நந்தி என்ற சொல்லுக்கு 'ஆனந்தமாக இருப்பவன்' என்று பொருள். பிறரை ஆனந்தப்படுத்துபவன் என்றும் கொள்ளலாம்.நந்திக்கு அதிகார நந்தி என்ற பெயரும் உண்டு. இந்த பிரபஞ்சத்தின் நாயகனான சிவபெருமான், நந்திக்கு அத்தனை அதிகாரங்களையும் வழங்கியுள்ளார்.
நந்தி தேவருக்கு சிவபெருமானைப் போலவே நெற்றிக் கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும் இரு புஜங்களிலும் மானும், மழுவும் உண்டு.
நந்தி தேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம்; ரன் என்பது ஓட்டுபவன்; துக்கத்தை ஓட்டுபவன் என்பது பொருள். நந்தி தேவரே உலகின் முதல் குரு. அவரிடம் அனங்கன், இந்திரன், சோமன், கந்தர்வர்கள் போன்ற தேவர்கள் வேதங்களைக் கற்றார்கள்.
சிவன், சக்தி இருவர் முன்னும் பரமானந்தராக இருப்பவர் நந்தி தேவர். சிவபெருமானின் முக்கண் பார்வைக்கு எதிரில் நிற்க நந்தி தேவரைத் தவிர வேறு யாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.
நந்தியின் நிறம் வெண்மை. வெண்மை தூய்மையைக் குறிக்கிறது. அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே. நந்தி தூய்மையும் ஆண்மையும் நிறைந்தவர். ஆக தர்ம தேவதையே சிவபெருமானின் வாகனமாக அமைந்துள்ளது. சிவபெருமானின் வாகனமும், கொடியும், ரிஷபமே.
பிரதோஷம் அன்று நந்தி தேவருக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது பிரதோஷ காலத்தில் சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் திருநடனம் புரிகின்றார்.
நந்தி தேவருக்கு அருகம்புல் மாலையை அணிவித்து நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம்.
வில்வ இலைகளால் அவரை அலங்கரித்து அர்ச்சித்தால் கோடி நன்மைகளை அருளுவார். சிவப்பு அரிசியில் வெல்லம் கலந்து நிவேதனம் செய்தல் சிறப்பு.
பிரதோஷ காலம் பாவத்தைப் போக்கும் காலம் ஆகும். அந்த வேளையில் நந்தி தேவரின் பீஜத்தைத் தொட்டு வணங்குவது வழக்கம்.
அவரது கொம்புகளுக்கிடையே சிவ தரிசனம் செய்தால் பாவங்கள் அனைத்தும் விலகி கோடி புண்ணியம் கிடைக்கும்.
நந்தி தேவர் இசை அறிஞராய்ப் போற்றப்படுபவர். அதனால் நாட்டியம் பயில்வோரும், இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும்.
நந்தி தேவனை வழிபடுபவர்க்கு சிறந்த பக்தியும் நற்குணங்களுடைய குழந்தைச் செல்வங்களும், சகல காரிய சித்தியும், உயர்ந்த பதவியும், நல்ல எண்ணங்களும் நல்லொழுக் கமும் கிடைக்கும். எல்லா வற்றிற்கும் மேலாக முக்தியெனும் வீடு பேற்றையும் அவர்கள் அடைவர்.
🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சில நாடுகளுக்கு திரும்ப சென்றது சேர்த்து மொத்தம் 108 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கு அதிகபட்சமாக ஆறுமுறை, பிரான்ஸ், சீனா, ரஷ்யாவுக்கு ஐந்து முறை சென்றுள்ளார். மோடியின் வெளிநாட்டு பயணங்கள், ஒப்பந்தங்களின் விபரம்.
தேசிய உணர்வு, நாட்டின் பாதுகாப்பு, நிலையான ஆட்சி, வலுவான தலைமை, பாகிஸ்தான் - சீனாவிடம் அஞ்சாத நடவடிக்கைகள், அரசியலிலும் நிர்வாகத்திலும் நேர்மை, இதுவரை எந்த அரசும் செய்யாத பிரம்மாண்டமான மக்கள் நலத்திட்டங்கள்,
அதை ஊழலில்லாமல் நிறைவேற்றிய வழிமுறை, இரவு பகல் பார்க்காத அயராத உழைப்பு, உலக அரங்கில் பாரதத்தின் அந்தஸ்தை உயர்த்தியது - போன்ற பல சாதனைகளைச் செய்த நரேந்திர மோடிக்கு, மக்கள் அன்புடன் அணிவித்த மாபெரும் பூமாலை இந்த வெற்றி என்றால் அது மிகையாகாது. #TNWelcomesModi
பல அரசியல்வாதிகளின் லாரிகள்,ஆம்னி பஸ்கள் ( சொகுசு பேருந்து ) ஒரே ரெஜிஸ்டர் ரேஷனில் தான் ஓடுகிறது,,,,, ஒரேயொரு வண்டிக்கான கணக்கும் அதன் தொடர்பான வரியும் மட்டுமே செலுத்தப் படுகிறது
பெட்ரோல் போடும் போதெல்லாம் கோபம் வந்தது. இந்த முறை பெட்ரோல் பங்கில் புலம்பவே ஆரம்பித்தேன்.
பெட்ரோல் விலை இப்படி ஏத்திட்டே போனா நாம என்ன பண்றது? இன்னும் புலம்ப முன்னாள் இருந்த பெரியவர் சிரித்தார். ஒரு நாளைக்கு 6 ரூபா தான சந்தோசமா குடுங்க.
அவரைக் கோபமாக பார்த்தேன்.
சிரித்த முகம் மாறாமல் சொன்னார்.
நம்ம தமிழ் நாட்டு இந்திய மக்களை கொரோனா நோயிலிருந்து தடுக்க மாநில மத்திய அரசுகள் நிதி கேட்டப்ப, பத்து சதவிதம் பேருதான் குடுத்தோம், கேலி செஞ்சோம். #TNWelcomesModi
முதல் நாள் நிறுவனங்கள் அளித்த நிதிய தவிர்த்து பொதுமக்கள் நிதி 1 கோடிய தாண்டல. ஆனா டாஸ்மாக் திறந்த அன்னைக்கு முதல் நாள் சேல் 150 கோடி ரூபா.
எப்படியோ அந்த கஷ்டமான காலத்த ரெண்டு அரசாங்கங்களும் சமாளிச்சிட்டாங்க.