எனக்கு நெருங்கிய தோழியின் வாழ்கை இது!
முழுமையாக வாசிக்க வேண்டுகிறேன்.
அவளுக்கு திருமணமான போது அவள் கணவரின் வருவாய் தோராயமாக மாதம் ஒரு லட்ச ரூபாய்.
வீடு, கார், சொந்த தொழில் என குறைவில்லா வாழ்வில் மகிழ்ந்திருந்தனர்.
திடீரென ஒரு நாள் அவள் கணவருக்கு சிறு விபத்து. அதன்பால்...
அன்றாடம் சில மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிய நிர்பந்தம். சில மாதங்கள் இது தொடர்ந்தது. சில மாதத்தில் கண் பார்வை சிறிது மங்கலானதால் மீண்டும் மருத்துவமனை, மீண்டும் மாத்திரைகள். உடல் நலிவுறுவதை அறிந்து மீண்டும் மருத்துவமனை பரிசோதனை. அங்கேதான் முதல் இடி...
பரிசோதித்த மருத்துவர் சிறுநீரகக் கோளாரு என்றார்.
தொடர்ந்து வைத்தியம் பார்த்தார்கள். காலம் நோயுடனே கடத்திச் சென்றது. ஒரு கட்டத்தில் சிறுநீரகம் மாற்றினால் மட்டுமே வாழ முடியும் என கைவிரித்தார்கள்.
மாற்று சிறுநீரகத்திற்காக பதிவு செய்துவிட்டு, வாரம் இரு முறை டயாலிஸ் நடந்தது
இந்த கால இடைவெளியில் அவர்களது சேமிப்பு மொத்தமாக கருகி மேலும் கடனாளியாகவும் ஆனார்கள். ஒவ்வொரு டயாலிஸுக்குமே பணத்திற்கு அல்லாட வேண்டியிருந்தது.
மொத்தமும் போய் ஒரு கருப்பு நாளில் அவள் கணவரின் உயிரும் போனது.
அழுகையிலிருந்து அவள் இன்றளவும் மீளவில்லை.
அவள் கணவரின் உயிரை,
கருகிய வாழ்வை காப்பாற்ற எந்த தொலைக்காட்சியும், மிக்ஸி, கிரைண்டரும், வாஷிங்மெசினும் உதவவில்லை.
ஒன்று மட்டும் அவளுக்கு எளிதாக கிடைத்திருந்தால் இன்று அவளை வேரோடு கிள்ளி எடுத்து வீசப்பட்டிருக்க மாட்டாள்.
அதுதான் தரமான இலவசமான மருத்துவம்.
எல்லா கட்சிகளும் சொர்ப்ப பணமும், அற்ப இலவசங்களையும் கூவி கூவி விற்கையில் ஒருவன் மட்டும் 'ஒரு ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை அனைவருக்கும் தரமான மருத்துவம் இலவசம் உரைக்கிறான் எனில் இந்த அபத்த காலம் நமக்கு கையளித்த அற்புத அட்சய பாத்திரம்.
அவனை இருகப்பற்றிக்கொள்வது ஒன்றே நமக்கிருக்கும் இறுதி வாய்ப்பு. வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில்...