'அச்சு மையோட Nitrous Oxide (Laughing gas) ஐயும் கலந்து அச்சடிச்சு, ஒவ்வொரு பக்கத்தையும் சாராயத்தில் ஊறவச்சு, காயவச்சு ஒட்டி புத்தகமாக மாத்தி கொடுத்திருக்கிறார்' என்ற விமர்சனம்தான் பிரபு தர்மராஜ் எழுதிய "ஆதிக்குடிமக்களும் ஆல்கஹாலும்" என்ற சிறுகதை தொகுப்பினை வாசிக்க தூண்டியது.
புத்தகத்தில் பூனை கிடக்குதா என்று வாசிக்க ஆரம்பித்தால் பெரிய சாராயப்பானையே கிடக்கு.
அல்கஹாலிசம் நிறைந்த பன்னிரண்டு சிறுகதைகள். ஒவொன்றிலும் மதுப்பிரியர்கள்/ பான முற்றோர்/ மதுமக்களினதும் அட்டகாசங்கள். (குடிகாரர்களை எங்கும் இல்லாத வகையில் மிகவும் கண்ணியமாக குறிப்பிடுகிறார்)
முதல் கதையான "புடுக்குநாதபுரத்து புண்ணியாளன்கள்" தலைப்பிலிருந்து சிரிக்க ஆரம்பித்து கடைசி பக்கம் வரை சிரித்துக்கொண்டே இருந்தேன். அம்மா பார்த்துவிட்டு தம்பி புத்தகம் படிக்கேக்க சிரிச்சுக்கொண்டே இருக்கிறான் யாரையும் லவ் பண்ணுறானோ என்று கேளுங்கப்பா என்று அப்பாவிடம் சொன்னது தனிக்கதை.
கல்கியில் வெளியான 'கல்லுக்குள் ஈரம்' தொடர் கதையின் பைண்டிங்கின் pdf கிடைத்தது. வாசிப்பதற்க்கு தெளிவில்லாமல் இருந்தது. இருந்தாலும் 1967 காலகட்டத்தில் வெளியான தொடரில் இடையிடையே இருந்த விளம்பரங்கள் ரொம்ப ஈர்த்திச்சு. எல்லாத்தையும் snip பண்ணினேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.
"ஆன்ட்.... ஆன்ட்ரியா கண்ணை கசக்கிட்டு அழுறதை முதல்ல நிறுத்து, நாளைக்கு பொண்ணு பார்க்க தானே வாறாங்க, கையோட கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போக இல்லையே. 1/6
நான் நம்ம காதலை பத்தி எங்க அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டு, உங்க வீட்ட பொண்ணு கேட்க சொல்றேன். நீயும் உங்க வீட்ல சொல்லு." என்று நூறாவது முறையாக கணேசன் சொன்ன சமாதானம் கொஞ்சம் வேலை செய்தது. கணேசன் சொன்னது போலவே வீட்டில் பேசி அம்மா அப்பாவை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்துவிட்டான். 2/6
அது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அவள் வீட்டில் எப்படி சொல்வது என்ற பயம் நெஞ்சை அடைத்தது. அப்பா சும்மாவே நெருப்பெறும்பு, காதல் என்றால் கொள்ளியெறும்பு ஆகிவிடுவார்.
எப்படியோ மனதை திடப்படுத்திக்கொண்டு விஷயத்தை சொன்னாள்.
வீடே அல்லோகலப்பட்டது. 3/6
க.சுதாகர் எழுதிய நாவல்தான் '6174'. தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே என்று வாசிக்க தொடங்கினால் அப்படியே சுழல் போல உள் இழுத்துக்கொள்கிறது. The Davinci Code, Angels & Demons, Inferno, National Treasure, Indiana Jones திரைப்படங்களை போல அறிவியல் சார்ந்த திரில்லர் நாவல்
இந்நாவல் நமக்குப் பரிட்சயமில்லாத பல விடயங்களை சுவாரசியத்துடன் உள்ளடக்கியது. லெமூரியாவில் துவங்கும் கதை, நிகழ்காலத்தில் பல்வேறு குறியீட்டுச் சொற்கள் அடங்கிய புதிர்களைப் பற்றிய தேடலில் சுழன்று, உலக அழிவை எதிர்நோக்கும் தீவிரவாதக் கூட்டத்தினிடமிருந்து உலகைக் காப்பாற்றுவதைப் பற்றியது.
தமிழ்ப் பெண்களிடும் சாதாரணக் கோலத்தையும் அதனுடன் Fibonacci எண்களை ஒளித்திருப்பது வியப்பாக இருந்தது. வியப்பு குறைவதற்குள் தொடர்ச்சியான புதிர்களை அடுக்கடுக்காக அமைத்து வாசகர்களுக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது.
இயக்குனர் ராம் படங்களோட posters ஒவ்வொன்னையும் சேர்த்து வைக்கணும்னு நினைச்சேன். ஒவ்வொன்னுலேயும் ரொம்ப cute ஆன, யோசிக்கவைக்கிற விசயங்கள்னு பார்த்து பார்த்து செஞ்சிருப்பாங்க. அப்டியான எல்லாத்தையும் இந்த threadல சேர்த்துருக்கேன். படிச்சு பாருங்க நல்லா இருக்கும்.
கற்றது தமிழ் படத்தோட இசை வெளியீட்டு விழா அழைப்பிதழின் முன் அட்டை.
முதலாம் பக்கம்
போஸ்ட் ஆபிஸை பார்த்த உடனேதான்
எனக்கு லெட்டர் எழுதணும்னு தோணிச்சு!
இந்த உலகத்துல எனக்கு
உன்னை விட்டா
லெட்டர் எழுத வேற யாரு இருக்கா?