமங்கை ஆனது.
இதுதான் கோவில் உருவான வரலாறு.
🙏🇮🇳15
கோவில் அமைப்பு
முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.
🙏🇮🇳16
ஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது. மேலும் பொதுவாக எந்தச் சிவாலயங்களிலும் பூக்களைச் சார்த்தி வழிபடும் போது சாபம் பெற்ற ஒரு பூவை மட்டும் ஒதுக்கி விடுவார்கள்…
🙏🇮🇳17
அதுதான் தாழம் பூ.
நான் முகன் முடி கண்டதாய் பொய் சொன்ன அதே பூ, நான் முகனுக்கு வழிபாடு அற்றுப் போனது போல் சிவலிங்கத்தின் மேல் சாத்தப்படும் உரிமையை இழந்த அதே பூ இங்கு மட்டும் தாழம் பூ சாத்தும் வழக்கம் அற்றுப் போகமல் இன்றும் தொடர்கிறது,
🙏🇮🇳18
பொய் உரைத்தோர்களையும் மங்களேச்சுவரர் மன்னிப்பார் என்பதைக் காட்ட மட்டும் அல்ல,
பிரமனும் பெருமாளும் அடி முடி தேடியது எந்த யுகம் அதற்கும் முன்னே இந்தக் கோவில் இருந்திருக்கிறது என அதன் தொன்மையை காட்டவும்தான். இடதுபுறம் உள்ள கோபுரம். மொட்டையாக காணப்படுகிறது.
🙏🇮🇳19
நடராசருக்கு வருடம் ஒரு முறை மட்டுமே இங்கு அபிஷேகம் செய்யப்படும்.அன்று மட்டும் அவரைக்களைந்த திருக் கோலத்தில் தரிசிக்கலாம். அதுதான் மார்கழித் திங்கள் அன்று வரும் திருவாதிரை மீதி நாட்களில் பூரா அவர் சந்தனக் காப்பிட்ட கோலத்தில் தான் இருப்பார்.
🙏🇮🇳20
மார்கழி மாத திருவாதிரை க்கு முதல் நாள் பழைய சந்தனம் களையப் படும். 32 வகை அபிஷேகங்கள் அதி அமர்க்களமாக நடக்கும். அன்று இரவே புதிய சந்தனம் சாத்தப் படும்.
🙏🇮🇳21
ஆண்டு முழுக்க ஆடல் வல்லான் திரு மேனியில் அப்பி இருந்த சந்தனம். களையப் பட்ட பின் அதைப் பெற பக்தர்களிடம் ஆவலும் போட்டாப் போட்டியும் அதிகம். எங்கும் போலவே இங்கும் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்…! இந்தச் சந்தனம் மருத்துவக் குணம் கொண்டது.
🙏🇮🇳22
அனைத்து நோய்களையும் தீர்க்க்க வல்லது என பக்தர்கள் நம்புகின்றார்கள்.
பொதுவாக ஆலயங்களுக்குச் சென்றால் ஒரு நாள் ஒருமுறை சென்று வணங்கிவிட்டு வந்து விடுவோம்.
🙏🇮🇳23
ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையும் கோவிலாக உத்திரகோசமங்கை திருத்தலம் உள்ளது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.
🙏🇮🇳24
இத்தலத்திற்கு எப்படி செல்வது....
மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, (இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே) வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று,
🙏🇮🇳25
உத்தரகோசமங்கை இருப்புப்பாதை சந்திக் கடவைத் (Railway level crossing) தாண்டி, 7-கி.மீ. சென்றால் இத்தலத்தையடையலாம். சாலை பிரியுமிடத்தில் கோயில் பெயர்ப் பலகையுள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.
*ஓம் நமசிவாய.!!!*
வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பிரதமர் மோடி நாளை கொல்கத்தாவுக்கு பயணம்... நேதாஜியின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பு
பிரதமர் நரேந்திர மோடி நாளை கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் நடைபெறும் ‘பராக்ரம் திவாஸ்’ கொண்டாட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ படையில் பங்களிப்பு செய்த முக்கிய நபர்களை கவுரவிக்கும் பிரதமர் மோடி, கண்காட்சி ஒன்றையும் துவங்கி வைக்கிறார். இந்திய தேசிய ராணுவ படையை சேர்ந்த சுமார் 26 ஆயிரம் தியாகிகளின் நினைவாக நினைவிடம் எழுப்பவும் ஆலோசனை நடந்து வருகிறது.
*நடராஜரால் சிறப்பு பெற்ற ஐம்பெரும் சபைகள் உள்ள திருத்தலங்கள்.*
நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள், 'பஞ்ச சபைகள்' என்றும், 'ஐம்பெரும் சபைகள்' என்றும் அழைக்கப்படுகின்றன. மேற்கண்ட ஐந்து சபைகள் உள்ள திருத்தலங்களை சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
🙏🇮🇳1
நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள், 'பஞ்ச சபைகள்' என்றும், 'ஐம்பெரும் சபைகள்' என்றும் அழைக்கப்படுகின்றன. 🙏🇮🇳2
சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய இந்த ஐந்து திருத்தலங்களும், முறையே பொற்சபை, வெள்ளிசபை, ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட ஐந்து சபைகள் உள்ள திருத்தலங்களை சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
மதவியாபாரம் மூலமாக என்ன நடக்கும்,நடந்துள்ளது,நடக்கபோவது!
சாதாரனமாக குடும்ப சூழ்நிலை,வியாதிகள் குனபடுத்துறோம் என்று வருவார்கள்.பின்னர் அப்படியே ஏசப்பா மத பிரசங்கத்தை ஆரம்பித்து நம்மை அடிமையாக மாற்றுவார்கள்.
பின்பு,அவர்கள் எதற்க்காக நம்மிடம் வந்தார்களோ அதற்க்கு தீர்வு இருக்காது.அதற்க்குள் மூளைச்சலவை செய்து நம்மையும் மதவியாபார பிரதிநிதியாக காண்பித்து,பலரிடம் இதே விற்பனை தொடரும்.
கடைசிவரை தீர்வு இருக்காது.அடிமையாக மாறிய பின் அந்த கும்பலிடம் இருந்து வெளிவரமுடியாது.காரணம்! சுய கௌரவம்.
இதில் மாறிய குடும்பங்களை கணக்கு கொடுத்து பல வெளிநாட்டு நிதி,சமூகவிரோத செயல்களை ஆதரிப்பது,அரசுக்கு எதிராக,தேசத்துக்கு எதிராக மாறுவது.
மீண்டும் சில வழிமுறைகளில் திரும்பி வருவேன் - டிரம்ப்
மீண்டும் சில வழிமுறைகளில் திரும்பி வர உள்ளதாக அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விடைபெற்ற டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை புறக்கணித்து வெள்ளை மாளிகையில் இருந்து டொனால்ட் டிரம்ப் வெளியேறினார்.
தனது மனைவி மெலானியாவுடன் ஹெலிகாப்டரில் ஆண்ட்ருஸ் விமானப் படை தளத்தில் வந்திறங்கிய டிரம்ப், அங்கு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமானவற்றை தனது அரசு சாதித்துள்ளதாக தெரிவித்தார். புதிய அரசு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த போதிலும், இந்த நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்காது என்று டிரம்ப் கூறினார்.
அரசியல் சாசனத்தின்படி ஆதார் அட்டை செல்லத்தக்கது -உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
அரசியல் சாசனத்தின்படி ஆதார் அட்டை செல்லத்தக்கது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மறுஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது.
2018ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி வழங்கிய தீர்ப்பில் அரசு திட்டங்களின் சலுகைகளுக்கு கண்டிப்பாக ஆதார் கட்டாயம் எனவும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இந்த உத்தரவிற்கு எதிராகவும், தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட 27 வழக்குகளை அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.