Why DMK should win? - FAQ

இந்துத்துவ அரசியல் என்றால் தமிழர் பார்வையில் என்ன?

தமிழர் நலன், தமிழர் பண்பாடு, தமிழர் மெய்யியல், தமிழ் மொழி ஆகியவற்றை அழித்து ஹிந்து, ஹிந்து பண்பாடு, ஹிந்து மதம், சமஸ்கிருதம் என மாற்றுவது. சிறுபான்மையினர் மதங்கள், பிற்படுத்தப்பட்ட பட்டியிலின
மக்களுக்கு எதிரான உயர் சாதி ஆதிக்க அரசியல் செய்வது.

இந்துத்துவம் தனது நேரடி எதிரியாக யாரைப் பார்க்கிறது? ஏன்?

இந்துத்துவம் தனது நேரடி எதிரியாக திராவிட கொள்கையை பேசும் கட்சிகளையும்,தமிழர் உரிமை பேசும் கட்சிகளையும், பொதுவுடமை பேசும் கட்சிகளையும் பார்க்கிறது. அதாவது, திமுக, விசிக,
கம்யுனிஸ்ட் கட்சிகளை நேரடி எதிரியாக பார்க்கிறது. அதில் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வாய்ப்புள்ள திமுகவை தனது முதல் எதிரியாக பார்க்கிறது.

ஒருவேளை, தமிழ் நாட்டில் திமுக ஆட்சி அமையாவிட்டால் என்ன நடக்கும்?

தமிழ்நாட்டு அரசாங்கத்தை பாஜக தனது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
குஜராத், உத்திரபிரதேசத்தில் நடந்த மத கலவரங்கள் தமிழ்நாட்டிலும் நடக்கும்.

தமிழ் நாட்டில் திமுக ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும்?

முதலில், தமிழ்நாடு குஜராத் ஆகாமல் தடுக்கப்படும்.
இரண்டாவது, நம்மால் கேள்விக் கேட்க முடிந்தவர்கள் ஆட்சியில் இருப்பார்கள்.
தமிழ் தேசியம் பேசுபவர்கள் கூடத்தான் இந்துத்துவத்தை எதிர்க்கிறார்கள். சங்கிகளும் சீமான், திருமுருகன் காந்தி போன்றோரை எதிர்க்கிறார்களே?

தமிழ் தேசியம் என்று சொல்லி கட்சி நடத்தும் சீமான், திமுகவை தான் தனது எதிரி என்கிறார். எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்னொரு முறை
வாய்ப்பளிக்கலாம் என்று வெளிப்படையாக பேசியவர் சீமான். அவர் தனது கட்சியான “நாம் தமிழர்” ஜெயிப்பதற்காக அரசியலில் இல்லை. திமுகவை ஆட்சி அமைக்க விடக்கூடாது என்பதற்காக அரசியலில் இருக்கிறார். சீமானும் பாஜகவும் ஒரே குறிக்கோளுக்காவே தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறார்கள்.
தமிழ் தேசியம் என்ற பெயரில் இயக்கம் நடத்தும் திருமுருகன் காந்தியோ, திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளுக்கு ஆதரவு தந்திருக்கிறார். ஆனால், திமுகவிற்கு நேரடியான ஆதரவை தரவில்லை. மாறாக, திமுகவின் எதிரணியில் இருக்கும் அமமுக, SDPI போன்ற கட்சிகளுக்கு ஆதரவை தந்து வாக்குகளை சிதறடிக்க
உதவுகிறார். இவரும் மறைமுகமாக பாஜகவிற்கே உதவுகிறார்.

மூன்றாம் அணி என்று சொல்லிக்கொள்ளும் கமல், தினகரன், விஜயகாந்த் ஆகியோரை ஆதரிப்பதில் என்ன தவறு?

நீங்கள் சொன்ன கமல், தினகரன், விஜயகாந்த் ஆகியோர் பாஜகவை எத்தனை முறை எதிர்த்து பார்த்திருக்கிறீர்கள்? அல்லது பாஜக இவர்களை எங்கேனும்
எதிர்த்துப் பேசி பார்த்தீ்ர்களா? இவர்கள் பாஜக விற்கு அனுகூலமாகவே, தேர்தலிலும், தேர்தலுக்கு பிறகும் இருப்பார்கள்.

நீங்கள் ஏன் பாஜக பாஜக என சொல்கிறீர்கள்? நான் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கவே வாக்களிக்கிறேன். பாஜகவிற்காக இல்லை!

அதிமுக வேறு, பாஜக வேறு என்று நீங்கள் நினைத்தால்,
உங்களை விட அப்பாவி யாரும் இருக்க முடியாது. எடுத்துக்காட்டாக கடந்த நான்காண்டுகளில் அதிமுக அமைச்சர்களாக இருந்த ராஜேந்திர பாலாஜி, மாபா பாண்டியராஜன் ஆகியோர் பேசியதை கேட்டால், இவர்கள் அதிமுகவா? பாஜக வா? என்கிற சந்தேகம் உங்களுக்கு வரும். அதுவுமில்லாமல்,
பாஜக கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத, மத வெறி கொள்கையையும் நாடாளுமன்றத்தில் ஆதரித்த கட்சி அதிமுக. ஆக, ஒரு அதிமுக எம்எல்ஏ ஜெயித்தாலும், அது பாஜக எம்எல்ஏ என்றே பொருள்.

அதற்காக இந்து விரோதி திமுகவை ஆதரிக்க சொல்கிறீர்களா?

இந்து விரோதி திமுக அல்ல. பாஜக தான். பணமதிப்பிழப்பு கொண்டு
வந்து அனைத்து இந்துக்களையும் தெருவில் நிறுத்தியது பாஜக தான், ஜிஎஸ்டி கொண்டு வந்து பல வியாபாரிகளின் வயிற்றில் அடித்தது பாஜக தான்.நீட் தேர்வை திணித்து நம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்தது பாஜக தான். OBC இட ஒதுக்கீட்டை சிதைத்து பிற்படுத்தப்பட்டோர் படிக்க கூடாது என நினைப்பது பாஜக
தான். இப்படி இந்துக்களை படிக்க விடாமல், வேலைக்கு செல்ல விடாமல், நிம்மதியாக வாழ விடாமல் வைத்திருப்பது பாஜகவும் அவர்களின் அடிமை அதிமுகவும் தான். அவர்களை வீழ்த்தி திமுகவை ஆட்சியில் அமர்த்துவதே இந்துக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் நல்லது!
சும்மா பாசிச பாஜக வருதுன்னு பூச்சாண்டி காட்டியே திமுகவிற்கு ஓட்டுப்போட சொல்லாதீங்க!

2016 லியே திமுக விற்கு வாக்களியுங்கள், இல்லையெனில் பாசிச பாஜக வந்துவிடும் என்று நாங்கள் சொன்னோம். இருப்பினும் 1.1 சதவிகிதத்தில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டது. விளைவு, கடந்த நான்காண்டுகள்,
தமிழ்நாட்டின் அரசாங்கம் பாஜகவின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் போனது. நாங்கள் சொன்னோம், நீங்கள் 2016ல் கேட்கவில்லை. 2021 ல் தவற விட மாட்டீர்கள் என நம்புகிறோம்.

கடைசியாக ஏன் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தை சொல்லுங்கள்?

மேலே பல காரணத்தை ஏற்கனவே சொல்லி
விட்டேன். கடைசியாக ஒன்று. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் நூறு நாட்கள் மருத்துவமனைக்குள் இருந்து எப்படி இறந்தார் என்றுக் கூட தெரியவில்லை. அவரது முடிவு, அதற்கு பின்னால், அதிமுகவையும், தமிழ்நாட்டையும் கைப்பற்ற நினைக்கும் பாஜகவை இம்முறை அதிமுக தொண்டனே நிராகரிப்பான். அதையும் தாண்டி,
பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க நினைப்பவர்கள், அவர்களே குழியை வெட்டி உள்ளே படுக்க தயாராக இருக்கிறார்கள் என்றுப்பொருள்!

தமிழனை காப்பாற்றப் போகும் ஒரே வெளிச்சம் உதயசூரியன் மட்டுமே!

- Rajarajan RJ

#VoteforDMKAlliance

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Rajarajan RJ

Rajarajan RJ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @RajarajanRj

21 Mar
உலக பிராமணர்கள் சங்கம் என்ற ஒரு அமைப்பு, பாஜக ஆதரவு எடுத்திருக்கிறது என்ற ஒரு செய்தியைப் பகிர்ந்து இருந்தேன். கூடவே பெரியாரின் ஒரு வாசகத்தையும் சொல்லியிருந்தேன். சில நண்பர்கள் எனக்கு இன்பாக்ஸில் வந்து, தாங்கள் பிறப்பால் பார்ப்பனர்கள். ஆனால், பல காலமாக திமுகவை
ஆதரிப்பவர்கள் என்றார்கள். திமுக ஆதரவில் இருக்கும் பல பார்ப்பனர்களை நான் அறிவேன். அவர்களில் பலர் என் நட்பு பட்டியலில் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை பார்ப்பனர்கள் என்று எங்கேயும் குறிப்பிட்டு கொள்ள மாட்டார்கள். நாங்களும் திராவிடர்கள் என்று சொல்பவர்கள் உண்டு.
திராவிடம் பிறப்பால் மனிதர்களை பிரிப்பதில்லை. பிறப்பால் மனிதர்களை பிரிப்பது சாதிய அமைப்பு (அ) பார்ப்பனியம் (அ) வர்ணாசிரம தர்மம் அல்லது இந்துத்துவம். எல்லோரும் சமம் என்று சொல்வது திராவிடம். பார்ப்பனிய எதிர்ப்பு என்பது பண்பாட்டு எதிர்ப்பே தவிர மனிதர்களை எதிர்ப்பது அல்ல.
Read 5 tweets
17 Mar
தாம் வாக்கு பிரிக்கவே களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறோம் என்பதும், தம்மால் ஜெயிக்க முடியாது, பல இடங்களில் டெப்பாசிட் கூட கிடைக்காது என்பதும் கமலுக்கும், சீமானுக்கும் இன்னும் பிற B team களுக்கும் நன்றாகவே தெரியும்.

ஆனால், அவர்களை நம்பிச் செல்லும் அப்பாவி தொண்டர்களுக்கு அது
இப்போது தெரியாது.

மூன்றாம் அணியினருக்கு, தமிழ்நாட்டில் என்ன நிலை என்பதை தொடர்ச்சியாக தேர்தல்கள் காட்டி வந்திருக்கிறது.

உண்மையை சொன்னால்,இங்கே இன்னும் ஒரு மூன்றாம் அணி உருவாகவேயில்லை.

மூன்றாம் அணி என்பதை “ஆளும் அதிகாரம்” உருவாக்கி, எதிர்கட்சியின் வாக்குகளை பிரிப்பதற்காக தான்
பயன்படுத்தப்படுகிறது.

2016 முடிவுகளுக்கு பின், மூன்றாம் அணி அமைத்தவர்கள் பலர், தவறு செய்துவிட்டோம் என புலம்பியதை கண்கூட பார்த்தோம்.

இருப்பினும், அரசியலில் வியாபாரத்தை தவிர்க்க முடியாது. அதனால், இதையெல்லாம் பார்த்துத்தான் ஆக வேண்டும்.

ஊழல் ஊழல் என்றுப் பேசும் கமல், ஜெயலலிதாவை
Read 5 tweets
7 Mar
கழக ஆட்சி என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் ஆட்சியாக இல்லாமல், ஒரு இனத்தின் ஆட்சியாக அமையும்.

தனிப்பட்ட ஒரு அரசியல் இயக்கத்தின் கொள்கையாக மட்டுமில்லாமல், இந்த மனித சமுதாயத்தின் உயர்ந்த லட்சியங்களை அடையக்கூடிய ஆட்சியாக அமையும்.
நாம் கொள்கைக்கு சொந்தக்காரர்கள். அந்த கொள்கையை செயல்படுத்தக்கூடிய கடமை நமக்கு தான் இருக்கிறது. அந்த கடமையை நாம் தான் செய்தாக வேண்டும். நம்மை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. தந்தை பெரியாரின் கனவுகளை, அறிஞர் அண்ணாவின் கனவுகளை, முத்தமிழறிஞர் கலைஞரின் கனவுகளை செயல்படுத்தும் கடமை
எனக்கு இருக்கிறது. நம்மால் முடியும். நம்மால் மட்டும் தான் முடியும்.

வீழ்ச்சியுற்ற தமிழகத்தை எழுச்சியுற வைப்போம். இன்னும் இரண்டே மாதங்கள் தான் இருக்கின்றன. பறந்து விரிந்த இந்த தமிழ்நாட்டு மக்களுடைய ஒட்டுமொத்த ஆதரவோடு திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி அமையப்போகிறது.
Read 8 tweets
6 Mar
அண்ணன் @karupalaniappan அவர்களுக்கு பிறந்தநாள். அவரது திரைப்படங்கள், அவரது திரைப்பட வசனங்கள், பாடல்களை ரசித்தவர்கள் இப்போது அதையும் தாண்டிய அவரது பல்வேறு பரிணாமங்களுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.

அண்ணன் பல இடங்களில் தனித்துவமாகவும், அறத்துடனும் நின்று மற்ற பிரபலங்களை போல்
தானில்லை என்பதை காட்டி இருக்கிறார்.

பொதுமேடைகளில் வெளிப்படையாக சாதியை எதிர்த்து பேசுவதாக இருக்கட்டும்,

மதவாதத்திற்கு எதிரான கூர்மையான வாதங்களை வைப்பதாக இருக்கட்டும்,

பாஜகவை எதிர்க்கிறேன் என்று மட்டும் சொல்லாமல், பாஜகவை வீழ்த்த திமுகவை ஆதரிக்கிறேன் என்றுக் கூறும் நெஞ்சுரமாக
இருக்கட்டும்,

சங்கிகளின், தம்பிகளின் கதறல்களை பொருட்படுத்தாமல், ஆமாண்டா, “நாங்க திராவிடத்தால் தான் வாழ்ந்தோம்” என்று சொல்வதாக இருக்கட்டும்,

காதலை பரப்புவதாக இருக்கட்டும்,

வாசிக்காமல் ஒரு புத்தகத்தை குறித்து பேசமாட்டேன் என்று சொல்லும் சிறந்த வாசிப்பாளனாக இருக்கட்டும்,
Read 4 tweets
5 Mar
தலைவர் ஸ்டாலின் குறித்து கிண்டிலில் வெளியாகும் முதல் வாழ்க்கை வரலாற்று நூல். அதுவும் ஆங்கிலத்தில்..

First biography of DMK Leader MK Stalin in Kindle. Well Written by Pushpalatha Poongodi. She has touched all the key events and the political career of MK Stalin in this
short biography.

This book will be widely read across India in the next few months.

“The ARKA” is the title. It means Sun.

வடமொழி எதற்கு என்றுக் கேட்ட போது, எதிரியின் ஆயுதத்தால் அவனையே தாக்க என்கிறார் புஷ்பலதா பூங்கொடி. உண்மையில், இந்தப் புத்தகம் ஒரு ஆயுதமாய்
நம்மவர்களுக்கு உதவும்.

இந்த ARKA விற்கும் சென் பாலன் அவர்களின் புதிய புத்தகமான நான்காவது நாளிற்கும் ஒரு தொடர்பு உண்டு. அதைப் படித்தவர்கள் கமெண்டில் சொல்லவும்! 😍

THE ARKA - A Glorious Empire (A Short Biography of MK Stalin) நூலை அவசியம் அனைவரும் வாசிக்கவும்.
Read 5 tweets
4 Mar
நாம் தமிழர் கட்சியின் சென்னை மாவட்ட செயலாளர் ஒருவரின் பேட்டி Red Pix ல் இருக்கிறது. அதிமுகவுக்கு ஊதுகுழலாக நாதக இருக்கிறது. சீமானின் அசைன்மெண்ட் வாக்குகளை பிரிப்பது தான், தமிழ் தேசியம் எல்லாம் ஒன்றுமில்லை என சராமாரியான குற்றச்சாட்டுகளை வைக்கிறார். 11 ஆண்டுகளாக நாம் தமிழர்
கட்சிக்கு தனது இளமை, உடைமை என எல்லாம் அர்பணித்தும், கட்சியில் அவரை போன்றோருக்கு எந்த ஜனநாயக உரிமையையும் தரவில்லை என்கிறார். சீமான் - சசிகலா உறவினர் என சொல்லும் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அதிமுகவின் கள்ளக்கூட்டாளி சீமான் என சொல்கிறார். மன்சூர் அலிகானை தனியாக கட்சி
ஆரம்பிக்க வைத்து ஏதேனும் முக்கிய தொகுதியில் திமுகவை எதிர்த்து வாக்குகளை பிரிக்க வைக்க நினைக்கிறார் சீமான் என பல விசயங்களை அந்த பேட்டியில் சொல்கிறார்.

அந்த மனிதரின் பேச்சும், உடல் மொழியும் அவரது ஆழமான வேதனையை வெளிப்படுத்துகிறது. இந்த பேட்டியை வைத்தே கட்சி தன்னை நீக்கிவிடும்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!