காலையில் கஞ்சி, பழையது அல்லது உப்புமா, மதியம் சாதாரண ஒரு காயுடன் சாப்பாடு.
மாலையில் கரைத்து குடிக்கும் மதிய சாதம்.
இரவு மதியம் வடித்த அதே சாதம் அல்லது உப்புமா.
காபி, டீ, பால், தோசை, இட்லி எதுவும் கிடையாது.
வருடம் சித்திரை மாதம் மட்டும் 15 நாள் லீவு ஊருக்கு போய் வரலாம்.
ஆனால் அங்கும் தினமும் எல்லா அனுஷ்டானம்களும் செய்யணும்..
சுமார் 2 மணி நேரம் பாடம்..
பின் 6 மணி நேரம் சந்தஸ் சொல்லணும்..
(அதாவது, காலை - மாலை ஸந்த்யா வந்தனம், மதியம் மாத்யானீகம், அக்னி ஹோத்ரம் பண்ண வேண்டும்.
2 மணி நேரமாவது படித்ததை திரும்பப் படிக்க வேண்டும். பின்னர் 6 மணி நேரம் ஒவ்வொரு பாடத்தையும் ஒவ்வொரு ஸ்லோகமாக மூன்று முறை சப்தத்துடன் வாய்விட்டுச் சொல்ல வேண்டும்.)
மிக மிக கடினமான படிப்பு !கண்டிப்பு மிக அதிகம் !!
நினைத்த உடை உடுத்த முடியாது !
இந்த பால வயதில் அவர்கள் உடைகளை
அவர்களே துவைத்து கொள்ள வேண்டும் !
விளையாட முடியும். ஆனால் அதுவும் மாலை மட்டும். பிற குழந்தைகள் போல வேண்டிய வயசுல விளையாடாம, ரொம்ப நேரம் தூங்கிட்டு மெதுவா எழுந்திருக்காம,
ஒரு டிவி உண்டா❓
சினிமா உண்டா❓
பொழுது போக்கு உண்டா❓
ஜாலியா லீவுல ஊர் சுற்றினோம்னு உண்டா❓
இப்படி எதுவுமே கிடையாது இந்த பசங்களுக்கு...
வருஷத்துல ஒரு தடவையோ இரண்டு தடவையோ தான் விடுமுறை இவங்களுக்கு.
தீபாவளி சமயத்துலயும், மே மாதத்துலயும் மட்டுமே இவர்கள் தாய் தகப்பனாருடன் சேர்ந்து வாழ முடியும் !
கிட்டத்தட்ட 8 அல்லது 10 வருடங்கள் வரை குடும்பம், உற்றார் உறவினரை பிரிந்து வேதம் கற்க வேண்டும்.
விவரம் அறியாத வயசுல வேதத்தை தவிர வேற ஒன்னுமே உலகம் இல்லை...
அப்படின்னு நினைச்சு வேதம் படிக்க வர்ற பசங்களை நினைச்சு பாருங்களேன்...
தவ வாழ்க்கை அல்லவா இது??
எழுதாக்கிளவியான, அதாவது எழுத்து வடிவில் இல்லாத வேதத்தை, பதம் - க்ரமம் - ஜடை மற்றும் கனம் என பிரித்து அத்யயனம் (மனனம்) செய்யும் முறையிலும், விதிக்கப்பட்ட கட்டுக்கோப்பான ஸ்வரங்களின் படி
ஓதும் முறையிலும் ஒரு வார்த்தை கூட ஏன் ஒரு அக்ஷரம் கூட கூட்டவோ குறைக்கவோ இயலாது என்ற அளவுக்கு மிகக் கவனமாக தலைமுறை தலைமுறையாக ஓதப்பட்டு வருகிறது.
எதற்காக என்றால் லோக ஷேமத்துக்காக...
இந்த வேத விருட்சம் நன்றாக வளர நாமெல்லாம் நீர் ஊற்ற வேண்டும்... உரமிட வேண்டும்...
இவர்களைக் காக்க வேண்டும்...
தேசத்துக்காக ஒரு மகனைத் தருவதும் வேதத்துக்காக ஒரு குழந்தையைத் தருவதும்...
இரண்டுமே தியாகம்தான் !
நாட்டு எல்லையில் இருந்து கொண்டு ஒரு வீரன் எதிரிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுகிறானே; அதே போல ஊருக்குள் இருந்து கொண்டு வேதம் படித்த ஒருவன்,
துஷ்ட சக்திகளிடம் இருந்து நம்மைக் காப்பாற்றுகிறான்.
பணம் இருந்தால் என்ன படிப்பு வேண்டுமானாலும் படிக்கலாம்...
ஆனால் வேதம் படிக்க வேண்டுமானால் தாய் தகப்பன் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே குழந்தைகள் வேதம் படிக்க முடியும் !!
🙏: வாட்ஸப் மீள்பதிவு
இவர்களுக்கு நாம் பண்ண வேண்டியது
என்ன என யோசிக்கிறீர்களா?
முடிந்தவர்கள், சிறு அளவில் நடத்தப்பட்டு வரும் வேத பாடசாலைகளுக்கு, பணமோ, தானியமோ, காய்கறியோ, அக்குழந்தைகளுக்கு வஸ்த்ரமோ, குளிருக்குச் சால்வையோ வாங்கித் தரலாம்.
அவர்கள் லீவுக்கு வரும்போது, கம்ப்யூட்டர் பாடம், ஓவியம், ஆங்கிலம் & தமிழ் இலக்கணம்
Instrument playing மற்றும் ஏதாவது ஒரு ஸ்போர்ட்ஸ் என நம்மால் எது முடிகிதோ அதை இலவசமாகக் கற்றுத் தரலாம்.
நம்மைச் சுற்றி உள்ள பிள்ளைகள் அவர்களைக் கேலி செய்தால், அவர்கள் தவறைக் கண்டித்தோ எடுத்துக் கூறியோ புரியவைத்து, அவர்களிடம் உள்ள சிறந்த குணநலன்களை சுட்டிக் காண்பித்து, இவர்களும்
அதுபோல இருக்க வேண்டும் என்பதைச் சொல்லித் தரலாம்.
அவர்களின் எளிமை, கட்டுப்பாடு, அடம் பிடிக்காமல் வாழும் குணம், போன்றவற்றைக் காட்டி, *அதுபோல நீங்களும் வாழ்ந்தால் உலகம் உங்களைப் போற்றும்*
என்பதைப் புரிய வைக்கலாம். வாழ்க்கையில் எல்லா சூழ்நிலையிலும் வளைந்துபோக அவர்களை உதாராணமாகக்
காட்டி, அதனை நம் பிள்ளைகளிடத்தும் பயிற்றுவிக்கலாம்...
எல்லாவற்றுக்கும் மேல்... இது எதுவும் பிடிக்கவில்லை என்றால்... அந்தக் குழந்தைகளை மனம் நோகச் செய்யுமௌபடி ஏதும் பண்ணாமல், பேசாமல் ஒதுங்கி விடலாம்.
புரிந்து ஏற்போரை வணங்குகிறேன்...🙏
🍁வாஸவி நாராயணன்🍁
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
🌺A very nice write up by an Ex. IAS officer on present Modi wave...🌺
A bit in detail but worth reading...
I received a hurtful message from an old friend and colleague. He was on my daily broadcast list of WhatsApp. He requested me not to send him any of my posts
on 'political' issues.
I gave him a long explaination on why I write and what I write. But he was not convinced.
Being alerted by him thus, I felt I should clarify to all who read my posts on what exactly I think and do.
The charge against me is that...
I wrongly support our current Prime Minister, *Shri Narendra Modi* and that it establishes, I am not rational and impartial anymore.
Let me try and explain...
First and foremost, I do not write on 'political' issues. I write on 'national' issues.