ஏப்ரல் 6. வாக்குச்சாவடிக்கு போய் வாக்குச் செலுத்திட்டு வந்த நேரத்துக்கும், IPL / பிக் பாஸ் தொடங்குற நாளுக்கும்இடைப்பட்ட கொஞ்ச நாட்கள்ல உங்களோட பைனான்சியல் ஸ்டேட்டஸ், எவ்வளவு சேமிக்கப்போறீங்க / இன்வெஸ்ட் பண்ண போறீங்க, எவ்வ்ளவு வருமான வரி மிச்சம் பண்ணப் போறீங்க, இதெல்லாம் பேசுவோமா?
இந்த கொஞ்ச நாள்ல நாம செய்யப்போற பைனான்சியல் பிளானிங் தான் இந்த வருஷம் முழுமைக்குமான GOALS. நம்மள ஒரு பொருட்டா கூட மதிக்காத கம்பெனி க்கு Goals & Objectives போட்டு வேலை செய்யுறோம். நமக்கே நமக்கு ஏன் செய்ய மாட்டேங்கிறோம்?
இந்த வருஷம் எல்லாத்தையும் மாத்துவோம். The first step in solving any problem is to accept that there is one. நம்மளோட தற்போதைய நிதிநிலைமை எப்படி இருக்குன்னு பாப்போம். இந்த வருடம் இவ்வளவு சேமிக்கணும் ன்னு ஒரு டார்கெட் வச்சிப்போம். Disciplined ஆ அதை செய்வோம்.
ஒவ்வொரு வருஷமும் நீங்க உங்களுக்காக செலவிடும் இந்த ஒரு வாரம் தான் உங்களோட வருங்கால financial self sufficiency க்கான விதை. ஒவ்வொரு வருஷமும் நீங்க விதைக்கிற விதை, உங்களுக்கு கடைசி காலங்களில் பழம் மற்றும் நிழல் கொடுக்கும்.
ஏதும் உதவி / வழிகாட்டல் வேணும்னா தயங்காம கேளுங்க. சொல்றேன் / செய்யுறேன். உங்க ஒவ்வொருவருக்கும் தனித்தனி financial planning போட்டு தரேன். அதை பயன்படுத்தி, நிறைய பணம் செமியுங்க, முதலீடு செய்யுங்க. 10-15 வருஷத்துல பெரிய பணக்காரனாக ஆகலாம். All the best 🙏
செல்வமகள் திட்டம்ன்னு நம்பி போய் பணத்தை அதுல போடாதீங்க. அவங்க உங்களுக்கு தர்ற வட்டி 6.6% (புதிய வட்டி). வருடாந்திர பணவீக்கம் 4.5-5%. உங்க மகளுக்கு கிடைக்கிற net returns வெறும் 2% க்கு கீழதான்.
#செல்வமகள் சேமிப்பு திட்டத்துல முதலீடு பண்றத முதல்ல நிறுத்துங்க. #SSA
இந்த மாசத்துலேர்ந்து, தனியா ஒரு டீமேட் அக்கௌன்ட் ஓபன் பண்ணி, மாசா மாசம் ஒரு குறிப்பிட்ட தொகையை பங்குகளாகவோ, mutual fund யூனிட்டாகவோ வாங்கி சேமியுங்கள். 20 வருஷம் கழிச்சி திருமணம் நடக்கும் தருவாயில், உங்கள் மகள் கோடீஸ்வரி. #SSA
செல்வமகள் திட்டத்துல பணத்தை போட்டா, திட்டத்து பேர்ல மட்டும்தான் செல்வம் இருக்கும். உங்க மகள் கிட்ட இருக்காது. நினைவுல வச்சிக்கோங்க. #SSA was created by govt to borrow money from the public at lesser rates. Not the other way around.