001பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக
இருந்த போது, சென்னை தாம்பரம்
குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும்
என்று ஜீவா போராடினார்.
அப்போது, தாம்பரத்தில் ஓர்
ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.
போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது.
002அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர்
ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச்
செல்வது தான் சரியாக இருக்கும்
என்று நினைத்து,
காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச்
சொன்னார்.
ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா.
003திடீரென தன்னுடைய
வீட்டுக்கு காமராஜர்
வந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ்"
என்று கேட்டார்" ஜீவா.
"என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?"
என்று கேட்டு ஆதங்கப்பட்டார் காமராஜர்.
உடனே ஜீவா,
004"நான் மட்டுமா..?
இங்கே இருக்கிற
எல்லோரையும் போலத்தான் நானும்
இருக்கேன், என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.
காமராஜரை,
உட்கார வைக்க,
ஒரு நாற்காலி கூட
இல்லாததால், இருவரும், நின்று கொண்டே பேசினார்கள்.
"காமராஜ்,
நீ முதலமைச்சர்,
நீ திறந்தா போதும்"
என்று ஜீவா மறுக்க,
"அட... ஆரம்பிச்ச
நீ இல்லாம,
நான் எப்படிப் போக,
கிளம்பு போகலாம்" என்று அழைத்தார், காமராஜர்,
006"அப்படின்னா,
நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் "
என்று அனுப்பி வைத்தார்.
"கண்டிப்பாக வரணும்"
என்றார் காமராஜர்.
விழாவுக்கு, அரை மணிக்கு மேல்
தாமதமாகவே வந்தார் ஜீவா.
"என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? "
என்று காமராஜர் உரிமையுடன்
கடிந்து கொண்டார்.
007உடனே ஜீவா, "நல்ல
வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு.
அதை உடனே துவைச்சு,
காய வைச்சு,
கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம்.
தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.
உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.
விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால்
ஜீவாவின் வறுமை, காமராஜரை மிகவும் வாட்டியது.
008அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.
"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக
மாட்டான்.
காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான்.
ஆனா,
அவனைப் போல தியாகிகள் எல்லாம்
இத்தனை கஷ்டப் படக்கூடாது என்ன
செய்யலாம்"....? என்றார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர்,
009"ஜீவாவின்
மனைவி படித்தவர். அதனால்
அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம்
நிம்மதியாக இருக்கும்" என்றார்.
உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை.
ஆனா,
நான் கொடுத்தா, அவன்
பொண்டாட்டியை வேலை செய்ய விட
மாட்டான்.
அதனால நீங்களா ஜீவா மனைவியிடம்
பேசி,
10"வீட்டுக்குப் பக்கத்துல
பள்ளிக்கூடத்துல
ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க.
உடனே,
நான் வேலை
போட்டுத் தர்றேன்...
ஆனா,
இந்த விஷயம்
வேறு யாருக்கும்
தெரியக்கூடாது
அவன் முரடன்,
உடனே வேலையை
விட வைச்சுடுவான்
என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
11அதன்படியே
ஜீவாவுக்குத்
தெரியாமல்,
அவருடைய
மனைவிக்கு
அரசு வேலை
கொடுத்தார்
காமராஜர்.
அதற்குப்
பின்னரே
ஜீவாவின்
வாழ்க்கையில்
வறுமை ஒழிந்தது.
001தீராத பல் வலியை நொடியில் போக்க வேண்டுமா? இதோ அற்புதமான 10 இயற்கை மருத்துவ முறைகள்!
நம்மில் சிலருக்கும் திடீரென அடிக்கடி பல்வலி வருவதுண்டு
நம் பற்களின் இரண்டு பாதுகாக்கும் கவசங்கள் இனாமல், டென்டின் உள்ளது. இரண்டையும் தாண்டி சொத்தை ஆழமாக பரவும் போது வலி ஏற்படுகின்றது.
002இதனை எளிதில் சரி செய்ய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை பின்பற்றினால் போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.
• மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் விளக்கி வர சொத்தைப் பல், பல்வலி, ஈறு வலி, வாய் துர்நாற்றம் போகும்.
003• ஈறுகளில் வீக்கம் மற்றும் வலிக்கு பப்பாளிப் பாலை வீக்கத்தில் தடவி, இலேசாகத் தேய்க்க உள்ளிருந்த கெட்டநீர் வெளியேறி வலியும் வீக்கமும் போகும்.
• பல் வலி உள்ள போது பல் துலக்கியபின், ஒரு நெல்லிக்காயை நன்கு மென்று தின்னவும்.
001பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒருவன் முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான்.
திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டான். அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான்.
002அப்படி நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்து போனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான்.
எல்லோரும் திகைத்து போய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
003திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்த தொடங்கினான்.
முதலைகள் அவனை விரட்ட தொடங்கின.
அவன் உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்து விட்டான்.
அந்த பணக்காரனும் பேசியபடியே பத்து லட்சம் ரூபாயை உடனே தந்து விட்டான்.
001ஆப்பிரிக்காவில் ஒரு கர்வம் மிகுந்த அரசன் இருந்தான்.ஒரு நாள் அரசவையில் அங்கிருந்த அனைவரையும் பார்த்து,''நான் தான் உலகின் அதிபதி.எல்லா மனிதரும் எனக்கு வேலைக்காரகளே,''என்றான்.'நீங்கள் சொல்வது தவறு.அனைவரும் ஒருவருக்கொருவர் வேலைக்காரர்களே,'
002என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.அனைவருக்கும் அதிர்ச்சி.அரசன் கோபத்தில் வெடித்தான்,''என்னையும் வேலைக்காரன் என்று சொன்னது யார்?''கம்பை ஊன்றியபடி ஒரு வயதான மனிதன் முன்னால் வந்து,'நான்தான் சொன்னேன்.'என்றான்.நீயார் என்று அரசன் கேட்க,முதியவர் சொன்னார்,
003'நான் ஒரு கிராமத்திலிருந்து வந்திருக்கிறேன்.எங்கள் கிராமத்தில் தண்ணீர் வசதி இல்லை.ஒரு கிணறு தோண்ட வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்ளவே இங்குவந்தேன்,'உடனே அரசன் ஏளனத்துடன் சொன்னான்,''அப்படியானால்,நீயே பிச்சை கேட்க வந்திருக்கிறாய்.
001இளைஞன் ஒருவன் நிறைய கோழி முட்டைகளை ஒரு மூன்று சக்கர வண்டியில் வைத்து மக்கள் கூட்டம் மிகுதியாக உள்ள கடைத்தெரு வழியே சென்று கொண்டிருந்தான்.ஒரு திருப்பத்தில் எதிர் பாராதவிதமாக வண்டி கவிழ்ந்து விட்டது.முட்டைகள் அனைத்தும் உடைந்து சிதறி விட்டன.இளைஞன் அழ ஆரம்பித்து விட்டான்,
002''ஐயோ,என் முதலாளிக்கு என்ன பதில் சொல்வேன்? இவ்வளவு முட்டைக்குரிய காசுக்கு நான் என்ன செய்வேன்?''அங்கே பெரும் கூட்டம் கூடி விட்டது.எல்லோருக்கும் அழுது கொண்டிருந்த இளைஞனைப் பார்த்து பரிதாபம் ஏற்பட்டது.அப்போது அங்கே வந்த
003ஒரு பெரியவர்,''தம்பி,ஏன் அழுகிறாய்?உடைந்த முட்டைகளுக்கான காசை உன்னால் கொடுக்க முடியாது என்பது தானே உன் வருத்தம்?''என்று கேட்க இளைஞனும் ஆம் என்றான்.உடனே அப்பெரியவர் தன துண்டை எடுத்தார்.''இந்தக் கூட்டத்தில் இரக்க குணமுடையவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்