'ஓசி' பிரியாணிக்கு அடிதடியில் இறங்கிய உ.பி.,க்கள் பற்றிய வீடியோ, வலைதளங்களில், நுாறு நாட்களை தாண்டி ஓடிய சாதனை உண்டு.
அதன் நீட்சியாக, அண்டாவோடு பிரியாணியை, 'அபேஸ்' செய்த சம்பவம், உதயநிதி தொகுதியில் நடந்திருக்கிறது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், உதயநிதி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிடும், பிரதான வேட்பாளர் ஒருவர் விலைக்கு வாங்கப்பட்டு விட்டார்.
அதனால், அந்த வேட்பாளர், யார் கண்ணிலும் படாமல் பிரசாரம் செய்து வருவதாக தகவல். இதற்கிடையில், தேர்தல் அலுவலகம் திறப்பதற்காக, இடம் தேடிய உ.பி.,க்கள் கண்ணில், திருவல்லிக்கேணி கந்தப்ப தெருவில் உள்ள பழைய கட்டடம் பட்டது.
மளிகை கடை இருந்த கட்டடம் அது. புதிதாக வீடு கட்டுவதற்காக, காலி செய்யப்பட்டு இருந்தது. வசதியா போச்சு என கருதிய வட்ட நிர்வாகி, ஓனரிடம் பேசியிருக்கிறார். அவர் தயங்கியிருக்கிறார்.
அப்புறம், தங்கள், 'ஸ்டைலில்' பேசி, பணிய வைத்தனர். அந்த அலுவலகத்தை திறந்து, வட்டத்தை உதயநிதி பாராட்டியது, தனி கதை. இதில் வேதனையும், சோதனையும் யாருக்கு என்றால், அதே சாலையில், பிரியாணி கடை நடத்தும் பாய்க்கு தானாம். தேர்தல் அலுவலகத்தில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்திருக்கிறது.
முடிந்ததும், சுடச்சுட பரிமாற பிரியாணி தேவை என, முன்னாள் பகுதி செயலரின் வாரிசு, பரிவாரங்களுடன் பாய் கடைக்கு வந்தார்.
சொன்ன எண்ணிக்கையை, 'பார்சல்' கட்டியபடி, 'பில்' தொகையை சொல்லியிருக்கிறார் கடைக்காரர்.
கொந்தளித்து விட்டதாம், உ.பி.,க்கள் கூட்டம். 'ஆட்சிக்கு வரப்போகும் எங்களிடமே பணம் கேட்கலாமா? பிரியாணி கடை நடத்த வேண்டாமா?' என கேட்க, பயப்படாத கடைக்காரரும், 'ஓசி பிரியாணில்லாம் தர முடியாது' என்று கூறியிருக்கிறார்.
பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தவர்கள், கடையில் இருந்த பிரியாணி அண்டாவை, 'அலேக்காக' துாக்கி கொண்டு ஆட்டோவில் போய் விட்டனராம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் மிகப்பழமை வாய்ந்த சிவாலயம் அமைந்துள்ளது. அங்கு மூலவர் திருக்காமேஸ்வரர் உடன் அமர் சிவகாமசுந்தரியுடன் பக்தர்களுக்கு அருளுகிறார். இந்த அன்னைக்கு நான்கு கரங்கள்.
🇮🇳🙏1
மேலிரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தி, கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் இன்முகம் மலர அருள்பாலிக்கிறாள்.
அம்மனுக்கு எதிரே உத்தரத்தில் போகர் ஸ்தாபித்த சிவபோக சக்கரத்தைக் காணலாம். கருவறையில் இறைவன் சிவலிங்கத் திருமேனியில் அருட்பிரகாசமாய் விளங்குகிறார்.🇮🇳🙏2
இந்த ஆலயத்தின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் அலைமகளாய் ஐஸ்வர்ய மகாலட்சுமி சிவலிங்கத்துடன் கூடிய ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த ஐஸ்வர்ய மகுடத்தை தலையில் சூட்டியவாறு அமர்ந்த திருக்கோலத்தில் மஹாலட்சுமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்
நன்றி முரளி சீதாராமன்.....
“பாஜக தோல்வி பயத்தில் வருமான வரி ரெய்டுகளை ஏவி விடுகிறது”! - திமுக தலைமை அறிவிப்பு.
சரி ஐயா பாஜக தோல்வி பயத்தில் வருமான வரிச் சோதனையை ஏவி விடுகிறது என்றே ஒரு கணம் வைத்துக் கொள்வோம்!
நீங்கள்தான் ‘தோல்வி பயம்’ சற்றும் இல்லாத ‘வெற்றி வீரர்கள்’ ஆயிற்றே?
தைரியமாக எதிர் கொள்ள வேண்டியதுதானே வருமான வரி சோதனையை?
“வந்து பார்த்துங்கடா - வீட்டை மூலை முடுக்கெல்லாம் சோதனை நடத்துங்கடா - வேண்டுமானால் வீட்டு வாசல் கேட்டையே பூட்ட வேண்டாம் -
வெளியில் ‘ஜெயன்ட் சைஸ்’ பெரிய ஸ்க்ரீன் வைங்க - உள்ளே என்ன சோதனை நடக்கிறது என்று ‘லைவ்’வா போட்டுக் காட்டுங்க - பொது மக்கள் பார்க்கட்டும்- எங்களுக்கு மடியில் கனமில்லை!”- என்று தைரியமாக அறிக்கை விட்டால் நீங்கள் அசல் நேர்மையாளர்கள்!
ஜல்லிக்கட்டை கொண்டு வந்தது யார் ? தடையாக இருந்தது யார் ? மதுரை கூட்டத்தில் பிரதமர் விளக்கம்
மதுரை: ஜல்லிக்கட்டை கொண்டு வந்தது பா.ஜ., அரசுதான் என்றும், கலாசார விளையாட்டுக்கு தடையாக இருந்தது காங்., திமுக தான் என்றும் மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி விளக்கி பேசினார்.
மதுரை பாண்டி கோயில் சாலையில் உள்ள அம்மா திடலில், நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: '' வெற்றி வேல்.. வீர வேல்....'' என முழங்கிய மோடி . நல்லா இருக்கீங்களா... மதுரை வந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி என தமிழில் கூறிய பின் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசியதாவது :
*அருண் ஜெட்லியையும், சுஷ்மா சுவராஜ்ஜையும்* பிரதமர் மோடி துன்புறுத்தி கொன்று விட்டார் என்று
*சின்ன சுடலை உதயநிதி* பேசியது..
இந்தியா முழுக்க பெரிய பிரச்சனையாக வெடிக்கிறது.
பாஜகவின் மிக மூத்த தலைவர்கள், இந்தியாவில் எல்லோருடைய மரியாதைக்கும் உரிய தலைவர்களை அவமானப்படுத்தும் விதமாகவும்,
*மக்கள் செல்வாக்கு கொண்ட பிரதமரை இழிவுபடுத்தி* பேசியதும்
வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதில் *சுஷ்மா சுவராஜ் போன்றவர்களை மோடி டார்ச்சர் செய்தார்*
என்பது அபாண்டமாக மாறும் வாய்ப்பு கொண்டது.
*இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் சுஷ்மா அவர்களின் மகள் பன்சூரி சுவராஜ்..*
விருதுநகர் மாவட்டத்தில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, ராஜபாளையத்தில் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
எதிர்பார்த்தது போலவே, 30 நிமிட பேச்சில், 10 நிமிடத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்காக ஒதுக்கி இருந்தார். 'ரவுடித்துறை அமைச்சர், பபூன் ரவுடி, அவரை பார்த்தாலே பபூன் ஞாபகம் தான் வருகிறது' என, நீண்ட நாள் கோபத்தை வாரி இறைத்தார்.
'ஆட்சிக்கு வந்தவுடன் ராஜேந்திர பாலாஜி மீதுள்ள சொத்துக்குவிப்பு வழக்கை வேகப்படுத்தி, அவரை சிறைக்கு அனுப்புவது தான் முதல் வேலை' என்று கொதித்தார்.