27.02.2021 அன்று நடைபெற்ற வனத்துக்குள் திருப்பூர் -6 நிறைவு , வனத்துக்குள் திருப்பூர் -7 , இதுவரை நடப்பட்ட மறக்கண்களால் ஏற்பட்டுள்ள சூழலியல் மாற்றங்களை பற்றிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது,
கோவை சித்தார்த் பௌண்டடேஷன் நிறுவனத்தின் சூழலியல் துறையில் முனைவர்கள் குழுவாக 6 மாதங்கள் மாவட்டம் முழுவதும் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் வாயிலாக நடப்பட்ட மரக்கன்றுகளை ஆய்வு செய்து தயாரித்த அறிக்கை ,
அதன் சாரம்சங்கள்
நடப்பட்ட மரக்கன்றுகளில் 88 .4 % காப்பாற்றப்பட்டு
வளர்ந்து வருகிறது
7377 டன் கரியமில வாயு பிரித்தெடுக்கப்பட்டுள்ளது
4076 டன் பயோ மாஸ் -உயிரினபால்திரள் பெருகியுள்ளது
2038 டன் கரியமில வாயு நடப்பட்ட மரங்களால் உறிஞ்சப்பட்டுள்ளது
நடப்பட்டதோ 70 வகை மரக்கன்றுகள் , களத்திலோ 210 வகை மரங்கள், மூலிகைகள் , தாவரங்கள் காணப்படுகிறது ,
உபயம்: பறவைகள், பட்டாம்பூச்சிகள் மற்றும் சிலந்திகள்
பல வருடங்களாக இந்த பகுதியிலிருந்து காணாமல் சென்ற 79 வகையான பறவைகள் திரும்ப காணப்படுகிறது அதில் 3 வகை மிக அரிதான வனங்களில் மட்டுமே காணப்படுவது.
65 வகையான பட்டாம்பூச்சிகள்
41 வகையான சிலந்திகள் - சிலந்திகளின் எண்ணிக்கை
அதிகரிப்பு அந்த பகுதியின் சூழல் ஆரோக்கியத்தை, பல்லுயிர் பெருக்கத்தை அளப்பதற்கான அளவுகோல் .
2071 ஏக்கர் அளவிற்கான நிலங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மரமும் வருடத்திற்கு 100 கிலோ அளவிற்கு பிராணவாயு வெளியிடுகிறது , ஒரு ஏக்கரில் நடப்பட்டுள்ள மரங்களினால் 18 மனிதர்கள்
நிதமும் பிராணவாயு பெறுவர்
இதை தவிர மண்வளம் ஆரோக்கியம் அடைந்துவருவதும், மர பயிர்களினால் பயனாளிகளுக்கு நீண்டகால வருவாய் , பசுமை பரப்பு அதிகரிப்பினால் வெப்ப அளவு குறைவதும், மழை மேகங்களை ஈர்க்கும் தன்மை அதிகரிப்பு , நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, பூமியின் ஈரத்தன்மை அதிகரிப்பு உள்ளிட்ட
பல்வேறு நன்மைகள் தொடர் சங்கிலியாக நடைபெறுகிறது .
10 .50 லட்சம் மரக்கன்றுகள் 6 வருடங்களில் என்பது அவ்வவளவு எளிதல்ல , நுண்திட்டமிடல், நிதியதாரம், தொடர் கண்காணிப்பு, நிதி மேலாண்மை, தொடர் கற்றல், மாவட்டம் முழுமைக்கும் இந்த செயல்பாடுகளை கொண்டு செல்லுதல்,சரியான துணை அமைப்புகளை
அவர்களுடன் பயணித்தல், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் நன்மதிப்பையும், ஒத்துழைப்பை பெறுதல்,தொய்வின்றி ஒத்துழைப்பை நல்கும் தன்னார்வலர்கள்,தொடர்ந்து தயக்கமின்றி , இரண்டாம் சிந்தனையின்றி கொடையளிக்கும் கொடையாளர்கள், தொடர்ந்து மரக்கன்றுகள் நடுவதின் அவசியத்தை குறித்து
செய்திகளை வெளியிட்டு மாவட்டம் முழுவதும் விழிப்புணரவை ஏற்படுத்திய தினமலர் நாளிதழ் , எல்லாவற்றிற்கும் மேலாக மரக்கன்றுகளை நடுவதும் அதனை காத்து வளர்ப்பது என்ற நோக்கம் மட்டுமே பிரதானமாக முன்னிறுத்தி பயணித்து வருவது என பயணித்த பாதை எளிதானதல்ல,
வனத்துக்குள் திருப்பூர் பயணித்த பாதை மற்றும் அதனால் ஏற்பட்ட சூழலியல் மாற்றங்கள் குறித்த ஆவணப்படம் முறையே ஆங்கிலம் மற்றும் தமிழில் முதல் இரண்டு பின்னுட்டங்களில் , தமிழ் ஆவணப்படத்தின் பின்னணி குரல் Hema Rakesh அவர்களுடையது, கடைசி நேர பரபரப்பில் நான் அழைத்து இப்படி ஒரு ஆவணப்படத்தின்
பின்னணி குரல் தர இயலுமா என கேட்டேன், வனத்துக்குள் திருப்பூரில் எனது பங்களிப்பு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சிக்குரியது ,நிச்சயம் செய்கிறேன் என தனது நேரத்தை ஒதுக்கி செய்து கொடுத்தார்கள். ஆவணப்படத்தின் உருவாக்கம் அதன் குழுவினை பற்றி தனி பதிவாக ஓரிரு நாளில் ...
அறிக்கையின் தமிழ் மற்றும் ஆங்கில ஆவணம் தேவைப்படுவோர் தங்களின் ஈமெயில் முகவரியை தெரிவித்தால் அனுப்பிவைக்கின்றேன்.
சுனாமி, ஒக்கி, கஜா , போன்ற ஆழி பேரலைகளும், புயல்களும் இயற்கை சீற்றங்களை பறைசாற்றியதென்றால் இந்த ஆய்வறிக்கை என் மேல் ஒரு மடங்கு அன்பு செலுத்தினால் உங்கள் மேல்
பன்மடங்கு அன்பு செலுத்துவேன் என்ற இயற்கையன்னையின் கோட்பாட்டை நிரூபணம் செய்கிறது
தேசம் முழுவதும் இயற்கையை காக்கும் , மீட்டெடுக்கும் முயற்சிகள் பரவட்டும்
-தன்னார்வலர்கள் மற்றும் கொடையாளர்கள்
வனத்துக்குள் திருப்பூர்
வெற்றி அமைப்பு
நேற்று மார்ச் 1 முதல் பத்து ரூபாய் நூல் விலை உயர்ந்து இதோடு 70 ரூபாய் கடந்த ஆறு மாதத்தில் நூல் விலை உயர்ந்துள்ளது.
திருப்பூரில் சிறு குறு நடுத்தர மற்றும் பெரிய ஏற்றுமதியாளர்கள் அனைவரும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருப்பூர் தொழில் சங்கிலி தொடர் போல நூல் வாங்கியவுடன் நூலை துணியாக நைய நிட்டிங்_ Fabrication அதன் பிறகு சாயமேற்றும் சாயப்பட்டறைகள் என்று இந்த சங்கிலித் தொடர் முழுவதும் தற்போது பிரச்சனையில் சிக்கி தவிக்கிறது.
மத்திய அரசிற்கு இது குறித்து பலரும் கடிதம் எழுதியும்
இதுவரை செவிசாய்க்காமல் நூல் ஏற்றுமதியை தான்தோன்றித்தனமாக அனுமதித்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது ஏற்கனவே விலை நிர்ணயம் செய்யப்பட்ட ஏற்றுமதி ஆடைகளை அனுப்ப முடியாமலும் உள்நாட்டு வர்த்தகத்தில்