ஸ்டாலினுக்கு வந்த ரகசிய இ - மெயில்: லீக் ஆனதால் தி.மு.க.,வில் பரபரப்பு
சென்னை:சட்டசபை பொதுத் தேர்தலை ஒட்டி வெளியான, கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை, தி.மு.க.,வுக்கு ஆலோசனை கூறும் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது என்பதை அம்பலப்படுத்தும் வகையில், அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரி,
ஸ்டாலினுக்கு அனுப்பியதாக கூறப்படும், ரகசிய, 'இ - மெயில்' வெளியில் கசிந்துள்ளது.
தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், நாளை நடக்க உள்ளது. தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என, ஊடகங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில், பல்வேறு விதமான கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன.
பெரும்பாலான கருத்து கணிப்புகளில், தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இது, தி.மு.க.,வினரிடம் உற்சாகத்தையும், அ.தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று, தி.மு.க.,வுக்கு தேர்தல் ஆலோசனைகள் வழங்கும் தனியார் நிறுவனத்தின், முக்கிய அதிகாரி ஆனந்த் திவாரி என்பவர், மார்ச், 28ம் தேதி, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு அனுப்பியதாக கூறப்பபடும், இ - மெயில் ஒன்றை, அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர், சமூக வலைதளங்களில் பரவ விட்டனர்.
இ - மெயிலில் கூறப்பட்டிருந்த தகவல்:
தமிழக தேர்தலில், தி.மு.க., தோல்வி அடையும் நிலையில், கள நிலவரம் உள்ளது. தி.மு.க., - எம்.பி., ராசாவின் பேச்சு, தி.மு.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டு நாட்களாக நடத்திய கருத்து கணிப்பில், தி.மு.க.,வை சேர்ந்த பெண்கள் உட்பட அனைத்து பெண்களும், தி.மு.க.,வுக்கு எதிரான மனப்பான்மையில் உள்ளது தெரிய வந்துள்ளது.
நண்பர்கள் வழியே, கருத்து கணிப்புகளை, நமக்கு சாதகமாக மாற்ற எடுத்த, அனைத்து முயற்சிகளும், நம் கட்சி தலைவர்களின் பேச்சால் வீணாகி விட்டன.
கடும் போட்டிக்கு இடையில், தற்போது, அ.தி.மு.க.,வுக்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதை தடுக்க, உடனடியாக, ராசா, பத்திரிகையாளர்களை அழைத்து, முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ராசாவை அழைத்து, கட்சி தலைமை கண்டித்து, பெண்களிடம் நற்பெயர் வாங்க முயற்சிக்க வேண்டும். ராசாவை, இனிமேல் பிரசாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது.
அனைத்து நிர்வாகிகளும், பெண்களுக்கு எதிரான விஷயங்களை பேச அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த, இ - மெயிலில், கருத்து கணிப்புகளை தங்களுக்கு சாதகமாக மாற்ற எடுத்த முயற்சி என, குறிப்பிட்டிருப்பது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இ - மெயில், ஆலோசனை நிறுவனத்தை சேர்ந்த ஒருவரால், பா.ஜ., தரப்புக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதன் உண்மைத் தன்மை தெரியாத நிலையில், தி.மு.க., தரப்பில், 'அது போலி' என்று மறுக்கப்பட்டுள்ளது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ரூ. 100 கோடி கேட்டு மிரட்டிய சம்பவம்: மஹாராஷ்டிரா அமைச்சர் அனில்தேஷ் முக் ராஜினாமா
மும்பை : மாதம் ரூ. 100 கோடி வசூலித்து தர தன்னை மிரட்டியதாக அமைச்சர் அனில் தேஷ் முக் மீது மும்பை போலீஸ் கமிஷனர் கூறிய குற்றம்சாட்டியதையடுத்து இன்று அமைச்சர் அனில் தேஷ் முக் ராஜினாமா செய்தார்.
தெற்கு மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடியிருப்புக்கு வெளியே வெடிபொருட்களுடன் கார் நின்றிருந்த வழக்கினை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் விசாரித்து சச்சன் வாஸே என்ற போலீஸ் அதிகாரியை கைது செய்தனர்.
வழக்கு விசாரணையை தவறாக வழி நடத்தியதாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்த முதல் தமிழக தலைவர் பெரும்தலைவர் காமராசர் .....
காமராசருக்கும் பாஜகவிற்கும் என்ன சம்மந்தம் .... ???
வரலாற்றை சற்றே திரும்பிப் பார்ப்போம் ....!!!
பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளில் காங்கிரசாரால் இருட்டடிக்கப்பட்ட வரலாற்றை தெரிந்து கொள்வோம் ....!!!
ரூபாய் மதிப்பிழப்பு விசயத்தில் காமராசர் பெயரை பிரதமர் ஏன் பயன்படுத்தினார் எனவும் காமராசருக்கும் பாஜகவுக்கும் என்ன சம்மந்தம் எனவும் பல அதிமேதாவிகளும் காங்கிரஸ்காரர்களும் கேட்டுவருகின்றனர் ..... !!!
மக்களுக்கு மறதி வியாதி எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறது.......!!!
உண்மையில் தேசபக்தர்கள் எல்லோரும் எங்களின் தலைவர்கள்தான்......!!!
காமராஜர் காங்கிரஸ் தலைவர் இல்லை.. ஸ்தாபன காங்கிரசின் தலைவர்...... !!!
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசர், இந்திராவை பிரதமராக நியமித்தார் ....!!!
மம்தா மீது கடும் நடவடிக்கை; தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
புதுடில்லி: 'நந்திகிராம் தொகுதியில் தேர்தல் நாளன்று நீங்கள் நடந்து கொண்டது, மேற்கு வங்கம் மற்றும் வேறு சில மாநிலங்களில் சட்டம், ஒழுங்கை பாதிக்கக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
'இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு, தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது.
இம்மாநில சட்டசபைக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நந்திகிராம் தொகுதியில், மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரது கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த மூத்தத் தலைவர் சுவேந்து அதிகாரி, அவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.இந்தத் தொகுதிக்கு, ஏப்.,1ல் தேர்தல் நடந்தது.
காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை கட்டமைக்க உ.பி., அரசு திட்டம்
புதுடில்லி: அயோத்தியிலிருந்து, காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை, உத்தர பிரதேசத்தில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ராமாயணத்தில் ராமபிரான், தன் தந்தையின் கட்டளைப்படி, தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன், அயோத்தியிலிருந்து, காட்டுப்பகுதியில் அமைந்திருந்த சித்ரகூட் என்ற இடத்துக்கு முதலில் சென்றார்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியிலிருந்து, சித்ரகூட்டிற்கு ராமர் சென்ற பாதையை, 'ராம் வன் காமன் மார்க்' என்ற பெயரில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம் தரிசிக்க முக்தி தரும் தலம் பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம் ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம் அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக்க் காட்சி தரும் தலம்
🙏🇮🇳1
நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம் சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலம்
இத்தகைய பெருமைகளைப் பெற்றிருக்கும் தலம் தான் சிதம்பரம். இந்த சிதம்பரம் கோவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. 🙏🇮🇳2
கருங்கற்களால் கட்டப்பட்ட மதிற்சுவர்களுடனும், விண்ணை முட்டும் நான்கு இராஜ கோபுரங்களுடனும் நன்கு அமைந்திருக்கிறது.
கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. 🙏🇮🇳3
இதைப்படிக்கையில் என் கண்ணில் என்னையறியாமல் கண்ணீர் முட்டுகிறது.
2015 வருடம் என்னுடைய உத்திரப்பிரதேச நண்பர் அமித் அகர்வால் எனக்கு போன் செய்து என்னுடைய நண்பரொருவர் கோவை வருகிறார், அவரை பேரூரில் ஒரு ஆசிரமத்தில் இறக்கிவிட வேண்டும் ஒரு கார் ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கேட்டார்.
அவர் எங்கள் ஊர் எம்பி, மிகவும் எளிமையானவர், நல்ல மனிதர் கண்டிப்பாக நீங்கள் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றார்.
எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருந்த இடத்தில் இருந்து தேவையானவற்றை சாதித்துக் கொள்ள முடியும், நம்மிடம் ஏன் உதவி கேட்கிறார்கள் என்று அவரிடம் கேட்டேன்.