நன்றி முரளி சீதாராமன்.....
“பாஜக தோல்வி பயத்தில் வருமான வரி ரெய்டுகளை ஏவி விடுகிறது”! - திமுக தலைமை அறிவிப்பு.
சரி ஐயா பாஜக தோல்வி பயத்தில் வருமான வரிச் சோதனையை ஏவி விடுகிறது என்றே ஒரு கணம் வைத்துக் கொள்வோம்!
நீங்கள்தான் ‘தோல்வி பயம்’ சற்றும் இல்லாத ‘வெற்றி வீரர்கள்’ ஆயிற்றே?
தைரியமாக எதிர் கொள்ள வேண்டியதுதானே வருமான வரி சோதனையை?
“வந்து பார்த்துங்கடா - வீட்டை மூலை முடுக்கெல்லாம் சோதனை நடத்துங்கடா - வேண்டுமானால் வீட்டு வாசல் கேட்டையே பூட்ட வேண்டாம் -
வெளியில் ‘ஜெயன்ட் சைஸ்’ பெரிய ஸ்க்ரீன் வைங்க - உள்ளே என்ன சோதனை நடக்கிறது என்று ‘லைவ்’வா போட்டுக் காட்டுங்க - பொது மக்கள் பார்க்கட்டும்- எங்களுக்கு மடியில் கனமில்லை!”- என்று தைரியமாக அறிக்கை விட்டால் நீங்கள் அசல் நேர்மையாளர்கள்!
அதை விட்டு விட்டு - “தேர்தலுக்கு நான்கு நாள் இருக்கும் போது ரெய்டு ஏன் நடத்துகிறார்கள்?”- என்ன ஐயா கேள்வி இது?
தேர்தல் நெருங்கி வரும் நாள் என்றால் எந்த ஒரு சட்ட பூர்வமான நடவடிக்கையும் நிறுத்தி வைக்கப் பட வேண்டும் - இத்தனை நாளுக்கு முன்பாக நடத்தக் கூடாது என்று ஏதாவது சட்டம் உள்ளதா என்ன?
சில மாதங்கள் முன்பு உங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகனே பேசினாரே:
“தேர்தல் முடியும் வரை கழக உடன் பிறப்புகள் ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்...
வருமான வரித் துறைக்குப் புகார் அளித்து ஒருவர் மற்றவரைப் போட்டுக் கொடுக்க கூடாது!” - நா தழுதழுக்க வேண்டிக் கொண்டாரே துரைமுருகன்!
அவர் என்ன பாஜக ஆட்களுக்கா அந்த வேண்டுகோளை வைத்தார்? அல்லது அதிமுகவுக்கு வைத்தாரா?
உங்கள் கட்சி ஆள்களுக்குத்தானே அந்த வேண்டுகோளை வைத்தார்?
“யார் யார் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புகிறீர்களோ - விருப்ப மனு கொடுங்கள் - கட்டணம் செலுத்துங்கள் -நேர்காணலுக்கு வாருங்கள்”- என்று கூப்பிட வேண்டியது!
கண்துடைப்புக்கு ஓரு “நேர்காணல்”!
ஸ்டாலின் தொகுதி - கொளத்தூர் - வரும் போது அவர் ஒருவர் மட்டுமே மனு கொடுத்திருந்தாலும் அவர் எதிரே வந்து மனுதாரர் நாற்காலியில் உட்கார்ந்து கொள்வாராம்!
அவரை எதிரில் உட்கார வைத்து துரைமுருகன் ‘நேர்காணல்’ நடத்துவாராம்!
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பெயர் வரும்போது உதயநிதி மட்டும் - அல்லது அவர் சார்பில் பலர் - அந்தத் தொகுதிக்கு ஒரே பெயரில் மனு கொடுப்பாங்களாம்!
அவரும் வந்து பவ்யமாக நின்றபடியே ‘நேர்காணலில்’ பங்கேற்பாராம்! பெற்ற தகப்பனே மகனுக்கு அவர் கட்சியில் சேர்ந்த விவரங்கள், கலந்து கொண்ட கூட்டங்கள், கட்சியில் ஆற்றிய பணிகள் இவை பற்றி எல்லாம் மகனிடமே தகப்பன் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்வாராம்!
அப்படி ஒரு ஜனநாயகமாம் கட்சியில்! என்னமா சீன் காட்டினீர்கள்!!
கடைசியில் வேட்பாளர்கள் பலர் யார்?
காட்பாடி என்றால் 80 வயதுக்கு மேலானாலும் துரை முருகன்தான்!
ஆத்தூரில் (திண்டுக்கல் மாவட்டம்) ஐ.பெரியசாமி -பழனியில் அவர் மகன் பெ.செந்தில் குமார்!
ஒட்டன் சத்திரத்தில் 6 ஆவது முறையாக (1996 -2001 - 2006- 2011- 2016- 2021) சக்ர பாணிதான்!
தூத்துக்குடி என்றால் கீதா ஜீவன்தான் (தூத்துக்குடி பெரியசாமி மகள்)
ஆலங்குளம் என்றால் ஆலடி அருணா மகள் டாக்டர் பூங்கோதைதான்!
மதுரை மத்திய தொகுதி என்றால் PT பழனிவேல் ராஜன் மகன் பழனிவேல் தியாகராஜன்தான்!
திருவெறும்பூர் என்றால் அன்பில் பொய்யாமொழி மகன் மகேஷ் பொய்யாமொழிதான் வேட்பாளர்.
திருச்சி மேற்கு என்றால் நேருதான்!
வீரபாண்டி என்றால் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் செழியனின் உறவினர் தருண்தான்!
திருச்சுழி என்றால் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகன் தங்கம் தென்னரசுதான்!
திருநெல்வேலி என்றால் முன்னாள் MLA A.L. சுப்ரமணியம் மகன் ALS லட்சுமணன்தான்!
வில்லிவாக்கம் என்றால் க. அன்பழகன் பேரன் வெற்றி அழகன் என்கிறார்கள்!
தி. நகரில் ஜெ.அன்பழகனின் சகோதரர் ஜெ.கருணாநிதி.
இப்படிப் பல தொகுதிகளை வாரிசுகளுக்கும், மேலும் பல தொகுதிகளை அந்தந்த மாவட்டக் ‘குறுநில மன்னர்களுக்கும்’ - ‘முரட்டு பக்தர்களுக்கும்’- வேண்டப் பட்டவர்களுக்கும் ஒதுக்கீடு செய்துவிட்டு அப்புறம் கண்துடைப்புக்கு ஒரு பிரமாதமான “நேர்காணல்”
பணம் கட்டிவிட்டு சீ்ட்டு கிடைக்காமல் ஏமாந்து போனவன் எத்தனை பேர்?
அவன் என்ன கொள்கைக் கோமானா? அறவழியில் நின்று பொதுச்சேவை செய்யத் துடிப்பவனா?
எனக்கு வாய்ப்புக் கிடைக்கா விட்டாலும் கட்சி நிறுத்திய வேட்பாளருக்குப் பாடுபடுவேன் - கட்சி கட்டளையிடும் பணியைச் செய்வேன் - என்று லட்சிய பூர்வமாக சித்தாந்தத்தால் பிணைக்கப் பட்டவனா?
அரசியல் சீட்டுக்கட்டு சூதாட்டத்தில் மேஜையை விட்டு வெளியேறியவன் - அவ்வளவுதானே?!!
பிரியாணிப் போட்டியில் "தொடை எலும்பு" சுவைக்கக் கிடைக்காமல், குஸ்காவை சுவைக்கும் நிலைக்கு ஆளான "கொள்கைத் திருமகன்" தானே அந்த உடன்பிறப்பு?!!
ஸ்டாலின் மகள் வீட்டிலும், மருமகனிடமுமே வருமான வரித் துறை ரெய்டு வருகிறது என்றால் - துரை முருகன் சொன்னது போல -
எவனோ உங்களில் ஒருவன் ஸ்ட்ராங்காகப் போட்டுக் கொடுத்து உள்ளான் என்று பொருள்!
எனவே பாஜகவை நோவதை விட, அந்தக் “கறுப்பு ஆடு” எது?- என்று உங்களிடையே தேடுங்கள்!
கடைசியாக ஒன்று!
நினைவிருக்கிறதா 1971 தேர்தல்?
பெருந்தலைவர் காமராஜர் - “ஆந்திரா பேங்கில் ஒரு கோடி ரூபாய் வைத்து இருக்கிறார்!”- என்று பிரசாரம் செய்தீர்கள்!
அவர் உங்களைப் போலப் பதறவில்லை!
“செக் தருகிறேன் - இருந்தால் போய் எடுத்துக் கொள்!”- என்றார்!
இறக்கும் போது நாலே நாலு வேட்டி சட்டையும், பையில் 130 ரூபாய் பணமும் வைத்திருந்த அந்தத் தலைவனை அப்படிப் பேசினீர்கள்!
சரித்திரம் திரும்புகிறது உடன் பிறப்பே! செய்த பாவம் தீருதடா சிவகுருநாதா!
காமராஜ் உங்களைப் பார்த்துச் சொன்னது போல், வருமான வரி அதிகாரிகளைப் பார்த்து தைரியமாகச் சொல்ல வேண்டியதுதானே?
“இருந்தால் எடுத்துகிட்டுப் போடா!”
அதை விட்டுவிட்டு ஏன் பாஜக தோல்வி பயத்தில் மிரட்டுகிறது என்ற அலறல்?!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதிகள் தரக்குறைவாக பேசும் போது, அவர்கள் மீது, இ.பி.கோ., பிரிவுகளின்படி எத்தனையோ அவதுாறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், அவை எல்லாம் காலப்போக்கில் வலுவிழந்து, காலாவதியாகி விடுகின்றன.'பேச்சுரிமை' என்பதை, நம் அரசியல்வாதிகள் தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளனர். அதனால் தான், அவர்கள் அத்துமீறி அநாகரிகமாக பேசுகின்றனர்.
தி.மு.க.,வைச் சேர்ந்த அ.ராசா, நம் முதல்வரின் தாயைப் பற்றி, தவறாக பேசுகிறார் என்றால், அவருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது?
முன்னாள், தி.மு.க., மத்திய அமைச்சரான தயாநிதி மாறன், 'அ.தி.மு.க.,வினர், ஜெயலலிதாவை, 'மம்மி' என்கின்றனர். பிரதமர் மோடியை, 'டாடி' என்கின்றனர்.
கடைசி நேரத்தில் மேலிடம் நெருக்கடி ; மன உளைச்சலில் தி.மு.க., வேட்பாளர்கள்
கொரோனா அச்சுறுத்தல், வருமான வரித் துறை சோதனை என, தி.மு.க.,வை அச்சுறுத்தி முடக்க, களத்தில் ஏராளமான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும், எதற்கும் அஞ்சாமல் சென்று கொண்டிருக்கின்றனர், தி.மு.க., தலைவர்கள்.
கடைசியாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர் மகளிர் அணி செயலர் கனிமொழி. கட்சியின் தென் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதும், அவர், மதுரையில் துவங்கி கன்னியாகுமரி வரை பிரசாரம் செய்தார். இப்போது தொற்று உறுதியாகி மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகி இருக்கிறார்.
இதே அச்சுறுத்தல், அவரை விட மூத்தவரான ஸ்டாலினுக்கும் இருக்கிறது. அவரும் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். மகன் உதயநிதியும்மாநிலம் பூராவும் சுற்றி வருகிறார்.
*திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள புனித தீர்த்தங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.*
🇮🇳🙏1
திருவண்ணாமலையின் கிழக்கே இந்திரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் ஒன்று உள்ளது. இது இந்திர தீர்த்தம் எனப்படும். இத்தீர்த்தத்தில் தைப்பூசத்தன்று நீராடி ஒரு கையளவு நீர் உட்கொண்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் போகும்.
🇮🇳🙏2
திருவண்ணாமலைக்குத் தென்கிழக்கில் அக்னி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் மூழ்கி எழுந்தால் எப்பேர்ப்பட்ட பாவமும் நீங்கும். அறமும் தவமும் வந்து சேரும்.
‘சிவன் சொத்து குல நாசம்’ என்று கூறுவதால் சிவன் கோவிலில் தரும் பிரசாதங்களை அங்கேயே போட்டுவிட்டு வருவது சரியா? தவறா?
உண்மையில் இதன் அர்த்தம் தான் என்ன?
சிவன் சொத்து குலநாசம் என்கிற பழமொழியை நம்பி பலரும் சிவன் கோவிலில் கொடுக்கும் விபூதி மற்றும் குங்கும பிரசாதங்களை கூட வீட்டிற்கு கொண்டு வர தயக்கம் காட்டுகின்றனர்.
எந்த ஒரு பழமொழியும் சரியாக புரிந்து கொள்ளா விட்டால் நமக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளும் அங்கு தடைபட்டுவிடும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்த பழமொழி திகழ்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் குறைந்த பட்சம் 10 - 15 ரூபாய் விலை குறைவாக இருந்திருக்கலாம், குறைக்கப்பட வேண்டியது தான் - ஆனால், என்ன செய்வது?
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு One Rank One Pension (OROP) திட்டத்தில் 42,740 கோடி கொடுத்திருக்க முடியாமல் போயிருக்கும்.
இந்திய ராணுவத்துக்கு கடந்த ஏழு ஆண்டுகளில் 6.5 லட்சம் கோடி அளவுக்கு இராணுவ தளவாடங்கள் கிடைக்காமல் போயிருக்கும்.
ரஃபேல், அப்பாச்சி, S - 400, தேஜஸ், MK-1A போன்ற ஒப்பந்தங்கள் இல்லாமல் போயிருக்கும்.
இராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஆடைகள், கவசங்கள் இல்லாமல் போயிருக்கும்.
பாரத இராணுவம் உலகின் 4வது வலிமை மிக்க படை என்ற நிலையை அடையாமல் இருந்திருக்கும்
நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு உட்கட்டமைப்பை உறுதி செய்யும் சாலைகள், பாலங்கள், சுரங்கங்கள் இல்லாமல் போயிருக்கும். நமது வீரர்கள் எல்லையை விரைவில் சென்றடைய முடியாமல் போயிருக்கும்.