கழக ஆட்சி என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் ஆட்சியாக இல்லாமல், ஒரு இனத்தின் ஆட்சியாக அமையும்.
தனிப்பட்ட ஒரு அரசியல் இயக்கத்தின் கொள்கையாக மட்டுமில்லாமல், இந்த மனித சமுதாயத்தின் உயர்ந்த லட்சியங்களை அடையக்கூடிய ஆட்சியாக அமையும்.
நாம் கொள்கைக்கு சொந்தக்காரர்கள். அந்த கொள்கையை செயல்படுத்தக்கூடிய கடமை நமக்கு தான் இருக்கிறது. அந்த கடமையை நாம் தான் செய்தாக வேண்டும். நம்மை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. தந்தை பெரியாரின் கனவுகளை, அறிஞர் அண்ணாவின் கனவுகளை, முத்தமிழறிஞர் கலைஞரின் கனவுகளை செயல்படுத்தும் கடமை
எனக்கு இருக்கிறது. நம்மால் முடியும். நம்மால் மட்டும் தான் முடியும்.
வீழ்ச்சியுற்ற தமிழகத்தை எழுச்சியுற வைப்போம். இன்னும் இரண்டே மாதங்கள் தான் இருக்கின்றன. பறந்து விரிந்த இந்த தமிழ்நாட்டு மக்களுடைய ஒட்டுமொத்த ஆதரவோடு திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி அமையப்போகிறது.
அப்படி அமையப்போகும் அரசு, தனிப்பட்ட ஸ்டாலினின் அரசாங்கம் அல்ல. அது நம் அனைவருடைய அரசாங்கமாக இருக்கும். இதற்கான உறுதிமொழிகளை இந்த தமிழ் சமுதாயத்தின் முன்னால் நாம் அனைவரும் எடுத்துக்கொள்வோம்.
(கொஞ்சம் எழுந்து நில்லுங்கள் உறுதிமொழி எடுக்க என்று தலைவர் கேட்கிறார். )
1) அனைத்து உரிமைகளும் கொண்டதாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டுவோம். 2) மக்களை பிளவுபடுத்தும் எவரையும் கூட்டாக எதிர்நின்று தோற்கடிப்போம். 3) எல்லோருக்கும் எல்லாம் என்ற அரசை நடத்திக்காட்டுவோம். 4) சட்டம் ஒழுங்கை உறுதியோடு காப்பாற்றுவோம்.
5) சட்ட மீறல்களையும் குற்ற சம்பவங்களையும், இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம். 6) அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்போம் 7) நூறு சதவிகிதம், வெளிப்படையான, ஊழலற்ற, நிர்வாகத்தை கொடுப்போம்.
இந்த உறுதிமொழிகளை எந்நாளும் காப்போம்.
தமிழ் குடி மக்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, உங்களில் ஒருவனாகிய இந்த மு.க.ஸ்டாலின் ஆகிய நான், உங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற முழுமையாக உறுதியளிக்கிறேன்.
- @mkstalin மு.க.ஸ்டாலின் (07.03.2021 நடந்த திருச்சி மாநாட்டு உரையில் இருந்து)
அண்ணன் @karupalaniappan அவர்களுக்கு பிறந்தநாள். அவரது திரைப்படங்கள், அவரது திரைப்பட வசனங்கள், பாடல்களை ரசித்தவர்கள் இப்போது அதையும் தாண்டிய அவரது பல்வேறு பரிணாமங்களுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.
அண்ணன் பல இடங்களில் தனித்துவமாகவும், அறத்துடனும் நின்று மற்ற பிரபலங்களை போல்
தானில்லை என்பதை காட்டி இருக்கிறார்.
பொதுமேடைகளில் வெளிப்படையாக சாதியை எதிர்த்து பேசுவதாக இருக்கட்டும்,
மதவாதத்திற்கு எதிரான கூர்மையான வாதங்களை வைப்பதாக இருக்கட்டும்,
பாஜகவை எதிர்க்கிறேன் என்று மட்டும் சொல்லாமல், பாஜகவை வீழ்த்த திமுகவை ஆதரிக்கிறேன் என்றுக் கூறும் நெஞ்சுரமாக
இருக்கட்டும்,
சங்கிகளின், தம்பிகளின் கதறல்களை பொருட்படுத்தாமல், ஆமாண்டா, “நாங்க திராவிடத்தால் தான் வாழ்ந்தோம்” என்று சொல்வதாக இருக்கட்டும்,
காதலை பரப்புவதாக இருக்கட்டும்,
வாசிக்காமல் ஒரு புத்தகத்தை குறித்து பேசமாட்டேன் என்று சொல்லும் சிறந்த வாசிப்பாளனாக இருக்கட்டும்,
தலைவர் ஸ்டாலின் குறித்து கிண்டிலில் வெளியாகும் முதல் வாழ்க்கை வரலாற்று நூல். அதுவும் ஆங்கிலத்தில்..
First biography of DMK Leader MK Stalin in Kindle. Well Written by Pushpalatha Poongodi. She has touched all the key events and the political career of MK Stalin in this
short biography.
This book will be widely read across India in the next few months.
“The ARKA” is the title. It means Sun.
வடமொழி எதற்கு என்றுக் கேட்ட போது, எதிரியின் ஆயுதத்தால் அவனையே தாக்க என்கிறார் புஷ்பலதா பூங்கொடி. உண்மையில், இந்தப் புத்தகம் ஒரு ஆயுதமாய்
நம்மவர்களுக்கு உதவும்.
இந்த ARKA விற்கும் சென் பாலன் அவர்களின் புதிய புத்தகமான நான்காவது நாளிற்கும் ஒரு தொடர்பு உண்டு. அதைப் படித்தவர்கள் கமெண்டில் சொல்லவும்! 😍
THE ARKA - A Glorious Empire (A Short Biography of MK Stalin) நூலை அவசியம் அனைவரும் வாசிக்கவும்.
நாம் தமிழர் கட்சியின் சென்னை மாவட்ட செயலாளர் ஒருவரின் பேட்டி Red Pix ல் இருக்கிறது. அதிமுகவுக்கு ஊதுகுழலாக நாதக இருக்கிறது. சீமானின் அசைன்மெண்ட் வாக்குகளை பிரிப்பது தான், தமிழ் தேசியம் எல்லாம் ஒன்றுமில்லை என சராமாரியான குற்றச்சாட்டுகளை வைக்கிறார். 11 ஆண்டுகளாக நாம் தமிழர்
கட்சிக்கு தனது இளமை, உடைமை என எல்லாம் அர்பணித்தும், கட்சியில் அவரை போன்றோருக்கு எந்த ஜனநாயக உரிமையையும் தரவில்லை என்கிறார். சீமான் - சசிகலா உறவினர் என சொல்லும் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அதிமுகவின் கள்ளக்கூட்டாளி சீமான் என சொல்கிறார். மன்சூர் அலிகானை தனியாக கட்சி
ஆரம்பிக்க வைத்து ஏதேனும் முக்கிய தொகுதியில் திமுகவை எதிர்த்து வாக்குகளை பிரிக்க வைக்க நினைக்கிறார் சீமான் என பல விசயங்களை அந்த பேட்டியில் சொல்கிறார்.
அந்த மனிதரின் பேச்சும், உடல் மொழியும் அவரது ஆழமான வேதனையை வெளிப்படுத்துகிறது. இந்த பேட்டியை வைத்தே கட்சி தன்னை நீக்கிவிடும்
1949 ல் கட்சி ஆரம்பிக்கப்பட்டு,
1957ல் முதல் தேர்தலை சந்தித்து,
1967ல் வலுவான காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து, ஆட்சியை பிடித்த கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
1975ல் அவரச நிலை சட்டத்தை இந்திராகாந்தி கொண்டு வந்த போது, அதை எதிர்த்து முதல் தீர்மானம் போட்டக்கட்சி திராவிட முன்னேற்றக்
கழகம்.
விளைவு, 1976ல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைப்பு. மிசா சட்டத்தில் எண்ணற்ற திமுகழகத்தினர் கைது. சிறையில் கொலை செய்யும் அளவுக்கு வன்மத்துடனான தாக்குதல். முதல்வர் மகன் என்று பாராமல் விழுந்த அடியை தாங்கிய முக. ஸ்டாலின். அவரை காப்பாற்றி உயர் துறந்த தியாக மறவர் சிட்டிபாபு.
வெளியே “தன்னந்தனியாக” ஜனநாயக போரை நடத்தினார் கலைஞர் கருணாநிதி. மு.க.ஸ்டாலின், ஆசிரியர் வீரமணி, டி.ஆர் பாலு, திருச்சி சிவா போன்றோர் இன்றும் மிசாவுக்கான வாழும் சாட்சிகள். அவர்கள் உடம்பிலும் மனதிலும் இன்னும் தழும்புகள் இருக்கும்!
நவம்பர் 7 2020 அன்று நானும் @praba_alagar அவர்களும் பேசினோம். அவரிடம் தலைவரின் நெஞ்சுக்கு நீதி தொகுதியும், தளபதி குறித்து வந்த அனைத்து புத்தகங்களும் வேண்டும் என்றேன். தளபதி குறித்து மார்ச் 1 க்குள் ஒரு புத்தகம் எழுத வேண்டும். திராவிட வாசிப்பில் ஒரு
சிறப்பிதழ் கொண்டு வரவேண்டும் என்றுச் சொன்னேன்.
பிரபா,புத்தகங்களை அனுப்பி வைத்தார். புத்தகங்கள் 15 டிசம்பர் 2020 அன்று சிங்கப்பூர் வந்து சேர்ந்தது.மார்சுக்கு இரண்டரை மாதம் இருந்தது.பல்வேறு சூழ்நிலைகளால் உடனே ஆரம்பிக்க முடியவில்லை.தளபதியின் வரலாறை படிக்க படிக்க அதில் கழக வரலாறும்
அடங்கி இருப்பது தெரிந்தது. என்னென்ன தலைப்புகளில் எழுத வேண்டும் என குறிப்பெடுத்துக்கொண்டேன். உண்மையில் விரிந்த வரலாறு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுடையது. சுருக்கமாக, ஜனரஞ்சகமான புத்தகமாய் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். தற்காலத்து இளைஞர்கள் வாசிக்க ஏற்றவாறு இருக்க வேண்டும் என
திமுகவை ஆதரிப்பது என்பது பதவிக்காகவோ, பணத்துக்காகவோ அல்ல. அது ஒரு நன்றிக்கடன்!
திமுக மீது எவ்வளவு அவதூறை, வன்மத்தை இன்றைய இளைஞர்களிடம் பரப்பி இருக்கிறார்கள் என்பதற்கு இந்த தம்பியின் புரிதல் ஒரு உதாரணம்!
பெரியார் ஏன் சிறந்தவர், காமராசர் ஏன் சிறந்தவர் என்பது மக்களுக்கு எளிதில்
புரிந்து விடும். ஏனெனில், அவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்கள் என்பதை திரும்பத்திரும்ப பேசியும், சொல்லியும், எழுதியும் வருகிறோம்.
ஆனால், அண்ணா ஏன் சிறந்தவர்? கலைஞர் ஏன் சிறந்தவர்?என அதிகம் பேசுவதில்லை. ஏனென்றால்,அவர்கள் மக்களை அதிகாரம் பக்கம் திருப்பினார்கள். பொருளாதார சுதந்திரம்
தந்தார்கள். ஆகையால், திமுக என்றால் பணம், பதவி, அதிகாரம் தான் என்ற பிம்பம் ஏற்பட்டுவிட்டது. அதை தவிர்க்கவும் முடியாது. திமுக என்றால் வெறும் ஊழல் கட்சி மட்டும் தான் என்ற சங்கிகளின் தொடர் பரப்புரை வென்றதும் இப்படித்தான்!