அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். 🇮🇳🙏1
சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. 🇮🇳🙏2
இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை "நவ கைலாய தலங்கள்' எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது.
🇮🇳🙏3
நவ கைலாயம் தலங்களின் விபரம்:-
சூரிய தலம்........
தலம்: பாபநாசம்
அம்சம்: சூரியன்
நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம்
மூலவர்: ஸ்ரீபாபநாசர் என்ற கைலாச நாதர்
அம்பாள்: ஸ்ரீஉலகாம்பிகை
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
🇮🇳🙏4
நவ கைலாயங்களில் முதல் கைலாயம் நாம் அறிந்தும், அறியாமலும் செய்த அனைத்து பாவங்களையும் தீர்க்க வணங்க வேண்டிய திருத் தலம் இது. கோயிலின் எதிரில் உள்ள தாமிரபரணி நீராடுபவரது அனைத்து பாவங்களையும் தீர்க்கும் புண்ணிய தீர்த்தம். 🇮🇳🙏5
திருநெல்வேலியில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள இத் திருத் தலத்தின் மூலவர் ருத்திராட்சத்தினால் ஆனவர். பொதிகை மலையில் தோன்றும் தாமிரபரணி ஆறு சமவெளியினை அடையும் இடமே பாபநாசம். அகத்திய முனி தங்கி வழிபட்ட இத் திருக்கோயிலின் 80 அடி உயர ராஜ கோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டது.🇮🇳🙏6
அகத்திய முனிவருக்கு பெருமான் ரிஷப வாகனத்தில் உமையாளுடன் திருமணக் கோல காட்ச்கியளித்த புண்ணிய தலம் இது. விராட்டு என்பவர் மோட்சம் அடைந்த தலம் இது. மூலவர் வயிராச லிங்கம், பழமுறை நாயகர், முக்காளாலிங்கர், பரஞ்சோதிலிங்கர் என்றெல்லாம் வணங்கப்படுகிறார்.
🇮🇳🙏7
சந்திர தலம்........
தலம்: சேரன்மகாதேவி
அம்சம்: சந்திரன் நட்சத்திரம்: ரோகினி, ஹஸ்தம், திருவோணம்
மூலவர்: ஸ்ரீஅம்மைநாதர்
அம்பாள்: ஸ்ரீஆவுடைநாயகி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
🇮🇳🙏8
திருநெல்வேலியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள இரண்டாவது நவ கைலாயமாகும். தாமிரபரணி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள இது சந்திரன் ஆட்சி பெற்று விளங்கும் தலமாகும். மூலவர் சுயம்பு மூர்த்தியான " ஸ்ரீ அம்மநாத சுவாமி ", அம்பாள் " ஆவுடை நாயகி ". 🇮🇳🙏9
முன்னொரு சமயம் இத் தல மூலவருக்கான கருவறையை கட்டிட வேண்டி, நெற் குத்தும் தொழில் கொண்ட இரு பெண்கள் காசு சேர்த்து வந்தனர். நீண்ட காலம் ஆகியும் , போதிய பணம் கிடைக்கவில்லையே என எண்ண, சிவ பெருமான் அந்தணர் உருவில் வந்து அவர்களது வீட்டில் உணவருந்தி சென்றார். 🇮🇳🙏10
வீட்டில் செல்வம் பெருகியது. பின்னரே கருவறை கட்டி முடிக்கப்பட்டது. இதை கூறும் வண்ணம் நெற் குத்தும் இரு பெண்டிரின் உருவம் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலின் அருகில் யாக தீர்த்தம் ஒன்று உள்ளது. இத் தீர்த்தத்தில் 41 நாட்கள் தொடர்ந்து நீராட தீரா கொடிய நோய்களும் தீர்கிறது.
🇮🇳🙏11
செவ்வாய் தலம்.........
தலம்: கொடகநல்லூர்
அம்சம்: செவ்வாய் நட்சத்திரம்: மிருக சிரீடம், சித்திரை, அவிட்டம்
மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள்: ஸ்ரீசிவகாமி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே சேரன்மகாதேவி செல்லும் கல்லூர் சாலையில் 🇮🇳🙏12
நடுக்கல்லுருக்கு தெற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நவக்கிரகங்களில் " செவ்வாய் " ஆட்சி பெற்று விளங்கும் " கோடகநல்லூர் " , திருநெல்வேலியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மூன்றாவது நவ கைலாயமாகும். 🇮🇳🙏13
செவ்வாய் திசை நடக்கும் அனைவரும் தவறாமல் சென்று வழிபட வேண்டிய திருக் கோயில் இது. ரிஷி குமாரர் ஒருவரின் சாபத்தால் பரிஷத் மஹாராஜையும், சனி தோஷத்தால் நள மகாராஜாவையும் தீண்டிய கார்கோடகம் என்ற கரு நீல வண்ண சர்ப்பம், முக்தி வேண்டி மஹா விஷ்ணுவை வேண்ட, 🇮🇳🙏14
விஷ்ணுவோ கோடகநல்லூருக்கு சென்று தவம் செய்ய சொன்னார். அவ்வறே கார்கோடகன் முக்தி பெற்ற தலம் இது என்பதால் " கோடகநல்லூர் " என்றானது. இன்றும், இங்கு கரு நீல வண்ண பாம்புகள் நிறைந்து காணப்பட்டாலும், நல்லோரை தீண்டுவதில்லை. 🇮🇳🙏15
மூலவர் " ஸ்ரீ கைலாசநாதராக " கிழக்கு நோக்கியும், அம்மை " சிவகாமி அம்பாளாக " தெற்கு நோக்கியும் அருள்பாளிக்கின்றனர்.
மூலவர்: ஸ்ரீகோத்த பரமேஸ்வரர் என்ற கைலாய நாதர் அம்பாள்: ஸ்ரீசிவகாமி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் திருவேங்கடநாதபுரம் குன்னத்தூருக்கு தெற்கே உள்ளது. இது சங்காணி சிவன் கோவில் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது.
🇮🇳🙏17
நவக்கிரகங்களில் ராகு பகவான் ஆட்சி புரியும், செங்காணி, சங்காணி என்றெல்லாம் அழைக்கப்படும் குன்னத்தூர் திருநெல்வேலியில் இருந்து மேலவேங்கடபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இத் திருத் தலத்தில் 🇮🇳🙏18
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சில நாடுகளுக்கு திரும்ப சென்றது சேர்த்து மொத்தம் 108 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கு அதிகபட்சமாக ஆறுமுறை, பிரான்ஸ், சீனா, ரஷ்யாவுக்கு ஐந்து முறை சென்றுள்ளார். மோடியின் வெளிநாட்டு பயணங்கள், ஒப்பந்தங்களின் விபரம்.
தேசிய உணர்வு, நாட்டின் பாதுகாப்பு, நிலையான ஆட்சி, வலுவான தலைமை, பாகிஸ்தான் - சீனாவிடம் அஞ்சாத நடவடிக்கைகள், அரசியலிலும் நிர்வாகத்திலும் நேர்மை, இதுவரை எந்த அரசும் செய்யாத பிரம்மாண்டமான மக்கள் நலத்திட்டங்கள்,
அதை ஊழலில்லாமல் நிறைவேற்றிய வழிமுறை, இரவு பகல் பார்க்காத அயராத உழைப்பு, உலக அரங்கில் பாரதத்தின் அந்தஸ்தை உயர்த்தியது - போன்ற பல சாதனைகளைச் செய்த நரேந்திர மோடிக்கு, மக்கள் அன்புடன் அணிவித்த மாபெரும் பூமாலை இந்த வெற்றி என்றால் அது மிகையாகாது. #TNWelcomesModi
பல அரசியல்வாதிகளின் லாரிகள்,ஆம்னி பஸ்கள் ( சொகுசு பேருந்து ) ஒரே ரெஜிஸ்டர் ரேஷனில் தான் ஓடுகிறது,,,,, ஒரேயொரு வண்டிக்கான கணக்கும் அதன் தொடர்பான வரியும் மட்டுமே செலுத்தப் படுகிறது
பெட்ரோல் போடும் போதெல்லாம் கோபம் வந்தது. இந்த முறை பெட்ரோல் பங்கில் புலம்பவே ஆரம்பித்தேன்.
பெட்ரோல் விலை இப்படி ஏத்திட்டே போனா நாம என்ன பண்றது? இன்னும் புலம்ப முன்னாள் இருந்த பெரியவர் சிரித்தார். ஒரு நாளைக்கு 6 ரூபா தான சந்தோசமா குடுங்க.
அவரைக் கோபமாக பார்த்தேன்.
சிரித்த முகம் மாறாமல் சொன்னார்.
நம்ம தமிழ் நாட்டு இந்திய மக்களை கொரோனா நோயிலிருந்து தடுக்க மாநில மத்திய அரசுகள் நிதி கேட்டப்ப, பத்து சதவிதம் பேருதான் குடுத்தோம், கேலி செஞ்சோம். #TNWelcomesModi
முதல் நாள் நிறுவனங்கள் அளித்த நிதிய தவிர்த்து பொதுமக்கள் நிதி 1 கோடிய தாண்டல. ஆனா டாஸ்மாக் திறந்த அன்னைக்கு முதல் நாள் சேல் 150 கோடி ரூபா.
எப்படியோ அந்த கஷ்டமான காலத்த ரெண்டு அரசாங்கங்களும் சமாளிச்சிட்டாங்க.