001தீராத பல் வலியை நொடியில் போக்க வேண்டுமா? இதோ அற்புதமான 10 இயற்கை மருத்துவ முறைகள்!
நம்மில் சிலருக்கும் திடீரென அடிக்கடி பல்வலி வருவதுண்டு
நம் பற்களின் இரண்டு பாதுகாக்கும் கவசங்கள் இனாமல், டென்டின் உள்ளது. இரண்டையும் தாண்டி சொத்தை ஆழமாக பரவும் போது வலி ஏற்படுகின்றது.
002இதனை எளிதில் சரி செய்ய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை பின்பற்றினால் போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.
• மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் விளக்கி வர சொத்தைப் பல், பல்வலி, ஈறு வலி, வாய் துர்நாற்றம் போகும்.
003• ஈறுகளில் வீக்கம் மற்றும் வலிக்கு பப்பாளிப் பாலை வீக்கத்தில் தடவி, இலேசாகத் தேய்க்க உள்ளிருந்த கெட்டநீர் வெளியேறி வலியும் வீக்கமும் போகும்.
• பல் வலி உள்ள போது பல் துலக்கியபின், ஒரு நெல்லிக்காயை நன்கு மென்று தின்னவும்.
004• பிரம்ம தண்டு இலையை எரித்து சாம்பலாக்கி பல் தேய்க்க, பல் ஆட்டம், பல் சொத்தை, பல் கறை, பல்லில் இரத்தம் வடிதல் எல்லாமே தீரும்.
• ஆலமரப் பாலை பற்கள் மீது தடவினால் பல் ஆட்டம் நிற்கும்.ஆயில் புல்லிங் தினம் செய்ய
005பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா தொற்றிலிருந்து விடுபடலாம்.
• கோவைப்பழம் அடிக்கடி சாப்பிட பல் பலப்படும். நந்தியாவட்டை வேரை வாயிலிட்டு மென்று துப்பவும்.ஒமத்தை நீர்விட்டு அரைத்து களி போல் கிளறி இளஞ்சூட்டில் பற்றுப்போடவும்.
006• ஒரு பல் பூண்டை நசுக்கி, வலி உள்ள இடத்தில் வைக்கலாம். இதுபோல் கிராம்பை நசுக்கியும் வைக்கலாம்.)
• வாகை மரப் பட்டையை எரித்துப் பொடித்து பல் துலக்க ஈறு நோய் மற்றும் பல் வலி குணமாகும்.கருவேலம் பட்டைப் பொடியால் பல் துலக்கவும்.
007• மாசிக்காயைத் தூளாக்கி, நீரில் கொதிக்க வைத்து கொப்பளிக்க ஈறு பலமடையும்.அசோக மரப் பட்டைப் பொடியுடன் உப்பு சேர்த்து விளக்கவும்.
• கடுகை பொடி செய்து வலிக்கும் இடத்தில் பற்று போடவும். வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவவும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
001பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக
இருந்த போது, சென்னை தாம்பரம்
குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும்
என்று ஜீவா போராடினார்.
அப்போது, தாம்பரத்தில் ஓர்
ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.
போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது.
002அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர்
ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச்
செல்வது தான் சரியாக இருக்கும்
என்று நினைத்து,
காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச்
சொன்னார்.
ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா.
003திடீரென தன்னுடைய
வீட்டுக்கு காமராஜர்
வந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ்"
என்று கேட்டார்" ஜீவா.
"என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?"
என்று கேட்டு ஆதங்கப்பட்டார் காமராஜர்.
உடனே ஜீவா,
001பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒருவன் முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான்.
திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டான். அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான்.
002அப்படி நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்து போனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான்.
எல்லோரும் திகைத்து போய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
003திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்த தொடங்கினான்.
முதலைகள் அவனை விரட்ட தொடங்கின.
அவன் உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்து விட்டான்.
அந்த பணக்காரனும் பேசியபடியே பத்து லட்சம் ரூபாயை உடனே தந்து விட்டான்.
001ஆப்பிரிக்காவில் ஒரு கர்வம் மிகுந்த அரசன் இருந்தான்.ஒரு நாள் அரசவையில் அங்கிருந்த அனைவரையும் பார்த்து,''நான் தான் உலகின் அதிபதி.எல்லா மனிதரும் எனக்கு வேலைக்காரகளே,''என்றான்.'நீங்கள் சொல்வது தவறு.அனைவரும் ஒருவருக்கொருவர் வேலைக்காரர்களே,'
002என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.அனைவருக்கும் அதிர்ச்சி.அரசன் கோபத்தில் வெடித்தான்,''என்னையும் வேலைக்காரன் என்று சொன்னது யார்?''கம்பை ஊன்றியபடி ஒரு வயதான மனிதன் முன்னால் வந்து,'நான்தான் சொன்னேன்.'என்றான்.நீயார் என்று அரசன் கேட்க,முதியவர் சொன்னார்,
003'நான் ஒரு கிராமத்திலிருந்து வந்திருக்கிறேன்.எங்கள் கிராமத்தில் தண்ணீர் வசதி இல்லை.ஒரு கிணறு தோண்ட வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்ளவே இங்குவந்தேன்,'உடனே அரசன் ஏளனத்துடன் சொன்னான்,''அப்படியானால்,நீயே பிச்சை கேட்க வந்திருக்கிறாய்.
001இளைஞன் ஒருவன் நிறைய கோழி முட்டைகளை ஒரு மூன்று சக்கர வண்டியில் வைத்து மக்கள் கூட்டம் மிகுதியாக உள்ள கடைத்தெரு வழியே சென்று கொண்டிருந்தான்.ஒரு திருப்பத்தில் எதிர் பாராதவிதமாக வண்டி கவிழ்ந்து விட்டது.முட்டைகள் அனைத்தும் உடைந்து சிதறி விட்டன.இளைஞன் அழ ஆரம்பித்து விட்டான்,
002''ஐயோ,என் முதலாளிக்கு என்ன பதில் சொல்வேன்? இவ்வளவு முட்டைக்குரிய காசுக்கு நான் என்ன செய்வேன்?''அங்கே பெரும் கூட்டம் கூடி விட்டது.எல்லோருக்கும் அழுது கொண்டிருந்த இளைஞனைப் பார்த்து பரிதாபம் ஏற்பட்டது.அப்போது அங்கே வந்த
003ஒரு பெரியவர்,''தம்பி,ஏன் அழுகிறாய்?உடைந்த முட்டைகளுக்கான காசை உன்னால் கொடுக்க முடியாது என்பது தானே உன் வருத்தம்?''என்று கேட்க இளைஞனும் ஆம் என்றான்.உடனே அப்பெரியவர் தன துண்டை எடுத்தார்.''இந்தக் கூட்டத்தில் இரக்க குணமுடையவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்